Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா? ஆக்கிரமிப்பு படையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம்
அமைதிப்படையா? ஆக்கிரமிப்பு படையா?

மறப்பது மக்கள் இயல்பு. நினைவு படுத்த வேண்டியது எமது கடமை.

2009ல் என்ன நடந்தது என்பதே பலருக்கு மறந்துவிட்ட நிலையில் 1987ல் நடந்தது எப்படி நினைவு இருக்கும்?

அதுவும் இன்று முகநூலில் பதிவு எழுதும் சிலர் 1987;ல் பிறந்தே இருக்க மாட்டார்கள்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி “ இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு” என்றும் “அமைதிப்படையை எதிர்த்து போரிட்டது ஒரு முட்டாள்தனம்” என்றும் சுமந்திரன் போன்றவர்கள் ரீல் சுத்த முனைகின்றனர்.

•முதலில் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி பார்ப்போம்.

(A)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த அரசியல் இராணுவ நலன்கள்

(அ) இலங்கையின் வெளியுறவுகளில் கட்டுப்பாடு செலுத்தும் உரிமை

(ஆ)ஒலி ஒளி பரப்புகளை கட்டுப்படுத்தும் உரிமை

(இ)திருகோணமலை தளத்தின் மீதான கட்டுப்பாடு உரிமை

(ஈ)இலங்கை ராணவத்திற்கு பயிற்சி அளிக்கும் உரிமை,இலங்கை ராணுவம் மீதும் இதர நாடுகளுடனான உறவுகள் மீதும் கட்டுப்பாடு

(B)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த பொருளாதார நலன்கள்

(அ)இந்திய கொருட்களின் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படும்

(ஆ)திரிகோணமலை எண்ணெய் குதங்கள் புத்துயிர்ப்பு செய்யப்படும். அதன் செயற்பாட்டிலும் லாபத்திலும் இந்தியாவுக்கு உரிமை அளிக்கப்படும்

(இ)சுமார் 400 கோடி ரூபா பெறுமதியான கட்டுமான பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும்

(ஈ)பெற்றோல் மற்றும் எண்ணெய் கிணறுகள் இந்தியாவுக்கு அளிக்கப்படும்

(உ)இலங்கை வங்கி மற்றும் திட்டக்குழு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் உரிமை மூலம் இலங்கை பொருளாதார திட்ட வகுப்பில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு

 (ஊ)இந்திய ரயில் மற்றும் பேரூந்துகளை விற்பனை செய்யும் வாய்ப்பு

இவ்வாறு தமிழர் நலனைவிட இந்திய நலனை கொண்ட ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்கள் எதிர்த்தது தவறு என்று கூறுகின்றனர்.

•அடுத்து இந்திய ராணுவம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்

பெரும்பாலானோர் 1987ல்தான் இந்திய ராணுவம் இலங்கை வந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் 1971இலும் இந்திய ராணுவம் இலங்கை வந்தது என்பதை இவர்கள் அறியவில்லை.

1971ல் இந்திராகாந்தியின் ஆட்சி காலத்தில் 2000 இந்திய ராணுவத்தினர் இலங்கை வந்தனர். ஜே.வி.பி கிளர்சியை அடக்குவதாக கூறி அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் சுட்டதில் 6000 சிங்கள இளைஞர்கள் இறந்தார்கள்.

அடுத்து 1987ல் அமைதிப்படை என்று ஒரு லட்சத்து இருபதாயிரும் இந்திய ராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்தார்கள்.

அமைதிப்படை வந்தபோது தென்னிலங்கைதான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தென்னிலங்கையில்தான் பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கியால் தாக்கப்பட்டார்.

வந்தது அமைதிப்படை என்றால் தென்னிலங்கையில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரம் இராணுவத்தில் ஒரு வீரர் கூட தென்னிலங்கையில் நிறுத்தப்படவில்லை.

அதேவேளை எதிர்ப்பே தெரிவிக்காத வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில்தான் 10 தமிழருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டார்.

அதுமட்டுமல்ல, இந்திய ராணுவம் 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் 22 நாட்களே நடைபெற்றது. 1971ல் வங்கதேசத்தை உருவாக்கிய போர் 14 நாட்கள் மட்டுமே நடைபெற்றது.

ஆனால் 1987ல் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய போர் இரண்டரை வருடங்கள் நடைபெற்றது. அதுவும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ருபா வீதம் 5400 கோடி ரூபா செலவு செய்து நடத்தியது.

இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் வரலாறு காணாத வரட்சியில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்த வேளை இலங்கையில் இந்திய அமைதிப்படை 5400 கோடி ரூபா செலவு செய்து போர் நடத்தியது.

இந்த இந்திய அமைதிப்படையினரால் 10000 மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 800 அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டன.

இந்திய ராணுவம் தமிழ் மக்களின் நலனுக்காக இந்த போரை செய்யவில்லை. மாறாக தென்கிழக்காசிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் மத்தியஸ்தன் என்கிற அரசியல் பாத்திரத்தையும் இப் பிராந்திய வல்லரசு என்கிற இராணுவ பாத்திரத்தையும் அது நிலை நிறுத்திக் கொண்டது.

இலங்கைக்கு வந்தது அமைதிப்படை அல்ல. அது இந்திய ஆக்கிரப்புபடை. அதனை ஈழத் தமிழர்கள் எதிர்த்து போரிட்டது சரியே.

ஒரு தேசிய இனத்தை அதன் சொந்த மண்ணில் எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது என்பதையே ஈழத்தில் தமிழ்மக்கள் செய்து காட்டினார்கள்.

 

https://www.facebook.com/1270607221/posts/10217454538896643/

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அதுவும் இன்று முகநூலில் பதிவு எழுதும் சிலர் 1987;ல் பிறந்தே இருக்க மாட்டார்கள்.

இது உண்மைதான் சில முகநூல் குழுக்களில் நடக்கும் சண்டை பொறி பறக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா 1987ல் வந்தது நீண்ட நாள் தங்கி, வடக்கு, கிழக்கினை தனது பிரதேசமாக மடக்கும் நோக்கில் தான்.

இந்த திட்டத்துக்கு ஆப்பு வைத்தவர்கள் புலிகளும் அதன் தலைமை பிரபாகரனும் தான்.

இந்தியர்களின் நோக்கத்தினை முறியடிக்க, எதிரியின் எதிரி நன்பன் ஆக, புலிகளுக்கு ஆயதம் தந்தவர் ஜனாதிபதி பிரேமதாச. இலங்கையின் மாவீரன் என பிரபாகரனை, இந்திய ராணுவம் வெளியேறிய பின்னர் புகழ்ந்தவர் பிரேமதாச.

இன்றும் கூட, பிரபாகரன் பயங்கரவாதியாக சொல்லப் படலாம். ஆனால், இந்தியாவிடம் இருந்து இலங்கைத் தீவினை பாதுகாத்து தந்த ஒரே மாவீரன் பிரபாகரன் என்று டெய்லி மிரர் பத்திரிகையில் பின்னூட்டம் இடடால், சிங்களவர்கள் பம்முவதை (மென்மையாக அங்கீகரிப்பதை) காணலாம்.  நாணயத்தின் மறுபக்கம் என்பதாக, இந்தியாவிடம் போக இருந்த தமிழர் இறைமையை, மீண்டும் சிங்களவரிடமே தக்க வைத்தது புலிகள் போராடடம் என்ற கருத்தியலும் உண்டு.

இந்தியா, கொரில்லா இயக்கமாக, அழிக்க முடியாத நிலையில் இருந்து, புலிகள், அழிக்கக் படக் கூடிய நிரந்தர ராணுவத்துக்கு உரிய அம்சங்களுடன் வளரும் வரை 19 ஆண்டுகள் (1990 - 2009) காத்திருந்து, தருணம் பார்த்து அழித்தது.

சில அரசியல் வாதிகள் சொல்வது போல, சோனியாவோ, மன்மோகன் சிங்கோ அல்ல. இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தான் இந்த போர் ஒருங்கிணைப்புக்கு காரணம்.

இப்போது அவர்கள் 1987ல் விரும்பிய களம் அமைந்து உள்ளது. ஆனாலும் விக்கியர் போன்ற அரசியல் வாதிகள் (மண்டைக்குள் விசயம் உள்ள) அகல, மாவை போன்ற ஆமாம் சாமிகள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறது.

இதில் முக்கியம் என்னவென்றால், முழு இலங்கையும் சிங்களவனிடம் இருந்தால், சீனாவை கண்காணிக்க பல வளங்களை ஒதுக்க வேண்டும். இரண்டாக இருந்தால், அவர்களே ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்டிருப்பர். தமக்கு மேலதிக வேலை இல்லை என்பது தான் நோக்கம்.

ஆனால், வடக்கு கிழக்கில் இருந்து மோதுபவர், புலிகள் போலன்றி, தாம் போடும் தாளத்துக்கு அமைய ஆடுபவராக இருக்க வேண்டும். 

ஆக இந்தியா உள்ளே வந்தே தீரும்.

எனினும் இந்தியாவுக்கு உள்ள ஒரு அனு பிரதிகூலம் இலங்கைத் தீவில் யாருமே அதனை நம்ப தயாரில்லை

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இணைக்கப்பட்டுள்ள ஆக்கங்களில் இருப்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. ஆனால், ஒரு விடயத்தை எழுதும்பொழுது, அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகாதவாறு பார்க்கப்படுதல் அவசியம்.

உதாரணத்திற்கு, இங்கு முதலாவதாக இணைக்கப்பட்டுள்ள முகப்புத்தகப் பதிவில், "தென்கிழக்காசியா" என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் பூகோள ரீதியான அமைவிடம் பற்றிய புரிதல் சரியாக இல்லமையால், இப்படிக் குறிப்பிடப்படுகிறது என்று நினைக்கிறேன். உண்மையில், தென்னாசியா என்பதே சரியான சொல். இவ்வாறான சிறிய தவறொன்றே போதும், கருத்தின் முற்றான கருவையும் கேள்விக்குறியாக்குவதற்கு.

அடுத்தது "கொரில்லா" எனும் சொல். இங்கே நாதமுனி இணைத்த கருத்தில் இச்சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது. அவர் இப்படி எழுதியிருக்க வாய்ப்பில்லை, இன்னொருவரது ஆக்கம் மேற்கோள் காட்டப்பட்டதாகத்தான் நான் நினைக்கிறேன். ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதும்போது இவ்வாறான தவறுகள் இடம்பெறும் என்பது இயல்புதான். ஆங்கில உச்சரிப்பினை அப்படியே எழுதலாம் அல்லது, சரியான தமிழ்ச் சொற்களைப் பாவிக்கலாம். அநேகமான தமிழ்நாட்டு ஆக்கங்களில் "கெரில்லா (மறைந்திருந்து தாக்கும் போராளி)" எனும் ஆங்கில உச்சரிப்பிலான தமிழ்ச் சொல், "கொரில்லா" அதாவது குரங்கு என்கிற வகையில் பாவிக்கப்படுகிறது. "பாய்ந்து, குரங்கு போன்று தாக்குதல்" என்கிற கருத்தில் பலர் எழுதுவதைக் கூட நான் கண்டிருக்கிறேன். இது மிகவும் தவறான கருதுகோள்.

இவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

மற்றும்படி இங்கே முன்வைக்கப்படும் கருத்தில் எந்தத் தவறும் இல்லை. நூற்றுக்கு நூறுவீதம் உண்மை. இந்திய ராணுவம் அமைதிப்படை இல்லை, அக்கிரமிப்புப்படை என்பதே சரி.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ragunathan said:

அடுத்தது "கொரில்லா" எனும் சொல். இங்கே நாதமுனி இணைத்த கருத்தில் இச்சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது. அவர் இப்படி எழுதியிருக்க வாய்ப்பில்லை, இன்னொருவரது ஆக்கம் மேற்கோள் காட்டப்பட்டதாகத்தான் நான் நினைக்கிறேன். ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதும்போது இவ்வாறான தவறுகள் இடம்பெறும் என்பது இயல்புதான். ஆங்கில உச்சரிப்பினை அப்படியே எழுதலாம் அல்லது, சரியான தமிழ்ச் சொற்களைப் பாவிக்கலாம். அநேகமான தமிழ்நாட்டு ஆக்கங்களில் "கெரில்லா (மறைந்திருந்து தாக்கும் போராளி)" எனும் ஆங்கில உச்சரிப்பிலான தமிழ்ச் சொல், "கொரில்லா" அதாவது குரங்கு என்கிற வகையில் பாவிக்கப்படுகிறது. "பாய்ந்து, குரங்கு போன்று தாக்குதல்" என்கிற கருத்தில் பலர் எழுதுவதைக் கூட நான் கண்டிருக்கிறேன். இது மிகவும் தவறான கருதுகோள்.

இவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

மற்றும்படி இங்கே முன்வைக்கப்படும் கருத்தில் எந்தத் தவறும் இல்லை. நூற்றுக்கு நூறுவீதம் உண்மை. இந்திய ராணுவம் அமைதிப்படை இல்லை, அக்கிரமிப்புப்படை என்பதே சரி.

guerrilla vs gorilla

முன்னையது கெரில்லா, பின்னையது கொரில்லா. நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் அதவேளை தமிழ் எழுதும் போது இந்த சொல் உச்சரிப்பில் கவனம் செலுத்துவது கடினம். 

ஏனெனில் நாம் எழுதும் விஷயத்துடன் எது பொருந்துமோ அதை தேடித் பிடித்து பொருத்திக் கொள்ளும் கில்லாடிகள் தான் யாழ் உறவுகள்.:grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

guerrilla vs gorilla

முன்னையது கெரில்லா, பின்னையது கொரில்லா. நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் அதவேளை தமிழ் எழுதும் போது இந்த சொல் உச்சரிப்பில் கவனம் செலுத்துவது கடினம். 

ஏனெனில் நாம் எழுதும் விஷயத்துடன் எது பொருந்துமோ அதை தேடித் பிடித்து பொருத்திக் கொள்ளும் கில்லாடிகள் தான் யாழ் உறவுகள்.:grin:

 

நான் நம்பீட்டன் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சனம் இந்தியா எண்டால் தமிழ்நாட்டை கணிப்பிலை வைச்சுத்தான் நல்லவன் எங்களுக்கு நல்லது செய்வான் எண்டு ஒரு எண்ணத்திலை இருந்தது.

தமிழ் நாடே கிந்தியனுக்கு அடிமையெண்டது  ஊரிலை நடந்த அடிபுடிகளுக்கு பிறகுதான் எங்கடையளுக்கு தெரிய வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனம் இந்தியா எண்டால் தமிழ்நாட்டை கணிப்பிலை வைச்சுத்தான் நல்லவன் எங்களுக்கு நல்லது செய்வான் எண்டு ஒரு எண்ணத்திலை இருந்தது.

தமிழ் நாடே கிந்தியனுக்கு அடிமையெண்டது  ஊரிலை நடந்த அடிபுடிகளுக்கு பிறகுதான் எங்கடையளுக்கு தெரிய வந்தது.

புலிகளையும், பிரபாகரனையும் சீமான் தனது அரசியல் நோக்கத்துக்கு பயன் படுத்துகிறார் என்று சொல்லும் ஒரு சிலர் அறியாதது இந்த விடயம் தான். அதாவது தமிழக தமிழனே டெல்லியின் அடிமை என்பதை உணர்த்தவே அந்தாள் கஷடப்படுகுது.

தமிழகம், பிரிட்டிஷ்காரருக்கு முன்னர் ஒரு போதுமே இந்தியாவாக இணைந்திருக்க வில்லை. இறுதியாக தென் இந்தியா தவிர்த்து ஏனைய பகுதிகள் இணைந்து இருந்த காலம், மயூர வம்ச அசோக சக்ரவர்த்தி ஆண்ட கி மு 3ம் நூறாண்டு.  

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

எங்கடை சனம் இந்தியா எண்டால் தமிழ்நாட்டை கணிப்பிலை வைச்சுத்தான் நல்லவன் எங்களுக்கு நல்லது செய்வான் எண்டு ஒரு எண்ணத்திலை இருந்தது.

கிந்தியாவின் நோக்கங்களை 'வங்கம் தந்த பாடம்' மக்களுக்கு  கிந்தியாவின்  வெளிநாட்டு கொள்கை, அரசியல், ராஜதந்திரம் பற்றி அறிவூட்டம் செய்வதத்திற்கு தயாராகிய வேளையில், அதை எழுதியவர்கள் அவர்களின் தலைமையாலேயே கொல்லப்பட்டு,  'வங்கம் தந்த பாடம்' விநியோகம் முற்றுமுழுதாக அந்த தலைமையாலேயே முடக்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.