Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் மீள் வருகை- உருத்திரகுமாரன் கருத்து என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் மீள் வருகை- உருத்திரகுமாரன் கருத்து என்ன?

மகிந்தராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை  பரிகாசம் செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்  பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் 

கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது என தெரிவித்துவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள் உருத்திரகுமாரன் சிறிசேன தனது நடவடிக்கையின் மூலம் நாங்கள் தெரிவித்து வந்த விடயம் சரியானது என்பதை நிரூபித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இனப்படுகொலையாளியை பிரதமராக நியமித்துள்ளதன் மூலம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை  சிறிசேன கேலிக்கூத்தாக்கியுள்ளார் எனவும்; உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ruthira.jpg

காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்தை அமைத்தமைக்காக இலங்கைக்கு ஐநா தனது பாராட்டத்தை  தெரிவித்தது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கை மீளக்கண்டுபிடித்துள்ள ஒரேயொருவர் மகிந்த ராஜபக்ச எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பெரும்பான்மையின தலைவர்கள் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/43342

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உருத்திரகுமாரன் தனது உள்ளங்கையில் உள்ள ஊத்தையை பார்க்க வேண்டும்

உருத்திரகுமாரன் கும்பகர்ண நித்திரையிலிருந்து எழும்பியுள்ளார்!

இனியெப்ப முகம் கழுவி புத்துணர்ச்சி பெறுவாரோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரம் சவுண்டு விட்டால் தானும் மேற்கு உலகின் செல்லபிள்ளை என்று சொல்லாமல் சொல்லுகிறார் நம்புங்க மக்கள்ஸ் . அவரும் ரவுடிதான் ரவுடியேதான் எண்ணத்தில் என்று கேட்க்க  கூடாது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவை பிரதமராக்கி ஐ.நா.வை கேலிக்கூத்தாக்கினார் மைத்திரி: உருத்திர குமாரன்

Maithiri-11-720x450.png

நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை கேலிக்கொன்றாக மாற்றியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“இலங்கையின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்தே ஐக்கிய நாடுகள் ஆதரவு வழங்கி வந்தது. ஆனால் நாம் அப்போதே கூறினோம் இலங்கை அரசாங்கம் ஏமாற்று செயற்பாடுகளை தான் மேற்கொள்கின்றதென வலியுறுத்தினோம்.

அதனை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரி தற்போது செயற்பட்டுள்ளார்.

மேலும் இலங்கை மீது ஐ.நா வைத்திருந்த நம்பிக்கையை ஜனாதிபதி மைத்திரி சிதைவடைய செய்துவிட்டார்” என உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/மஹிந்தவை-பிரதமராக்கி-ஐ-ந/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திர குமாரன் ஒரு தமிழன் என்று அறியக் கிடைக்கிறது. அவர் தமிழினத்துக்கு எதிராகச் செய்த துரோகமென்ன? ஏன் இங்கு இப்படிக் குத்திக் கிழிக்கப்படுகிறார்? தமிழன் என்பதாலா?? ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

உருத்திர குமாரன் ஒரு தமிழன் என்று அறியக் கிடைக்கிறது. அவர் தமிழினத்துக்கு எதிராகச் செய்த துரோகமென்ன? ஏன் இங்கு இப்படிக் குத்திக் கிழிக்கப்படுகிறார்? தமிழன் என்பதாலா?? ?

இல்லை பாஞ்ச், நாடுகடந்த அரசில் தேர்தல் நடத்தாமலே பிரதிநிதிகள் & பிரதமர்.

அவர்களின் யாப்பை மீறிய உறுப்பினர் நியமனம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

இல்லை பாஞ்ச், நாடுகடந்த அரசில் தேர்தல் நடத்தாமலே பிரதிநிதிகள் & பிரதமர்.

அவர்களின் யாப்பை மீறிய உறுப்பினர் நியமனம்.

 

சிறீலங்கா அரசே யாப்பைமீறிச் செயல்படுவதாக கண்டணங்கள் வந்தும் தமிழர்கள் அதனை ஆதரித்தும் வெடிகொளுத்தியும் மகிழ்கிறார்களே.... !! என் கேள்வி: உருத்திர குமாரன் தமிழினத்துக்கு எதிராகச் செய்த துரோகமென்ன.? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Paanch said:

சிறீலங்கா அரசே யாப்பைமீறிச் செயல்படுவதாக கண்டணங்கள் வந்தும் தமிழர்கள் அதனை ஆதரித்தும் வெடிகொளுத்தியும் மகிழ்கிறார்களே.... !! என் கேள்வி: உருத்திர குமாரன் தமிழினத்துக்கு எதிராகச் செய்த துரோகமென்ன.? 

இங்கு விவாதிக்கப்படுவது உருத்திரகுமாரனின் மகிந்த தொடர்பான அறிக்கையே! 

தானே ஓர் கேலிக் கூத்தானா அமைப்பை நடாத்திக் கொண்டு மற்றவரை எப்படி குறை கூற முடிகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

துரோகம் செய்யாததுதான் அவர் செய்த துரோகம்.

1 hour ago, Paanch said:

சிறீலங்கா அரசே யாப்பைமீறிச் செயல்படுவதாக கண்டணங்கள் வந்தும் தமிழர்கள் அதனை ஆதரித்தும் வெடிகொளுத்தியும் மகிழ்கிறார்களே.... !! என் கேள்வி: உருத்திர குமாரன் தமிழினத்துக்கு எதிராகச் செய்த துரோகமென்ன.? 

நல்லதொரு கேள்வி கேட்டிருக்கீங்க பாருங்கோ!

ஈழத்தில் அல்லல்படும் தமிழ் மக்களை சாட்டி அவர் (உருத்திரகுமாரன்) நாடு கடந்த அரசாங்கம் என்று ஒன்றை அமைச்சு போட்டு, அதுல பிரதமர் போஸ்ட் ஐயும் கைப்பற்றி வருஷக் கண்ணக்கா பெரிசா ஒன்றுமே செய்யாமல் சம்பந்தர் ரேஞ்சில காலத்தை கடத்துகிறார். அதாலை தான் அடி விழுகுது. ஆனால் அந்தாள் சம்பந்தரைப் போலவே சொரணைகெட்ட மனுஷர் என்டு நிறையப்பேருக்கு விளங்கேலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.