Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தை வீழ்த்திவிட்டே அரசாங்தை வீழ்த்த முடியும் - வாசுதேவ நாணயக்கார

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
October 30, 2018

vasudeva-nanayakkara.jpg?zoom=1.21000002
புதிய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நாவின் அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, ஐ.நா அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தை வீழ்த்திவிட்டே அரசாங்தை வீழ்த்த முடியும் எனவும் தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தில் இன்று (30.10.18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தாம் அரசமைப்புக்குற்பட்டே செயற்படுவதாகவும், அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளினாலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்ததின்போது ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமைகளிலும் கூட நாம் ஒருபோதும், ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் உதவியை கோரியிருக்கவில்லை எனவும், ஆனால், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் ஒத்துழைப்பு வேண்டும் எனக் கோரியிருப்பது தேசத்துரோகம் எனவும் தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது, 9 மாகாண சபைகளில் 6 மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளன. இரண்டரை வருடங்களுக்கு மேலாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாதிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களமும் இது தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
அமெரிக்கா பிரஜையான ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி சௌதி அரசாங்கத்தினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது வார்த்தைகளில் கவனம் செலுத்திய அமெரிக்கா, தற்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஜனநாயகம் தொடர்பில் சான்றிதழ் வழங்க முயற்சிக்கிறது எனவும் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாடு சார்பு கொள்கைகளினாலேயே அவரை பாதுகாக்க அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றதாக குறிப்பிட்ட அவர், இலங்கை வரலாற்றில் இதுவரையில் 24 தடவைகள் நாடாளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 24 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இருப்பதாகவும், ஆகவே தற்போது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது முதன்முறையல்ல எனவும் எடுத்துரைத்தார்

http://globaltamilnews.net/2018/101352/

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா அமைதிப்படை எப்பவோ வந்திருக்கனும். தமிழ் மக்களைக் காக்க. எனி ரணிலை காக்க வருவினமா என்பது சந்தேகமே. அமெரிக்கா நினைச்சால்... எதுவும் நடத்தலாம்.. ஐ நாவால். ?

On 10/30/2018 at 8:41 PM, பிழம்பு said:

ஐ.நா அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தை வீழ்த்திவிட்டே அரசாங்தை வீழ்த்த முடியும் எனவும் தெரிவித்தார்.

மிக நல்ல திட்டம் தான்!

இலங்கையில் புரையோடிப் போயுள்ள சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த / அகற்ற இதுதான் ஒரேவழி.

  • கருத்துக்கள உறவுகள்

சொல் வழி கேட்க்காவிட்டால் அல்லது உலகவங்கி போன்றதுகள் குடுத்த காசுக்கு பொருள் இடம் வராவிட்டால் அல்லது பணம் அறவே வராது என்று தெரிந்தால் அவை உள்ளே வருவினம் ஐநா அமைதிப்படை எனும் பெயரில். அதுக்கு இன்னம் காலம் இருக்கு டொலருக்கு 500 ரூபா வரும் நேரத்தில் நாடு சிதிலமடைந்து போகும் நேரம்  அவை வந்து இறங்குவினம் .

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

சொல் வழி கேட்க்காவிட்டால் அல்லது உலகவங்கி போன்றதுகள் குடுத்த காசுக்கு பொருள் இடம் வராவிட்டால் அல்லது பணம் அறவே வராது என்று தெரிந்தால் அவை உள்ளே வருவினம் ஐநா அமைதிப்படை எனும் பெயரில். அதுக்கு இன்னம் காலம் இருக்கு டொலருக்கு 500 ரூபா வரும் நேரத்தில் நாடு சிதிலமடைந்து போகும் நேரம்  அவை வந்து இறங்குவினம் .

இந்தப் பிரச்சனையை சமாளிக்கத் தானே இருக்கவே இருக்கிறார் சீனாக்காரன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தப் பிரச்சனையை சமாளிக்கத் தானே இருக்கவே இருக்கிறார் சீனாக்காரன்.

சைனா முக்கியமானதை லவட்டி விட்டது இன்னும் இருக்கிற மிச்சம் மீதிக்கு ஏதாவது மாட்டுபடுதா என்று சொரிலன்காவை சல்லடை போடுகிறான் ஒவ்வொரு இடத்திலை ஒவ்வொரு பெயருடன் கிட்டடியில் தங்கடை கப்பலை தேடுகிரம் என்று யாழுக்குள்ளும் தங்கடை பழைய உடஞ்ச பீங்கனுகளை தேடுறன் எனும் பெயரில் அரிய வகையான கனிமங்கள் இருக்குதா என்று நூல் விட்டு பார்கிறான் இனி வட்டி கட்டவே கடன் படும் நிலையில் இருக்கும் நாட்டுக்கு எவன் குடுப்பான் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.