Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது- அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது- அமெரிக்கா

இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவுடான உடன்படிக்கை காரணமாகவே இலங்கை தனது துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தே ஜேம்ஸ் மட்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் சமாதானத்திற்கான நிலையத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 சீனா கடனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது என்ற கரிசனை நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.சில நாடுகளால்  கடனை திருப்பிசெலுத்த முடியாது என தெரிந்தே சீனா இவ்வாறு நடந்துகொள்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

james_matisssssssss.jpg

இலங்கையில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அவர்கள் தங்கள் துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/43638

அரசியல் நெருக்கடி நிலைமை – அமெரிக்காவின் புதிய தூதுவர் இலங்கைக்கு விஜயம்!

Alaina-B.-Teplitz.jpg

இலங்கை மிகப்பெரிய அரசியல் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் சற்றுமுன்னர் கொழும்பிற்கு வந்தடைந்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய தூதுவராக பதவியேற்ற அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்காவின் தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

இதன் பின்னர் பல்வேறு நாடுகளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தி வருவதுடன், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

http://athavannews.com/அரசியல்-நெருக்கடி-நிலைமை/

  • கருத்துக்கள உறவுகள்

எழுதி வைத்து கொள்ளுங்கள் துறைமுகம்கள் மீதான இறைமை மட்டும் அல்ல ஆபிரிக்கா மூன்றாம்தர நாடுகளை விட கேவலமான ஒரு நாட்டை உருவாக்க சிங்கள இனவாத கூட்டம் முயலுகின்றது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சீனா கடனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது என்ற கரிசனை நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.சில நாடுகளால்  கடனை திருப்பிசெலுத்த முடியாது என தெரிந்தே சீனா இவ்வாறு நடந்துகொள்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சரி சீனாவின் பணத்தை விட்டெறிந்து விட்டு இலங்கையையும் துறைமுகங்களையும் மீட்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி சீனாவின் பணத்தை விட்டெறிந்து விட்டு இலங்கையையும் துறைமுகங்களையும் மீட்கலாமே?

உங்களுக்கு ஒரு கதை ஊரில் உள்ள பண்ணையார் குடித்து அழிந்தால் சுரண்டுபவனுக்கு கொண்டாட்டம் அவனவன் தனக்கு வேண்டியதை லவட்டுவதில் கண்ணாயிருப்பாங்கள் அப்பத்தான் குறைந்த விலையில் காணிகள் வீடுகள் ,பண்ணைகள் வாங்கலாம் அதை விட்டு பண்ணையின் கடனை அடைத்து மீண்டும் பெரிய டான் ஆக்கிவிட இந்த உலகம் விரும்பாது . தனக்கு வேண்டிய அரசியலவாதிகளை காட்சிக்கு கொண்டுவந்து ஒப்பந்தங்களை போட்டு லவட்டி விடவேன்ன்டியதுதான்  பேருக்குத்தான் நீதி நியாயம் எல்லாம் உள்ளுக்குள் எப்படி மற்றைய நாடுகளை சுரண்டுவது என்பதே அவர்களின் இரவும் பகலும் சிந்தனை .

நாங்கள் இன்னும் இந்தியா வந்து பஞ்ச சீல கொள்கையுடன் நீதி நெறி தவறாது எமக்கு விடிவைத்தரும் நம்பிக்கொண்டு இருக்கிறம் அப்பாவியாக. இலங்கையில் பிரச்சனையை தூண்டிவிட்டு நாட்டை சீரளிச்சதே இந்த இந்தியா என்பது தெரியாமல் இன்னும் நம்புகிரம் .

  • கருத்துக்கள உறவுகள்

சீன சுரண்டல் பற்றி 
உலக மகா சுரண்டல்காரன் பேசக்கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை விட மாதா யாராவது இருக்கிறார்களா?

https://www.thenation.com/article/the-us-militarys-best-kept-secret/

https://kylielefkowitz.com/us-military-bases-around-the-world-map.html/us-military-bases-around-the-world-map-contemporary-decoration-where-in-the-world-is-the-us-military-politico-magazine

உங்களை விட மாதா யாராவது இருக்கிறார்களா?

இவர் சொல்வது உண்மை என்று நம்பினாலும், இவ்வளவு பணத்தை கொட்டி வேறு எதாவது ஓர் நாட்டில், உங்களுக்கு சிறப்பு உறவு இருக்கும் நாட்ல கூட, நீங்கள் ஓர் பிரதேசத்தில் அபிவிருத்திக்கு கட்டுமானங்களில் முதலீடு செய்வீர்களா?

பிலிப்பீன்ஸ் இல், 1991 அணுஉலை நீங்கள் கட்ட வைத்து, பிலிப்பீன்ஸ் இந்த அணைத்து தேசிய வளத்தையும் கோதி விட்டு, பிலிப்பீன்ஸ் என்ற கோதை மட்டும் விட்டு வைத்திருக்கிறீர்கள்? ஏன்?

சீன, அக்க குறைந்தது இந்த கடன்கலின் சுமைகளை குறைபதத்திற்கும், மிகவும் மலிவான நாடுகளில் கடன்களை இராது செய்யவும், பகிரங்கமாக அறிவுத்துள்ளது.

முதலில், இப்படி ஏதாவது செய்யுங்கள். பின்பு, சீனாவின் நடத்தை பற்றி பார்ப்போம்.   

 

 

15 hours ago, பெருமாள் said:

எழுதி வைத்து கொள்ளுங்கள் துறைமுகம்கள் மீதான இறைமை மட்டும் அல்ல ஆபிரிக்கா மூன்றாம்தர நாடுகளை விட கேவலமான ஒரு நாட்டை உருவாக்க சிங்கள இனவாத கூட்டம் முயலுகின்றது .

உலகில் வளர்ந்துவரும் தலைநகரங்களில் கொழும்பு முதலிடம்.

நான் மேற்குறிப்பிட்ட செய்திக்கு மூலம், கை, கால், மூக்கு எல்லாம் சொல்ல மாட்டேன் - தேவை இருந்தால் தேடிப் பார்க்கவும். இந்த செய்தியை பார்த்தாலும் புரியாது என்பது எனக்கும் புரியும் 

அதனால் கப்சிப் 

தயவுசெய்து உங்கள் புளுகு மூட்டைகளுக்கு  யாழ் களத்தை பலிக்கடா ஆக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஜீவன் சிவா said:

உலகில் வளர்ந்துவரும் தலைநகரங்களில் கொழும்பு முதலிடம்.

நான் மேற்குறிப்பிட்ட செய்திக்கு மூலம், கை, கால், மூக்கு எல்லாம் சொல்ல மாட்டேன் - தேவை இருந்தால் தேடிப் பார்க்கவும். இந்த செய்தியை பார்த்தாலும் புரியாது என்பது எனக்கும் புரியும் 

அதனால் கப்சிப் 

தயவுசெய்து உங்கள் புளுகு மூட்டைகளுக்கு  யாழ் களத்தை பலிக்கடா ஆக்காதீர்கள்.

உங்கள் நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள் கிணத்துக்குள் இருக்கும் தவளைக்கு உலகம் அவ்வளவுதான் யுத்தம் முடிந்தவுடன் இங்கு பலரும் வந்து கூட்டம்கள் போட்டனர் புலி இல்லை இனி இலங்கையில் தேனும் பாலும் ஓடும் கிளியும் பருந்தும் ஒரே தட்டில் உணவருந்த போகினம் என்று புளுகு மூட்டைகள் அவிழ்த்துவிட்டனர் ஆனால் நாம் அன்று சொன்னதுதான் எழுதினதுதான் இன்று நடக்கிறது இடையில் ஒரே கணிப்பு பிழைத்தது விக்கியர் மீது நாம் கொண்ட எண்ணம் மற்றும்படி இலங்கையில் எந்த மாற்றமில்லாமல் வழமையான தகிடுதத்தம்களுடன் அரசியல் நடைபெறுகிறது காரணம் சிங்கள அரசியல்வாதிகளிடம் ஊறிப்போன இனவாதம் அடுத்து பக்கத்து நாட்டின் எதிர்பார்ப்பு தமிழ் அரசியல்வாதிகள் தம்மை மேவி வேறு நாடுகள் மூலம் தீர்வை பெறக்கூடாது எனும் வைராக்கியம்  இந்த இருபெரும் இடர்பாடுகளும் தீர்க்கபடாமல் இலங்கையில் தீர்வு என்பது சாத்தியமற்ற ஒன்று அத்துடன் சிங்களவர்களுக்கு கண்ணை மூடிய இனவாதம் நாட்டை எங்கு சென்று கொண்டுபோய் விடும் என்பதுக்கு ஆதரங்களை தேடி அலைய வேண்டியதில்லை வரலாறு சொல்லும் .

போரின் இறுதிகட்ட ஆண்டுகளில் இலங்கையின் இராணவ டிவிசன்கள் அதிகரித்தன இப்படி அளவுக்கு அதிகமாக பெருத்த ராணுவத்தை வைத்து என்ன செய்யபோகிறார்கள் என்று கேட்டபோது வந்த பதில் ஐநா உதவி படைக்கு அனுப்பி சிலவை சமாளிப்பம் என்று சிங்களவர்களுக்கு பதில் சொல்லபட்டது அத்துடன் அந்நிய செலவாணியும் வந்து குவியும் என்றார்கள் இப்ப அதுவா நடக்குது ? உறுதி கூறபட்ட தொகையில் பத்து வீதமான படைகளே ஐநாவில் பனி புரிகின்றனர் அதிலும் சில்லெடுப்பு .

இங்கு நான் எழுதும் கருத்துக்கள் உங்களுக்கு வதந்தி ,புளுகு மூடை போன்று தெரிவதுக்கு நான் ஒன்றும் செய்ய இயலாது யுத்தம் முடிந்தபின் என்ன எழுதியதோ அதுதான் இன்று நடக்கிறது சிலவேளை சிங்களவர்கள் இனவாதம் என்ற ஒன்றை மறந்தால் மாறாக நடக்கலாம் அது நடக்காது என்பது உங்களுக்கும் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் துறைமுகத்தை சீனா எப்படிப் பெற்றுக்கொண்டது ....?

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸா தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்தைக் கொண்டிருந்தார்.

அதன் சாத்தியம் குறித்த ஆய்வுகள் இத் துறைமுகத் திட்டம் சரிப்படாது என்றே கூறின. ஆமாம், அடிக்கடி இலங்கைக்குக் கடன் கொடுக்கும் இந்தியாவே இந்தத் திட்டத்துக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்டது.. ஆம், ராஜபக்ஸாவின் காலத்தில் ஸ்ரீலங்காவின் கடன் சுமை பெருகிய வண்ணம் இருந்தது.

சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் ஒன்றான ''சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி'' அம்பாந்தோட்டைத் துறைமுகக் கட்டுமானத்தில் பல வருடங்களாக ஈடுபட்ட நிறுவனமாகும். இப்பொழுது அந்த நிறுவனம் பல தடவைகள் மீள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி திட்டம், கணிசமாக தோல்வியுற்றதன் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியது. உலகின் பரபரப்பான கப்பல் வழித்தடங்களில் ஒன்றான இந்தத் துறைமுகத்தை அண்டிய பாதையில் பல்லாயிரக்கணக்கான கப்பல்கள் பயணிக்கின்றன. ஆனால் 2012 ஆம் ஆண்டில் இந்தத் துறைமுகத்துக்கு 34 கப்பல்கள் மட்டுமே வந்திருந்தன.

ராஜபக்ஸா 2015இல் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் ஜனாதிபதிப் பதவியை இழந்தார், அதன் பின்னான ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கம் ராஜபக்ஸா சீனாவிடம் பெற்றிருந்த கடனைச் செலுத்துவதற்கு கடினப்பட்டது. இதன் காரணமாகச் சீன அரசு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசசோடு பல மாதங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள்... அழுத்தங்களின் பின்னர் 2015 டிசம்பர் மாதம் 99 ஆண்டுகளுக்குத் துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலத்தையும் சீன அரசுக்கு இலங்கை ஒப்படைத்தது.

இந்தத் துறைமுகப் பரிமாற்றம் மூலம் சீனாவின் போட்டி நாடான இந்தியாவின் கடற்கரையிலிருந்து ஒரு சில நூறு மைல்கள் தொலைவிலே சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இராணுவ கேந்திர பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டைத் துறைமுகம் கொண்டு வரப்பட்டது,

சீனா உலக நாடுகளுக்குக் கடன்களையும் உதவிகளையும் வழங்கித் தனது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் நலன்களையும் பெறுவதற்கு முயற்சிக்கிறது. இந்த அம்பாந்தோட்டை நிகழ்வு சீனாவின் செயற்பாட்டைப் புரிந்து கொள்வதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும் -

சீனாவின் உலக நாடுகள் மீதான முதலீடு மற்றும் கடன் திட்டம் என்பன பல கடுமையான குற்றச்சாட்டுகளைக் கிளப்புகிறது. ஊழல் மற்றும் எதேச்சதிகார நடவடிக்கைகள் காரணமாக வளர்ச்சியடைய முனையும் பல நாடுகளில் ஜனநாயக முறை சிக்கலுக்குள்ளாகும் நிலையில் சீனாவின் இத்தகைய அணுகுமுறையானது அந்த நாடுகளை மோசமான சூழ்நிலைக்குள் தள்ளுகிறது. கடன் பொறிக்குள் நாடுகளைச் சிக்க வைத்துத் தமது நலன்களை நிறைவேற்ற முயல்வதால் சீன ஜனாதிபதி Xi Jinping குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகிறார்.

இலங்கை, இந்திய, சீன மற்றும் மேற்கத்திய அதிகாரிகளுடனான பல்வேறு நேர்காணல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் குறித்த ஆவணங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பகுப்பாய்வுகள் நிறைய உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. சீன அரசும் மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்களும் தங்கள் நலன்களை நிலைநாட்டுவதற்காக ஒரு சிறிய நாட்டின் முதலீட்டுப் பசியை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கைத் தேர்தலின் போது, சீன துறைமுக நிர்மாண நிதியில் இருந்து பெருந்தொகையான பணம் நேரடியாக, இராஜபக்ஸாவின் பிரச்சாரத்திற்கும் தேர்தல் உதவிகளுக்கும் தேர்தல் செயற்பாட்டிற்கும் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டது, ராஜபக்ஸா சீனாவின் எல்லா விதிமுறைகளுக்கும் ஒப்புக் கொண்டதுடன், இந்தியாவின் இலங்கை மீதான செல்வாக்கைச் சரியச் செய்வதற்கான சீனாவின் முயற்சிகளில் ஒரு முக்கியமான கூட்டாளியாகவும் கருதப்பட்டார். ''தி நியூயார்க் டைம்ஸ்'' ஏட்டில் ஒரு அரசாங்க விசாரணையில் கண்டறியப்பட்ட இது பற்றிய விரிவான ஆவணங்கள் மற்றும் காசோலைகளால் பணம் செலுத்தப்பட்ட பிரதிகள் ... கோப்புகள் என அனைத்து விபரங்களும் ஆதாரபூர்வமாக உள்ளது.

.அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் ஆர்வம் முற்றிலும் வர்த்தக ரீதியாக இருப்பதாக சீன அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள் என்றாலும் துறைமுக இருப்பிடத்தில் உளவு மற்றும் கேந்திர முக்கியத்துவம் சார்ந்த சாத்தியமான விடயங்கள் ஆரம்பம் முதலே பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இருந்ததாக இலங்கை அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துறைமுகத் திட்டத்தில் கடனுதவிக்கான நிபந்தனைகளில் இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் காலக்கெடுவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டதுடன், மேலும் மேலதிக நிதியுதவியைப் பெறவும் கேட்டுக் கொண்டனர். சமீபத்திய ஆண்டுகளில் தங்களது கடனைத் தள்ளுபடி செய்ய இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளில் மிகவும் கடின நிலையைச் சந்தித்தனர். ஒப்பத்தத்தை ஆரம்பித்தபோது இருந்த மிதமான நிலை மாறிக் கடுமையான சூழல் இப்போது வந்தடைந்திருந்தது. சீனாவின் நோக்கம் துறைமுகத்தில் தனது பங்காளித்துவத்தை நிலைநாட்டுவதாக அமைந்தது தவிர இலங்கைக்கு எந்த விட்டுக்கொடுப்பையும் செய்வதாக அமையவில்லை.

இந்த ஒப்பந்தம் துறைமுகத் திட்டத்திற்கான கடனில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை இல்லாது செய்தபோதிலும், இலங்கை அரசு இப்போது சீனாவிற்கு வரலாற்றில் என்றுமில்லாத கடனாளியாக உள்ளது, இதைவிட வேறு கடன்களும் இருக்கிறது, மற்றைய சர்வதேச கடனளிக்கும் நிறுவனங்களை விடவும் சீனாவின் வட்டி விகிதங்கள் மிகவும் அதிகமாகவும் இருக்கிறது.

இராஜபக்ஸாவும் அவரது உதவியாளர்களும் இந்த கட்டுரையாளரினால் பல மாதங்களுக்கு மேலாக அவர்களிடம் முன் வைக்கப்பட்ட எந்தக் கேள்விகள் குறித்தும் பதிலளிக்கவில்லை. இந்தத் துறைமுகத் திட்டம் தொடர்பான சீன அதிகாரிகள் இது குறித்த எந்தக் கருத்துகளையும் கேள்விகளுக்கான பதில்களையும் தரவில்லை.

இலங்கை நிதி அமைச்சக மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டு, அரசாங்கத்திற்கு 14.8 பில்லியன் அமெரிக்கக டொலர்கள் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அமைச்சின் திட்டமிடலின் பிரகாரம் வாங்கிய கடன்களைத் திருப்பியளிக்கப்படவுள்ளது. அதன்படி இந்த ஆண்டு உலகெங்கிலும் இருந்து காசு வழங்கிய கடன் வழங்குநர்களுக்கு 12.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுக்க வேண்டும்.

"ஜான் ஆடம்ஸ்'' சொன்ன கூற்று .... ''ஒரு நாட்டை அடிபணியச் செய்வதற்கான வழிமுறைகளில் ஒன்று வாள் மற்றது கடன்"'! சீனா ''கடன்'' என்ற செயற்பாட்டைக் கையிலெடுத்துள்ளது என்று 'பிரம்மா சேலனி' என்ற இந்திய அரச ஆலோசகர் கூறுகிறார் , இவர் புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு செயற்படும் கொள்கை ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்.

சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போன்ற சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு கடனால் அவதியுறும் சிறிலங்கா அரசாங்கத்தின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்த முடியும் என இந்திய அதிகாரிகள் அஞ்சுகின்றனர் . இறுதியான அம்பாந்தோட்டைத் துறைமுகக் குத்தகை ஒப்பந்தப்படி இலங்கை அரசின் பிரசன்னம் இன்றி சீன அரசு இராணுவ வழிமுறைகளில் அங்கு ஈடுபட முடியாது.

''அம்பாந்தோட்டையில் முதலீட்டை நியாயப்படுத்த ஒரே வழி இலங்கையின் தேசிய பாதுகாப்பு நிலைப்பாட்டில் இருந்துதான் - அவர்கள் (சீனர்கள்) மக்கள் விடுதலை இராணுவத்தை இலங்கைக்கு கொண்டு வருவார்கள்'' என்றார் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பணியாற்றிய சிவசங்கர் மேனன், பின்னர் அவர் இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

ஆரம்பத்தில் இருந்தே அதிகாரிகள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பயன்பாடு குறித்து கேள்விகள் எழுப்பியிருந்தனர். பிரிட்டனின் அளவில் கால்வாசியானதும் 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டதுமான இலங்கைக்கு இரண்டாவது பிரதான துறைமுகம் தேவையா என்பதே அது. ஏற்கனவே தலைநகரில் முதலாவது பெரிய துறைமுகம் உள்ளது. பொருளாதார ரீதியாக இரண்டாவது பெரிய துறைமுகம் சாத்தியமானதல்ல என அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுக்களின் ஆய்வறிக்கைகள் உறுதியாகக் கூறியிருந்தன.

ஆனால் ராஜபக்சா இந்தத் திட்டத்திற்குப் பச்சைக்கொடி காட்டியிருந்தார், அது குறித்த பெருமிதத்தை செய்தி அறிக்கையையாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

2007 ஆம் ஆண்டில் கவனமாகவும், பொருளாதார ரீதியாகவும் வடிவமைக்கப்பட்ட திட்டத்தை அதிகாரிகள் நம்பியிருந்தார்கள். இலங்கைத் துறைமுக அதிகாரசபை அதனை முன்னெடுத்திருந்தது. இது 2010 ஆம் ஆண்டில் வர்த்தகத்திற்காக ஒரு எல்லைக்குட்பட்ட வகையில் துறைமுகத்தைப் பயன்படுத்தும் ஏற்பாட்டைக் கொண்டிருந்தது.

சீன அரசாங்கத்தின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடம் இருந்து 307 மில்லியன் டொலர்கள் இந்த திட்டத்திற்கான முதற் பெரிய கடனாக இலங்கைக்குக் கிடைத்தது. ஆனால் கடனைப் பெறுவதற்கு, சீனாவின் ''China Harbour'' என்ற நிறுவனமே துறைமுகக் கட்டுமானத்தை நடத்த வேண்டும், அந்த நேரத்தில் இந்தச் சேதி அமெரிக்க தூதரக கேபிள் செய்தி பரிமாற்றத்தின் வழியாக விக்கிலீக்ஸிற்கு கசிந்தது.

இது ஒரு வெளிப்படையான ஏல ஒப்பந்தத்தை அனுமதிக்காமல், உலகம் முழுவதும் அதன் திட்டங்களுக்கு சீனாவின் ஒரு பொதுவான கோரிக்கையாகும். இத்தகைய கட்டுமான ஒப்பந்தத்தின் போது சீன அரசாங்கம் சீன நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சீனத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கடனாகக் கொடுத்த பில்லியன் கணக்கான டொலர்களை மீளவும் அது பெற்றுக் கொள்கிறது.

சீன அதிகாரிகளும், சீனத் துறைமுக நிறுவனமும் ராஜபக்ஸாவுடன் உறவுகளை பலப்படுத்திக் கொண்டும் இரு தரப்பினரும் நம்பிக்கையாக ராஜபக்ஸா அதிகாரத்தில் இருந்த வேளையில் இணைந்து செயற்பட்டிருந்தனர்.

2015 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் தேர்தலின் போது சீனத் தூதுவர் இராஜதந்திர விதிமுறைகளை மீறி ராஜபக்ஸாவை வெல்ல வைக்கும் முகமாக வெளிப்படையாக அவரை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார்., சீன அரசாங்கத்துடனான இலங்கையின் பொருளாதார உடன்படிக்கைகளை கிழித்து எறிந்து விடுவதற்கான அச்சுறுத்தலை இந்த நடவடிக்கை ஏற்படுத்தியது.

வளர்ந்து வந்த கடன் சுமை மற்றும் துறைமுகத் திட்ட செலவுகள் துறைமுகத்தை இயங்க வைப்பதில் பல சிக்கல்களை உருவாக்கியிருந்தது. இலங்கை அரசியலில் இந்த விடயம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சக்தி வாய்ந்த பிரச்சினையை அரசுக்கு எதிராகக் கிளப்பும் வாய்ப்பைக் கொடுத்தது, அதனால் சீனாவைப் பற்றிய சந்தேகங்கள் கிளம்பின. அது குறித்த பிரச்சாரம் வலுப்பட்டது. முடிவில் ராஜபக்ஸா தேர்தலில் தோல்வியடைந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் இலங்கையின் நிதி உடன்படிக்கைகளை ஆராய்வதற்கான கட்டளை ஒன்றைக் கொண்டு வந்தது. ராஜபக்ஸா ஆட்சியின் கீழ், நாட்டின் கடன் 44.8 பில்லியன் டாலர் வரை மூன்று மடங்கு அதிகரித்திருந்தது. 2015ம் ஆண்டு முடிவிற்குள் 4.68 பில்லியன் டொலர்கள் கட்டப்பட வேண்டியிருந்தது.

புதிய அரசாங்கம் இலங்கை, இந்தியா, ஜப்பான், மற்றும் மேற்கு நாடுகளை நோக்கியதாக மாறியது. ஆனால் இலங்கைக்குச் சீனாவால் வழங்கப்பட்ட கடனை மற்றும் நிதியை வேறு எந்த நாட்டாலும் ஈடு செய்ய முடியாது என்பதை இலங்கை அதிகாரிகள் விரைவில் உணர்ந்தனர்.

இலங்கை அரசாங்க அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டில் மீண்டும் சீன அதிகாரிகளுடன் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்காகச் சந்திக்கத் தொடங்கினர், தங்களது துறைமுகத்தை தாங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிக் கையாள வேண்டும் என்று இலங்கைத் தரப்பு எதிர்பார்க்கின்றது.

ஆனால் சீன நிறுவனத்தைத் துறைமுகத்தின் முக்கிய பங்குகளை வாங்க அனுமதியளிக்க வேண்டும் என்று சீன அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடன் காரணமாக சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கையளித்தால் சீனா இராணுவப் பயன்பாட்டிற்கு அதனைப் பயன்படுத்தும் சாத்தியமே உள்ளது.

குறிப்பாகச் சீனா தென் சீனக்கடலில் தீவுகளைத் தொடர்ந்து வைத்திருப்பதும் அதனை இராணுவ மயமாக்குவதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இறுதியான தங்கள் உடன்படிக்கை சீனா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை இராணுவப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை தடுக்கிறது என்று இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் மற்றவர்கள் சீனாவிடம் மோசமாகக் கடன்பட்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தைச் சீனா தனது இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்த அழுத்தம் கொடுக்க முடியும் என்கின்றனர். மேலும், தேசியக் கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி ஹர்ஷ டி சில்வா, "அரசுகள் மாறலாம்" என்று கூறுகின்றார்.

 

மரியா அபி-ஹபீப் ஆகியோர் செவ்வாய், யூன் 26, 2018 அன்று ரொறொன்ரோ ஸ்ராரில் எழுதிய கட்டுரையின் சாரம்

21 hours ago, பெருமாள் said:

உங்கள் நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள் கிணத்துக்குள் இருக்கும் தவளைக்கு உலகம் அவ்வளவுதான் யுத்தம் முடிந்தவுடன் இங்கு பலரும் வந்து கூட்டம்கள் போட்டனர் புலி இல்லை இனி இலங்கையில் தேனும் பாலும் ஓடும் கிளியும் பருந்தும் ஒரே தட்டில் உணவருந்த போகினம் என்று புளுகு மூட்டைகள் அவிழ்த்துவிட்டனர் ஆனால் நாம் அன்று சொன்னதுதான் எழுதினதுதான் இன்று நடக்கிறது இடையில் ஒரே கணிப்பு பிழைத்தது விக்கியர் மீது நாம் கொண்ட எண்ணம் மற்றும்படி இலங்கையில் எந்த மாற்றமில்லாமல் வழமையான தகிடுதத்தம்களுடன் அரசியல் நடைபெறுகிறது காரணம் சிங்கள அரசியல்வாதிகளிடம் ஊறிப்போன இனவாதம் அடுத்து பக்கத்து நாட்டின் எதிர்பார்ப்பு தமிழ் அரசியல்வாதிகள் தம்மை மேவி வேறு நாடுகள் மூலம் தீர்வை பெறக்கூடாது எனும் வைராக்கியம்  இந்த இருபெரும் இடர்பாடுகளும் தீர்க்கபடாமல் இலங்கையில் தீர்வு என்பது சாத்தியமற்ற ஒன்று அத்துடன் சிங்களவர்களுக்கு கண்ணை மூடிய இனவாதம் நாட்டை எங்கு சென்று கொண்டுபோய் விடும் என்பதுக்கு ஆதரங்களை தேடி அலைய வேண்டியதில்லை வரலாறு சொல்லும் .

போரின் இறுதிகட்ட ஆண்டுகளில் இலங்கையின் இராணவ டிவிசன்கள் அதிகரித்தன இப்படி அளவுக்கு அதிகமாக பெருத்த ராணுவத்தை வைத்து என்ன செய்யபோகிறார்கள் என்று கேட்டபோது வந்த பதில் ஐநா உதவி படைக்கு அனுப்பி சிலவை சமாளிப்பம் என்று சிங்களவர்களுக்கு பதில் சொல்லபட்டது அத்துடன் அந்நிய செலவாணியும் வந்து குவியும் என்றார்கள் இப்ப அதுவா நடக்குது ? உறுதி கூறபட்ட தொகையில் பத்து வீதமான படைகளே ஐநாவில் பனி புரிகின்றனர் அதிலும் சில்லெடுப்பு .

இங்கு நான் எழுதும் கருத்துக்கள் உங்களுக்கு வதந்தி ,புளுகு மூடை போன்று தெரிவதுக்கு நான் ஒன்றும் செய்ய இயலாது யுத்தம் முடிந்தபின் என்ன எழுதியதோ அதுதான் இன்று நடக்கிறது சிலவேளை சிங்களவர்கள் இனவாதம் என்ற ஒன்றை மறந்தால் மாறாக நடக்கலாம் அது நடக்காது என்பது உங்களுக்கும் தெரியும் .

உங்கள் நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள் கிணத்துக்குள் இருக்கும் தவளைக்கு உலகம் அவ்வளவுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.