Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு – தெற்கு மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட அரசியல்வாதிகள் தீர்க்கவில்லை – முரளி குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு – தெற்கு மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட அரசியல்வாதிகள் தீர்க்கவில்லை – முரளி குற்றச்சாட்டு

104189557_murali2.jpg

வடக்கிலும் தெற்கிலும்  உள்ள மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட அரசியல்வாதிகள் பூர்த்தி செய்யவில்லை என இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிபிசிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே முத்தையா முரளிதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை மக்கள், அரசியல்வாதிகளிடம் இருந்து ஜனநாயகம் மட்டுமன்றி உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் எதிர்பார்க்கின்றனர்.

அரசியல்வாதிகள் தெற்கிலும், வடக்கிலும் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்யவில்லை.

குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் ஜனநாயகத்தையும் பழைய விடயங்களையும் பற்றி பேசுகின்றனரே தவிர மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேசுவதே இல்லை என்று முத்தையா முரளிதரன் சுட்டிக்காட்டினார்.

 

http://athavannews.com/வடக்கு-தெற்கு-மக்களின்-அ/

 

  • கருத்துக்கள உறவுகள்

_104189557_murali2.jpg

இந்த நாட்டில் நூற்றுக்கு எண்பது வீதம் இருப்பது சிங்கள பௌத்தர்களே, இதனால் இந்த நாடு அவர்களுக்கே
உரித்தானது என சாதனைத் தமிழன் என்று வர்ணிக்கப்படும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் நாயகனாக விளங்கும் இலங்கை தமிழரான முத்தையா முரளிதரன் BBC க்கு  நேற்றைய தினம் வழங்கிய நேர்காணலிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
https://www.bbc.com/sinhala/46106963

நான் தமிழன். முஸ்லிம், சிங்களம் என பலரும் இங்கு உள்ளனர். நாம் எல்லோரும் மனிதர்கள் தான். என்னை வெட்டினாலும் இரத்தம் வரும், அவர்களை வெட்டினாலும் இரத்தம் தான் வரும்.

1977இல் எங்களுடைய வீடு தீக்கிரையாகியது. தந்தையின் உடம்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 18 தையல் போடப்பட்ட தழும்பு தற்பொழுதும் உள்ளது.

நாம் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் பிழைத்தோம். எனினும் என்னுடைய தந்தை நாட்டை விட்டு போகவில்லை. எமது உறவினர்கள் அனைவரும் நாட்டை விட்டு சென்றார்கள்.

அவர்கள் தற்பொழுது இந்தியாவில் இருக்கிறார்கள். எனினும் நாம் போகவில்லை. 1983 இலும் எங்களுக்கு எதுவும் ஆகவில்லை. மக்கள் நம்புகின்றார்கள் தாம் இலங்கையர்கள் என்பதை.

எமது தாத்தாமார் இந்தியாவிலிருந்து தான் வந்தார்கள். எனினும் தற்பொழுது நாம் இலங்கையர்களாக ஆகிவிட்டோம். நாம் இலங்கையில் தான் இருக்கின்றோம்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தவறுகளை செய்திருக்கிறார்கள்.

இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். யுத்தம் என்பது அப்பாவி மக்கள் உயிரிழப்பது தான். இல்லையென்றால் அதை யுத்தம் என சொல்லமாட்டார்கள்.

2009இல் யுத்தம் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஜனநாயகம் இல்லை, உரிமைகள் கிடைக்கவில்லை என கோரப்படுவதாயின், நாமும் நேர்மையாக இதனை பார்க்க வேண்டும்.

இந்த நாட்டில் நூற்றுக்கு எண்பது வீதம் இருப்பது சிங்கள பௌத்தர்களே. அவர்களுக்கே இந்த நாடு உரித்தானது, எவ்வளவு தான் இல்லையென்றாலும்.

இலங்கையர்களாக இல்லாமல் மதத்தின் அடிப்படையில் பார்த்தோமானால் நாம் சிறுபான்மை இனம். நான் என்ன கேட்கிறேன் என்றால் இவ்வாறான பிரச்சினை நடக்கும் போது நானும் பாடசாலைக்கு சென்றேன் தானே.

எனக்கு திறமை இருந்ததால் பிரகாசித்தேன். இந்த முழு இலங்கை நாடும் மதத்தின் அடிப்படையிலான எனக்கு ஆதரவளித்தார்கள்? என வினவியுள்ளார்.

அத்துடன், கடந்த காலத்தில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த இருவர் மாத்திரமே நாட்டிலுள்ள ஏழை மக்கள் குறித்து அவதானம் செலுத்தினார்கள். இதனை நீங்களே யாரென்று அறிந்து கொள்ளுங்கள்.

நான் அரசியலில், ஏழை மக்களுக்கு உதவி செய்து அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வருபவர்களுக்கே ஆதரவளிப்பேன்.

எனக்கு இந்த நாட்டு மக்கள் உதவியிருக்கிறார்கள். என்னை உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்திற்கு நாம் அரசியல்வாதிகளை அனுப்புவது நாட்டை முறையாக நடத்திச் செல்லவும், மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதற்காகவும் தானே.

எனவே இதனை எம்மால் செய்ய முடியாது, அதனை எம்மால் செய்ய முடியாது என அவர்கள் சொல்ல முடியாது. கொடுத்த வேலையை செய்ய வேண்டும். முடியாது என்றால் விட்டுச் செல்ல வேண்டும்.

யுத்தம் நடந்த போது இருந்த பயம் 2009இற்கு பின்னர் இருக்கவில்லை. அது தானே சுதந்திரம் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.madawalaenews.com/2018/11/80.html

  • கருத்துக்கள உறவுகள்

முரளி சொல்வதை எவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற தேவையில்லை.

80% பெளத்தர்கள் ஆகிறபடியினால், இது அவர்களது நாடென்று என்று ஆகிவிடும் என்று முரளிகுறிப்பிடுவது அவரது அறியாமையைத்தான் காட்டுகிறது. இல்லையேல், அவரது சிங்களப் பேரினவாதத்திற்கான விசுவாசம் அவரை இவ்வாறு பேசவைக்கிறது..

1977 இல் இவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டதும், தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயப்பட்டதும் நடந்தாலும்கூட, அவர் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக ஏற்றுக் கொள்ளவில்லை.

2009 இல் போர் நிறவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தான் சுதந்திரத்தை அனுபவிப்பதாகச் சொல்கிறார். ஆனால், இவர்களது வாக்குறிமை பறிக்கப்பட்டதுமுதல், இன்றுவரை இவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களும், ஏனைய தமிழர்களும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்பது இவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.யுத்தம் இல்லாத, மயான அமைதிதான் சுதந்திரம் என்று இவர் போன்றவர்கள் நினைப்பதும் தவறில்லை.

இரண்டுலட்சம் பேரைக் காவுகொடுத்து, இன்றுவரை அடிப்படை உரிமைகளுக்காக போராடும் ஈழத் தமிழினம் படும் அவஸ்த்தைகள் இவருக்குப் புரியப் போவதில்லை.

சிங்கள நாட்டின் கிரிக்கெட் குழுவில் விளையாடி பலமுறை அவர்கள் வெல்வதற்குக் காரணமான ஒரு தமிழனை அவர்கள் சிறப்பாகக் கவனிப்பதை எல்லாத் தமிழர்களுக்குமான நிலைமை இதுதான் என்று நினைக்கிறார். இவர் பிரகாசிக்காது விட்டிருந்தால், இவரைப் பற்றி யாருமே கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். இன்றுவரை இவர் தவிர்த்து வேறு எந்தத் தமிழரும் சிங்களக் கிரிக்கெட் அணியில் விளையாடச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதுமட்டுமல்லாமல், சென்றமுறை மகிந்த ஆட்சியில் இருந்தபொழுது, இவரது சகோதரர் மருத்துவத் தேவைக்கென்ற பெயரில் இறக்குமதிசெய்த பெருமளவு ரசாயனம் உண்மையாகவே மதுபான உற்பத்திக்ககத்தான் என்று கண்டறியப்பட்டு சுங்கத்தால் தடுத்துவைக்கப்பட்டதும், பின்னர் முரளி மகிந்தவுடன் சமரசம் செய்துகொண்டு அப்பொருட்களை விடுவித்ததும் நினைவிலிருக்கலாம்.

முரளி ஈழத் தமிழரின் சார்பாகப் பேச எந்த அருகதையும் அற்றவர். முதலாவது அவர் மலையகத் தமிழர். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஈழத் தமிழரின் பிரச்சனைகளிலிருந்தும் வேறுபட்டவை.  அடுத்ததாக, அவரும் லக்ஷ்மன் கதிர்காமர், ஜெயராஜ் பெர்ணான்டோப்புள்ளே, நீலன் திருச்செல்வம் போன்ற ஏனைய சிங்களத் - தமிழர்கள் போன்று நன்றாகக்க் கவனிக்கப்படுபவர். ஆகவே, அவருக்குத் தமிழரின் உண்மையான பிரச்சினைகள் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிங்களத்தால் செல்லமாக வளர்க்கப்படும் தமிழ் வளர்ப்பு நாய்களின் குரைத்தல் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இந்த நாட்டில் நூற்றுக்கு எண்பது வீதம் இருப்பது சிங்கள பௌத்தர்களே, இதனால் இந்த நாடு அவர்களுக்கே
உரித்தானது என சாதனைத் தமிழன் என்று வர்ணிக்கப்படும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இப்படியே போனால் .. எதிர்காலத்தில் "லங்காஸ்தான்" அமைவது 100% உறுதி .. அப்புறம் மாத்தி பேசப்படாது ?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அ[ப்படித்தான் கூறுவார் இவரது அண்ணஙாரன் மெத்தனோல் இறக்குமதியில் ஊழல் செய்து அகப்பட்டிருக்கிறார் மற்றப்படி இவர்களை நாங்கள் வடக்கத்தையார் என்றுதானே கூபிடுகிறனாங்கள் அந்தக்கோவம் இப்ப பொருளாதாரத்திலும் வளர்ந்துவிட்டபின்பு அதிகருக்கும்தானே தவிர ஒரு இந்தியரான இவர் இந்தியாவில் கலியாணம் கட்டி அங்கு செற்றிலாகியதும் இவரது மனைவியின் மருத்துவமனை சென்னையில் இருப்பது யாவரும் அறிந்ததே சும்ம நான் தமிழன் அது இது என முறுக்கேறி நிண்டால் தமிழிசை சவுந்தரராJஅன் சொன்னதுபோல் ரெய்டு இவரது பொண்டாட்டியின் மருத்துவமனை தேடிவரும் அதுக்கு முன்பே பொத்திக்கொண்டு புத்தம் சரணம் கச்சாமி பாடிவிட்டால் பாதுகாப்புத்தானே, இவனுக்குத் தெரிந்திருக்கு எதிர்காலத்தில் சிங்களவன், இவர் கிரிக்கெட் ஆடும்போது போதை வஸ்துப் பாவிச்சார் எனச்சொல்லவும்கூடுமென. லக்கி பிராண்ட் விஸ்கோத்து நல்லபடி விக்கவேணும்  அல்லது அதை இவன் வளர்க்கும் நாய்கூடத்தின்னாது. நாடுவிட்டு நாடுவந்தும் இப்பவும் மலிபன் லெமன்பொப்பில் மயங்கி நிக்கிறம் அதையும் நினைவுபடுத்தவேண்டும்.

இவர் பிரWதது சிங்கள தேசத்தில் வெள்ளைக்கரத்துரைக்கு அடிமை சேவகம் செய்ய பாட்டஙாரன் வெளியால போனபோது எந்தக் கண்டிச்சிங்களவன் வளவுக்குள்ள நுளைந்தாணோ ஆர் அறிவம்.

இவர்களது கருத்துக்களை எல்லாம் ஏறி மிதித்துக்கொண்டு போயிடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

பிரபாகரன் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டார் - முரளி

 

murali.jpg
ஜனநாயகம், உரிமைகள் சட்டம் என்பன இரண்டாவது, நாட்டு மக்களுக்கு மூன்று வேளை தேவையான உணவு, பிள்ளைகளுக்கான கல்வி என்பனவே முதன்மையானது என இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச ஊடகம் ஒன்றின் சிங்களச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
 
பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் அண்மையில் 9 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார், ஆனால் வடக்கு சார் அரசியல்வாதிகள் யாரும் அதனை கவனத்திற்கொள்ளவில்லை.
 
கடந்த காலங்களில் நாட்டில் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன, தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு தரப்பினரிடத்திலும் தவறுகள் உள்ளன. பெரும்பான்மையின மக்கள் முழுதும் தவறிழைத்தார்கள் என நான் கூறவில்லை, அவர்களுள் 5 சதவீதமானவர்கள் அரசியல் சூழலை சாதகமாக்கிக்கொண்டு தவறிழைத்தார்கள்.
 
இவ்வாறான செயற்பாடுகள் முழு நாட்டையும் பாதித்தது, இவ்வாறான சூழலிலேயே பிரபாகரன் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_666.html

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் சொல்வதற்கில்லை நம்ம அரசியல் வாதிகள் சொல்லாததையா சொல்லிட்டார் அவர் :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த போன்றோரும் பயங்கரவாதி ஆக்கப்பட்டார்களா??

ஏனைய சிறுபான்மை இனங்களை கொண்ட நாடுகள் பெரும்பான்மையினரின் நாடு என சொல்வதில்லை. முரளி  இன்னும் அடிமை தனத்தில் இருந்து வெளிவரவில்லை என்றே அவரின் கருத்துக்கள்  தெரிவிக்கின்றன.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.