Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்கார் படத்திற்கு எதிர்ப்பு.. அதிமுக போராட்டத்தால், போர்க் களமான தமிழகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பà¯à®°à®¾à®à¯à®à®®à¯ à®à¯à®¯à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯

சர்கார் படத்திற்கு எதிர்ப்பு.. அதிமுக போராட்டத்தால், போர்க் களமான தமிழகம்.

சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கிறார்கள். மெர்சலை தொடர்ந்து தற்போது சர்கார் படமும் பிரச்சனையை சந்தித்து இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு அடுத்து விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளது. இந்த படம் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் சர்கார் படத்திற்கு அதிமுக போர்க்கொடி தூக்கியுள்ளது. தமிழகம் முழுக்க படத்திற்கு எதிராக போராட தொடங்கி உள்ளது.

சர்கார் படத்தால் அதிமுகவினர் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதிமுகவின் திட்டங்கள் குறித்தும், அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்த படத்தை அதிமுக எதிர்க்க முக்கிய காரணம்.

முதலில் மதுரையில்தான் சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக போராட தொடங்கியது. அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மதுரையில் சர்கார் படம் வெளியாகி இருக்கும் நிறைய தியேட்டர்கள் முன்னிலையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் சினிப்பிரியா தியேட்டர் காலையில் முற்றுகையிடப்பட்டது. மதியமும் படம் பார்க்க வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

à®à¯à®µà¯ பà¯à®°à®¾à®à¯à®à®®à¯

மதுரை அண்ணாநகரில் சினிபிரியா தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. படம் பார்க்க வந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்குள்ள சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் சர்காருக்கு எதிராக கோவையிலும் போராட்டம் நடக்கிறது. கோவையில் சாந்தி தியேட்டரில் போஸ்டர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவை ரயில் நிலையம் அருகே சாந்தி தியேட்டர் உள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு வந்த விஜய் ரசிகர்கள் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.

திருச்சியில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள 7 திரையரங்குகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க தொடங்கி உள்ளனர். மதுரையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி திருச்சியில் போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். திருச்சியில் இன்று இரவு சர்கார் காட்சி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

திரà¯à®à¯à®à®¿ பà¯à®°à®¾à®à¯à®à®®à¯

இந்த மாவட்டங்களில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அதாவது சர்கார் படம் வெளியாகி இருக்கும் அனைத்து தியேட்டர்களின் முன் நின்று போராட்டம் நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். சர்கார் படத்தை யாரையும் பார்க்க விடாத அளவிற்கு அதிமுக கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க விஜய் - முருகதாஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஆம் அதிமுக அரசு சர்கார் குழு மீது நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதிகபட்சம் வழக்கு தொடுக்கும் நிலை வரை செல்ல வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இன்றோ நாளையோ இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/admk-started-protesting-against-actor-vijay-sarkar-team-333735.html

 

##############   ###############   #################   #################  ################   #################    ####################

 

v

அ.தி.மு.க.வினர் போராட்டத்திற்கு,  பணிந்தது சர்கார் படக்குழு.. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்.

சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குமண்டல திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர், 'திருப்பூர்' சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் போராட்டத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சுப்பிரமணியன் கூறியதாவது: அதிமுகவினர் மாநிலம் முழுக்க, சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து, தயாரிப்பு தரப்பு கவனத்திற்கு கொண்டு சென்றோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இன்று இரவு, எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும் என முடிவு செய்து, நாளை மதியம் முதல் அவையில்லாத காட்சிகள் மட்டும் திரையிடப்படும். தணிக்கை குழு அனுமதி பெற்று, இதை செய்வோம்.

இதுதொடர்பாக, முருகதாஸ், விஜய்யிடம் நான் பேசவில்லை. தயாரிப்பு தரப்பு இந்த தகவலை அவர்களுக்கு சொல்லியிருப்பார்கள்.

படத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயற்பெயரை குறிப்பிடும் காட்சிகள், ம்யூட் செய்யப்படும். எனவே அதிமுகவினர் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு சுப்பிரமரணியம் தெரிவித்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/sun-pictures-ready-cut-some-scenes-from-sarkar-movie-333757.html

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களம் எல்லாம் ஒன்றுமில்லை. குவாட்டர் , சிப்ஸு பொக்காற் , புரியாணி போக தினப்படி ரூ 500 .. இதான் மூலதனம் . ?

டிஸ்கி :

மதிய காட்சிக்கு போராட்டம் .. இரவு காட்சிக்கு அதே தியேட்டரில் குந்தி இருக்கினம் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

போர்க்களம் எல்லாம் ஒன்றுமில்லை. குவாட்டர் , சிப்ஸு பொக்காற் , புரியாணி போக தினப்படி ரூ 500 .. இதான் மூலதனம் . ?

டிஸ்கி :

மதிய காட்சிக்கு போராட்டம் .. இரவு காட்சிக்கு அதே தியேட்டரில் குந்தி இருக்கினம் ?

அட பாவிங்களா... இது, புது தினிசான... போராட்டமாக  இருக்கிறது. :grin:
சாப்பாடு, காசு எல்லாம் வாங்கி போராட்டம் செய்து விட்டு...
எதிர்த்த படத்தையும் பார்த்து விட்டு வருகிறார்கள்.
இதனால்... அரசியல் கட்சியினரும் கோவிக்க  மாட்டார்கள், விஜயின் படத்துக்கும் நல்ல விளம்பரம்  செய்துள்ளார்கள். ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

à®à®©à¯à®© à®à®à¯à®à®®à¯

49பின்னா என்ன பாஸ்? கூகுளில் விழுந்து விழுந்து தேடிய மக்கள்.. டிரெண்டில் இடம்பிடித்தது!

சர்கார் படத்திற்கு பின் மக்கள் சட்டப்பிரிவு 49பி என்றால் என்ன என்று கூகுளில் அதிக அளவில் தேடி இருக்கிறார்கள்.

விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளது.

இந்த நிலையில் சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கிறார்கள். இதனால் படம் மீண்டும் இந்தியா முழுக்க வைரலாகி உள்ளது.

இந்த படத்தில் ஹீரோ சுந்தர் ராமசாமியின் ஓட்டை வேறு ஒரு நபர் கள்ள ஓட்டு போட்டுவிடுவார். அதற்கு எதிராகத்தான் கதை வேகம் பிடிக்கும். இந்த படத்தில் ஹீரோ மக்களிடம் தேர்தல் சட்ட பிரிவு 49பி பற்றி விளக்கம் அளிப்பார். அந்த காட்சி பெரிய வைரல் ஆகியுள்ளது.

தேர்தல் சட்ட பிரிவு 49பி படி ஒருவர் நம்முடைய ஓட்டை கள்ள ஓட்டாக பதிவு செய்துவிட்டாலும், நமக்கு நம்முடைய ஓட்டை பதிவு செய்ய உரிமை அளிக்கும். அதாவது வாக்கு பதிவு மையத்திற்கு நாம் சென்று அதற்கு என்று இருக்கும் வாக்கு சீட்டு ஒன்றில் வாக்கை தனியாக பதிவு செய்யலாம். இதனால் கள்ள ஓட்டு காரணமாக நம்முடைய ஓட்டு பறிபோகாது.

படத்தில் இந்த சட்டம் குறித்து வந்த வசனத்திற்கு பின் அந்த சட்டம் பெரிய வைரல் ஆகியுள்ளது. கூகுளில் மக்கள் இதைப்பற்றி விழுந்து விழுந்து தேடி இருக்கிறார்கள். அதன்படி கூகுள் டிரெண்டில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 49P என்ற வார்த்தை அதிக அளவில் தேடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சர்கார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இதுகுறித்து டிவிட் செய்துள்ளது. கூகுளில் டிரெண்டில் 49P சர்கார் பட ரிலீசிற்கு பின் திடீர் என்று அதிகரித்து இருக்கிறது என்று டிவிட் செய்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/thanks-sarkar-49p-finally-gets-into-google-trend-after-vijay-dialogue-333783.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

à®®à®à¯à®à®³à¯ பà¯à®à®¤à¯ தà¯à®à®à¯à®à®¿à®¯à¯à®³à¯à®³à®©à®°à¯

சர்கார் சட்டம் 49 பிக்கும், தேர்தல் விதி 49 பிக்கும் என்ன வித்தியாசம்!

சர்கார் திரைப்படத்தில் கூறப்படும் 49 பிக்கும் நிஜத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி இருக்கும் 49 பிக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியுமா மக்களே.

தேர்தல் என்றால் வாக்களிப்பது இதைத் தவிர பிரபலமாகாத பல விஷயங்களை திரைப்படங்கள் பிரபலப்படுத்தி வருகின்றன. தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று வாக்களிக்க விரும்புபவர்கள் நோட்டாவை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் ஒரு ஆப்ஷனை கொடுத்தது.

நோட்டா என்ற பெயரில் திரைப்படமே வந்துவிட்டது. தொடக்கத்தில் நோட்டாவை சாதாரணமாக நினைத்தன அரசியல் கட்சிகள். ஆனால் இப்போதெல்லாம் தேர்தல் நடந்தால் வேட்பாளர் டெபாசிட் இழந்தாரா இல்லையா என்ற செய்தியோடு நோட்டா பெற்ற ஓட்டுகளை கட்சிகள் பெற்றுள்ளனவா என்று ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.

இதன் அடுத்த கட்டமாக முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக இருந்தாலும் 'சர்கார்' மூலம் 49 பி சட்டம் பற்றி மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர். சர்காரின் நாயகன் விஜய் ஓட்டு போடுவதற்காக அமெரிக்காவில் இருந்து தமிழகம் வருகிறார். ஆனால் ஓட்டு போடச் சென்ற போது தான் அவருடைய ஓட்டை கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது.

இதனால் கோபமடைந்த விஜய் 49 பி சட்டத்தை பயன்படுத்தி நீதிமன்றத்தை நாடி தேர்தலை நிறுத்துகிறார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு தனக்கு பிடித்தவர்கள் வாயிலாக ஆட்சிக்கு வருகிறார்.

à®à®£à¯à®£à®¿à®à¯à®à¯à®à¯à®à¯ à®à®¤à®µà®¾à®¤à¯

தேர்தல் சட்டத்தில் 49 பி என்ற பிரிவு இருப்பது உண்மை தான், ஆனால் படத்தில் சொல்லப்பட்டது போல 49 பி பிரிவின் கீழ் வாக்களிப்பவர்களின் வாக்குகளுக்கு மதிப்பு இல்லை என்பது தான் உண்மை. வாக்காளர் ஓட்டளிக்க செல்லும் போது அவரின் ஓட்டு கள்ளஓட்டாக போடப்பட்டிருந்தால் தேர்தல் அலுவலரிடம் 49 பியின் கீழ் வாக்களிக்க விரும்புவதாக தெரிவிக்கலாம்.

அந்த வாக்காளருக்கு தனியாக ஒரு சீட்டு வழங்கப்படும், அந்தச் சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும் அதில் இருந்து தனக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். இந்த வாக்குச் சீட்டு தனியே வைக்கப்படும், ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதியப்பட்ட கள்ள ஓட்டு தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வாக்காளருக்கு வாக்களித்தோம் என்ற திருப்தி மட்டுமே கிடைக்கும்.

எனினும் 49 பி பிரிவில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. தனது ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது என்று பலர் 49 பி பிரிவின் கீழ் வாக்களித்தால் அப்போது தேர்தலுக்கு சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது. 49 பி பிரிவில் கள்ள ஓட்டு முற்றிலும் ஒழியாது ஆனால் மக்களுக்கு இந்தச் சட்டம் பிரபலமானால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-difference-between-sarkar-49-p-real-49-p-333784.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling, text

  • கருத்துக்கள உறவுகள்

சர்கார் படத்தின் மையக்கதை உட்பட கதாபாத்திரங்கள் கூட காப்பிதான். உதாரணமாக கதாநாயகன் சுந்தர்  Google CEO சுந்தர் பிச்சையையும்  வில்லி பாத்திரத்தில் கோமளவல்லி அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா ஆகியோரை நினைவூட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாயிருக்கிற படத்தை எல்லோரும் சேர்ந்து மாபெரும் வெற்றிப் படமாக ஆக்குகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சும்மாயிருக்கிற படத்தை எல்லோரும் சேர்ந்து மாபெரும் வெற்றிப் படமாக ஆக்குகிறார்கள்.

விஜய்... ஈழத்து பெண்ணை திருமணம் செய்தவர் என்பதால்,
நாமும்.. விஜய்க்கு  ஆதரவு கொடுப்போம்.
- சினிமா பைத்தியம் தமிழ்சிறி.-
 

  • கருத்துக்கள உறவுகள்

நானிருப்பது ஒரு சிறிய கிராமம், நாளை இங்கும் ஒரு தியேட்டரில் ஒரு காட்சி மட்டும் சர்க்கார் ஓடுகிறது. என்போன்ற சிலரை மட்டும் நம்பி போடுகின்றார்கள். அவர்களை நான் ஏமாத்தப்போவதில்லை.....!  ?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே அங்கிருந்துதான் எடுக்கப்பட்டது. ?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்கிட்ட தான் முழு படம் இருக்கே... எப்படி கட் பண்ணுவீங்க?  - தமிழ்ராக்கர்ஸ்.. சர்கார்  மீம்ஸ்.

12-0109266001541751821.jpg

 

11-0508975001541751810.jpg

 

2-0136295001541751717.jpg

 

2-0763730001541674867.jpg

 

2-0566225001541674831.jpg

 

Image may contain: 1 person, text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:grin:        :grin:        :grin:

யம்மா ஏ அழகம்மா சும்மா கிளி கிளி கிளினு கிளிச்சிடிங்க போங்க...

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/8/2018 at 7:25 PM, தமிழ் சிறி said:

பà¯à®°à®¾à®à¯à®à®®à¯ à®à¯à®¯à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯

சர்கார் படத்திற்கு எதிர்ப்பு.. அதிமுக போராட்டத்தால், போர்க் களமான தமிழகம்.

சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கிறார்கள். மெர்சலை தொடர்ந்து தற்போது சர்கார் படமும் பிரச்சனையை சந்தித்து இருக்கிறது.

 

à®à®°à¯ பாதà¯à®¤à¯ à®à®¿à®°à®¿à®à¯à®à¯à®¤à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.