Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடலி

சி.சிவசேகரம்

இந்தக் கருப்பனைகள்

இங்கேதான் முளைக்கும்

இடம்பெயரச் சொல்லி எவர்

வேரோடு கல்லி வெளியே எறிந்தாலும்

வடலி வளரமுதல் வெட்டிச் சரித்தாலும்

கிழங்கு முளைவிடுமுன் கீறி எடுத்தாலும்

இந்தக் கரும்பனைகள்

எப்போதோ என்றோ

இங்கேதான் முளைக்கும்

எத்தனையோ பெரும் புயல்கள்,

இடிமழைகள், சுடுவேனில்

எல்லாமே எத்தனையோ

நூற்றாண்டாய்க் கண்டவைதாம்.

பொன்னில் முடி புனைந்து ஆண்ட பரம்பரையார்

போயழிந்தார்.

ஆனாலும்

எங்கள் கரும் பனைகள்

எங்கள் வெளிகளிலே

ஓலையிலே முடி புனைந்து ஓங்கி அரசாளும்

எனவேதான்

எத்தனை நாட்போனாலும்

எத்தனை தான் கடிதாய்

நீவிர் முயன்றாலும்

எங்கள் கரும்பனைகள்

இங்கேதான் முளைக்கும்.

பனைவடலி அல்லவே எங்களது பாலகர்கள்

என்றாலும்

வெட்டிச் சரித்தீர்

குண்டு எறிந்து கூரைகளைப் பறித்தீர்

அன்னையரின் தந்தையரின் ஆதரவை நீர் பறித்தீர்

அங்கங்குறைத்தீர்.

அமைதி கெடச் செய்தீர்.

கல்வி பறித்தீர்.

போர்க்களத்துட் புகுவித்தீர்

பிஞ்சிற் கருக்கிப் பிணமாகத் தேய்வித்தீர்.

பனைபோல அல்ல பாரிலுள்ள மானுடர்கள்.

பனைகளிலும் மிகவலியோர்

அவர் தமது பாலகர்கள்

இங்கே விழுவர்

இங்கயே வேர்விடுவர்

இங்கே முளைப்பர்

நிமிர்வர்

காடாய் அவர் விரிவர்

நன்றி : வடலி தொகுப்பு

http://www.aaraamthinai.com/ilakkiyam/kavi...b24kavithai.asp

பனைமரத்தை நினைக்கும்போது நமது நினைவுக்கு வருவன...

வீட்டில் நிறைய தீராந்தி, சிலாகைகள் கோடியில் குவிக்கப்பட்டு இருக்கும். நாம் அவற்றை அப்பாவுக்கு தெரியாமல் களவாக பட்டம் கட்டுவதற்கு எடுத்து வீணாக்குவோம், கடைசியில் சில வேளைகளில் சிராம்பும் கையில் ஏறி காயங்கள் வந்துவிடும்....

மாட்டுக்கு ஒவ்வொரு நாளும் ஓலை கிழித்தல், பெரி பனை ஓலையை மாடு தின்னும் சைசுக்கு கத்தியால் சின்னதாக கிழிக்க வேண்டும்... மாடும் ஒரு நல்ல குணம் வந்தால் மட்டும்தான் பச்சை பனையோலை சாப்பிடும்..

மாட்டுக்கு தேவையான பச்சை ஓலைகள் பனைமரத்திற்கு கீழ் வெட்டப்பட்டு விழுத்தப்பட்டிருக்கும், நாம் ஆளுக்கு ஆறு ஓலைகளை தலையில் வைத்து காவிக் கொண்டுவீட்டுக்கு நடப்போம்...

பனம்பாத்தி போடுதல், பனங்கிழங்கு கிண்டுதல்... இரண்டுமே ஒரு இன்பமயமான அனுபவம்...

பனங்காய்ப் பனியாரம், பினாட்டு, ஒடியல்....

வீட்டு வேலி அடைப்பதும் நாமதான்... பனைஓலை கொண்டு...

வீட்டு அடுப்புக்கு விறகு பனைமரம்....

கடைசியில் வளவு துப்பரவு செய்யும்போது காய்ந்த பனைஓலைகளை ஒன்றாகப் போட்டு எரித்து, அவை எரியும்போது அதன் அருகில் நின்று வேடிக்கைபார்த்தலும் ஒரு சுகமான அனுபவம்...

நொங்கு... பள்ளிக்கூடத்தில் படிக்கும் நண்பர்கள் தொடக்கம், படிப்பிக்கும் ஆசிரியர்கள் வரை பனம்பழம், பனங்கிழங்கு, ஒடியல், பனங்காய்ப் பனியாரம் சப்ளை செய்தல்... இப்படியும் ஒரு பொதுச் சேவை செய்து அனுபவம் உண்டு...

பனைமரத்திற்கு கீழ் இருந்து விளையாடுதல், பதுங்கு குழி.... இப்படி பனைமர அனுபவங்கள் பல...

வீட்டில் ஒருவருக்கும் தெரியாமல் களவாக காலிற்கு இளக்கயிறு போட்டுக்கொண்டு பனைமரத்தில் அரைவாசி உயரத்திற்கு ஏறி பின் பயத்தில் தொடர்ந்து மேலே ஏற துணிவின்றி கீழிறங்கிய அனுபவங்களும் உண்டு...

ஆனால், தென்னைமரத்தில் செவ்விளனி, முட்டுக்காய் களவாகப் புடுங்குவதற்காக துணிந்து பல முறை ஏறியுள்ளேன்... அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு நாளைக்கு நவராத்திரி பூசையை பொறுப்பெடுத்து செய்யும். இந்தப் பூசைக்கு யார் அதிகமான செவ்விளனி கொண்டுவருவது என்பதும் ஒரு போட்டி.. இந்தப் போட்டியில் ஒரு தம்பி நம்மளை - எமது வகுப்பை - வெல்ல முடியாது...

:P :P :P

Edited by கலைஞன்

நம்மட ஊரில தென்னைக்குத் தான் மதிப்பு அதிகம் (வேலி அடைப்பது கிடுகு கொண்டு தான);. இருந்தாலும், கலைஞன் குறிப்பிட்டது போல் பனைக்கும் அதன் இடம் ஸ்திரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது: பனங்காய் பணியாரம், பினாட்டு, கிழங்கு. கருப்பணி, பனங்கட்டி, கள்ளு, கருக்கு மட்டை, சிலாகை, பனங் குருத்து, பச்சை ஓலை மாட்டிற்கு, ஈர்க்கு, கங்கு மட்டை விறகு, ஊமல் என்று பட்டியல் நீளும்.

அண்மையில் கனடாவில் நான் இரசித்த ஒரு நகைச்சுவை. ஒரு தமிழ் கடையில்

பனங் கிழங்கு தோலுடன் வைக்கப்பட்டிருந்தது. கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர்இது என்ன என்று கடைக்காரரிடம் கேட்டார். கேட்டவரின் வயது,

அவர் பேசிய தெளிவான தமிழ், அவர் வாங்கிய மற்றை மரக்கறி மற்றும் பொருட்கள், முதலியனவற்றை வைத்து அவர் நகைச்சுவைக்காகக் கேட்கிறார் என்றே நானும்நினைத்தேன். கடைக்காரரும் சிரித்தார். ஆனால் மனுசி இரண்டாவது தடவையும்அதே கேள்விளைச் சீரியசா ; கேட்க, கடைக்காரர் ஆனார் பாருங்க ஒரு ரென்சன். நகைச்சுவை சொல்லி வேலை இல்லை.

எனினும், கடையை விட்டு வெளியேறிய பின்னர் எனக்குள் ஒரு உறுத்தல். உண்மையிலேயே அந்தப் பெண் வாழ்நாளில் பனங்கிழங்கைக் காணாது வாழ்ந்திருக்கக் கூடுமோ என்று. சிலர் செய்யும் போலிப் பந்தாக்களால் உண்மையிலேயே பனங்கிழங்கை முன்னர் அறிந்திராத ஒரு நபரின் கேள்வி

தவறாகக் கையளாப்பட்டதோ என்ற ஒரு வருத்தமும் மேலும் அவ்விடத்தில் சிரித்தத்கான குற்ற உணர்வும் இன்னமும் எனக்குள் இருக்கத் தான் செய்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனைமரத்தை நினைக்கும்போது நமது நினைவுக்கு வருவன...

வீட்டில் நிறைய தீராந்தி, சிலாகைகள் கோடியில் குவிக்கப்பட்டு இருக்கும். நாம் அவற்றை அப்பாவுக்கு தெரியாமல் களவாக பட்டம் கட்டுவதற்கு எடுத்து வீணாக்குவோம், கடைசியில் சில வேளைகளில் சிராம்பும் கையில் ஏறி காயங்கள் வந்துவிடும்....

மாட்டுக்கு ஒவ்வொரு நாளும் ஓலை கிழித்தல், பெரி பனை ஓலையை மாடு தின்னும் சைசுக்கு கத்தியால் சின்னதாக கிழிக்க வேண்டும்... மாடும் ஒரு நல்ல குணம் வந்தால் மட்டும்தான் பச்சை பனையோலை சாப்பிடும்..

மாட்டுக்கு தேவையான பச்சை ஓலைகள் பனைமரத்திற்கு கீழ் வெட்டப்பட்டு விழுத்தப்பட்டிருக்கும், நாம் ஆளுக்கு ஆறு ஓலைகளை தலையில் வைத்து காவிக் கொண்டுவீட்டுக்கு நடப்போம்...

பனம்பாத்தி போடுதல், பனங்கிழங்கு கிண்டுதல்... இரண்டுமே ஒரு இன்பமயமான அனுபவம்...

பனங்காய்ப் பனியாரம், பினாட்டு, ஒடியல்....

வீட்டு வேலி அடைப்பதும் நாமதான்... பனைஓலை கொண்டு...

வீட்டு அடுப்புக்கு விறகு பனைமரம்....

கடைசியில் வளவு துப்பரவு செய்யும்போது காய்ந்த பனைஓலைகளை ஒன்றாகப் போட்டு எரித்து, அவை எரியும்போது அதன் அருகில் நின்று வேடிக்கைபார்த்தலும் ஒரு சுகமான அனுபவம்...

நொங்கு... பள்ளிக்கூடத்தில் படிக்கும் நண்பர்கள் தொடக்கம், படிப்பிக்கும் ஆசிரியர்கள் வரை பனம்பழம், பனங்கிழங்கு, ஒடியல், பனங்காய்ப் பனியாரம் சப்ளை செய்தல்... இப்படியும் ஒரு பொதுச் சேவை செய்து அனுபவம் உண்டு...

பனைமரத்திற்கு கீழ் இருந்து விளையாடுதல், பதுங்கு குழி.... இப்படி பனைமர அனுபவங்கள் பல...

வீட்டில் ஒருவருக்கும் தெரியாமல் களவாக காலிற்கு இளக்கயிறு போட்டுக்கொண்டு பனைமரத்தில் அரைவாசி உயரத்திற்கு ஏறி பின் பயத்தில் தொடர்ந்து மேலே ஏற துணிவின்றி கீழிறங்கிய அனுபவங்களும் உண்டு...

ஆனால், தென்னைமரத்தில் செவ்விளனி, முட்டுக்காய் களவாகப் புடுங்குவதற்காக துணிந்து பல முறை ஏறியுள்ளேன்... அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு நாளைக்கு நவராத்திரி பூசையை பொறுப்பெடுத்து செய்யும். இந்தப் பூசைக்கு யார் அதிகமான செவ்விளனி கொண்டுவருவது என்பதும் ஒரு போட்டி.. இந்தப் போட்டியில் ஒரு தம்பி நம்மளை - எமது வகுப்பை - வெல்ல முடியாது...

:P :P :P

மாப்பு பழசுகளையெல்லாம் நல்லாய்த்தான் தோண்டியெடுக்குறீர்.அந்த வாழ்க்கை மீண்டும் வருமா? :lol:

அடுத்த நாள் காரைநகர் கடற்கரைக்கு குளிக்கப்போவதற்கு வேண்டிய ஆயத்தங்களை நண்பனொருவன் வீட்டில் வைத்து கவனித்து முடித்து விட்டு இரவோடு இரவாக சைக்கிளில் டபுள் வைத்துக்கொண்டு புறப்பட்டு அவரவர் வீடுகளுக்கு செல்லும்போது எனது மாமனாரின்(!) வீட்டைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. மாமா வீட்டு தென்னை மரத்திலை எக்கச்சக்கமா இளனி இருக்கிறதே இதையும் பறித்து எடுத்து நாளை பீச்சுக்கு எடுத்துபோகலாமே என்று ஒருவன் சொல்ல நண்பர்களில் ஒருவனைத் தெரிந்தெடுத்து வீதியோரமாய் மதிலுடன் நின்றிருந்த இளனி மரத்தில் அவனை ஏற்றி அலுவலைக் கச்சிதமாய் முடிக்கச் சொல்லி மிகுதிப்பேர் கீழே நின்று விழும் இளனிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தோம். இரவுப்பொழுதின் அமைதியைக் குலைத்தபடி இளனிகள் பெரிய சத்தத்துடன் கீழேவிழுந்து உடைந்ததால் உள்ளிருந்த இளநீர் நிலத்தில் சிந்துவதைக்கண்ட ஒருவன் தனது சாரத்தை கழற்றி கொடுக்க அதை இருவர் இரு தொங்கலிலும் பிடித்து கீழே போடப்படும் இளனிகளை லாவகமாக ஏந்தி எடுத்து சேகரித்துக்கொண்டிருந்தனர். அப்போது சத்தம் கேட்டுவீட்டுக்கார மாமா எழுந்து வர நாங்கள் அனைவரும் அவ்விடத்தைக் காலி செய்து மரத்தில் ஏறியிருந்த நண்பனை மரத்திலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்று பின் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து அவனை அழைத்துச் சென்றோம்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் நண்பனொருவன் தனது வீட்டில் சாப்பாட்டுக்காக அழைத்திருந்தான். பின்னேரம் தனது வீட்டிலிருந்த மரத்திலிருந்து நுங்கு பறித்து தருவதாக சொல்லியிருந்தான் ஆனால் ஏறிப்பிடுங்கித் தருவதற்கென்று சொல்லி ஏற்பாடுசெய்திருந்த தோட்டக்காரன் அன்று ஏனோ வரவில்லை. அவனுக்குப் பதிலாக தானே ஏறி பறித்துத் தருவதாக நண்பனொருவன் வீராப்புடன் புறப்பட்டு தாழ்வாக இருந்த ஒரு சிறிய பனைமரத்தில் வதவதவென்று ஏறத்தொடங்கினான். அரைவாசிக்கு மேல் ஏறியதும் மேலும் போகமுடியாமல் கீழும் போகமுடியாமல் பயத்தில் மரத்தைக் கட்டிப்பிடித்தபடி அப்படியே இருக்க பின் நாங்கள் கீழே நின்று தைரியம் சொல்ல மிகுதியையும் ஒருவாறு ஏறி முடித்துமேலே சென்று நுங்குகளைப் பறித்துக் கீழே போட்டுக்கொண்டிருந்தான். நாங்கள் அதை உண்டபடி மேலே என்ன நடக்கிறது என்று பார்த்தோம். அங்கு நண்பன் கால்நடுங்க ஒரு கருக்கு மட்டைமேல் நின்று கொண்டிருந்தான். அவன் நின்ற இடத்தில் இருந்த ஓலைகள் யாவும் கிடுகிடென்று ஆடிக்கொண்டிருந்தன.

"நாங்கள் அதை உண்டபடி மேலே என்ன நடக்கிறது என்று பார்த்தோம். அங்கு நண்பன் கால்நடுங்க ஒரு கருக்கு மட்டைமேல் நின்று கொண்டிருந்தான். அவன் நின்ற இடத்தில் இருந்த ஓலைகள் யாவும் கிடுகிடென்று ஆடிக்கொண்டிருந்தன....."

ஹாஹா .. நண்பன் பட்ட அவஸ்தையை என்னாலும் உணரக்கூடியதாக உள்ளது. எனக்கும் பனைமரத்தில் முதல்தரம் ஏறியபோது இப்படி அனுபவங்கள் வந்தது... தென்னை மரம் அவ்வளவு பயம் இல்லை, ஆனால் பனைமரத்தில் ஏறுவது சற்று கடினம் ...

எனக்கு இவற்றை நினைக்கும் போது அடிக்கடி கோழியை திருடிக்கொல்லும் மரநாய் நினைவுக்கு வருகின்றது. மரநாய் பனைமரத்தில் ஏறக்கூடியது, அத்துடன் உயரங்களில் இருந்த்து லாவகமாகக் குதிக்கக்கூடியது. மரநாயை ஆங்கிலத்தில் எப்படி அழைப்பதென்று யாருக்காவது தெரியுமா? ( TreeDog/ WoodDog என்று சொல்ல வேண்டாம்)

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரனமாக நாங்கள் வேம்பு, புளி, மா போன்றவற்றில் ஊஞ்சல் கட்டி ஆடுவோம். ஆனால் சற்று இடைவெளி விட்டு அருகருகே நிற்கும் பனைகளில் இடையிலே தீராந்தி, அல்லது கப்பு மரங்களைக் சாக்கினால் சுற்றி கயிற்றினால் வரிந்து கட்டி பின் நடுவிலே நீளமான பலகையில் நான்கு முனைகளுடன் கூடிய ஊஞ்சல் கட்டி பலகையில் பயப்பிடாதததத? நான்கு பேரை இருத்தி இருமருங்கிலும் வலிமையான இருவர் வலிக்க ஊஞ்சலாடும் அனுபவம். அம்மா!! சொர்க்கம் தெரியும். இந் நாடுகளில் இருக்கும் வேக ராட்டினங்களின் திரில் அதில் நிறையவே இருக்கும். :unsure::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பனங்கூடலில் இரு பனைகள் வெகு நெருக்கமாக இருந்தன. அவை இரண்டுக்கும் இடையில் சென்று இடக்காலை ஒரு பனையிலும், வலக்காலை மற்றைய பனையிலும் ஊன்றி, கைகளையும் இரு பனைகளிலும் தாங்கி மேல்நோக்கி நடப்பது ஒரு பொழுதுபோக்கு.. திரும்பக் கீழ் நோக்கி வருவது மிகவும் கடினமானது என்றபடியால் வட்டுக்குக் கிட்டச் சென்றவுடன் ஒரு பனையிலே தொத்திப் பின்பு இறங்கவேண்டும்.. சிலவேளை எவராவது பார்த்து வீட்டில் சொன்னால், ஏச்சும் அடியும் வாங்கியதும் உண்டு.

எனினும் இந்தத் "த்ரிலிங்" கான பொழுதுபோக்கு அதே பனங்கூடலில் கள்ளுச் சீவிய ஒருவர் தவறி விழுந்து முதுகை முறித்ததை நேரே பார்த்தபின் முடிந்துவிட்டது!

எனினும் இந்தத் "த்ரிலிங்" கான பொழுதுபோக்கு அதே பனங்கூடலில் கள்ளுச் சீவிய ஒருவர் தவறி விழுந்து முதுகை முறித்ததை நேரே பார்த்தபின் முடிந்துவிட்டது!

:lol::lol::(

flying fox ஆ மரநாய்?

flying fox ஆ மரநாய்? ....

சிலவேளை இருக்கலாம்.... :D

கிருபன்ஸ் வடலியை விடவும் வலிமையானவராய் மானிடரைக்காட்டினீர்கள். இங்கேயே வீழ்வர் இங்யே முளைப்பர் இங்கேயே காடாய் விரிவர் என்கின்ற கருத்து என்னைக் கவர்ந்துவிட்டது.

Edited by Iraivan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்ஸ் வடலியை விடவும் வலிமையானவராய் மானிடரைக்காட்டினீர்கள். இங்கேயே வீழ்வர் இங்யே முளைப்பர் இங்கேயே காடாய் விரிவர் என்கின்ற கருத்து என்னைக் கவர்ந்துவிட்டது.

வடலி

சி.சிவசேகரம்

உங்கள் பாராட்டு பேராதனை விரிவுரையாளர் சிவசேகரத்தைச் சென்றடையட்டும் :)

வடலி

சி.சிவசேகரம்

அருமையான கவிதை ஒன்றை களத்தில் ஏற்றியமைக்கு கிருபன்ஸ்க்கு மிக்க நன்றி

:)

வடலி

சி.சிவசேகரம்

இவருடைய பல மொழிபெயர்ப்பு கவிதைகளை படித்து சுவைத்த அனுபவம் எனக்குண்டு

திறமையானவர்...

முடியுமானால் மற்றைய கவிதைகளையும் பிரசுரிக்கவும்

இவர் - சி.சிவசேகரம், யாழ் பல்கலைக்கழக பேராசிரியரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.