Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பூரிப்புடன் புஸ்ஸென்று பலூன் போல உப்பலாக இருக்கும் பூரியையும் அதற்குத் தரும் கிழங்கு மசாலாவையும் ஆசையாக ருசிக்காமல் விடுவது யார்! நல்ல பூரிக்கு அடையாளமும் அதை எவ்வாறு ருசிப்பது என்பதைப் பற்றியுமே இப்பதிவில் சொல்ல விழைகிறேன்.. நான் பெற்ற இன்பம் இனி நீங்களும் பெறவே. என் தந்தையார் ஸ்வீட் மற்றும் காரவகைகளில் மட்டுமல்ல..
பூரி செய்வதிலும் நளன்.! பூரி ஒரு பக்கா பர்ஃபெக்‌ஷன் தயாரிப்பு முறை கொண்ட உணவென்பார் அவர். மதில் மேல் பூனை போல நம்மை குழப்பும் அதன் தயாரிப்பு நேர்த்தியை முதலில் தெரிந்து கொள்ளுதல் மிக அவசியம் பூரி தேய்ப்பதற்கு முன் பிசையும் மாவின் பதம் முக்கியம். பிசையும் மாவு இறுக்கமாக இருந்தால் பூரி உப்பாது விறைப்பாகும், சற்று தளர்த்தியாக இருந்தால்..
எண்ணெய் குடிக்கும், அப்பா மாவு பிசைவது ஒரு நேர்த்தியான மசாஜ் கலைஞன் மசாஜ் செய்வது போல இருக்கும். நன்கு மாவை பிசைந்தபின் இரு கை முஷ்டிகளை இறுக்கி முதுகில் குத்துவது போல அதைக் குத்திப் பிசைவார்! தேவைக்கு மட்டுமே எண்ணெய் சேர்த்துக் கொள்வார். பூரி மாவை பிசைந்து அதை புடலங்காய் போல நீளமாக உருட்டி அதை சின்னச்சின்ன துண்டுகளாக..
கத்தியால் அறுத்தால் அவை வெண்ணெய் போல அறுபட வேண்டும் கத்தியில் மாவு ஒட்டக்கூடாது. அப்படி வந்துவிட்டால் நீங்கள் பிசைந்த மாவின் பதம் பக்கா! மற்றொரு முறையும் உள்ளது, பிசைந்த மாவை சிறிய பட்டாணி அளவு கிள்ளி ஆட்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் அமுக்கினால் மாவு விரல்களில் ஒட்டக் கூடாது! அதன் பிறகு பூரி தேய்க்கும் முறை..
உருண்டைகளை கையால் உருட்டி பூரிக்கட்டையால் இரண்டு தேய் தேய்த்து.. மாவை மீண்டும் கையில் எடுத்து அதனை நான்கு பக்கமும் உள்நோக்கி மடித்து மீண்டும் வட்டமாகத் தேய்ப்பார்! ஏனெனில் அப்படி தேய்க்கும் பூரி தான் பாம்பு படம் எடுத்தது போல புஸ்ஸென்று உப்பும்! பூரி பொரிக்கும் போது பொரிக்கும் எண்ணெயின் சூடும் மிக முக்கியம். எண்ணெய் மிக அதிகமாக..
கொதிக்கவும் கூடாது சுமாரான சூட்டில் இருக்கவும் கூடாது. பூரி சூடாக சாப்பிட வேண்டிய உணவு! ஓட்டல்களில் அதை முன்பே சுட்டு அடுக்கி வைத்திருப்பார்கள்! ஆர்டர் செய்த பின்பே பூரி போடும் முறையை 1968 ஆண்டுகளில் தமிழக ஓட்டல்களில் முதன் முறையாக அறிமுகப் படுத்தியவர் ஆறுமுகம் என்ற பெருமை அப்பாவுக்கு உண்டு! அப்பாவே பூரி செய்வதில் வசிஷ்டர்.!
அவர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற விசுவாமித்திரர் முருகன் மாமா.! மதுரையில் ஆரியபவன் முருகன் என்றால் பலருக்குத் தெரியும். அப்படி என்ன ஸ்பெஷல் அவர் செய்யும் பூரியில்! முருகன் மாமா ஆயிரம் பூரிகள் தேய்த்தாலும், அத்தனையும் காம்பஸ் வைத்து போட்ட வட்டம் போல கனக்கச்சிதமாக இருக்கும் ஒன்றின் மீது ஒன்றாக அவற்றை அடுக்கினாலும் ஏதோ..
மிஷின் கட்டிங் செய்தது போல அத்தனை பூரியும் ஒரே அளவில் இருக்கும்.. முக்கியமாக அத்தனையும் பொரிக்கும் போது அழகாக புஸ்ஸென உப்பும் என்பார். பூரியை எண்ணெயில் தேய்த்து அது உப்பி வரும் போது அதன் உப்பலான தலையில் கரண்டியால் எண்ணெயை அள்ளியள்ளி அபிஷேகம் போல குளிப்பாட்டுவார். அப்போது பூரியின் மேற்புறம் தங்கத்தகடு போல ஜொலிக்கும்.
ஒரு மொறு மொறு பதத்தை பூரிக்கு கொடுக்கும் இதிலும் ஜாக்கிரதை அபிஷேகம் அதிகமானால் போச்சு பூரி கருகிடும். பூரியை இரண்டு விரல்களால் விண்டால் காகிதம் போல கிழிய வேண்டும் என்பது முதல் விதி.. கவனிக்கவும் விரல்களால் பிய்க்க கூடாது.. இரண்டாவது பொரித்த பூரியை நம் விரல்கள்களால் விள்ளும் போது ஒரு சொட்டு எண்ணெய் கூட ஒட்டக்கூடாது.
இதெல்லாம் நல்ல பூரிக்கு அடையாளம்! இனி கிழங்கிற்கு.. நல்ல பூரிக்கு அடையாளம் போல நல்ல மசாலாவுக்கும் அடையாளம் உள்ளது. இன்று பெரிய கடைகளில் கூட சில பூரி மசால்களைப் பார்த்தால் பகீரென்கிறது வெனிலா ஐஸ்க்ரீம் போல குழைவாக கெட்டியான களி பதத்தில் தருகிறார்கள். சில கடைகளின் மசாலா கர்நாடக வெள்ளப் பெருக்கில் ஒகேனக்கல் வரும் காவிரி போல..
விரைகிறது! மசாலாவில் கிழங்கை கூழ் போல மசிக்கக்கூடாது. உதிரி உதிரியாக போட வேண்டும். சற்று பெரிய சீடை அளவில் இருப்பது நலம், கடலைபருப்பு,வெங்காயம், பட்டாணி இவற்றோடு பச்சை மிளகாயை நான்காக கீறிப்போட்ட மசாலா தான் பெஸ்ட். குழைவாகவும் இல்லாமல் தண்ணீராகவும் ஓடாமல் ஒரு குருமா பதத்தில் இருப்பதே நல்ல பூரிக் கிழங்கின் லட்சணமாகும்.!
பூரிக்கு கிழங்கை விட சப்ஜி ஒரு பெஸ்ட் இணை! நாட்டுக்கோழி குழம்பு போலவே நிறத்திலும் சளசளவென நீராக ஓடும் பதத்திலும் இருப்பதே சப்ஜி! நெய்யில் தாளித்த சீரகத்தின் கமகம மணத்துடன் கோலி குண்டுகள் சைசில் நன்கு வெந்த உருளைக் கிழங்கோடு அமர்க்களமாய் இருக்கும் வடமாநிலங்களில் இந்த சப்ஜியில் கிழங்கும் உண்டு காலிஃப்ளவரும் உண்டு.!
அதே போல தால்(பருப்பு) பூரிக்கு ஒரு நல்ல இணை! நான் காஷ்மீர் சென்றிருந்த போது ஒரு தாபாவில் தால் பிந்தி என ஒன்று தந்தார்கள். நல்ல காரமாக எண்ணெயில் வதங்கிய வெண்டைக் காயில் பருப்பு சேர்த்த தால் அது! அடடா! ரசிக்க வைத்த ருசி அது பூரிக்கு மட்டுமல்ல எல்லா வகை ரொட்டிகளுக்கும் செமையான காம்பினேஷன்! சென்னா மசாலாவும் பூரிக்கு நல்லதொரு..
காம்பினேஷன்! அதைவிட நவரத்ன குருமா இன்னும் டாப். பூரிக்கு ஒரு சில குருமாக்கள் சரிப்பட்டு வராது. அதே போல பூரிக்கு நம்மூரின் பாரம்பரியப்படி தேங்காய் சட்னி வைத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாகிப் போனது இன்னொரு ஆச்சரியமான விஷயம் பூரிக்கு சிக்கன் மட்டன் குழம்பு தொட்டுக் கொண்டு சாப்பிடும் ரசிகர்களும் ஏராளம்! இதில் ஆச்சரியம் பூரிக்கு தொட்டுக்க..
சாம்பார்! இந்த பழக்கம் உள்ள நண்பர்கள் நிறைய. சேட்டு பெண்ணை காதலில் வீழ்த்திய தமிழன் போல சில சாம்பார்கள் பூரிக்கு பக்காவான இணையாக இருக்கிறது என்பதே உண்மை.. அது காய்கறி சாம்பாராக இருக்கக்கூடாது முக்கியமாக முள்ளங்கி சாம்பாராக இருக்கவே கூடாது என்பது ஆதாரவிதி! லேசாக காரம் தூக்கலான தக்காளி, பருப்பு போட்ட சாம்பாரே…
பூரிக்குச் சிறந்தது! மதுரையில் டெல்லிவாலா ஒரு காலத்தில் பூரி சப்பாத்திக்கு கொடி கட்டி பறந்த ஓர் உணவகமாகும், இன்றும் நல்ல சப்பாத்தி கிடைப்பது போல எங்கும் நல்ல பூரி கிடைப்பதில்லை. சரவணபவன் போன்ற பெரிய ஓட்டல்களில் நான் சொன்ன முறையில் பூரி கிடைத்தாலும் பூரியின் மென்மைப் பதம் அது இல்லை.. பூரியை பார்சல் வாங்கிச் சாப்பிடுவது..
ஒரு தேச விரோதச் செயலாகும் சில ஜென்மங்கள் இரண்டு பூரிக்கு நடுவே மசால் வைத்து பார்சல் கட்டித் தருவார்கள்! அந்த பூரிகள் மசாலில் நன்கு ஊறிப்போய் செம்புலப் பெயல் நீர் போல கலந்து எது மசால் எது பூரி எனத் தெரியாது அப்படியே வழித்து தின்ன வேண்டியதாக இருக்கும். சிற்றூர்கள், கிராமங்களில் உள்ள ஓட்டல்களில் பூரியை பொரித்து மலை போல அடுக்கியிருப்பர்.
அவை எல்லாம் கோதுமை அப்பளங்கள் அவற்றை நொறுக்கினால் 10000வாலா பட்டாசு சத்தம் கேட்குமே ஒழிய நல்ல பூரி சாப்பிட்ட அனுபவத்தை தாராது. பூரி சூடாக இருக்க வேண்டும். கையால் பூரியை விண்டு கொஞ்சம் வெங்காயம், ஒரிரு கிழங்குகள், 2 பட்டாணி, கொஞ்சம் பச்சைமிளகாய் இவ்வளவும் இருக்கும்படி மசாலாவில் தோய்த்து உண்ண வேண்டும் பூரிக்கு மேற்புறம் அந்த..
தங்கத் தகடு போன்ற நிறத்தில் முறுகல்! ஒரு சிப்ஸ் அளவு மொறுமொறுப்பு இன்றி தங்கபஸ்பம் போன்ற பொசுங்கும் மொறு மொறுப்பில் வாயில் கரையுமே, ஆஹஹஹா! அது தாங்க ஒரு செழுமையான நல்ல பூரிக்கும் பூரிக் கிழங்கிற்கும் அடையாளம்..!
(நிறைந்தது)
 
Aucune description de photo disponible.
 
பூரியும் மசாலாவும்........!   👍
  • Replies 1.8k
  • Views 285.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    கடைசியில் நண்டு வம்சமே.. அழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தோழர் ..😊

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் குழந்தைகளுடன் சாப்பிட அவல் வடை & பால் தேநீர்........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

உளுத்தங்களி சுலபமாய் செய்யுங்கள்.......மூட்டு நோ, உடம்பு வலி போன்றவைகளுக்கு நல்லது......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரக சம்பா காளான் புரியானி..

 

  • கருத்துக்கள உறவுகள்

சே......அருமையான பிரியாணி & அது சார்ந்த பட்சனங்கள் தோழர்........!   👍

நன்றி இணைப்புக்கு.....!

  • கருத்துக்கள உறவுகள்

பனம்பழ அதிரசம்........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் சாப்பிட மரவள்ளி கிழங்கு செய்முறை.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு இடியல் ரசம்.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

 

முட்டை குழம்பு வேறமாதிரி ......!  😂

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிற வெய்யிலுக்கு இதமாக காரட் ஜூஸ் .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

அடிக்கிற வெய்யிலுக்கு இதமாக காரட் ஜூஸ் .......!   👍

"ABC” ஜூஸ் – நன்மைகள் என்ன? என்னென்ன சத்துக்கள் உள்ளன? இது மேஜிக் பானமா? – அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.

 

ஜூசை வடிகட்டாது குடிக்கவேண்டுமாம், மருத்துவர் அருண்குமார்.

  • கருத்துக்கள உறவுகள்

sardine மீன் குழம்பு, கேரளா முறையில் .......!   😂

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வளவுக்குள் வளர்ந்து கிடக்கும் பசலிக் கீரையில் ஒரு ஆரோக்கியமான உணவு.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழைக்காலம் வருகுது.. காசாரமான கருணை கிழங்கு சிப்ஸ்..

 

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு மிளகு வறுவல்.......!  👍

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடுப்பி இட்டலி சாம்பார்..👍

 

  • கருத்துக்கள உறவுகள்

மொறு மொறுப்பான பூண்டு போண்டா.........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

குடைமிளகாய் வறுவல்........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

பீர்க்கங்காய் பொரியல்.......சுப்பராய் இருக்கு ......செய்து பாருங்கள்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் அம்மம்மா வாரத்துக்கு மூன்று முறை இப்படி செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்திருக்கின்றார்.......நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம் .......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது "சத்தனி" என்னும் சுவையான விதைகள் கிடைக்கும் காலம் .......இப்படி செய்து சாப்பிடலாம்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் மாலையில் செய்து சாப்பிட கச்சிதமான ஒரு டிஷ் (ஆ .....அமெரிக்கன் டிஷ் என்றவுடன் ஆங்கிலமும் வந்து துலைக்குது)....." வளர்த்த நாய் முகத்தைப் பார்த்த மாதிரி" எதோ நிறைய வேலை செய்வதுபோல் கெப்பர் காட்டும் மனிசியின் மூஞ்சியை  பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.....  ஆண் சிங்கங்கள் சுலபமாய் செய்து உண்ணலாம்......விரும்பினால் அவளுக்கும் ஒரு துண்டு கொடுங்கள் திண்டு துலைக்கட்டும் .....!   😂  😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

காலையில் மாலையில் செய்து சாப்பிட கச்சிதமான ஒரு டிஷ் (ஆ .....அமெரிக்கன் டிஷ் என்றவுடன் ஆங்கிலமும் வந்து துலைக்குது)....." வளர்த்த நாய் முகத்தைப் பார்த்த மாதிரி" எதோ நிறைய வேலை செய்வதுபோல் கெப்பர் காட்டும் மனிசியின் மூஞ்சியை  பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.....  ஆண் சிங்கங்கள் சுலபமாய் செய்து உண்ணலாம்......விரும்பினால் அவளுக்கும் ஒரு துண்டு கொடுங்கள் திண்டு துலைக்கட்டும் .....!   😂  😂

சுவியர்... இது, ஜேர்மன் சமையலில் சுட்டது  போலை கிடக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2023 at 10:13, suvy said:

பீர்க்கங்காய் பொரியல்.......சுப்பராய் இருக்கு ......செய்து பாருங்கள்......!  👍

இன்று நம் வீட்டில் முதல் முறையாக... பீர்க்கங்காய் வறை  (பொரியல்)  செய்து கொண்டு இருக்கின்றோம். 
ஆனால்... நிலக்கடலை (கச்சான் கடலை) போடாமல் தேங்காய்ப்பூ போடுகின்றோம். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, suvy said:

விரும்பினால் அவளுக்கும் ஒரு துண்டு கொடுங்கள் திண்டு துலைக்கட்டும் .....!   😂  😂

என்ன இருந்தாலும் அவளின் கையால் பரிமாறும் போது இன்னும் ஒரு படி மேல் சுவை தருமல்லவா? 💘 🥰

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.