Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர்நாள் உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு!

Featured Replies

தேசிய மாவீரர் தின நினைவேந்தல் இன்று யாழ் பல்கலைகழத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுகிறது. இந்நினைவேந்தல் பல்கலைகழக ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனையடுத்து மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், ஆசிரியர், மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 

https://www.ibctamil.com/srilanka/80/109874?ref=home-imp-flag

  • போல் changed the title to யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர்நாள் உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு!
  • தொடங்கியவர்

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாளாகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

மாணவர்கள், விரிவுரையாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

47063562_2177878099145726_7761007922506646736146_2177878069145729_3752252325079546718951_2177878115812391_36011372852040

https://newuthayan.com/story/13/யாழ்-பல்கலைக்கழகத்தில்-மாவீரர்களுக்கு-அஞ்சலி.html

  • தொடங்கியவர்

தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி

maveerar-2018-2-1.jpg

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.

இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பப்பட்டதை அடுத்து, ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதையடுத்து, 6.07 மணியளவில், மாவீரர்களுக்காக துயிலுமில்லங்களிலும், நினைவிடங்களிலும், வீடுகளிலும் பொதுச்சுடர் மற்றும் ஈகச் சுடர்கள் ஏற்றப்பட்டன.

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பிரிகேடியர் தீபன், லெப்.கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.

பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் பெற்றோர், உறவினர், மற்றும் பொதுமக்கள் கனகபுரம் துயிலுமில்லத்தில் குவிந்து, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

அதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இல்லாத துயிலுமில்லங்களிலும் இம்முறை மாவீரர் நாள் உணர்வுபூர்வமாகவும் பெருமளவு மக்களின் பங்கேற்புடனும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களிலும் இன்று காலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, மாலையிலும், நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

maveerar-2018-1-1.jpg

maveerar-2018-3-1.jpg

http://www.puthinappalakai.net/2018/11/27/news/34902

  • தொடங்கியவர்

மாணவர்களின் உணர்வுத் தீயால் மீண்டும் எழுச்சிகொண்டது யாழ் பல்கலைக்கழகம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுதிரண்டு தேசிய மாவீரர் நாளினை உணர்வுபூர்வமாக அனுட்டித்துள்ளனர்.

சரியாக மாலை ஆறு ஐந்து மணிக்கு மாவீரர்களுக்கான முதன்மை ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து தூபியினைச் சூழ்ந்திருந்த மாணவர்களும் மாணவிகளும் தீபமேற்றி மாவீரர்களை நினைவில் ஏந்தினர்.

இதன்போது மாவீரர் நினைவுப் பாடல் ஒலிக்கவிடப்பட்டதுடன் மாணவ மாணவியர் கண்ணீர் விட்டுக் கலங்கி அழுதனர்.

இதேவேளை இன்று மதியம் மாவீரர்களுக்கான மலர் வணக்க நிகழ்வும் யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/109904?ref=bre-news

  • கருத்துக்கள உறவுகள்

46990140_2166276020089156_92678555371254

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்.ஆனால் உங்கள் பாதுகாப்பும் கல்வியும் இடையுறு வராமால் பார்கவும்.மீண்டும் நன்றி.

இந்த உலகம் கோழைகளுக்கல்ல என்பதை தமிழ் மாணவர்கள் அறிந்து வைத்துள்ளனர்!

கோழைகளுக்கு தினமும் மரணம், வீரர்களுக்கு ஒரே தடவை தான் மரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

இந்த உலகம் கோழைகளுக்கல்ல என்பதை தமிழ் மாணவர்கள் அறிந்து வைத்துள்ளனர்!

கோழைகளுக்கு தினமும் மரணம், வீரர்களுக்கு ஒரே தடவை தான் மரணம்.

 

அடடா! இதை ஊரில் இருந்து கொண்டு தாங்கள் சொல்லி இருந்தால் நானும் சந்தோசப்பட்டு இருப்பேன் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.