Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறைப்பாட்டை சுட்டிக்காட்டிய பயணியை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிய பேருந்து உரிமையாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து ஒன்றில் உள்ள குறைப்பாடுகள் மற்றும் அதனால் எதிர்கொண்ட எதிர்கொண்ட அசௌகரியங்கள் தொடர்பில் பயணி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பேருந்தின் உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்தவேளை, அவர் பயணியுடன் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியமை தொடர்பான ஒலிப்பதிவையும் அந்தப் பயணி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான சேவையில் நேற்றிரவு ஈடுபட்ட தனியார் அதிசொகுசு பேருந்தில் பயணித்த இளைஞர்கள் சிலர், ஆசனங்களில் மூட்டைப்பூச்சி கடிக்கு இலக்காகி உள்ளனர்.

உடனே பயண சீட்டில் இருந்த உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு எடுத்து இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.எனினும் உரிமையாளர் முறைப்பாட்டை ஏற்க மறுத்து சீற்றமடைந்து, பயணிகளைத் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் மிரட்டியும் உள்ளார்.

‘உன்ர அம்மாவ அனுப்பு, எனக்கு மினிஸ்ரர் எல்லாம் பழக்கம், இறங்குற இடத்தில வச்சு உன்னை புடிச்சு கொளுத்துவன்’ என கூறி பெரும் அடாவடித் தனமாகப் பேசியுள்ளார். அதுதொடர்பில் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில் தெளிவாக உள்ளது.

இந்த பேருந்து சேவை நிறுவனம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் தனக்கு அமைச்சர் நட்பு உள்ளது என மிரட்டி பயணிகளை இந்த உரிமையாளர் அடக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு குறைபாடுகள் பயணிகள் சேவையில் ஈடுபடுவது மற்றும் பயணிகளை தரக்குறைவாக நடத்திக்கொள்ளும் பேருந்து உரிமையாளர்கள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அதுவே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

http://globaltamilnews.net/2018/104974/

  • கருத்துக்கள உறவுகள்

அதி சொகுசு பேரூந்து  என்று சொல்லிக் கொண்டு மக்களிடம் அதிக  பணத்தை அறவிடத்  தெரிந்தவர்கள்... 
தரமான சேவையை வழங்காமல், பயணிகளை  மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்.
பணம் கொடுத்தவர்கள் ... தரமான சேவையை எதிர் பார்ப்பார்கள் என்ற  பொறுப்புணர்வு அந்த நிறுவனத்துக்கு 
இருக்க வேண்டும்.
இப்படியான நிறுவனங்களின் பெயர்களையும் வெளியிட்டால் தான், 
அவற்றை மக்கள் புறக்கணிக்கும் போது... தாமாக உணர்ந்து திருந்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் கம்பெனி எது எண்டு சொன்னால் ..... நாமளும் இங்கே இருந்து போனை போட்டு 'அன்பா' கதைப்பமே...

இப்படிதான் ஒரு அரிசி வியாபாரி, கல் இருக்குது எண்டு முறைப்பாடு சொல்ல, வாயால நர்த்தனம் ஆடினார்.

பிறகென்ன..... வேலை செய்யிற ஆளை வளைத்து... வீட்டு நம்பரை வாங்கி.... இரவு 1 மணிக்கு அடிச்சு, 'முதலாளி, கல் அரசி ஒரு சாக்கு வேணும்'....  

அவரை பாடவைத்து களைக்க வைத்து.... பிறகு அரைமணி நேரத்தில் அடித்து.... 'மூனா... கோமேத இன்ன....' என்று சிங்களத்தில வதை பண்ணி..... 

ஒரு கிழமைக்கு பிறகு.... 'தம்பியவை..... நான் பேசினது பிழை.... மன்னிச்சு கொண்டு.... ஒரு கண் நித்திரை கொள்ள விடுங்கப்பு'.... என்று சொல்லி.......

பஸ் கம்பெனி மூனாக்கு, உந்த மருந்து தேவைப்படுகுது

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

பஸ் கம்பெனி எது எண்டு சொன்னால் ..... நாமளும் இங்கே இருந்து போனை போட்டு 'அன்பா' கதைப்பமே...

அதுசரி தொலைபேசியில் கதைக்கும் போது எப்படி ரெக்கோட் பண்ணுவது?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுசரி தொலைபேசியில் கதைக்கும் போது எப்படி ரெக்கோட் பண்ணுவது?

நல்ல கேள்வி....

இங்கே சட்டம் தடுப்பதால் அந்த ஆப்ஸ் இல்லை. (பதிவு செய்வதாக முதலே, அடுத்த பார்ட்டிக்கு சொல்ல வேண்டும். (சொன்னால், கிழிஞ்சுது போங்க)

சொல்லாமல் பதிவதானால், சட்டப்படி உங்களுக்கு லைசென்ஸ் இருக்க வேண்டும்... (அந்த லைசென்ஸ், இயல்பாக ஸ்பை ஏஜென்சிஸ், ஸ்பெஷல் போலீசுக்கு தான் உள்ளது - உங்கள் ஊரில் வயர் றப்பிங் என்பார்கள்).

இந்தியா, இலங்கையில் சட்டம் இல்லாததால் அல்லது அதை பற்றி கவலைப்படாதலால் ஆப்ஸ் தாராளமாக கிடைக்கிறது.... அங்குள்ள ஆஃபிசினை இங்கே பாவிக்கலாம். ஆனால்….அதை வெளியிட…. அடுத்த பார்ட்டி முறைப்பாட்டு செய்தால்... சிக்கல் நமக்கு தான்.

CCTV என்பது அறிவித்தல் கொடுத்து பதவி செய்யப்படுவதால்.... நீங்கள் பாங்கினை கொள்ளை அடித்து  விட்டு, எனக்கு தெரியாமல் பதிவு செய்தது பிழை எண்டு அலம்பறை பண்ண ஏலாது பாருங்கோ

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

நல்ல கேள்வி....

இங்கே சட்டம் தடுப்பதால் அந்த ஆப்ஸ் இல்லை. (பதிவு செய்வதாக முதலே, அடுத்த பார்ட்டிக்கு சொல்ல வேண்டும். (சொன்னால், கிழிஞ்சுது போங்க)

சொல்லாமல் பதிவதானால், சட்டப்படி உங்களுக்கு லைசென்ஸ் இருக்க வேண்டும்... (அந்த லைசென்ஸ், இயல்பாக ஸ்பை ஏஜென்சிஸ், ஸ்பெஷல் போலீசுக்கு தான் உள்ளது - உங்கள் ஊரில் வயர் றப்பிங் என்பார்கள்).

இந்தியா, இலங்கையில் சட்டம் இல்லாததால் அல்லது அதை பற்றி கவலைப்படாதலால் ஆப்ஸ் தாராளமாக கிடைக்கிறது.... அங்குள்ள ஆஃபிசினை இங்கே பாவிக்கலாம். ஆனால்….அதை வெளியிட…. அடுத்த பார்ட்டி முறைப்பாட்டு செய்தால்... சிக்கல் நமக்கு தான்.

CCTV என்பது அறிவித்தல் கொடுத்து பதவி செய்யப்படுவதால்.... நீங்கள் பாங்கினை கொள்ளை அடித்து  விட்டு, எனக்கு தெரியாமல் பதிவு செய்தது பிழை எண்டு அலம்பறை பண்ண ஏலாது பாருங்கோ

உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அதுசரி தொலைபேசியில் கதைக்கும் போது எப்படி ரெக்கோட் பண்ணுவது?

அன்றோயிட் போன் பிளே ஸ்டோரில் இருக்குது கடைசி பத்து பேரின் ரெக்கோடிங் இருக்கும் இடையில் சவுண்டு விடும் சேட்டை எல்லாம் இல்லை ஆனால் இங்கு ukல் மற்றவருக்கு தெரியாமல் ரெக்கோட் பண்ணி அதை முக்கிய ஆதாரமாய் காட்ட ஏலாது .பெயர் இங்கு போட ஏலாது பிரைவேட் மூலம் தரலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அது எந்த பேருந்து நிறுவனம் என்று சொன்னால் மற்றவர்களுக்கும் உதவியாய் இருக்கும் அல்லவா !

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.