Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதன் முதலாய் அம்மாவுக்கு...

Featured Replies

  • தொடங்கியவர்

ஆம் மாதாவுக்கு முதலிடம் கொடுக்கிறதில நமக்கு எந்த கருத்துமுரண்பாடும் இல்ல. ஆனால் அப்பாக்கு அவரின் நிலை கருதி முன்னுரிமை அளிக்கனும். அதை அம்மாமார் அனுமதிக்க முன் வரணும்...! அப்பாமாரை அதிகம் பிள்ளைகளோட இருக்க அனுமதித்தால் பிள்ளைகள் அப்பாட்டத்தான் சைட் அடிக்கிறதையும் சொல்லுங்கள்..! அம்மாமார் இயல்பா அதிகம் வீட்டோட இருப்பதால அவங்க அதிக நேரம் குழந்தைகளோட உறவாட முடியுறதால.. அம்மா - குழந்தை நெருக்கம் அப்பா - குழந்தை நெருக்கத்தை விட அதிகம் என்பதால பிள்ளைகள் அம்மாவைத் தேடி ஓடுறது இயல்பாப் போச்சு. நாங்களும் அப்படித்தான். ஆனா யோசிச்சுப் பார்த்தா அப்பாமார் மனசுக்குள்ள உள்ள வேதனையை அறிய முடியுது..! அதுதான்.. இந்த வேண்டுகோள்..! :P :lol:

அப்படிவாங்க வழிக்கு..! 21ம் நூற்றாண்டில தான் அப்பாமார் குழந்தைகளின் பிரிவால மன அழுத்தம் அதிகரித்து நோய்வாய்ப்படுறது அறிய முடிகிறது..! அம்மாக்கு முதலிடம் கொடுக்கேக்க அப்பா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுறார். அதாலதான் இரண்டாம் இடத்தில உள்ள அப்பாக்கு முன்னுரிமை அளிச்சு அம்மா = அப்பாவா ஆக்கியிருக்கம்..! பிரிஞ்சுக்கோங்க..! அப்பாமாரின்ர மனநிலையைப் புரிஞ்சுக்க முனையுங்க..! அதற்காக அம்மாவை கைவிடச் சொல்லேல்ல..! அப்பாக்கும் முன்னுரிமை அளியுங்க..! அவங்கள இரண்டாம் தரமாக நோக்க வேண்டாம்..!

நாங்கள் பெண்களை மனிதர்களாக எல்லாரும் போலவே மதிக்கிறம். பெண்களின் சமூக அட்டூழியங்களை மன்னிக்கிற அளவுக்கு நாம் தயார் இல்ல. அதை வெளிக்காட்டுவதால நாங்க பெண்களை வெறுக்கிறதா நீங்க 19 நூற்றாண்டு ஆக்கள் போல நினைக்கிறீங்க..! உண்மைல நாங்க 22 நூற்றாண்டை நோக்கிப் போயிட்டு இருக்கம்..! :lol::lol:

அப்படி நீங்கள் தான் சொல்லுறீங்கள் நான் அறிந்து இப்போ பிள்ளைகளெல்லாம் தாயை விட தந்தை கூடதான் பாசமா அண்ணியோன்டமா பழகுறாங்கா அதே நேரத்தில அப்பாக்கும் அம்மாக்கும் சம அளவு அந்தஸ்து கொடுக்கிறாங்க, குழந்தைகளுக்கு தெரியும் தாய் தந்தை கூட எப்படி பழகனும் என்டு குழந்தைக்கு தாயும் தகப்பணும் சமமாதானிருக்கிறாங்கள், அதை புரிஞ்சு கொள்ளுங்க, இப்பூ ஆண்கள் போலவே பெண்களும் வேலைக்கு போறாங்க சம்பாதிக்கிறாங்க, குழந்தைகள பாத்துக்கிறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் சரியா சொன்னீங்கள்...... சில பேருக்கு எப்படி சொன்னாலும் புரியாது.... :lol: :P

நாங்க எங்களை வைச்சுக் கதைக்கேல்ல..! சமூகத்தை வைச்சுக் கதைக்கிறதால.. பிரச்சனைகளின் வடிவங்களை தரிசிச்சுக் கதைக்கிறதால உங்கட விளக்கங்கள் அந்தப் பிரச்சனைகளை எதிர்நோக்கிறவங்களுக்கு தீர்வா அமைய வழியில்ல என்பதால ஏற்றுக்கொள்ள முடியல்ல. அதுக்காக புரியல்ல என்பது தவறான கண்ணோட்டம்..! :lol:

மணிவாசகன் சாரின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை அவர் தங்கள் அப்பா உரிமையை தக்க வைக்க முடியாத அப்பாமார் பற்றி சொல்லுறார் என்று நினைக்கின்றம். உண்மைல பிள்ளைகள் யார் அதிகம் நெருக்கம் காட்டினமோ அங்கதான் சேருங்கள்..! அப்பாமாருக்கு நெருக்கம் ஏற்பட சந்தர்ப்பம் குறைவதால் பிள்ளைகள் மீதான அக்கறையும் குறையலாம் இல்லையா மணிவாசகன் சார்..??! :lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நீங்கள் தான் சொல்லுறீங்கள் நான் அறிந்து இப்போ பிள்ளைகளெல்லாம் தாயை விட தந்தை கூடதான் பாசமா அண்ணியோன்டமா பழகுறாங்கா அதே நேரத்தில அப்பாக்கும் அம்மாக்கும் சம அளவு அந்தஸ்து கொடுக்கிறாங்க, குழந்தைகளுக்கு தெரியும் தாய் தந்தை கூட எப்படி பழகனும் என்டு குழந்தைக்கு தாயும் தகப்பணும் சமமாதானிருக்கிறாங்கள், அதை புரிஞ்சு கொள்ளுங்க, இப்பூ ஆண்கள் போலவே பெண்களும் வேலைக்கு போறாங்க சம்பாதிக்கிறாங்க, குழந்தைகள பாத்துக்கிறாங்க.

பெண்கள் வேலைக்குப் போறது 21ம் நூற்றாண்டின் புரட்சி அல்ல..! ஐயா பெண் குரங்கு அப்ப இருந்து இப்ப வரை ஆண் குரங்கு சாப்பாடு கொண்டு வர சாப்பிட்டிட்டு இருக்கல்ல..! தானே வெளில போய் தானே தேடி தானே உண்டு.. குட்டியையும் காவிட்டு.. தானே பராமரிச்சு தானே வளர்க்குது..! அப்ப உங்க பார்வைல அது முற்போக்கான குரங்கா. சும்மா சமூகத்தில சில பிற்போக்கானதுகள் பெண்கள் வேலைக்குப் போறாங்க படிக்கப் போறாங்க சம்பாதிக்கிறாங்க என்று அதை முற்போக்கு என்று உளறிட்டு இருக்குதுகள். பெண்கள் மனிசரப்பா. அவங்க எல்லாம் செய்ய வேண்டியது அவங்க கடமை..! அதை இதுக்க புகுத்தாதேங்க. ரெம்ப பிற்போக்கா இருக்கீங்களே..! சாதாரணமா மனிசர் செய்ய வேண்டியதைத்தான் பெண்கள் செய்யுறாங்க..! :P :lol:

இப்ப குழந்தைகள் விடயத்தை வைச்சுத்தான் அப்பா அம்மா மீதான அவங்க பாசம் குறித்து தீர்மானிக்கிறது..!

குழந்தை ஒன்றைப் பெற்றதுக்காக பெண்கள் எல்லாம் பாசமாப் பொழியுறாங்க என்றும் இல்ல. குழந்தைகளை போட்டிட்டு ஓடிற பெண்களும் உண்டு..! அப்படி அப்பாக்களும் உண்டு..! நாம பேசுறது என்னென்னா.. அம்மாக்கே முதலிடமும் முன்னுரிமையும் அளிக்கேக்க அப்பா இயல்பா இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுறது குழந்தைகள் தொடர்பா அப்பாக்கள் தூரப் போயிட்டு இருக்காங்க என்றதைத்தான் காட்டுது. அதை தவிர்க்க வேண்டும். அப்பாக்களும் அம்மாக்களுக்கு ஈடா குழந்தைகளோட நெருக்கமா பாசம் காட்ட சந்தர்ப்பம் அளிக்கப்படனும். அப்பாக்களும் அம்மாக்களுக்கு ஈடா முன்னிலைப்படுத்தப்பட வேணும். அம்மாக்கு முதலிடம் அளிச்சா அப்பா முன்னுரிமைக்கு உரிய ஆள தன்ர இரண்டாம் நிலை அறியாத ஆளா உருவாக்கப்படனும்.என்று தான் கேட்டுக்கிறம்..! :P

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே.

அப்பா வளர்த்தால்.........

Edited by kaviya

சாதாரணமாக அப்பா வேலைக்கு போய் உழைத்தாலும் அம்மா என்பவள் வீட்டில் உழைக்கின்றாள். குடும்பத்தைக் கவனிக்கின்றாள். பிள்ளைகளாஇ அவரவர்களுக்கேற்ப ஒவ்வொருவரின் நடையறிந்தும் அவர்கள் மனம் கோணாதபடி நடப்பவள்தான் தாய். அப்பா வெளில வேலைக்கு போய் உழைத்து வந்தாலும் வாரத்தில் 1 நாளாவது விடுமுறை கிடைக்கின்றது. ஆனால் ஒரு குடும்பத்தலைவிக்கு ஒரு நாளேனும் விடுமுறை கிடைப்பதுண்டா? அப்பா உழைப்புக்கு தன்னை அர்ப்பணிக்கின்றார். ஆனால் அம்மாமாரோ குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணிக்கின்றாள். :lol:

உண்மையிலேயே ஒரு அப்பா வெளில போய் உழைத்து குடும்பத்துக்காக க்ஸ்ரப்பட்டாலும் அந்த அப்பாவுக்கே புரியும் ஏன் அவர்களே சொல்வார்கள் அம்மா தான் முதலிடம் என்று. அவன் தான் உண்மையில் புருசன், அப்பா. :lol: ஒரு நல்ல குடும்பத் தலைவன் பொண்டாட்டி தான் முதலிடம் என்பான். ஏனெனில் அவருக்கே தெரியும் தன்னை விட அவள் தான் அதிகம் கஸ்ரபப்டுகின்றாள் என்று

நாங்க எங்களை வைச்சுக் கதைக்கேல்ல..! சமூகத்தை வைச்சுக் கதைக்கிறதால.. பிரச்சனைகளின் வடிவங்களை தரிசிச்சுக் கதைக்கிறதால உங்கட விளக்கங்கள் அந்தப் பிரச்சனைகளை எதிர்நோக்கிறவங்களுக்கு தீர்வா அமைய வழியில்ல என்பதால ஏற்றுக்கொள்ள முடியல்ல. அதுக்காக புரியல்ல என்பது தவறான கண்ணோட்டம்..! :lol:

மணிவாசகன் சாரின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை அவர் தங்கள் அப்பா உரிமையை தக்க வைக்க முடியாத அப்பாமார் பற்றி சொல்லுறார் என்று நினைக்கின்றம். உண்மைல பிள்ளைகள் யார் அதிகம் நெருக்கம் காட்டினமோ அங்கதான் சேருங்கள்..! அப்பாமாருக்கு நெருக்கம் ஏற்பட சந்தர்ப்பம் குறைவதால் பிள்ளைகள் மீதான அக்கறையும் குறையலாம் இல்லையா மணிவாசகன் சார்..??! :lol: :P

அப்பா மாருக்கு குழந்தைகளுடன் பழக சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்பது அல்ல அவர்கள் சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்வதில்லை.

இந்த நாடுகளில் இரண்டு பேருமே வேலைக்குப் போகிறார்கள். ஆனாலும் குழந்தைகளின் தேவைகளைத் தாய்மார் தான் கவனிக்க வேண்டி இருக்கிறது.

அப்படியானால் குழந்தைகள் தங்கள் தேவைகளுக்குத் தாயிடம் தானே போவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே.

அப்பா வளர்த்தால்.........

அப்பா வளர்த்தால்.. நிச்சயமா பிள்ளை அதிகம் பகுத்தாயும் அறிவுள்ளதாக உலக அனுபவங்களை உணரத்தக்கதாக இருக்கும்..! காரணம் அப்பாமார் அதிக உலக அனுபவத்தைக் கொண்டவர்கள்..! அம்மாமார் (பொதுவாக) குறுகிய வட்டத்துக்குள் நிலைத்து நிற்க முனைகிறார்கள்...பெண்கள் எவ்வளவுதான் உலகை சுற்றிவரினும் உலகத்தோடு கலப்பது வெகுகுறைவாகவே உள்ளது..! அது அவர்களின் வளர்ப்பின் கீழ் உள்ள பிள்ளைகளையும் தாக்கத்தான் செய்கிறது..! :P

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக அப்பா வேலைக்கு போய் உழைத்தாலும் அம்மா என்பவள் வீட்டில் உழைக்கின்றாள். குடும்பத்தைக் கவனிக்கின்றாள். பிள்ளைகளாஇ அவரவர்களுக்கேற்ப ஒவ்வொருவரின் நடையறிந்தும் அவர்கள் மனம் கோணாதபடி நடப்பவள்தான் தாய். அப்பா வெளில வேலைக்கு போய் உழைத்து வந்தாலும் வாரத்தில் 1 நாளாவது விடுமுறை கிடைக்கின்றது. ஆனால் ஒரு குடும்பத்தலைவிக்கு ஒரு நாளேனும் விடுமுறை கிடைப்பதுண்டா? அப்பா உழைப்புக்கு தன்னை அர்ப்பணிக்கின்றார். ஆனால் அம்மாமாரோ குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணிக்கின்றாள். :lol:

உண்மையிலேயே ஒரு அப்பா வெளில போய் உழைத்து குடும்பத்துக்காக க்ஸ்ரப்பட்டாலும் அந்த அப்பாவுக்கே புரியும் ஏன் அவர்களே சொல்வார்கள் அம்மா தான் முதலிடம் என்று. அவன் தான் உண்மையில் புருசன், அப்பா. :lol: ஒரு நல்ல குடும்பத் தலைவன் பொண்டாட்டி தான் முதலிடம் என்பான். ஏனெனில் அவருக்கே தெரியும் தன்னை விட அவள் தான் அதிகம் கஸ்ரபப்டுகின்றாள் என்று

அம்மாமார் அதிகம் சமையல் மட்டும் வீட்டுவேலை செய்கின்றனர் என்பது கீழத்தேய நாடுகளின் உண்மையாக இருக்கலாம். ஆனால் மேற்குலக நாடுகளில் வீட்டுவேலைகளை இயந்திரங்கள் தான் செய்கின்றன..! பிள்ளையைத் தூக்கக் கூட தெரியாத தாய்மார்..! நாம் குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான பெற்றோர் அறிவூட்டல் குறித்த நிகழ்வுகளில் அடிக்கடி பெற்றோருக்கான கவுன்சிலிங்கில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தில் சொல்கின்றோம்..!

மேற்குலகைப் பொறுத்தவரை அப்பா அம்மா இருவருக்கும் பிள்ளை வளர்ப்பில் சம பங்களிப்பை அரசும் சரி குடும்ப பராமரிப்பு நிறுவனங்களும் சரி எதிர்பார்க்கின்றன..! பிள்ளைகள் இருவரிடமும் போதியளவு நேரம் நெருக்கமாக இருக்க வேண்டும்.. உணவருந்தும் போது அப்பா அம்மா கூட இருக்க வேண்டும்.. பிள்ளைகளை வெளியில் அழைத்துச் செல்லும் போது பெற்றோர் கூட இருத்தல் வேண்டும் என்று பிள்ளைகள் மீது பெற்றோரின் கவனிப்பை வலியுறுத்த வேண்டி இருக்கிறது..! பிள்ளைகள் வளர்ப்பில் அப்பாமாரின் பங்களிப்பை அதிகம் அரசுகள் கோரி நிற்கின்றன. வீதிக்கு வரும் குழந்தைகளில் அநேகர் அம்மா வளர்ப்புக் குழந்தைகளாக இருப்பது மேற்குலகில் பெரும் பிரச்சனையாகி இருப்பதுடன் பிரித்தானியாவில் கறுப்பின அப்பாக்கள் மீது கடும் உத்தரவுகள் பிறந்து கொண்டிருக்கின்றன..!

நாம் நிகழ்காலத்தைப் பற்றிய கவலையோடு எதிர்காலம் இப்படியே போனா மோசமாகும் என்ற நிலையில் சில விடயங்களை வலியுறுத்தி வருகின்றோம்....! அப்பாமார் அம்மாமார் முதலில் தாங்கள் ஒருங்கிணைந்து செயற்பட முன்வருவதோடு பிள்ளைகள் தொடர்பில் இருவரினதும் சம பங்களிப்பு அவசியமாவதுடன் பிள்ளைகள் இருவர் மீது அன்பு பாசம் வைக்கும் அளவுக்கு இருவருக்கும் பிள்ளைகளுடன் தொடர்பு இருக்க வேண்டும்..!

மேற்குலக நாகரிகங்களில் மயங்கி வரும் கீழத்தேய நகர வாழ்க்கையில் உள்ளவர்களும் இந்த மாற்றங்கள் குறித்து சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்..! அப்பாமார் பிள்ளைகளை விலகிச் செல்வதை அம்மாமார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல்..அல்லது புறக்கணிக்காமல் அவர்கள் பிள்ளைகளை நெருங்க வகை செய்ய வேண்டும்..! அதேபோல பிள்ளைகளை விலக நினைக்கும் அம்மாமாரையும் அப்பாமார் பிள்ளைகளை நோக்கி கொண்டு வர வேண்டும்..! அப்போதுதான் பிள்ளைகள் சரியான முறையில் குடும்பம் என்ற அலகுக்குள் அன்பு பாசம் மனிதம் உணர்ந்து வன்முறைக் குணம் குறைந்து விரக்தியற்ற நிலையில் வாழ முடியும்..! :lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா மாருக்கு குழந்தைகளுடன் பழக சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்பது அல்ல அவர்கள் சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்வதில்லை.

இந்த நாடுகளில் இரண்டு பேருமே வேலைக்குப் போகிறார்கள். ஆனாலும் குழந்தைகளின் தேவைகளைத் தாய்மார் தான் கவனிக்க வேண்டி இருக்கிறது.

அப்படியானால் குழந்தைகள் தங்கள் தேவைகளுக்குத் தாயிடம் தானே போவார்கள்

புகலிடத்தை நோக்குங்கள்.. அப்பா அதிகம் இரவு வேலை.. அம்மா அதிகம் பகல் வேலை..! குழந்தை பகலில் ஸ்கூலில். இரவில் அம்மா தயவில்..! ஒரு நாளைக்கு அப்பாவை அது சந்திக்கும் நேரம் ஒரு 3 மணித்தியாலத்துக்கும் குறைவு..! அம்மாவை சந்திக்கும் நேரம் குறைந்தது 14 மணி நேரங்கள்..! குழந்தைகள் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 4 மணி நேர வேலையும் பெற வாய்ப்பிருக்கிறது. ஆண்களுக்கு கட்டாயம் 8 மணி நேர வேலை..! ஆக அம்மாமார் தான் அதிகம் பிள்ளைகளோடு கழிக்கச் செய்யப்படுகின்றனர்..! காரணம் அம்மா - பிள்ளை உறவாடல் முக்கியம் என்பதால்..! அதேவேளை அப்பா - பிள்ளை உறவாடல் அங்கு புறக்கணிக்கப்படுகிறது. அது அப்பா பிள்ளைக்கிடையே இடைவெளியை அதிகரிக்கிறது. பாசப்பகிர்வுக்கான சந்தர்ப்பதைக் குறைக்கிறது. அதன் பாதிப்பு அப்பாக்களிலும் வெளிப்படுகிறது பிள்ளைகளிலும் வெளிபப்டுகிறது. கணவன் மனைவியிடையேயும் வெளிப்படுகிறது..!

அண்மையில் கூட சமூக வல்லுனர்கள் இந்த நிலையைக் கண்டித்துள்ளதுடன் அப்பா அம்மா சம அளவில் பிள்ளைகளோடு நேரத்தைச் செலவிடவும் கூட இருந்து பழகவும் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதிலிருந்து நாம் அறிய வேண்டியது அப்பாக்களின் குடும்ப முக்கியத்துவத்தை. பல அம்மாமார் அப்பாமார் குழந்தைகளைப் பிரிந்திருப்பதன் பாதிப்பை உணராமல் உழைப்பு பணம் வருமானம் என்பனவற்றை முதன்மைப்படுத்தி தங்கள் வாழ்க்கையின் சொகுசை தீர்மானிக்க நிற்கின்றனரே தவிர இதனால் குழந்தைகள் அடையும் மனப்பாதிப்புக்களின் விளைவுகளை அறியாதவர்களாகவே உள்ளனர். பல பட்டம் படித்தவர்கள் கூட குடும்ப அறிவின்றி நடந்து கொள்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இது மேற்குலக நடைமுறையில் அவதானித்ததன் பிரதிபலிப்பு..! :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை எனக்கு அம்மா தான் அப்பாவை ஒரு படி உயர்வு தான் அப்பாட்ட வந்து சைட் அடிததில இருந்து எல்லா விசயத்தையும் என்னால சொல்லமுடியாது பட் அம்மாட்ட நான் என்ன செய்தனான என்று முழு விசயத்தையும் சொல்ல முடியும் ஆகவே அம்மா ஒரு படி கூட தான் யார் என்ன சொன்னாலும்

மாதா,பிதா,குரு,தெய்வம்

ஆகவே இதில் கூட மாதா தான் முதலில் வருது

இவவுக்கு எப்பவும் வில்லங்கமான பிரச்சனையள்தான் ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதன் முதலாய் அம்மாவுக்கு...

எனக்கொண்ணு ஆனதுன்னா

ஒனக்குவேற பிள்ளையுண்டு

ஒனக்கேதும் ஆனதுன்னா

எனக்குவேற தாயிருக்கா?

- கவிப்பேரரசு வைரமுத்து.

தொகுப்பு : கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

மிக உன்னதமான கவிவரிகள்,இங்கு தந்தமைக்கு நன்றி வானவில் அவர்களே!..

"தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதை அறிவுள்ள உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும் ஒத்துக்கொள்வான்.!

வீரசிவாஜி என்றழைக்கப்படும் மராட்டிய மன்னன் பயந்த சுபாவம் உடையவராம். அவரை வீரசிவாஜி ஆக்கியதே அவரது அன்னைதான்! பாலை மட்டுமல்ல துணிவையும் ஊட்டி வளர்த்தாளாம்.

'ஆனந்த விகடனில் பிரகாஷ்ராஜ்' தாயைப் பற்றிச் சொல்கையில் சொல்வார். "பெண்ணால் மட்டும் தான் பத்துமாதம் தன் குழந்தையை மகிழ்வுடன் சுமக்க முடியும் அதுவே ஒரு ஆண் என்றால் அடுத்த நிமிடமே இறக்கிவிட்டு ஓடிவிடுவான்" ! ஒரு கொஞ்ச நேரம் பிள்ளையைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தந்தையிடம் கொடுத்துவிட்டுப்போகும் போது குழந்தை சிறுநீர் கழித்துவிட்டால் 'சிச்ச்சீ....என்று அருவருக்கும் ஆண்கள் தான் அதிகம்.!

அதனால்தானோ என்னவோ கடவுள் சுமைகளைப் பெண்களுக்கே கொடுத்தார். !!

ஒரே ஒரு அன்னை திரேசாதான் அந்த இடத்தை இன்றுவரை எந்த ஆணாலும் நிரப்ப முடிகின்றதா என்ன?!!

வீரவிவேகானந்தர் கூட 'சாரதா அம்மையாரைப்பற்றி மிக உயர்வாகச் சொல்வார்.! ஆண்களாக இருப்பவர்கள் பெண்களை மதிப்பார்கள் என்பதற்கு இராமகிருஷ்ணர்,விவேகானந்தர் இவர்களை விடவும் சான்றுகள் வேண்டுமா என்ன?!!

"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள்". தாய் நாடு, தாய் மொழி. தாய்நிலம் என்பதெல்லாம் தாயின் மேன்மையைத்தானே பறை சாற்றி நிற்கின்றன. பூமி மாதா என்கின்றோம், கடல் தாயே என்கின்றோம்!! இப்படி இப்படி பெண்மையின் மேன்மையினைச் சொல்லிக்கொண்டே போகலாமே!.

தன் மனைவி இறந்துவிட்டால் தன் குழந்தையைப் பார்க்க இன்னொரு மணம் செய்துகொள்ளும் ஆண்கள் ஆயிரம் உண்டு. ஆனால் பிள்ளையை வளர்க்க வேண்டும் என்ற நிலையில் கூட எந்தப்பெண்களும் இன்னொரு மணம் செய்துகொள்வதில்லை.! !

தாயே!! உயர்ந் தாயே!!

எண்பது மணிநேரம் பட்ட

களைப்புகள் தீர கையில்

வந்து சேர்ந்தது! என் முதல்

முதல் சம்பளம்!

அப்பா கேட்டார்! தனக்குப்

பிடித்த கைக்கடிகாரம்

தங்கை கேட்டாள்

செல்லிடத் தொலைபேசி

அண்ணனும் கேட்டார்

பிடித்த வண்ணத்தில் சட்டை

தோழர்கள் கேட்டனர்

உணவகத்தில் சாப்பாடு!!

அத்தனையும் சமாளித்து

அம்மா கையில் மீதி

கொடுக்க!....அதைமடித்து

மறைத்து! என் கையில்

திணித்து!! சொன்னாள்!

'உன் செலவுக்கு

வைச்சுக்கோடா" !!!

நன்றி..

ஒரு ஆண் படித்தால் ஒருவன் படித்ததற்கு சமன்

ஒரு பெண் படித்தால் ஒரு குடும்பம் படித்ததற்கு சமன்

இவவுக்கு எப்பவும் வில்லங்கமான பிரச்சனையள்தான் ;)

தாத்தா :angry: :angry: :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யம்முக்கு அம்மா என்டா நிறைய விருப்பம் போல

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பெருமக்களே அம்மணிகளே.. அன்னைக்கு நிகர் அன்னைதான். தந்தைக்கு நிகர் தந்தை..!

ஆணும் கர்ப்பம் தரித்தால் அன்னையாகிடுவான்..! இப்படிப் பதிலுக்கு அடிக்கிக்கொட்டு போகலாம்..

நாங்க சொல்ல வந்ததைக் கவனிக்கிறதாத் தெரியல்ல.. அன்னைக்கு நிகர் அன்னை.. தந்தைக்கு நிகர் தந்தை..!அது இயற்கையின் விதிப்பு..! அந்த அன்னைக்குரிய தகுதியை வழங்கும் தந்தை இருக்கிறாரே.. அவரையும் கொஞ்சம் கண் திறந்து பாருங்க என்றுதான் கேட்டுக் கொள்கிறம். அவங்க பிள்ளைகள் சூ போறதுக்கு பயந்து ஓடிறத ஊக்கிவிக்காதேங்கோ என்றுதான் சொல்லுறம்.. அவங்க பிள்ளைகளோட நெருங்க அனுமதியுங்க.. தந்தைக்குரிய பாசத்தை பிள்ளைகள் உணர அனுமதியுங்க..! அன்னைக்கு நிகரா இல்லாட்டிலும் தந்தைக்கும் சம பங்கில பிள்ளைகளோட பாசம் காட்ட அனுமதிக்கனும் அதை ஊக்கிவிக்கனும் என்றதுதான் கோரப்பட்டிருக்கிறது...!

இயல்பாவே அம்மாக்கு ஆதரவு என்பது பொதுவான நிலைப்பாடு..! அது இயற்கையும் கூட..! தாய் பசுவை அடையாளம் காணும் கன்றுக்குட்டிக்கு தந்தைப் பசு எதுவென்றே தெரியாது..! அந்த நிலை மனிதருக்குள்ளும் பெருக வேண்டாம்..! மனிதருக்கு என்று பகுத்தறிவு உண்டு..! அது தாய் தந்தை இருவரையும் பாசத்தாராசில் சமநிலையில் வைக்க வேண்டும்..! அதுதான் குடும்ப சமூக நலனுக்கு அவசியம்..!

இதைத்தான் சொல்ல வந்தமே தவிர அம்மாமாரை விமர்சிக்கனும் என்றதல்ல நோக்கம்..! பிள்ளைகளுக்காக திருமணமே செய்துக்காத பல அப்பாக்களும் உள்ளனர்..!

ஆண் ஒரு தாயானால் கூட சந்தேகமாகப் பார்க்கும் உலகில்.. எப்படி ஆண் அன்னை தெராசா ஆக முடியும்..??! ஆனால் ஆணாலும் முடியும் பாசம் காட்ட..! பல ஆண்கள் அதை உணரா நிலைக்கு சமூகம் அவர்களைத் தள்ளி விட்டுள்ளது..! இந்த நிலை மாறனும்..! :P :rolleyes:

ஐயா பெருமக்களே அம்மணிகளே.. அன்னைக்கு நிகர் அன்னைதான். தந்தைக்கு நிகர் தந்தை..!

ஆணும் கர்ப்பம் தரித்தால் அன்னையாகிடுவான்..!:

:rolleyes::lol::D:o

  • தொடங்கியவர்

ஐயா பெருமக்களே அம்மணிகளே.. அன்னைக்கு நிகர் அன்னைதான். தந்தைக்கு நிகர் தந்தை..!

ஆணும் கர்ப்பம் தரித்தால் அன்னையாகிடுவான்..! இப்படிப் பதிலுக்கு அடிக்கிக்கொட்டு போகலாம்..

நாங்க சொல்ல வந்ததைக் கவனிக்கிறதாத் தெரியல்ல.. அன்னைக்கு நிகர் அன்னை.. தந்தைக்கு நிகர் தந்தை..!அது இயற்கையின் விதிப்பு..! அந்த அன்னைக்குரிய தகுதியை வழங்கும் தந்தை இருக்கிறாரே.. அவரையும் கொஞ்சம் கண் திறந்து பாருங்க என்றுதான் கேட்டுக் கொள்கிறம்.

அப்பு நெடுக்ஸ் ஒரு பிள்ளைக்கு தாயும் தந்தையும் 2 கண் போண்றவர்கள். பிள்ளை இருவரையும் ஒரேபோலத்தான் நோக்குகிறது, தந்தைக்கு நிகர் தந்தைதான், தாய்க்கு நிகர் தாய்தான் அதே போலதான். பிள்ளைக்கு தாயும் தகப்பனும் சமன், சும்மாவ சொல்லி வச்சாங்க தாயும் தந்தையும் முன்னறி தெய்வம் என்று முன்னோர்கள். தாய் = தந்தை,

இங்கே எல்லோருமே பிள்ளைகள்தான் வேணுமென்றால் ஒரு கருத்துக் கணிப்பு எடுத்து பாருங்கள் வேணுமென்றால்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாக்காக எழுதிய கவிதை நல்லா இருக்கு. இணைப்புக்கு நன்றி

  • தொடங்கியவர்

அம்மாக்காக எழுதிய கவிதை நல்லா இருக்கு. இணைப்புக்கு நன்றி

நன்றி மட்டும் போத்தாது நீரும் ஒன்று எழுதுறது அல்லது வெட்டி ஒட்டுறது. :lol:

என்னருகே இருக்கையிலே

உன்னருமை தெரியவில்லை

அருமையினை உணர்கையிலே

அருகினிலே நீயில்லை

மெழுகாய் உனைஉருக்கி

வெளிச்சத்தைத் தந்தவளே

வெளிச்சத்தின் அருமையினை

இருட்டில்தான் உணர்கின்றேன்

உனக்காக எதையும்நீ

என்னிடத்தில் கேட்டதில்லை

எனக்காக எதையும்நீ

செய்யாமல் விட்டதில்லை

மனதைத் தொடும் வரிகள், கவிஞரின் பிரிவுத் துயர் மனதை உருக்குகின்றது.

அத்தனையும் சமாளித்து

அம்மா கையில் மீதி

கொடுக்க!....அதைமடித்து

மறைத்து! என் கையில்

திணித்து!! சொன்னாள்!

'உன் செலவுக்கு

வைச்சுக்கோடா" !!! உள்ளத்தைதொடும் வரிகள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.