Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

tharshana-krttiyarachchi.jpg?zoom=1.2100
தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும்இராணுவத்தினரும் , காவல்துறையினரும் வீதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பகுதியில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளத்தினை பொது மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில் ,

சிங்கள மக்களுக்கும் சரி இராணுவத்திற்கும் சரி தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விருப்புகின்றனர். யுத்தத்திற்கு முன்னரான கால பகுதியில் தமிழ் சிங்கள மக்கள் ஒற்றுமையுடன் நட்புடன் வாழ்ந்தார்கள். யுத்த காலத்தில் துன்பட்ட தமிழ் மக்களின் வாழ்வினை இன்பமான வாழ்வாக மாற்றுவது எமது பொறுப்பாகும்.

எனவே தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறே தொடர்ந்து அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என இந்த அமைதியான வாழ்வு மீண்டும் மாறுமாயின், காவல் துறையை சேர்ந்தவர்களும் . இராணுவத்தினரும் வீதியோரங்களில் காவல் நிலையங்களை அமைத்து வீதியில் செல்வோரை வழிமறித்து சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வரும் அதனால் இந்த அமைதியான வாழ்வை வாழ வேண்டும்.

அதேபோல இராணுவத்தினருடன் இணைந்து ஒற்றுமையாக தமிழர்கள் வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த அமைதியை யாராவது ஒருவர் குலைக்க விரும்பினால் அவர்களுக்கு தமிழ் மக்கள் தைரியம் கொடுக்காது அவர்களை வலுவிழக்க செய்து இந்த நாட்டின் அமைதியை பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் கூறுவதை நம்புங்கள் நான் எனது மனதில் தோன்றுவதனை சொல்கிறேன். அதனால் நாம் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வோம். இராணுவத்தினர் ஆகிய நாம் இந்த வேலை திட்டத்தை மேற்கொண்டு எதிர்காலத்தில் அரசியல் நோக்குடன் வாக்கு கேட்டு இந்த வேலை திட்டங்களை செய்யவில்லை. யாழில் வாழும் தமிழர்கள் அன்புடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/105430/

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

யாழில் வாழும் தமிழர்கள் அன்புடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்

 எச்சரிப்பதைப் பார்த்தால் நீங்கள் வேறு எதையாே எதிர்பார்க்கிறீர்கள். பாெறுப்புள்ள அதிகாரியாக செயற்பட முயற்சியுங்கள். காலம் மாறிவருகிறது பழைய தந்திரத்தை விட்டு புசுசா ஏதாவது யாேசியுங்காே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, satan said:

 எச்சரிப்பதைப் பார்த்தால் நீங்கள் வேறு எதையாே எதிர்பார்க்கிறீர்கள். பாெறுப்புள்ள அதிகாரியாக செயற்பட முயற்சியுங்கள். காலம் மாறிவருகிறது பழைய தந்திரத்தை விட்டு புசுசா ஏதாவது யாேசியுங்காே.

ஆமிக்காரங்களுக்கு ரத்தக்களரியை காணாட்டில் பத்தியப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஆமிக்காரங்களுக்கு ரத்தக்களரியை காணாட்டில் பத்தியப்படாது.

உசுப்பேற்றும் தமிழர்களும் இருக்கிறார்கள் அதையும் மறந்து விட்டீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க தான் பிரிஞ்சு போய் உங்களோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று நிம்மதியாக உலகத்தோடு ஒட்டி வாழுறம் என்றம்.. அதுக்கும் உங்களுக்கு விருப்பமில்லை.. உப்படியே இராணுவத்தை நடுவீட்டுக்க இருத்தி வைச்சிட்டு தமிழ் மக்களை அச்சுறுத்தி.. பயமுறுத்தி... அடிமைகளாக வாழ வைச்சிடலாம்.. போலி நல்லிணக்கம் பேசி என்று நினைக்கிறார்கள் சிங்களவர்கள்.

அது எனி இந்த நவீன உலக ஒழுங்கில்.. அதிக காலம் நிலைக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் என்பது அரசிற்கு ஊழியம் செய்யும் ஒரு படையேதவிர அரசல்ல. தலையிருக்க வாலாடக்கூடாது. ஒரு அரசின்கீழ் உள்ள இராணுவம் அரசியல் செய்ய வருவது, இராணு ஒழுக்க விதிகளுக்கு முரணானது என்று ஒரு பதிவும் யாழில் முன்பு வந்தது.

இராணுவ ஆட்சியை ஏற்படுத்திவிட்டுக் கெட்டியாராச்சி எதனையும் தெரிவிக்கலாம்.

நாய்குரிய வேலையை நாய் செய்ய வேண்டும். கழுதைக்குரிய வேலையைக் கழுதை செய்ய வேண்டும்.

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உசுப்பேற்றும் தமிழர்களும் இருக்கிறார்கள் அதையும் மறந்து விட்டீர்கள்

தனிப்பட்ட தமிழர்களோ சிங்களவர்களோ  பேசுவது வேறு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் எடுக்கும் இராணுவ அதிகாரி நாட்டில் தனக்கு சம்பளம் கொடுக்கும் ஒரு பகுதி மக்களை பார்தது பிளாக்மெயில் பண்ணுவது  நாடு அஜாகமானது அநீதியானது என்பதன் எடுத்துக்காட்டு. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

தனிப்பட்ட தமிழர்களோ சிங்களவர்களோ  பேசுவது வேறு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் எடுக்கும் இராணுவ அதிகாரி நாட்டில் தனக்கு சம்பளம் கொடுக்கும் ஒரு பகுதி மக்களை பார்தது பிளாக்மெயில் பண்ணுவது  நாடு அஜாகமானது அநீதியானது என்பதன் எடுத்துக்காட்டு. 

ராணுவ அதிகாரி ஓர் சிங்களவர்தான் அதன் பிறகே அவர் ராணுவம் காவிக்குள் அடங்கியிருக்கு சிங்கள பேரினவாதம் அது ராணுவ சீருடைக்குள்ளும் இருக்கும்

இந்த நாடு அநீதியானதுதான் மாற்றுக்கருத்து இல்லையே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.