Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் எழுந்த முஸ்லிம் கலாசார உடைகள் தொடர்பான விவாதம்  - வ.ஐ.ச.ஜெயபாலன்  .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் எழுந்த முஸ்லிம் கலாசார உடைகள் தொடர்பான விவாதம் 
- வ.ஐ.ச.ஜெயபாலன் 
.
இலங்கையில் குறிப்பாக கிழக்கு பாடசாலை அலுவகங்களில் முஸ்லிம் பெண்கள் அணியும் உடைகள் தொடர்பான விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. இதுபற்றி என்னிடம் கேட்க்கபட்டபோது என் கருத்தை உறுதியாக முன் வைத்தேன். 
.
ஒரு பெண் நிர்பந்திக்கபடாமல் சொந்த விருபத்தின்பேரில் முக அடையாளத்தை மறைக்காமல் அணியும் ஆடையைச் சிலர் கேழ்விக்குரித்தாக்குவதை அனுமதிக்க முடியாது. அதேபோல மாற்று மதத்தவர்களின் உடைகளை காமத்தை தூண்டுவது என வக்கிரமாகச் சிலர் குறிப்பிடுவதையும் அனுமதிக்க முடியாது. 
.
எங்கள் இளமையில் சேலை முக்காடு என முஸ்லிம்களின் கலாசார உடைகள் ஒருபோதும் கேழ்விக்குள்ளானதில்லை. 1980 பதுகளின் பின்னர் முஸ்லிம்கள் அரபிய வடிவ உடைகளுக்கு மாற ஆரம்பித்தபோது உலகளாவி உருவான உருவாக்கபட்ட சூழல் இதுவாகும். 
.
மரபு இஸ்லாமிய ஆடைகளா அல்லது அரபுமயமாதலா என்கிற விவாதம் உலக மட்டத்திலும் இலங்கையிலும் அதிகரித்து வருகிறது. எனினும் இதுசார்ந்த விவாதங்களும் முடிவுகளும் உள்வாரியாக முஸ்லிம் மக்கள் மத்தில் மட்டுமே இடபெறுதல் வேண்டும். ஏனையோர் விலகி இருப்பதே சரியானது என்பதை வலியுறுத்துகிறேன். . 
.
முஸ்லிம் பெண்களிடமிருந்து உடைகள் தொடர்பான விதிகள் மற்றும் இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட தீர்ப்புகளால் தாம் தனிப்பட்டமுறையில் பாதிக்கபட்டதாக முறைப்பாடு வராத பட்சத்தில் இவ்விடயத்தில் சட்டமும் அரசும் விலகி இருப்பதே ஜனநாயகமாகும்.

2.

முஸ்லிம்கள் பற்றி இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிற விடயம் அரபிய மயமாதலாகும். துர் அதிஸ்ட்ட வசமாக இதுபற்றிய தொடர் விவாதங்களும் உலக நாடுகளின் விவாதங்களில் அதன்மூலம் பங்களித்தலும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகம் இல்லை. இந்த தசாப்தத்தில் இலங்கை ஐலண்ட் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள்பலவற்றுக்கு இன்றுவரை பதிலளிக்கபடவில்லை. உலகில் முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் ஆய்வு 
கலந்துரையாடல் விவாதங்கள் இல்லாத முரட்டுத்தனமான நியாயப் படுத்தல்கள் பகை வளர்க்குமேயென்றிப் பதில்களாகிவிடாது. .

சிறுபாண்மையினராக வாழும் நாட்டில் விசேட சட்டங்களைக் கோரும் இனமாக முஸ்லிம்கள் இருக்கிறது தொடர்பான முரண்களை மென்போக்குடனும் சரியான கலந்துரையாடல்கள்மூலமும் ஞானத்தோடு அணுகுவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும். உலகம் முழுவதும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்கள் முஸ்லிம் பெண்களுக்கான இயற்க்கை நீதியை மறுக்கும் வகையிலும் பயன்படுத்தபடுவதாக குற்றச்சாட்டுக்கள் பெருகி வருகின்றன. காதி மன்றுகள் சிலவற்றின்மீது முஸ்லிம்களே அத்தகைய குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிரார்கள். விசேட சட்டங்கள் துஸ்பிரயோகம் செய்யபடும்போது விசேட சட்டங்களை நெடுநாட்கள் பாதுகாப்பதே போராட்டாமாகிவிடும் ஆபத்துள்ளது. 
விவாக விவாகரத்து சட்டங்கள் முஸ்லிம் பெண்களுக்கு எதிராகவே பிற மத பெண்களை மணப்பது தொடர்பாகவோ துஸ்பிரயோகம் செய்யப்படும்போது அது அநீதியாகும். அது நிச்சயம் முஸ்லிம்களின் உள்விவகாரமல்ல என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும். அதனை மனித உரிமை ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் எதிர்ப்பார்கள். அது முஸ்லிம்களையல்ல முஸ்லிம் விரோதிகளையே பலப்படுத்தும். விசேட சட்டங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது முஸ்லிம் விரோதிகளுக்கு கோட்டை மதில் கதவுகளைத் கதவு திறந்து வைக்கிற துரோகச் செயலாகும். இவையும் முஸ்லிம்கள் அரசுக்குள் அரசாக இயங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்களோ என்கிற பெரும்பாண்மையினரின் சந்தேகங்களையே வல்லுப்படுத்துகிறது. அடிப்படையாகும். இந்த விடயத்தை நான் முஸ்லிம் சான்றோரின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

தயவு செய்து எனக்கு கற்பிக்கவும். மரபு சார்ந்த சேலை முட்டக்கு பிஜாமா தலை நாடியை சுற்றிய முட்டாக்கு இவை புனிதநூல் நெறிப்படுத்தலுக்கு விரோதமானதா? அரபிய ஆடைகள் மட்டும்தான் புனிதநூல் நெறிப்படுத்தலுக்கு அமைந்ததா? இஸ்லாத்தில் சரிஆ போன்றவை புனிதநூலுக்கு இணையானவையா? புனித நூலில் சொன்னவற்றை பின்பற்றினால் அதை இஸ்லாத்துக்கு ஒவ்வாத ஆடையென சொல்லலாமா? தயவுசெய்து எனக்கு கற்பிக்க வேண்டுகிறேன்.

3.

Jaya Palan Segudawood Nazeer பெண் விருப்பின் பேரில் முகத்தை மூடினால் அதை தடை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.
. Jaya Palan முஸ்லிம் நாடுகள் பல அந்த உரிமையைக் கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? முகம் மூடுவது தடை செய்யபட்டால் அதை எதிர்த்து போராடுவேன் என்று சொல்கிறீர்கள். நித்தயமாக முகம் மூட்வதை ஆதரித்து நான் போராட மாட்டேன் நண்பா. மத்திய ஆபிரிக்க நாடான சாட் முஸ்லிம் பெரும்பாண்மை நாடாகும் 2015ல் இரண்டு தற்கொலைத் தாக்குதல்களின்பின் முகமூடும் உடைகள் தடை செய்யப்பட்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே. நண்பா, பெண்கள் முகம் திரையிட்டு மூடல், தடுக்கபட்ட அல்லது கட்டாயமாக்கபடாத முஸ்லிம்நாடுகளின் சேதிகளை வாசியுங்கள் .

4.

 

முஸ்லிம்களின் கலாச்சார அடையாளம் அடிபடை உரிமை. 
ஆனால் 1980பதுகளில் பணிபெண்கள் பணியாளர்கள் அரபு நாடுகளில் இருந்து கொண்டுவந்த கண்ணீர் கதைகளும் செல்வமும் அரபிய மயமாதலும் வேறு. இதுபற்றிய விவாதங்கள் சிங்களவர் மத்தியில் நடப்பதுபோல முஸ்லிம் மக்கள் மத்தியில் இடம்பெறாதமையும் சிங்களவருக்கு பதில் கூறாமையும் இன்றய சோகங்களின் அடிப்படை. உலகம் முழுவதிலும் முஸ்லிம்களின் அடிபடை உரிமைகளா அரபியமயமாதாலா எடத்ன்கு முக்கியம் என்கிற பூதாகரமான கேழ்வியை முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். . அரபியமயமாதல்பற்றி எனக்கு எந்த அக்கறையுமில்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் ஏற்றுக்கொள்கிற முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களை பாதுகாக்கிறதுக்காக 
என்னுடைய உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

-----ஆனால் முஸ்லிம் பெண்கள் ஏற்றுக்கொள்கிற முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களை பாதுகாக்கிறதுக்காக 
என்னுடைய உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன்.

இதனை வாசித்தவுடன்.. உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் பெண்க‌ளின் ஆடை ப‌ற்றி முஸ்லிம் அல்லாத‌வ‌ர்க‌ளுக்கு ஏன்தான் இத்த‌னை க‌வ‌லை என‌ தெரிய‌வில்லை..

எழுத்தாள‌ர் வ‌ ஐ ச‌ ஜெய‌பால‌ன் என்ப‌வ‌ர் இது ப‌ற்றி எழுதும் போது 1980க்கு முன் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் சாரி, முக்காடு
என்றிருந்தார்க‌ள், இப்போது ஏன் அபாயா என்ற‌ அரேபிய‌ ஆடையை அணிய‌ வேண்டும் என‌ கேட்கிறார்.
முத‌லில் க‌றுப்பு நிற‌ அபாயா என்ப‌து அர‌புப்பெண்க‌ளின் க‌லாசார‌ ஆடைய‌ல்ல‌ என்ப‌தை புரிந்து கொள்ள‌ வேண்டும். அந்த‌ ஆடை முஹ‌ம்ம‌து ந‌பிக்கு முன்பே உல‌கில் வாழ்ந்த‌ உத்த‌ம‌ பெண்க‌ளின் ஆடையாகும். ஜீச‌சின் தாயார், ம‌ர்ய‌ம் என‌ப்ப‌டும் மேரி இத்த‌கைய‌ ஆடைக‌ளையே அணிந்தார்.

ஒரு ச‌மூக‌த்தின் க‌லாசார‌ ஆடை என்ப‌து எப்போதும் ஒரே மாதிரியாக‌ இருப்ப‌தில்லை. ஒரு கால‌த்தில் இல‌ங்கையின் த‌மிழ், சிங்க‌ள‌ பெண்க‌ளின் ஆடையாக‌ சாரியே இருந்த‌து. பின்ன‌ர் அது குட்டை க‌வுனாக‌ மாறிய‌து. இப்போது கிழ‌விக‌ளை த‌விர‌ பொது வெளியில் சாரி அணியும் த‌மிழ், சிங்க‌ள‌ பெண்க‌ளை காண்ப‌து அரிது. அனைவ‌ருமே ஐரோப்பிய‌ உடையையே அணிகின்ற‌ன‌ர். ஏன் இத்த‌கைய‌ ஐரோப்பிய‌ மோக‌ம் த‌ம் பெண்க‌ளுக்கு வ‌ந்த‌து என்ற‌ கேள்வியை ஜெய‌பால‌ன் போன்றோர் த‌ம் ச‌மூக‌த்தில் கேட்க‌ வேண்டும்.
ஒரு கால‌த்தில் முழ‌ங்காலுக்கு கீழ் உள்ள‌தையும் ம‌றைத்த‌ த‌மிழ், சிங்க‌ள‌ பெண்க‌ள் இப்போது தொடைக‌ளையும் காட்டித்திரிவ‌து க‌லாசார‌மாகிவிட்ட‌து. இன்னும் கொஞ்ச‌ கால‌ம் போனால் வெள்ளைக்காரி போல் ஜ‌ட்டியுட‌னும் பிராவுட‌னும் வீதியில் உலா வ‌ரும் நிலையும் வ‌ரும் என்ப‌தை எவ‌ரும் ம‌றுக்க‌ முடியாது.

இவ்வாறான‌ க‌லாசார‌ சூழ் நிலையில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் ஆடைக்க‌லாசார‌ம் அப்ப‌டியே இன்ன‌மும் பேண‌ப்ப‌டுகிற‌து.
பொதுவாக‌ ஒரு க‌லாசார‌ சூழ‌லில் வாழும்போது அக்க‌லாச‌ர‌த்தின் அசிங்க‌ங்க‌ள் அசிங்க‌மாக‌ தெரியாது.
உதார‌ண‌மாக‌ ஒரு வீட்டில் த‌ன் தாய் தொடைய‌ காட்டிக்கொண்டு ஆடை அணியும் க‌லாசார‌ம் இருந்தால் அவ‌ள‌து ம‌க‌னுக்கு அது அசிங்க‌மாக‌ தெரியாது.அவ‌ள‌து ம‌க‌ள் தாயை விட‌ அதிக‌மாய் தொடையை காட்டிக்கொண்டு செல்வாள். அவ‌ளுட‌ன் செல்லும் அவ‌ள் த‌ம‌ய‌ன் கூட‌ கூச்ச‌மில்லாம‌ல் செல்வான்.

80க‌ளுக்கு முன் சாரி கலாசார‌ம் இருந்த‌து. அத‌ன் பின் அந்த‌ உடையும் இஸ்லாத்துக்கு முர‌ணான‌ உடை என்ப‌தை முஸ்லிம் ச‌மூக‌ புரியத்தொட‌ங்கிய‌து. சாரி அணியும் போது மார்புக்கும் இடுப்புக்கும் இடைப்ப‌ட்ட‌ பெரும் ப‌குதி ம‌றைக்க‌ப்ப‌டுவ‌தில்லை. அது ம‌ட்டும‌ல்லாம‌ல் கால‌நேர‌ வேக‌ம் கார‌ண‌மாக‌ தொழிலுக்கு, வெளியே செல்ல‌ முய‌லும் பெண் ஆறு முழ‌ சேலையை சுற்றிக்கொண்டிருக்க‌ முடியாது. இத‌ன் கார‌ண‌மாக‌ சாரியை விட‌ ஒழுக்க‌மான‌ அபாயாவை முஸ்லிம் பெண்க‌ள் அணிகிறார்க‌ள். இந்த‌ ஆடையை அர‌பு நாட்டு ஆடையாக‌ பார்க்காம‌ல் ந‌ல்ல‌ பெண்க‌ளின் ஒழுக்க‌ ஆடையாக‌ பார்க்க‌ வேண்டும்.

அர‌பு நாட்டு ஆடையாக‌ இருந்தால்த்தான் என்ன‌? ஐரோப்பிய‌, இந்திய‌ பெண்க‌ளின் அசிங்க‌ ஆடைக‌ளை விட‌ அர‌பு நாட்டு ஆடை சிற‌ந்த‌து என்ப‌தை ஏன் நாம் ஜீரணிக்க‌ ம‌றுக்கிறோம்.?

ஆக‌வே முஸ்லிம் பெண்க‌ளின் ஆடை ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் காம‌த்துக்கு இட‌ம் வைக்காத‌தால் அது ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டாம‌ல் காம‌த்தை தூண்டும் வித‌மாக‌ ஆடை அணியும் த‌ம‌து ச‌மூக‌ பெண்க‌ளுக்கு புத்திம‌தி சொல்ல‌ ஜெய‌பால‌ன் போன்றோர் முன் வ‌ர‌ வேண்டும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்.

https://www.madawalaenews.com/2018/12/mam.html

  • கருத்துக்கள உறவுகள்

சீதையும் தான்...வனவாசம் போகும்போது மரவுரி தரித்தாள் என்பதற்காக....எல்லா....வைஷ்ணவப் பெண்களும்...மரவுரி..தரித்தால் ... எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்!

சிரிப்பை அடக்க முடியவில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காம‌த்தை தூண்டும் வித‌மாக‌ ஆடை அணியும் த‌ம‌து ச‌மூக‌ பெண்க‌ளுக்கு புத்திம‌தி சொல்ல‌ ஜெய‌பால‌ன் போன்றோர் முன் வ‌ர‌ வேண்டும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்.
.
நண்பரே
பெண்கள் ஆடை பற்றி வக்கிரமாக பேசுவதே உங்கள் வளக்கமாகிவிட்டது. காமம்பற்றியே எப்பவும் சிந்திபீர்கள்போலும்.   நான் உளவியல் நிபுணனல்ல நண்பரே. உங்களைபோன்ற ஒருவருக்கு  1950 களில் நாசர்கூறிய பதில் ஞாபகம் வருகிறது. அது அப்படியே உங்களுக்கும் பொருந்தும் என்பதால் .பதிவிடுகிறேன்.

.

நாசரின் பதில் (1943) இதோ "Your daughter is studying medicine. She does not wear the veil. If you can't impose the veil on your daughter, what makes you think I can impose the veil on 10 million Egyptian women?" தமிழில் ”உங்கள் மகள் மருத்துவம் பயில்கிறார். அவர் முகத்திரை அணிவதில்லை. உங்களால் உங்கள் மகளுக்கு முகத்திரை அணிய நிர்பந்திக்க முடியாதபோது எதனால் ஒருகோடி எகிப்திய பெண்களை முகத்திரை அணியுமாறு என்னால் நிர்பந்திக்க முடியுமென நீங்கள் கருதுகிறீர்கள்” இது அரை நூற்றாண்டுகளுக்கு முந்திய நிலமை. அபோது உங்களைப்போல சிந்திக்கிறவர்கள் இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=TX4RK8bj2W0

 


.

https://www.youtube.com/watch?v=TX4RK8bj2W0

முஸ்லிம்களிற்கு என்றல் மட்டும் சிலரின் சுளகு படக் படக் என அடிக்கிறது. :P

  • கருத்துக்கள உறவுகள்

புலவரே அப்படியே முஸ்லிம் ஆடைகளை அணிந்து கொண்டு நடக்கும் துஸ்பிரயோகங்களை உங்கள் உயிரை கொடுப்பதற்கு முன் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும் ,
பெண்களின் கழிப்பறைக்குள் ஆண் அபாயா அணிந்து கொண்டு நுழைந்து கமெரா செட் பண்ணுவது 
மொக்காட்டிற்குள் BlueTooth HeadSet வைத்து உயர்தரப்பரீட்சை எழுதுவது  ,
முகத்தை மூடிக்கொண்டு வந்து வேறொருவருக்காக குதிரை ஓடுவது 
இப்படி டசின் கணக்காக உள்ளது இவர்களின் வித்தைகள்  இதெற்கெல்லாம் தீர்வையும் அப்படியே எடுத்துவிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

 

மேயரின் ஓர் அறிவிப்பு எப்படியெல்லாம் இவர்களை யோசிக்க வைக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய மார்க்கத்துக்கு இசைவான உடை அணிகிறோம் எனக்கூறி ஐரோப்பிய நாடுகளில் பஸ் தரிப்பிடங்களில் அவ்வுடைகளையே மறைப்பாகவைத்து நடக்கும் அசிங்கங்களைப்பற்றி இங்கு ஒருவரும் பேசுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.