Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

39 மனைவிகளுடன் வாழும் விசித்திரமான மனிதர்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
39 மனைவிகளுடன் வாழும் விசித்திரமான மனிதர்...
 
39 மனைவிகளுடன் ஒருவர், ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா, நமது இந்தியாவில் வாழும் இந்த விசித்திரமான மனிதர்.
 
Mute
Current Time1:06
/
Duration Time4:18
Loaded: 0%
Progress: 0%
 
Full screen
 
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
      •  
         
        * வட கிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த 73 வயதான Ziona Chana, தமது 39 மனைவிகளுடன், ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். 'Baktawng' கிராமத்தைச் சேர்ந்த இவர், கிறிஸ்தவ மதத்தில், பலதார மணத்தை  ஆதரிக்கும், 'சனா பால்' (Chana Pawl) என்ற ஒரு பிரிவின் தலைவராக உள்ளார். 
         
        * கடந்த 1945ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி இவர் பிறந்தார். 1959ம் ஆண்டு, தமது 15 வயதில், முதல் திருமணம் செய்தவர், 2004 ல் தமது 60வது வயதுடன் மணம் முடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
         
        * மொத்தம் 94 குழந்தைகள், 14 மருமகள்கள், 33 பேரக் குழந்தைகள் என, இவரது வீட்டின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 181. இந்த பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தமது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட மாளிகை ஒன்றை, கட்டியுள்ளார். 
         
        * 181 பேரை கொண்ட சியோனாவின் மிகப்பெரிய குடும்பத்திற்கு தினசரி, உணவு தயாரிப்பதே, திருமண மண்டபம் போல, களை கட்டுகிறது.
         
        * குடும்ப உறுப்பினர் காலை மற்றும் மாலையில், 30 கிலோ அரிசியை, நாங்கள் பயன்படுத்துகிறோம். நாங்கள் பயன்படுத்தும் அனைத்து சமையல் பொருட்களும், உபகரணங்களும் எங்களாலேயே தயாரிக்கப்படுகின்றன.
         
        * தேவையான உணவுகளை தாங்களாகவே விளைவித்து கொள்ளும் ஜியோனா குடும்பத்தினர், தனியாக பள்ளி ஒன்றையும் நடத்தி வருகின்றனர். பெண்கள் வீட்டு வேலைகளிலும், ஆண்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, குடிசை தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 
         
        * உலகின் மிகப்பெரிய குடும்பத்துக்கு சொந்தக்காரரான சியோனாவை பற்றி கேள்விபட்டு, பலரும் இங்கு குவிவதால்,  அவரது வீடு, ஒரு சுற்றுலா தளமாகவே மாறிவிட்டது.
         
        * தாம் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால் தான், தம்மை கவனித்துக் கொள்வதற்காக, ஏராளமான சொந்தங்களை கடவுள் தமக்கு கொடுத்துள்ளார் என்று இவர் பெருமை பேசுகிறார். தாம், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்துப் பெருமைப்படுவதாகவும், இந்த வகையில் அதிர்ஷ்டக்காரன் என்றும், அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்
         
        • கருத்துக்கள உறவுகள்
        24 minutes ago, nunavilan said:
         
        * கடந்த 1945ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி இவர் பிறந்தார். 1959ம் ஆண்டு, தமது 15 வயதில், முதல் திருமணம் செய்தவர், 2004 ல் தமது 60வது வயதுடன் மணம் முடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

        Ãhnliches Foto  Ãhnliches Foto

        இவர் 2004´ம் ஆண்டுடன்... திருமணம் செய்வதை நிறுத்தி விட்டார் என்று  சொன்னாலும்...
        பிள்ளை பெறுவதை நிறுத்தவில்லை என்பதால்... இவருக்கு உடனடியாக கட்டாய   "குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்"  செய்ய...  

        ஆளை  ஆஸ்பத்திரிக்கு  தூக்கிக் கொண்டு  போக.... அம்புலன்ஸ்  ஒன்று அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.  

        Edited by தமிழ் சிறி

        • கருத்துக்கள உறவுகள்

        அந்தாளின் பிள்ளைகள்  குடுத்து வைத்தவர்கள்  புலம்பெயர் தேசத்தில் மச்சானும் ,மருமகனும் ,உறவுகள் எல்லாம் முகப்பு புத்தகத்தில் தான் வளருகினம் மூன்று வருடங்களுக்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் வைபவங்களின் புண்ணியத்தால் நேரில் காண்பது பின்பு அடுத்த ஐந்து வருடங்களுக்கு அஞ்சாதவாசம் உறவுமுறை என்றால் என்ன என்று தெரியாமல் வாழுகின்றனர் .

        • கருத்துக்கள உறவுகள்
        2 minutes ago, பெருமாள் said:

        நிஜமானது :90_wave:

        • கருத்துக்கள உறவுகள்
        3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

        நிஜமானது :90_wave:

        நாங்கள் அனுபவித்ததை இங்குள்ளவர்களுக்கு கதையா சொல்ல வேண்டி உள்ளது  கெலிகப்டர் அடிக்கும் பொம்மர் அடிக்கும் இடையில் சொந்தம்கள் என்ற அரவணைப்பு பாதுகாத்தது. இங்குள்ள  மருமக்களை பொறுத்தவரை பிரான்சில் இருக்கும் தங்களது  மைத்துனர் கூட்டம் xbox ஒன் லைனில் விளையாட இறைவனால் படைக்கப்பட்ட அடுத்த காங்ஸ்  குரூப் அவ்வளவே .

        • கருத்துக்கள உறவுகள்
        9 minutes ago, பெருமாள் said:

        வெளிநாட்டில் வாழும் அடுத்த சந்ததியினருக்கு இலங்கையும் மறந்து போகும் சொந்தங்களும் குறைந்து போகும் 

        • கருத்துக்கள உறவுகள்
        6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

        வெளிநாட்டில் வாழும் அடுத்த சந்ததியினருக்கு இலங்கையும் மறந்து போகும் சொந்தங்களும் குறைந்து போகும் 

        சொந்தம் என்பதே இருக்காது  இங்கு பிள்ளைகள் தமிழ் மறந்து  ஆங்கிலத்தில் பேச பெருமையாக பார்க்கும் பெற்றோர்களுக்கு உங்களுக்கு 60 வயதிலே முதியோர் இல்லம் தான் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் பிள்ளைகள் வரமாட்டினம் வாழ்த்து சொல்லி  காட் தான் வரும் சிலவேளை அதுகூட மெயிலில் தான் வரும்  என்பன் பிள்ளைகளின் சந்தோசம் எங்களுக்கு முக்கியம் என்பினம் ஆனால் யதார்த்தம் பயங்கரமாய் சுடும் .

        • கருத்துக்கள உறவுகள்
        Just now, பெருமாள் said:

        ம்ம் தற்போது வெள்ளைகள் தமிழ் பேச, பாட பிரமிப்பா பார்க்கிறார்கள் ஆனால் எங்கள் பிள்ளைகள் தமிழ் பேச மாட்டார்கள் புரியும் பேச வராது என்று பஞ்சர் போடுகிறார்கள் வாய்க்கு 

        நல்லூருக்கு  வந்த வெள்ளைகள் சேலை கட்டவும் , வேட்டி கட்டவும் பிரமிப்பா போனதென்றால் பாருங்கோவன் 

        • கருத்துக்கள உறவுகள்
        11 hours ago, பெருமாள் said:

        அந்தாளின் பிள்ளைகள்  குடுத்து வைத்தவர்கள்  புலம்பெயர் தேசத்தில் மச்சானும் ,மருமகனும் ,உறவுகள் எல்லாம் முகப்பு புத்தகத்தில் தான் வளருகினம் மூன்று வருடங்களுக்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் வைபவங்களின் புண்ணியத்தால் நேரில் காண்பது பின்பு அடுத்த ஐந்து வருடங்களுக்கு அஞ்சாதவாசம் உறவுமுறை என்றால் என்ன என்று தெரியாமல் வாழுகின்றனர் .

        என்னைப் பொறுத்த வரை  ஊரில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்... மட்டக்கிளப்பில்  எனக்குத் தெரிந்தவர்கள்,படித்தவர்களது ஞாபகம் அண்மையில் வந்து, தேடிய போது  பலர் அங்கேயே நல்ல வேலையில் இருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது {அதே நேரத்தில் சிறிது பொறாமையும் வந்தது.)...அவர்களை நினைக்க பெருமையாகவும் இருக்குது 

        நானும்  ஓரளவுக்கு தனும் படித்திருந்தால் அங்கே ஒரு நல்ல வேலையில் இருந்து கொண்டு சந்தோசமாய் இருந்திருக்கலாம்  😟
         
        • கருத்துக்கள உறவுகள்
        59 minutes ago, ரதி said:

        நானும்  ஓரளவுக்கு தனும் படித்திருந்தால் அங்கே ஒரு நல்ல வேலையில் இருந்து கொண்டு சந்தோசமாய் இருந்திருக்கலாம்  😟
         
        இப்பவும் போலாம் தானே, என்ன பிரச்சணை. அம்மானோட அரசியல் செல்வாக்கில வேலை இலகுவா எடுக்கலாம் தானே. :grin: 

        • கருத்துக்கள உறவுகள்
        10 hours ago, Nathamuni said:

        இப்பவும் போலாம் தானே, என்ன பிரச்சணை. அம்மானோட அரசியல் செல்வாக்கில வேலை இலகுவா எடுக்கலாம் தானே. :grin: 

        சும்மா இருக்குற சங்கை ஏன் ஊதிக்கெடுக்கிறியள் :)

        11 hours ago, ரதி said:

        என்னைப் பொறுத்த வரை  ஊரில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்... மட்டக்கிளப்பில்  எனக்குத் தெரிந்தவர்கள்,படித்தவர்களது ஞாபகம் அண்மையில் வந்து, தேடிய போது  பலர் அங்கேயே நல்ல வேலையில் இருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது {அதே நேரத்தில் சிறிது பொறாமையும் வந்தது.)...அவர்களை நினைக்க பெருமையாகவும் இருக்குது 

        நானும்  ஓரளவுக்கு தனும் படித்திருந்தால் அங்கே ஒரு நல்ல வேலையில் இருந்து கொண்டு சந்தோசமாய் இருந்திருக்கலாம்  😟
         
        இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகல அரசியல் செல்வாக்கு இருந்தால் நல்ல வேலை எடுக்கலாம் :27_sunglasses:

        • கருத்துக்கள உறவுகள்
        On 12/10/2018 at 7:10 AM, தமிழ் சிறி said:

        Ãhnliches Foto  Ãhnliches Foto

        இவர் 2004´ம் ஆண்டுடன்... திருமணம் செய்வதை நிறுத்தி விட்டார் என்று  சொன்னாலும்...
        பிள்ளை பெறுவதை நிறுத்தவில்லை என்பதால்... இவருக்கு உடனடியாக கட்டாய   "குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்"  செய்ய...  

        ஆளை  ஆஸ்பத்திரிக்கு  தூக்கிக் கொண்டு  போக.... அம்புலன்ஸ்  ஒன்று அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.  

        Image result for vadivelu images

        அவருக்கு ஆபரேஷன் செய்தால் மட்டும் பிரச்சினை எப்படி கட்டுப்படும்.  இல்ல .....செயற்கை முறையில் பெத்துகொண்டு போவார்களே.......!  🙂

        • கருத்துக்கள உறவுகள்
        13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

        சும்மா இருக்குற சங்கை ஏன் ஊதிக்கெடுக்கிறியள் :)

        இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகல அரசியல் செல்வாக்கு இருந்தால் நல்ல வேலை எடுக்கலாம் :27_sunglasses:

        முதல் கருத்திற்கும்,இரண்டாவது கருத்திற்கும் வித்தியாசம் உள்ளதே முனி...என்னை வரச் சொல்றிங்களா அல்லது வேண்டாம் என்கிறீர்களா?

        • கருத்துக்கள உறவுகள்
        10 hours ago, ரதி said:

        முதல் கருத்திற்கும்,இரண்டாவது கருத்திற்கும் வித்தியாசம் உள்ளதே முனி...என்னை வரச் சொல்றிங்களா அல்லது வேண்டாம் என்கிறீர்களா?

        முதல்கருத்து நாதமுனிக்கு எழுதியது 

        இரண்டாவதுதான் உங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருந்தால் நல்ல வேலை எடுக்கலாம் இலங்கையில் வாங்களன் :unsure:

        • கருத்துக்கள உறுப்பினர்கள்
        On 12/10/2018 at 6:46 AM, nunavilan said:
        39 மனைவிகளுடன் ஒருவர், ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா, நமது இந்தியாவில் வாழும் இந்த விசித்திரமான மனிதர்.

        ஐயாவின்ரை முக்கிய தொழில் என்ன? ஐ மீன் வருமானம் எப்பிடி? எங்காலை? tw_glasses:

        • கருத்துக்கள உறவுகள்
        11 hours ago, குமாரசாமி said:

        ஐயாவின்ரை முக்கிய தொழில் என்ன? ஐ மீன் வருமானம் எப்பிடி? எங்காலை? tw_glasses:

        On 12/10/2018 at 5:46 AM, nunavilan said:

        * தேவையான உணவுகளை தாங்களாகவே விளைவித்து கொள்ளும் ஜியோனா குடும்பத்தினர், தனியாக பள்ளி ஒன்றையும் நடத்தி வருகின்றனர். பெண்கள் வீட்டு வேலைகளிலும், ஆண்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, குடிசை தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

        Archived

        This topic is now archived and is closed to further replies.

        Important Information

        By using this site, you agree to our Terms of Use.

        Configure browser push notifications

        Chrome (Android)
        1. Tap the lock icon next to the address bar.
        2. Tap Permissions → Notifications.
        3. Adjust your preference.
        Chrome (Desktop)
        1. Click the padlock icon in the address bar.
        2. Select Site settings.
        3. Find Notifications and adjust your preference.