Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவனல்ல பகுதியில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவனல்ல பகுதியில் பெளத்த விகாரையில் புத்தர் சிலைககு சேதம் விளைவித்தவர் கைது.

சேதம் விளைவித்த இருவர், கிராமத்தவரால் திரத்தப்பட்ட போது, ஒருவர் தப்பிவிட மொகமட்ஆபீர் ( 30) எனும் இளைஞன் பிடிபட்டு போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் நிறுத்தி, ரிமான்ட் செய்யப்பட்ட நிலையில், சிங்கள, இஸ்லாமிய மக்களிடையே வன்முறையை உருவாக்கும் நோக்கம் இருந்ததா என போலீஸ் விசாரணை நடக்கின்றது.

மாவனல்ல நீயூஸ் வாசித்தால் இப்படி ஆகும் தானே.

http://www.dailymirror.lk/article/Suspect-arrested-for-damaging-Buddha-statue-160308.html

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் அமைதியாக இருபகுதியும் இருப்பது அதிசயம் .நான் நினைக்கிறன் சிங்களவர்கள் பயந்து விட்டார்கள்  கொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழை தூக்கிஎறிந்து சிங்களம் படிப்பம் என்று கண்டி முஸ்லிம்கள் வெளிக்கிட்டவுடன்  சிங்களவர்கள் அடன்கியிட்டான்கள் போல் உள்ளது . நல்ல விடயம் தானே .😏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது நபரும் கைதாகியுள்ள நிலையில், மன்னார் உள்பட வடக்கு கிழக்கில் ஒருங்கிணைந்த ரீதியில் இந்து கோவில்களை இலக்கு வைத்து தாக்குதலுக்குள்ளாக்கியத்துக்கும் , இப்போது பௌத்த விகாரைகள் தாக்குதலுக்குள்ளாவதற்க்கும் ஏதாவது தொடர்பு உண்டா என விசாரிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மாவனல்லை சம்பவம், அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன – தேசிய ஸுறா சபை

1. மாவனல்லை பிரதேசத்தில் நடந்துள்ள சம்வங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன.
 
2.இப்படியான சந்தர்ப்பங்களில் அனைவரும் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
 
3.முஸ்லிம் சமூகத்தையும், பெரும்பான்மையினரையும் மோதவிட பெரும்பான்மை சமூத்தைச் சேர்ந்தவர்களே இதனைச் செய்திருக்க வாய்ப்புண்டு.
 
4.முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவராவது இதில் ஈடுபட்டதாக விசாரணைகளின் பின்னர் தெரிய வந்தால் அவர்கள் கடுமையான தண்டணைக்குள்ளாக்ப்பட வேண்டும்.
 
5.முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த எவராவது இந்த பாதகத்தில் ஈடுபட்டதாகத் தெரிய வந்தால் அதனை பொதுமைப்படுத்தி முழு முஸ்லிம் சமூகத்தினதும் தவறாகப் பார்க்க வேண்டாம் என பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு நாம் கூற வேண்டும். திகனைச் சம்பவம் பரவலாக்கப்பட்டதும் இப்படித் தான்
 
6.சமூக வலைத்தங்களில் துவேஷ உணர்வை சந்தர்ப்பவாதிகள் வேகமாகத் தூண்டி வருவது நாட்டுக்கே ஆபத்தாக முடியும். நாடு ஏற்கனவே பொருளாதார ரரீதீயில் மிகவுமே பின்தங்கிய நிலையில் இருப்பதால் மற்றொரு இனக்கலவரம் ஏற்படுமாயின் நிலை மோசமாகி அனைத்து இனங்களையும் அது பாதிக்கும்.
 
7. இப்படியான இக்கட்டான சூழ்நிலைகளில் மதத் தலைவர்கள் கல்விமான்கள் ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் மற்றும் பொறுப்புக்களை வகிப்பவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.
 
8.அல்லாஹ்வின் பால் மீண்டு உதவியும் பாதுகாப்பும் தேடுவோம்.
 
9.பிற மத தலைவர்கள் உயர் அதிகாரிகள் போன்றோருடன் மிக அவசரமாக கலந்துரையாடி தேவையான ஏற்பாடுகளைச் செய்வோம்.
 
9.குறித்த குற்றச் செயலுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தமாகக் கூற வேண்டும்.
 
10. இளைஞர்கள் மிகச் சரியாக வழிநடாத்தப்படாததனால் ஏற்பட்ட விளைவு தான் இது என்ற பாடத்தைப் படித்து இளைஞர்கள் விடயமாக இனிமேலாவது கவனமெடுப்போம்.
 
11.சமுக வலைத் தளங்களில் எவராவது முஸ்லிம்ககளைத் தூஷித்தால் அதே பாணியில் நாமும் தூஷிக்காமல் அறிவு பூர்வமாகவும் நிதானமிழக்காமலும் உரையாடுவோம்.
 
அல்லாஹ் அனைவரையும்  நாட்டையும் பாதுகாப்பானாக!
 
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல்
-NSC Media Unit-  
2 hours ago, colomban said:

இளைஞர்கள் மிகச் சரியாக வழிநடாத்தப்படாததனால் ஏற்பட்ட விளைவு தான் இது என்ற பாடத்தைப் படித்து இளைஞர்கள் விடயமாக இனிமேலாவது கவனமெடுப்போம்.

 

16 hours ago, Nathamuni said:

மொகமட்ஆபீர் ( 30) எனும் இளைஞன் பிடிபட்டு போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

நிறுவனமயப்படுத்தப்பட்ட முசுலீம் மதகுருமார் எங்க தான் இளைஞர்களை மட்டுமல்ல மக்களையும் சரியா வழி நடத்தியிருக்கிறார்கள். நடத்தியிருந்தால் ISIS பயங்கரவாதம் உலகின் பலபகுதிகளில் பரவியிருக்காதே. முசுலீம் மதகுருமார் மதவெறி பீடித்தவர்களாக இருக்கேக்க ஒருக்காலும் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியாது.

ஏனைய மதத்தவர்களின் சிலைகளை உடைப்பது முஸ்லீம்களின் பள்ளிவாசல்களில் திட்டமிட்ட பயங்கரவாதம். கிழக்கு மாகாணம், வவுனியா, அண்மையில் கூட மன்னாரில் இயேசு சிலைகள் உடைப்பு எல்லாத்துக்கும் காரணம் யார் என்டு இப்ப விளங்குது.  

  • கருத்துக்கள உறவுகள்

மாவனல்லை சம்பவம் தொடர்பில் ‘ மவ்பிம’ செய்தி..

49068202_2043595452393443_9153820478924652544_o.jpg?_nc_cat=105&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=20ff65db5cb35ea9cd1aea5026e817a3&oe=5C9A4CA2

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு 
அளித்த வாக்குமூலம் தொடர்பில் பிரபல சிங்கள நாழிதல் மவ்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
 
தான் அல் குர்ஆனை படித்ததாகவும் அதில் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் இல்லை என கூறப்பட்டுள்ளதாகவும் அதனால் இவ்வாறு புத்தர் சிலைகளை சேதப்படுத்தியதாக   கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் பிரபல சிங்கள நாழிதல் மவ்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
 
சந்தேக நபர்களில் ஒருவரின் இல்லத்தில் இருந்து சிலைகளை உடைக்க பயன்படுத்திய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த சம்பவம் தொடர்பில் 7 ( முஸ்லிம்) வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை பொலிஸார் தேடிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

மாவனல்லை புத்தர் சிலைகள் உடைப்பும், ஆதாரமுள்ள மற்றும் ஆதாரமற்ற செய்திகளும்?

 

ISIS.png
மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகள் தொடராக உடைக்கப்பட்ட விடயம் தொடர்பாக முஸ்லிம் இளைஞன் ஒருவன் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த விடயம் தற்பொழுது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் ஓரளவு வெளிவந்த பொழுதும் அவற்றை அந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கூட்டம் ஒன்றுடன் தொடர்புபடுத்தி இருந்த காரணத்தால் நான் அது குறித்து அக்கறை எடுத்திருக்கவில்லை. அதைவிடவும் முக்கிய காரணம், முஸ்லிம்கள் இன்றைய சூழ்நிலையில் அப்படியான ஒரு செயலை செய்ய மாட்டார்கள் என்கின்ற எனது சமூகம் சார்ந்த நம்பிக்கை ஆகும்.



இரண்டு நாட்களுக்கு முன்னர் மாவனல்லையை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவனை சிங்கள்கவர்கள் பிடித்து அடித்து பொலிசில் ஒப்படைத்து இருந்த பொழுதும் கூட நான் அது குறித்து எதுவுமே எழுத முயலவில்லை. எனக்குக் தகவல் சொன்னவர்கள் அந்த இளைஞன் ஒரு நல்ல இளைஞன் என்றும், தனது காதலியை சந்திக்க சென்றுவிட்டு திரும்பிக்கொண்டு இருந்த பொழுது தவறுதலாக பிடிபட்டு விட்டதாகவே கூறினார்கள். அதல்லாமல் முஸ்லிம் இளைஞர்கள் மாவனல்லை போன்ற ஒரு ஊரில் ‘இஸ்லாமிய மத அடிப்படை’ காரணங்களை முன்வைத்து புத்தர் சிலைகளை உடைக்கின்ற அளவிற்கு செல்ல மாட்டார்கள் என்றும் நான் உறுதியாக நம்பியதன் காரணமாக இளைஞன் கைது செய்யப்பட பின்னரும் கூட ஒன்றுமே எழுதவில்லை, எழுதுகின்ற தேவையும் எனக்கு இருக்கவில்லை.
 
 
 
 எனது விமர்சனங்கள் பொதுவாக முஸ்லிம்களுக்கோ, முஸ்லிம் சமூகத்திற்கோ எதிரானவை அல்ல, அத்துடன் நானும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு அங்கமாகவே இருக்கின்றேன். எனது நண்பர்கள், உறவினர்கள், தொடர்புகள், கொடுக்கல் வாங்கல்கள் என்று தனிப்பட்ட வாழ்வு சார்ந்த விடயங்களில் 90% அளவானவை முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே உள்ளன. முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்கி நானே ஏமாந்த பொழுதுகளில் கூட “முஸ்லிம்கள் வியாபாரத்தில் ஏமாற்றுகின்றார்கள்” என்று பொதுப்படையாக்கி நான் ஒருபொழுதுமே எழுதியதில்லை. நேற்று மாலை என்னோடு நோலிமிட் குறித்து பேசிய தோழிக்குக் கூட சொன்னது ‘அது அவர்களின் வியாபரத் திறமை” என்றுதான். பேஸ்புக்கில் இஸ்லாம் குறித்த எனது விமர்சனங்களை வாசிக்க விருப்பமில்லாமல் என்னை Block பண்ணியுள்ள பலர் கூட இன்றும் எனது நல்ல நண்பர்களாக உள்ளனர். எனது விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், அதிருப்திகள், கேள்விகள் அனைத்துமே பாலைவனத்தில் இருந்து வந்த 7 ஆம் நூற்றாண்டு மதத்தை மையப்படுத்தியவையே தவிர முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தியவை அல்ல, ஆக இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தை ஆபத்தில் தள்ளக்கூடிய கருத்துக்களை வலிந்து வெளிப்படுத்தும் நிலையில் நான் இல்லை, அத்தகைய தேவையும் எனக்குக் கிடையாது. ஆகவே மாவனல்லையில் சிலைகளை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டதை வைத்து எதையும் எழுதவேண்டிய தேவை இன்று பிற்பகல் வரை எனக்கிருக்கவில்லை.



 இளைஞன் கைதுசெய்யப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில் நடந்த சம்பவங்கள், பின்னணியில் இருந்தவர்கள் பற்றிய விபரங்கள், பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குமூலங்கள், கைது செய்ப்பட்டுள்ளவர்களின் விபரங்கள், தேடப்படுபவர்கள் யார், தலைமறைவாகி உள்ளவர்கள் யார் போன்ற தகவல்கள், விடயங்கள் ஓரளவிற்கு உறுதியாக தெரியவந்த பின்னரே சம்பவம் குறித்த சிறு நிலைத்தகவல் ஒன்றை பதிவிட்டேன். மாவனல்லையை சேர்ந்த எனது நண்பர் முஹம்மது ***** என்பவரோ “
ஆதாரம் இன்றி எதையும் பதிவிட வேண்டாம்.  என்று எனக்கு மறுப்பும், அறிவுரையும் தெரிவித்து இருக்கின்றார். பயங்கரவாதத்துடன் குரானை நான் தொடர்பு படுத்தி இருப்பதை நண்பர் விரும்பியுருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன்.
 
 
 
இப்பொழுது விடயத்திற்கு வருவோம். நண்பர் முஹம்மது ***** அவர்களும் நானும் மாதம்பை இஸ்லாஹியா (பழைய) வளாகத்தில் நடைபெற்ற இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் ஐந்து நாள் வதிவிடப் பயிற்சி நெறியில் G.C.E. (O/L) பரிட்சைக்குப் பின்னர் பங்குபற்றியவர்கள். எமக்கான பயிற்சி நெறியில் கலிமாவிற்கான விளக்கத்தில் ‘இலாஹை’ மூன்றாக பிரித்து சொன்ன விளக்கம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ‘இஸ்லாமிய ஆட்சியை இலங்கையில் கொண்டுவருவது, இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை (இந்தியாவில் முகலாயர்கள் ஆட்சி உதாரணம் காட்டப்பட்டது), அல்லாஹ்வின் சட்டம் அல்லாத சட்டங்களின் கீழ் வாழ்வது பாவம், அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநாட்டும் இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர வேண்டும், கிலாபத்தை கொண்டுவர வேண்டும்’ ஆகிய போதனைகள் பல தடவைகள் இஸ்லாமிய மூலாதார விளக்கங்களுடன் உறுதியாக போதிக்கப்பட்டன. அத்தகைய போதனைகளை வழங்கியவர்களில் ஜமாத்தே இஸ்லாமியின் அப்போதைய தலைவர் ஹஜ்ஜுல் அக்பரும் ஒருவர். நண்பர் முஹம்மது **** இற்கு இவையெல்லாம் மறந்து இருக்காது என்று நம்புகின்றேன். இந்த முறை G.C.E (O/L) பரீட்சை எழுதிய மாணவர்களையும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் வதிவிடப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளன என்கின்ற கவலையான தகவலையும் இங்கே பதிவு செய்துகொள்ள வேண்டியுள்ளது. தற்பொழுது மாவனல்லையில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் தலைமறைவாகி இருப்பவர்கள் அனைவருமே ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் சகோதரர் மெளலவி இப்ராஹீம் அவர்களை சார்ந்தவர்கள் என்பதை நண்பர் நிச்சயம் அறிந்தே இருக்க வேண்டும்.
 
 
 
குர்ஆன் வகுப்பு மூலமாகவே தீவிரவாதமும், பயங்கரவாதமும் அந்த இளைஞர்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது. நான் ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்திற்குள் உள்ளீர்க்கப்பட்டதும் அந்த நாட்களில் மாவனல்லை வளவ்வத்தையில் வியாழன் மாலை நடைபெற்று வந்த குரான் வகுப்புகள் மூலமே. சிலைகளை உடைத்த குறித்த குழுவை வழி நடத்தியதில் மெளலவி இப்ராஹீம் அவர்களின் இரண்டு மகன்களும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். சிலைகளை உடைக்க இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று உடைத்துக்கொண்டு இருக்கும் பொழுது சிங்களவர்கள் துரத்தவே அவர்கள் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடி இருக்கின்றார்கள். அந்த இருவரில் ஒருவனை ஊரார் மடக்கி பிடித்து இருக்கின்றார்கள், விபத்து ஒன்றிற்காக காலில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு பிளேட் பொருத்தப்பட்டு இருந்த காரணத்தால் தான் அந்த இளைஞனால் வேகமாக ஓடித் தப்ப முடியாமல் போனது. பிடிபடாமல் ஓடித் தப்பிய இளைஞன் மெளலவி இப்ராஹீம் அவர்களின் மகன் என்று பிடிபட்ட இளைஞன் பொலிசாருக்கு வாக்குமூலம் வழங்கி இருக்கின்றான். தற்பொழுது இப்ராஹீம் மெளலவியின் இரண்டு மகன்கள் உட்பட அவரின் குடும்பமே தலைமறைவாகிவிட்டது.



நண்பர் முஹம்மது **** அவர்களிடமும், அவர்களை போன்ற சிந்தனையில் இருக்கின்ற ஏனைய முஸ்லிம்களிடமும் கேட்க விரும்புவது, குரானும், இஸ்லாமும் தீவிரவாதத்தை போதிக்கின்றனவா இல்லையா? நிச்சயமாகவே போதிக்கின்றன. தற்பொழுது நடைபெற்றுள்ள விடயங்களை மூடி மறைப்பதால் மேலும் மேலும் ஆபத்துக்கள்தான் ஏற்படுமே தவிர நன்மைகள் ஏற்படப் போவதில்லை. இஸ்லாம் என்ற பெயரில் ஏமாறாமல், மனிதர்களாக வாழ்வதற்கான வழியை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகு உட்பட அனைத்தையும் படைத்த ஒரு ஏக இறைவனிடம் இருந்து மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்காக வந்த வழிகாட்டல் நெறியாக இஸ்லாம் உண்மையிலேயே இருக்கும் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் அதனை பின்பற்றித்தான் ஆக வேண்டும், அதனால் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றை இறைவனுக்காக எதிர்கொண்டு வாழ்ந்து சுவர்க்கம் செல்வதுதான் சரியானது. அந்த நம்பிக்கையில்தான் நானும் இஸ்லாத்தை பின்பற்றி வந்தேன், இன்று வரையும் பலர் பின்பற்றி வருகின்றார்கள். ஆனால் இஸ்லாம் உண்மையிலேயே இந்த உலகு உட்பட அனைத்தையும் படைத்த ஒரு ஏக இறைவனிடம் இருந்து மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்காக வந்த வழிகாட்டல் நெறியாக அல்லாமல், 7 ஆம் நூற்றாண்டு அரபுப் பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு மிகத் தந்திரமான மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருந்தால், அந்த பொய்யை இன்றைக்கும் நாம் பின்பற்றி நமது வாழ்வை நாசம் செய்துகொள்ள வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டும்.



“ஆதாரம் இன்றி எதையும் பதிவிட வேண்டாம்” என்று ஆதாரம் குறித்து கரிசனை கொள்கின்ற நண்பரும், அவரை போன்ற ஏனைய முஸ்லிம்களும், 
1400 வருடங்களுக்கு முன்னர் பாலைவனத்தில் ஆடோட்டி ஒருவருடன் கடவுள் பேசினார், முழு உலகிற்குமான வழிகாட்டலை அவரிடம் வழங்கினார், அந்த பாலைவன மனிதர் சிறகு வைத்த கழுதையில் ஏறி ஒரே இரவில் விண்வெளிக்கு சென்று கடவுளை சந்தித்துவிட்டு திரும்பினார், அரேபிய பாலைவனத்தில் இருக்கும் ஒரு கறுப்புப் பெட்டியை ஆண்கள் உள்ளாடை கூட போடாமல் சுற்றிச் சுற்றி ஓடிவிட்டு தலையை மொட்டை அடித்தால் மதுவாறு ஓடும் கன்னிப் பெண்கள் நிறைந்த சுவர்க்கம் கிடைக்கும் போன்ற நம்பிக்கைகளுக்குமான ஆதாரங்கள் குறித்து ஆராய்ந்தால் அவர்களிற்கும் இந்த உலகிற்கும் எவ்வளவு நல்லது?



ISIS போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் குறித்து பழக்க தோஷத்தில் அமெரிக்கவிற்கும், இஸ்ரவேலிற்கும் குற்றம் சொல்லிக்கொண்டு இருந்திருக்காமல் குரானை, இஸ்லாத்தை ஆராய்ந்து இருந்திருந்தால், முஹம்மது நபி என்ன செய்தார், என்ன சொன்னார், குரான் என்ன சொல்கின்றது, ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன என்பவற்றை புரிந்துகொள்ள முயன்றிருந்தால், இஸ்லாம் எவ்வளவு மோசமானது என்பதை அறிந்து கொண்டிருக்கலாம்.
 
 
madawa.png

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்திற்கு ஜமாத்தே இஸ்லாமியின் அங்கமாக இருந்த இப்ராஹீம் மெளலவியை சார்ந்து செயற்படும் ISIS போன்ற சிந்தனைப் போக்கைக் கொண்டவர்களே காரணம் ஆகும். மவ்பிம வெளியிட்டுள்ள செய்தியை மடவளை நியூஸ் இணையம்தமிழில் வெளியிட்டு இருப்பதை மேலதிக தகவலுக்காக இணைத்துக் கொள்கின்றேன்.


இஸ்லாம் என்பது உண்மையான இறைவேதமாக இருந்தால், உலகத்தில் எங்கு இருந்தாலும் நாம் அதனை முழுமையாகப் பின்பற்றி அதற்காக வாழ்வதே மிகச் சரியாகும், எனினும் இஸ்லாம் உண்மையான இறைவேதமாக இல்லாவிட்டால், அதனை பின்பற்றி வாழ்வதன் மூலம் நமது வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும், உலக அமைதியையும் நாசம் செய்வது மாபெரும் தவறு ஆகும். இஸ்லாத்தை நடுநிலையுடன் ஆராயும் பொழுது அது உண்மையான இறைவேதமாக இருக்கவே முடியாது என்பதை பல இடங்களில் உறுதியாக கண்டுகொள்ளலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 12/26/2018 at 8:24 PM, பெருமாள் said:

இன்னும் அமைதியாக இருபகுதியும் இருப்பது அதிசயம் .நான் நினைக்கிறன் சிங்களவர்கள் பயந்து விட்டார்கள்  கொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழை தூக்கிஎறிந்து சிங்களம் படிப்பம் என்று கண்டி முஸ்லிம்கள் வெளிக்கிட்டவுடன்  சிங்களவர்கள் அடன்கியிட்டான்கள் போல் உள்ளது . நல்ல விடயம் தானே .😏

புத்தரின் படம் உள்ள...  உடுப்புக்களை  போட்ட, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை... 
கைது செய்து, சிறையில் அடைத்த...  ஸ்ரீலங்கா நாட்டில்,  இன்று... புத்தருக்கே...  பாதுகாப்பில்லை.  😂

"எவன்... எதை, விதைத்தானோ.... அதைத்தான்... அறுவடை செய்ய வேண்டும்."  👈

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2018 at 3:20 AM, Nathamuni said:

இரண்டாவது நபரும் கைதாகியுள்ள நிலையில், மன்னார் உள்பட வடக்கு கிழக்கில் ஒருங்கிணைந்த ரீதியில் இந்து கோவில்களை இலக்கு வைத்து தாக்குதலுக்குள்ளாக்கியத்துக்கும் , இப்போது பௌத்த விகாரைகள் தாக்குதலுக்குள்ளாவதற்க்கும் ஏதாவது தொடர்பு உண்டா என விசாரிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதற்கு.... வாதாட,  வக்கீல் படிப்பு படித்த...  சம்பந்தர், சுமந்திரன்  வருவார்கள்  என நான் எதிர் பார்க்கவில்லை... நாதமுனி.
ஏனென்றால்,  அவர்கள்...  எதிர்க் கட்சி  தலைவர் பதவி பறி போன... ஏக்கத்தில் இருக்கிறார்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

எதிர்க் கட்சி  தலைவர் பதவி பறி போன... ஏக்கத்தில் இருக்கிறார்கள். :grin:

பறி போட்டுதோ?இன்னமும் இழுபறியில் என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பறி போட்டுதோ?இன்னமும் இழுபறியில் என்று நினைத்தேன்.

40766771_2191488597591654_1465753178552139776_n.jpg?_nc_cat=0&oh=3c7fdfc431b663ad92ef3f9abc939820&oe=5C2A735B

 

Image may contain: 1 person, dancing and text

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 1 person
சம்பந்தர்... இவ்வளவு  வருடங்களும்  பாராளுமன்றத்தில்... இருந்து, கொட்டாவி  விட்ட மாதிரி...
இனி வரும்.... 2019´ம் ஆண்டு இருக்காது.

"குதிரை.. ஓடிய பின்,  லாயத்தை, பூட்டி  பயன் இல்லை."
அவர்... வடிவாக, வீட்டில், இருந்து...   ஒய்வு எடுக்க வேண்டும் என்பதே.. எங்கள் விருப்பம்.

அவருக்கு... இன்னும்,  பாராளுமன்றம் தான்... போய் ஓய்வு எடுக்க வேண்டும் என்று, எங்களுக்கு ஆசை இல்லை.

எனக்கு ஒரு, கவலை என்ன வென்றால்....  சம்பந்தர் ஐயாவின்.
புது வருசத்துக்கு தீர்வு வரும்,  பொங்கலுக்கு, தீர்வு வரும்,  தீபாவளிக்கு தீர்வு வரும்.... என்ற,

வெத்து  வேட்டு.... அறிக்கைகளை, வாசித்து...  புளகாங்கிதம்  அடையும்....   பாக்கியம்  இனி கிடைக்காது.  :grin:

On 12/29/2018 at 2:10 AM, தமிழ் சிறி said:

வெத்து  வேட்டு.... அறிக்கைகளை, வாசித்து...  புளகாங்கிதம்  அடையும்....   பாக்கியம்  இனி கிடைக்காது.  :grin:

சம்பந்தன் 50 வருஷமா செய்த வெத்து  வேட்டு அரசியல் தொபுக்கடீனு ஓய்வுக்கு வராது. :grin::grin::grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.