Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் துடுப்பாட்டப்போட்டியில் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்கலாமா?. நாங்கள் சிறிலங்கனா?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்து ..உங்கடை கருத்தையும் சொன்னால் நல்லா இருக்கும் :lol:

என்னுடைய கருத்தைத்தானே புகைப்படமாக இணைத்துள்ளேன்

  • Replies 123
  • Views 16.3k
  • Created
  • Last Reply

புலிகளின் குரலில் 17.04.07 ஒலிபரப்பாகிய செய்திவீச்சு - ~உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் நடைபெற்ற ஒரு கவனயீர்ப்புப் போராட்டம்

http://www.tamilnaatham.com/audio/2007/apr...nf20070417.smil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Front-Final-l.jpg

தமிழ் மண்ணுக்காக தன் செயற்பாட்டைக் காட்டிய வீர இளைஞன் R. மயுரனின் கலைத் திறமைகளைக் காண

www.littleempire.com

pulixy6.jpg

உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி நிகழ்வின் போது, தமிழீழ தேசியக் கொடியைக் காண்பித்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய மயூரன், தமிழ்நாதம் இணையத்தளத்துக்கு இன்று புதன்கிழமை (18.04.07) வழங்கிய நேர்காணல்.

தமிழ்நாதம்

Edited by Netfriend

இவரை கரிபியனாக்கிய நெடுக்கு கோவணத்தை உருவி தலையில் கட்டிக்கொண்டிருகிறாரா தற்போது

தமிழர் பிரச்சினையை எடுத்துச் சொல்லவே அனைத்துலக துடுப்பாட்டப் போட்டி மைதானத்தில் இறங்கினேன்: பரபரப்பை ஏற்படுத்திய கனேடிய இளைஞர் மயூரன்

ஈழத் தமிழர் பிரச்சனையை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடனேயே நான் மைதானத்தில் உள்நுழைந்தேன் என்று அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடி ஏந்தி பரபரப்பை ஏற்படுத்திய கனேடிய இளைஞரான மயூரன் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாதம்' இணையத்தளத்துக்கு மயூரன் அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளதாவது:

தாயக மண்ணிலிருந்து நான்கரை வயதில் கனடிய நாட்டுக்கு நான் வந்தேன்.

பொதுவில் துடுப்பாட்டாப் போட்டிகளில் எனக்கு ஆர்வம் உண்டு. கனடாவில் நான் இருப்பதால் கூடைப்பந்தாட்டம் போன்ற போட்டிகளைத்தான் அதிகம் பார்ப்பதுண்டு. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளை பார்க்கச் சென்றது என்பது எம்முடைய பிரச்சினை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.

இப்போதுதான் முதல் முறையாக துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கச் சென்றேன்.

எங்களுடைய மக்கள் எல்லோருக்கும் எங்கள் நாட்டில் நடைபெறுவது என்ன என்று தெரியும். அனைத்துலக மன்னிப்புச் சபையும் உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியையொட்டி பரப்புரை மேற்கொண்டது. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சியால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆகையால் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பரப்புரைக்கு ஆதரவாகவும் எமது பிரச்சனையை அனைத்துலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கருதி இந்த இளைஞராக இருப்பதால் நேரடி நடவடிக்கையை மேற்கொண்டேன்.

என்னுடைய நண்பர்களுடன் நான் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றேன்.

நாம் மேற்கொண்ட நடவடிக்கையானது முன்னரே திட்டமிட்டதுதான்.

அந்த மைதானத்தில் பல்வேறு நாடுகளின் கொடிகளெல்லாம் இருக்கின்றபோது எங்களுடைய நாட்டினது புலிக்கொடியும் அதாவது தமிழீழத் தேசியக் கொடியைக் கொண்டு போனால் என்ன மாதிரி விளைவை உண்டாக்கும்- பரபரப்பை ஏற்படுத்தும் என்று திட்டமிட்டுத்தான் இதனைச் செய்தோம்.

அவுஸ்திரேலியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான போட்டியைத் தெரிவு செய்யக் காரணம் உண்டு.

சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு உண்டு. சிறிலங்காவின் அமைச்சரான கேகலிய ரம்புக்வெல, அவுஸ்திரேலியாவுக்குச் சென்று எங்கள் மக்களின் செயற்பாடுகளைத் தடுக்கப் பார்க்கிறார். எங்களுடைய போராட்டத்தைத் தடை செய்ய அவர் முயற்சித்து வருகிறார். ஆகையால்தான் தற்போது இந்தப் போட்டியை நாம் தெரிவு செய்தோம்.

எங்களுக்கு மைதானத்தின் எந்தப் பகுதியைத் தெரிவு செய்ய வேண்டும் என்று வெளியிலிருந்து தெரியவில்லை. மைதானத்தின் பகுதியில் நகரக்கூடிய இடங்களும் இருந்தன.

மைதானத்தைச் சுற்றி மிகவும் வலுவான பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால் சரியான நேரத்தையும் சரியான இடத்தையும் நாம் தெரிவு செய்தமையால்தான் எமது திட்டம் வெற்றி பெற்றது.

மைதானத்தில் சிறிலங்கா அணி நிற்க அவுஸ்திரேலிய அணி மட்டையெடுத்து ஆடும்போதுதான் இறங்க வேண்டும் என்று திட்டமிட்டேன். அதன்படி நான் மைதானத்தில் இறங்கி பிட்ச் பகுதிக்குச் செல்ல தீர்மானித்தேன்.

ஆனால் மைதானத்தில் நின்றிருந்த சிறிலங்கா அணியினரோ அச்சத்துடன் இருந்தனர். அந்தப் பாதிப்பைவிட வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு விடயத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கருதினேன். அதற்கேற்ப பார்வையாளர்களும் என்னை உற்சாகப்படுத்தினர். பார்வையாளர்கள் வரிசையில் இலங்கையர்களும் இருந்திருக்கக் கூடும். ஆனால் எந்தப் பகுதியிலிருந்து உற்சாகமளித்தனர் என்பது எனக்குத் தெரியவில்லை.

நான் மைதானத்தில் இறங்கும் வரை திட்டமிட்டதனை சரியாக முடிக்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருந்தேன். மைதானத்தில் இறங்கிய பின்னர் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன்.

சிறிலங்கா அணியினர் அச்சத்துடனும் அவமானப்பட்ட நிலையிலுமாக அவர்கள் முகம் இருந்ததை நான் சரியாகப் பார்த்தேன்.

நான் மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியுடன் இறங்கிய உடனே அங்கிருந்த காவல்துறையினர் என் பின்னால் வந்தனர். அவர்கள் என்னை நோக்கி வந்தபோது அவர்களுக்கு ஒத்துழைப்புத் தரும் விதத்தில் நான் எனது கையை உயர்த்தினேன்.

இதனை நான் விளையாட்டுக்குச் செய்யவில்லை. பரப்புரைக்காகத்தான் செய்கிறேன் என்பதனை அனைத்துலக துடுப்பாட்டச் சபையினரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இடையூறு செய்யவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவர்களோடு ஒத்துழைத்தேன்.

நான் செய்தது ஒரு போராட்ட ரீதியான செயல்தான். விளையாட்டுக்காக பிழையாக நான் செயற்படவில்லை.

நான் மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டபோது, முதலில் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். எங்கள் நாட்டில் இப்படியான பிரச்சினைகள் நடைபெறுகின்றன. அதனை வெளிப்படுத்தவே இத்தகைய செயற்பாடு மேற்கொண்டோம் என்றும் விளக்கம் அளித்தேன்.

மைதானத்திலிருந்த போதுதான் அனைத்துலக துடுப்பாட்டச் சபையினர் விசாரித்தனர்.

எந்த ஒரு பார்வையாளரும் மைதானத்தில் இறங்கக் கூடாது என்பதுதான் அந்த அதிகாரிகளின் சட்டம். என்னிடம் விசாரணை செய்த ஒவ்வொரு உயர் அதிகாரியிடமும் என்னுடைய மன்னிப்பைக் கூறி அத்துடன் எமது அரசியல் பிரச்சினையையும் நான் விளங்கப்படுத்தினேன். எதற்காக இந்தச் செயலை செய்தேன் என்றும் விளக்கினேன்.

மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அங்கிருந்து புலனாய்வுத்துறை தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

முதலில் என்னை குற்றவாளியாகக் கருதித்தான் 40 அல்லது 50 பேர் கொண்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரித்தனர். என் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத்தான் அவர்கள் முயற்சித்தனர்.

ஆனால் ஒவ்வொரு அதிகாரியும் என்னிடம் விசாரித்த போதும் விளக்கம் கூறினேன். அதன் பின்னர் எனது சார்பில் கதைக்கத் தொடங்கினர்.

அதன்பின்னர் அந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். ஏனெனில் இன்னொரு போட்டிக்கு நான் திரும்பவும் போய் இப்படியான ஒரு சம்பவம் நடப்பதை அவர்கள் விரும்பவில்லை. அப்படி நடப்பதன் மூலமாக வெளிநாட்டினருக்கு மேற்கிந்திய தீவுகள் குறித்து பிழையான அபிப்பிராயம் வருமென கருதினர். ஆகையால் அதனை ஏற்று அந்நாட்டிலிருந்து வெளியேற இணங்கினேன்.

மேற்கிந்திய தீவுகள் நாட்டின் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறினேன்.

கனடா நாட்டுக்கு நான் திரும்பியபோதும் இதுவரை எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. விசாரணைகள் வரலாம். அதனை எதிர்கொள்ளவும் நான் தயாராக உள்ளேன்.

ஆனால் கனடா நாட்டினது சட்டத்தை நாம் சரியான முறையில் கையாண்டால் எங்களுக்கு எதுவித பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நான் மைதானத்திற்குச் சென்றேன்.

நான் மேற்கொண்ட நடவடிக்கையானது ஊடகங்களில் படங்களுடன் வெளியானதன் மூலம் எனது நோக்கம் நடந்தேறியிருப்பதால் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன். எமக்கு மட்டுமல்ல தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் என்று கருதுகிறேன்.

நான் மேற்கொண்ட செயற்பாடு சரியானது என்று இளைஞர்கள் பலரும் தொடர்பு கொண்டு தெரிவித்ததோடு தங்களை அழைத்துச் செல்லாதது குறித்து கோபமடைந்தும் உள்ளனர்.

நாம் வெற்றி கிடைக்கும்வரை சிந்திக்க வேண்டும். நாங்கள் பெருந்தொகையில் திரண்டு போராட்டம் நடத்திய போதும் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தகைய புதிய வடிவங்களினூடே தொடர்ச்சியாக எமது செயற்பாடுகளை மேற்கொள்வோம்.

எங்களுடைய தேசியத் தலைவரின் விருப்பத்தின்படி அதாவது எமது தேசியத் தலைவர் அவர்கள் ஒருமுறை, வெளிநாட்டில் இருக்கும் தமிழ் இளைஞர்கள் அடுத்த கட்டப் போராட்டத்துக்கு முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார். நாங்கள் பீனிக்ஸ் பறவை போல் எழும்ப வேண்டும் என்றும் கூறினார்.

அதற்கேற்ப செயற்திட்டங்களையும் வடிவங்களையும் மாற்றி அனைத்து தமிழ் இளைஞர்களும் முன்வந்தால் நம் பிர்சினைக்கு விரைவில் நாம் தீர்வு காண்போம் என்றார் மயூரன்.

http://www.eelampage.com/

ஒருவன் துணிந்து தியாகம் செய்தால் அது தமிழருக்கெல்லாம் சுபதினம். மயூரனின் துணிவிற்குத் தலை வணங்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரலில் 17.04.07 ஒலிபரப்பாகிய செய்திவீச்சு - ~உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் நடைபெற்ற ஒரு கவனயீர்ப்புப் போராட்டம்

http://www.tamilnaatham.com/audio/2007/apr...nf20070417.smil

இதில் தாயகத்தில் புலம் பெயர்ந்த மக்கள் மீது எவ்வளவு மதிப்புடன் இருக்கிறார்கள் என்பது அறியக்கூடியதாக இருக்கிறது. நியூசிலாந்தில், இங்கிலாந்தில் எம்மவர்கள் நடாத்திய இலங்கை அணிக்கு எதிரான கவன ஈர்ப்பு போராட்டத்தினை பெருமையாகச் சொன்னார்கள். மேற்கிந்தியாத்தீவில் அவ் விளைஞ்சன், தமிழீழத்தேசியக் கொடியுடன் சென்றதை பெருமையாகச் சொன்னார்கள். இதனால் பல ஊடகங்களில் இச்செய்திகள் வந்தது. போட்டியைப்பார்த்த பார்வையாளர்களுக்கு இந்த கொடி என்ன கொடி. இலங்கையில் நடக்கிறது என்ன என்பது ஒரளவு அறியக்கூடியாதாகவும் இருக்கிறது.

ஆனாலும் சிட்னியில் சில மானங்கெட்ட கேடுகெட்ட தமிழர்கள், இலங்கை அணி விளையாடும் போது சிங்கக் கொடியுடன், இலங்கை அணியினைப் பொறித்த ஆடைகள் அணிந்து விபச்சாரம் செய்கிறார்கள். இம்முறை அவுஸ்திரெலியாவுக்கு இலங்கை அணி விளையாடவருகிறது. அப்பொழுதும் மானங்கெட்டு சிங்கக்கொடியுடன் செல்லப்போகிறார்களா?. நான் துடுப்பாட்டம் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. பார்ப்பதற்கு சிங்கக்கொடியுடன் தான் செல்ல வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய செயல்வீரன் மயூரனுக்கு முதலில் எனது பாராட்டுக்கள், மரண வெறிபிடித்தலையும் சிங்களவனுக்கு ஆதரவு தெரிவிக்குமளவிற்க்கு நாங்கள் என்ன முட்டாள்களா? சிங்களப் பொதுமக்கள் அப்பாவிகள் என்றுதான் நினைத்தோம் ஆனால் போரைத்தான் அவங்களும் விரும்புகிறாங்களாம்....

கொடிகாக்கும் வீரன் மயூரன் நீடூழி வாழ்க

ஏன் நெடுக்காலப்போவான் எப்பொழுதும் எதிர்மறையாகவே சிந்திக்கிறார்?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கக்கொடி பிடிப்பவர்களே கீழே இணைத்துள்ள புகைப்படங்களைப் பாருங்கள். உற்றுப்பாருங்கள். நீங்கள் சிறிலங்கனா?.

blackjulytnwo4.jpg

chencholainationaldayofxm2.jpg

inthenameofbuddhaes1.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி நிகழ்வின் போது, தமிழீழ தேசியக் கொடியைக் காண்பித்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய மயூரன், தமிழ்நாதம் இணையத்தளத்துக்கு இன்று புதன்கிழமை (18.04.07) வழங்கிய நேர்காணல்.

தமிழ்நாதம்

மயூரனின் பேட்டியைக் கேட்டீர்களா?. ஈழத்தில் பிறந்திருந்தும் 4 வயதில் கனடா சென்றவரின் தாயக, தமிழ் உணர்வைக் கேட்டீர்களா?. ஈழத்தில் பிறந்து 30, 40 வருடங்களுக்கு பிறகு வெளினாடு சென்று தமிழர்களோடு தமிழைக் கதைக்காமல் எதுக்கெடுத்தாலும் ஆங்கில, பிரெஞ்சு, அன்னிய மொழி மோகத்தில் திரிந்தும், தாயகத்தை மறந்தும் இருப்பவர்கள் மத்தியில் ஒரு அன்னிய கலாச்சாரத்தில் 4 வயதில் சென்று தமிழ் மொழியில் கதைக்கும் தாயக உணர்வு உள்ள மயூரனையும், அவருக்கு தமிழ், தாயக உணர்வு ஊட்டிய பெரியோர்களையும் நினைக்க பெருமையாக இருக்கிறது.

Edited by கந்தப்பு

நன்றி கந்தப்பு...காலையில் பேட்டியை கேட்டேன்..என்ன சொல்ல...தமிழீழதாயின் இன்னோர் வீர மகன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கக்கொடி பிடிப்பவர்களே பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று யாழ் மூத்த உறுப்பினர்கள் சிலர் அறிக்கை விடபோகினம்.........

சிங்கக்கொடி பிடிப்பவர்களே பாருங்கள்

உதுகள் எல்லாம் அரசியல் விளங்காமல் நாட்டை விட்டு ஓடி வந்துகள் இங்க கார் பிச்சைப்பணம் எல்லாத்தையும் கண்டவுடன் அதுகளுக்கு சிங்களவன் தழிழன் என்றெல்லாம் தெரியாது. காசு, கொழும்பில வீடு

என்று திரியுதுகள்.

இப்ப கேளுங்கோ ஏன் ஓடி வந்தினிங்க என்டு திரும்ப கேட்பினம் யார் ஓடி வந்தது எண்டு. நாங்கள் எல்லாம் விசா எடுத்து வந்த ஆட்கள் என்று தானே கதை அளக்கினம் தங்கடை பிள்ளைகளுக்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நாம் வெற்றி கிடைக்கும்வரை சிந்திக்க வேண்டும். நாங்கள் பெருந்தொகையில் திரண்டு போராட்டம் நடத்திய போதும் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தகைய புதிய வடிவங்களினூடே தொடர்ச்சியாக எமது செயற்பாடுகளை மேற்கொள்வோம்."மயூரன்

தலைப்பின் கேள்விக்கு பதில்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் பிரச்சினையை எடுத்துச் சொல்லவே அனைத்துலக துடுப்பாட்டப் போட்டி மைதானத்தில் இறங்கினேன்: பரபரப்பை ஏற்படுத்திய கனேடிய இளைஞர் மயூரன்

[வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007, 05:07 ஈழம்] [செ.விசுவநாதன்]

ஈழத் தமிழர் பிரச்சனையை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடனேயே நான் மைதானத்தில் உள்நுழைந்தேன் என்று அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடி ஏந்தி பரபரப்பை ஏற்படுத்திய கனேடிய இளைஞரான மயூரன் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாதம்' இணையத்தளத்துக்கு மயூரன் அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளதாவது:

தாயக மண்ணிலிருந்து நான்கரை வயதில் கனடிய நாட்டுக்கு நான் வந்தேன்.

பொதுவில் துடுப்பாட்டாப் போட்டிகளில் எனக்கு ஆர்வம் உண்டு. கனடாவில் நான் இருப்பதால் கூடைப்பந்தாட்டம் போன்ற போட்டிகளைத்தான் அதிகம் பார்ப்பதுண்டு. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளை பார்க்கச் சென்றது என்பது எம்முடைய பிரச்சினை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.

இப்போதுதான் முதல் முறையாக துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கச் சென்றேன்.

எங்களுடைய மக்கள் எல்லோருக்கும் எங்கள் நாட்டில் நடைபெறுவது என்ன என்று தெரியும். அனைத்துலக மன்னிப்புச் சபையும் உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியையொட்டி பரப்புரை மேற்கொண்டது. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சியால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆகையால் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பரப்புரைக்கு ஆதரவாகவும் எமது பிரச்சனையை அனைத்துலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கருதி இந்த இளைஞராக இருப்பதால் நேரடி நடவடிக்கையை மேற்கொண்டேன்.

என்னுடைய நண்பர்களுடன் நான் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றேன்.

நாம் மேற்கொண்ட நடவடிக்கையானது முன்னரே திட்டமிட்டதுதான்.

அந்த மைதானத்தில் பல்வேறு நாடுகளின் கொடிகளெல்லாம் இருக்கின்றபோது எங்களுடைய நாட்டினது புலிக்கொடியும் அதாவது தமிழீழத் தேசியக் கொடியைக் கொண்டு போனால் என்ன மாதிரி விளைவை உண்டாக்கும்- பரபரப்பை ஏற்படுத்தும் என்று திட்டமிட்டுத்தான் இதனைச் செய்தோம்.

அவுஸ்திரேலியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான போட்டியைத் தெரிவு செய்யக் காரணம் உண்டு.

சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு உண்டு. சிறிலங்காவின் அமைச்சரான கேகலிய ரம்புக்வெல, அவுஸ்திரேலியாவுக்குச் சென்று எங்கள் மக்களின் செயற்பாடுகளைத் தடுக்கப் பார்க்கிறார். எங்களுடைய போராட்டத்தைத் தடை செய்ய அவர் முயற்சித்து வருகிறார். ஆகையால்தான் தற்போது இந்தப் போட்டியை நாம் தெரிவு செய்தோம்.

எங்களுக்கு மைதானத்தின் எந்தப் பகுதியைத் தெரிவு செய்ய வேண்டும் என்று வெளியிலிருந்து தெரியவில்லை. மைதானத்தின் பகுதியில் நகரக்கூடிய இடங்களும் இருந்தன.

மைதானத்தைச் சுற்றி மிகவும் வலுவான பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால் சரியான நேரத்தையும் சரியான இடத்தையும் நாம் தெரிவு செய்தமையால்தான் எமது திட்டம் வெற்றி பெற்றது.

மைதானத்தில் சிறிலங்கா அணி நிற்க அவுஸ்திரேலிய அணி மட்டையெடுத்து ஆடும்போதுதான் இறங்க வேண்டும் என்று திட்டமிட்டேன். அதன்படி நான் மைதானத்தில் இறங்கி பிட்ச் பகுதிக்குச் செல்ல தீர்மானித்தேன்.

ஆனால் மைதானத்தில் நின்றிருந்த சிறிலங்கா அணியினரோ அச்சத்துடன் இருந்தனர். அந்தப் பாதிப்பைவிட வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு விடயத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கருதினேன். அதற்கேற்ப பார்வையாளர்களும் என்னை உற்சாகப்படுத்தினர். பார்வையாளர்கள் வரிசையில் இலங்கையர்களும் இருந்திருக்கக் கூடும். ஆனால் எந்தப் பகுதியிலிருந்து உற்சாகமளித்தனர் என்பது எனக்குத் தெரியவில்லை.

நான் மைதானத்தில் இறங்கும் வரை திட்டமிட்டதனை சரியாக முடிக்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருந்தேன். மைதானத்தில் இறங்கிய பின்னர் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன்.

சிறிலங்கா அணியினர் அச்சத்துடனும் அவமானப்பட்ட நிலையிலுமாக அவர்கள் முகம் இருந்ததை நான் சரியாகப் பார்த்தேன்.

நான் மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியுடன் இறங்கிய உடனே அங்கிருந்த காவல்துறையினர் என் பின்னால் வந்தனர். அவர்கள் என்னை நோக்கி வந்தபோது அவர்களுக்கு ஒத்துழைப்புத் தரும் விதத்தில் நான் எனது கையை உயர்த்தினேன்.

இதனை நான் விளையாட்டுக்குச் செய்யவில்லை. பரப்புரைக்காகத்தான் செய்கிறேன் என்பதனை அனைத்துலக துடுப்பாட்டச் சபையினரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இடையூறு செய்யவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவர்களோடு ஒத்துழைத்தேன்.

நான் செய்தது ஒரு போராட்ட ரீதியான செயல்தான். விளையாட்டுக்காக பிழையாக நான் செயற்படவில்லை.

நான் மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டபோது, முதலில் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். எங்கள் நாட்டில் இப்படியான பிரச்சினைகள் நடைபெறுகின்றன. அதனை வெளிப்படுத்தவே இத்தகைய செயற்பாடு மேற்கொண்டோம் என்றும் விளக்கம் அளித்தேன்.

மைதானத்திலிருந்த போதுதான் அனைத்துலக துடுப்பாட்டச் சபையினர் விசாரித்தனர்.

எந்த ஒரு பார்வையாளரும் மைதானத்தில் இறங்கக் கூடாது என்பதுதான் அந்த அதிகாரிகளின் சட்டம். என்னிடம் விசாரணை செய்த ஒவ்வொரு உயர் அதிகாரியிடமும் என்னுடைய மன்னிப்பைக் கூறி அத்துடன் எமது அரசியல் பிரச்சினையையும் நான் விளங்கப்படுத்தினேன். எதற்காக இந்தச் செயலை செய்தேன் என்றும் விளக்கினேன்.

மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அங்கிருந்து புலனாய்வுத்துறை தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

முதலில் என்னை குற்றவாளியாகக் கருதித்தான் 40 அல்லது 50 பேர் கொண்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரித்தனர். என் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத்தான் அவர்கள் முயற்சித்தனர்.

ஆனால் ஒவ்வொரு அதிகாரியும் என்னிடம் விசாரித்த போதும் விளக்கம் கூறினேன். அதன் பின்னர் எனது சார்பில் கதைக்கத் தொடங்கினர்.

அதன்பின்னர் அந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். ஏனெனில் இன்னொரு போட்டிக்கு நான் திரும்பவும் போய் இப்படியான ஒரு சம்பவம் நடப்பதை அவர்கள் விரும்பவில்லை. அப்படி நடப்பதன் மூலமாக வெளிநாட்டினருக்கு மேற்கிந்திய தீவுகள் குறித்து பிழையான அபிப்பிராயம் வருமென கருதினர். ஆகையால் அதனை ஏற்று அந்நாட்டிலிருந்து வெளியேற இணங்கினேன்.

மேற்கிந்திய தீவுகள் நாட்டின் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறினேன்.

கனடா நாட்டுக்கு நான் திரும்பியபோதும் இதுவரை எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. விசாரணைகள் வரலாம். அதனை எதிர்கொள்ளவும் நான் தயாராக உள்ளேன்.

ஆனால் கனடா நாட்டினது சட்டத்தை நாம் சரியான முறையில் கையாண்டால் எங்களுக்கு எதுவித பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நான் மைதானத்திற்குச் சென்றேன்.

நான் மேற்கொண்ட நடவடிக்கையானது ஊடகங்களில் படங்களுடன் வெளியானதன் மூலம் எனது நோக்கம் நடந்தேறியிருப்பதால் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன். எமக்கு மட்டுமல்ல தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் என்று கருதுகிறேன்.

நான் மேற்கொண்ட செயற்பாடு சரியானது என்று இளைஞர்கள் பலரும் தொடர்பு கொண்டு தெரிவித்ததோடு தங்களை அழைத்துச் செல்லாதது குறித்து கோபமடைந்தும் உள்ளனர்.

நாம் வெற்றி கிடைக்கும்வரை சிந்திக்க வேண்டும். நாங்கள் பெருந்தொகையில் திரண்டு போராட்டம் நடத்திய போதும் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தகைய புதிய வடிவங்களினூடே தொடர்ச்சியாக எமது செயற்பாடுகளை மேற்கொள்வோம்.

எங்களுடைய தேசியத் தலைவரின் விருப்பத்தின்படி அதாவது எமது தேசியத் தலைவர் அவர்கள் ஒருமுறை, வெளிநாட்டில் இருக்கும் தமிழ் இளைஞர்கள் அடுத்த கட்டப் போராட்டத்துக்கு முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார். நாங்கள் பீனிக்ஸ் பறவை போல் எழும்ப வேண்டும் என்றும் கூறினார்.

அதற்கேற்ப செயற்திட்டங்களையும் வடிவங்களையும் மாற்றி அனைத்து தமிழ் இளைஞர்களும் முன்வந்தால் நம் பிர்சினைக்கு விரைவில் நாம் தீர்வு காண்போம் என்றார் மயூரன்.

படங்கள்: ஏ.எஃப்.பி, ரொய்ட்டர்ஸ், ஏ.பி

  • கருத்துக்கள உறவுகள்

இவரை கரிபியனாக்கிய நெடுக்கு கோவணத்தை உருவி தலையில் கட்டிக்கொண்டிருகிறாரா தற்போது

கரிபியனுக்கே உரித்தான தோற்றம் கனடா வாழ் தமிழர்களிடமும் உண்டு என்பது தெரியாமல் போச்சு..! :unsure::unsure:

Edited by nedukkalapoovan

கரிபியனுக்கே உரித்தான தோற்றம் கனடா வாழ் தமிழர்களிடமும் உண்டு என்பது தெரியாமல் போச்சு..! :unsure::unsure:

கவனம் கனடாகாரர் போர் தொடுக்க போகீனம் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனம் கனடாகாரர் போர் தொடுக்க போகீனம் :P

<<<<

இவரின்ற கதையெல்லாம் யார் காதிலை வாங்கிறது?!!

கனடாவில் இருந்தாலும் 'தமிழர்' என்று நிரூபிச்ச மயூரனால் பெருமை அடைகின்றோம்!

வீரச்செயல் புரிந்த இளைஞன்! தமிழீழமகன்!

  • கருத்துக்கள உறவுகள்

<<<<

இவரின்ற கதையெல்லாம் யார் காதிலை வாங்கிறது?!!

கனடாவில் இருந்தாலும் 'தமிழர்' என்று நிரூபிச்ச மயூரனால் பெருமை அடைகின்றோம்!

வீரச்செயல் புரிந்த இளைஞன்! தமிழீழமகன்!

யாரும் காசு கொடுத்து வாங்கச் சொல்லேல்லையே.. கதைய..! :unsure::unsure:

ம்ம்ம்.... வீர தீரச் செயல்தான்.. ! இதால நாளைக்கே ஐநா சபையில அங்கீகாரம் கிடைச்சிடப் போகுது தமிழீழத்துக்கு..! :unsure:

தேசியக் கொடிக்கு வலுவான பிரச்சாரம் என்றதைத் தவிர இதில வீரம் தீரம்.. ரெம்ப ரெம்ப ரெம்ப ஓவர்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

கொடிகாக்கும் வீரன் மயூரன் நீடூழி வாழ்க

ஏன் நெடுக்காலப்போவான் எப்பொழுதும் எதிர்மறையாகவே சிந்திக்கிறார்?????

அந்தளவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களிடத்தில் நம்பிக்கை..! ஜஸ்ட் இவரு கரிபியன் போல இருந்ததால தப்பிட்டார்...! :unsure::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.