Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கொக்கிளாய் கடல்நீரேரியில் பாலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு – திருகோணமலையை இணைக்க கொக்கிளாய் கடல்நீரேரியில் பாலம்

Kokkilai-Map-300x200.jpgமுல்லைத்தீவு – திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொக்கிளாய் கடல்நீரேரிக்கு மேலாக பாலம் அமைக்கப்படவுள்ளது.

செக் குடியரசின் கடனுதவியுடன் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர். அத்தபத்து தெரிவித்துள்ளார்.

9 பில்லியன் ரூபா செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பாலத்துக்கான, நிதியை செக் குடியரசின், CSOB வங்கியும், உள்ளூர் வணிக வங்கி ஒன்றும் வழங்கவுள்ளன.

ஒரு கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலத்தை அமைப்பதன் மூலம், முல்லைத்தீவில் இருந்து புல்மோட்டைக்கு இடையிலான பயணத் தூரம் 100 கி.மீற்றரினால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kokkilai-Map.jpghttp://www.puthinappalakai.net/2019/02/10/news/36320

1 hour ago, nunavilan said:

 மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர்.

1 hour ago, nunavilan said:

ஒரு கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலத்தை அமைப்பதன் மூலம், முல்லைத்தீவில் இருந்து புல்மோட்டைக்கு இடையிலான பயணத் தூரம் 100 கி.மீற்றரினால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு பலத்தை 3 மாதத்தில் அமைப்பது என்பது சாத்தியமற்ற விடையம் என்றே நான் நினைக்கிறன். 3 வருடம் என நான் நினைக்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Shanthan_S said:

1கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு பலத்தை 3 மாதத்தில் அமைப்பது என்பது சாத்தியமற்ற விடையம் என்றே நான் நினைக்கிறன். 3 வருடம் என நான் நினைக்கிறன்.

மூன்று மாதங்களுக்குள் அதன் ஆரம்ப பணி முடியும் என Sunday times  சொல்கிறது. நன்றி சாந்தன்.

மூன்று மாதங்கள் போதாது , கடலுக்கால் பலம் காட்டுவதால் , piling வேலை செய்யவே குறைந்தது ஆறு மாதம் தேவை .. இரண்டு வருடம் தேவை இதனை நேர்த்தியாக கட்ட 

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பு கேடர் கொண்டு அமைக்கிறாங்களோ தெரியல?!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Shanthan_S said:

1கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு பலத்தை 3 மாதத்தில் அமைப்பது என்பது சாத்தியமற்ற விடையம் என்றே நான் நினைக்கிறன். 3 வருடம் என நான் நினைக்கிறன்.

நீங்கள் சீனாக்காரன் பாலம்  அமைப்பது குறித்து அறிந்திருக்க வில்லையா?

இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு வேலைக்கு 1000 பேர் தேவை என பட்ஜெட் பண்ணினால் சீனாவில் 100,000 பேர் அதுவும் சிறை கைதிகள் அனுப்பப்படுவார்கள்.

அந்த சீனத்து கொம்பனியிடம் contract கொடுத்தால் மூன்று மாதத்தில் முடிப்பார்கள்.

இலங்கையில் சீனாக்காரர் வேலை செய்வது குறித்து அறிந்திருப்பீர்கள்.

இந்த வகையில் சிறை கைதிகளை பயன்படுத்தி வேலை வாங்குவதால், சீனாவின் முயற்சிகளை, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் எதிர்க்க முடியாமல் மேலை நாடுகள் தடுமாறுகின்றன.

சிறைக்கைதிகளின் மனித உரிமைகள் குறித்து பேசினாலும், கடூழிய சிறைத்தண்டனையின் அர்த்தம் என்ன என்றவுடன், உள்நாட்டில் செய்யலாம் வெளி நாட்டில் செய்யக்கூடாதா என்று கேட்க...  மேலே பேச முடியாமல் மனித உரிமை அமைப்புகள் பம்முகின்றன. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, nunavilan said:

செக் குடியரசின் கடனுதவியுடன் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும் என்றும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பணிப்பாளர். அத்தபத்து தெரிவித்துள்ளார்.

போற போக்கை பாத்தால் உவையள் கடன் வாங்காத இடமே இல்லைப்போலை கிடக்கு...
எண்டாலும் மாலைதீவிட்டை கடன் வாங்கியிருக்க மாட்டினம் எண்டொரு நம்பிக்கை எனக்கிருக்கு....:grin:

பிற்குறிப்பு: மாசிக்கருவாடு கடனுக்கு வாங்கினதெல்லாம் கடன் லிஸ்ற்லை வராது. 😎

16 hours ago, nunavilan said:

மூன்று மாதங்களுக்குள் அதன் ஆரம்ப பணி முடியும் என Sunday times  சொல்கிறது. நன்றி சாந்தன்.

ஆரம்ப பணிகளுக்கு மட்டும் 3 மாதம்  எண்டால் சரி. சராசரியாக இந்தமாதிரி ஒரு பாலத்தை நீண்ட கால உத்தரவாதத்துடன் கட்டுவதெண்டால் 2 முதல் 3 வருடம் செல்லும். நீங்கள் தொண்டைமானாறு பாலத்தை பார்த்தல் தெரியும் அது ஒரு 150 முதல் 200மீட்டர் நீள  பாலம். அதை கட்டி முடிக்க 20 மாதத்துக்கு கிடட முடிந்தது

12 hours ago, ஏராளன் said:

இரும்பு கேடர் கொண்டு அமைக்கிறாங்களோ தெரியல?!

இரும்பு கேடர் கொண்டு அமைத்தாலும் 3 மாதத்தில் முடிக்க முடியாது. இரும்பு கேடர் கொண்டு அமைத்தாலும் அதற்கு Piles , Pile caps  and  Abutments  concrete கொண்டுதான் கட்டிட வேண்டும். Piers and  bridge deck வேண்டுமானால்   இரும்பு கேடர் கொண்டு அமைக்கலாம்.

11 hours ago, Nathamuni said:

நீங்கள் சீனாக்காரன் பாலம்  அமைப்பது குறித்து அறிந்திருக்க வில்லையா?

இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு வேலைக்கு 1000 பேர் தேவை என பட்ஜெட் பண்ணினால் சீனாவில் 100,000 பேர் அதுவும் சிறை கைதிகள் அனுப்பப்படுவார்கள்.

நீங்கள் சொல்லுவதும் சரிதான். ஆனால் இது cast-in-situ  concrete வேலைக்கு பொருந்தாது. ஏனனெற்றால், concrete போட்டு அது இறுக்கி கடினமாவதுக்கு ஆக குறைந்தது 7 நாட்களாவது தேவை. எதிர்பார்க்கப்பட்ட வலுவை அடைய குறைந்தது 28 நாட்கள்  தேவை. எனவே இந்த 7 நாட்களும் வெயிட் பண்ணிதான் மீண்டும் concrete போடா முடியும். அத்துடன் அண்டர் வாட்டர் concrete கட்டுமானம் என்பது இலகுவான காரியம் இல்லை. நிறைய டைம் தேவைப்படும்

Edited by Shanthan_S

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Shanthan_S said:

நீங்கள் சொல்லுவதும் சரிதான். ஆனால் இது cast-in-situ  concrete வேலைக்கு பொருந்தாது. ஏனனெற்றால், concrete போட்டு அது இறுக்கி கடினமாவதுக்கு ஆக குறைந்தது 7 நாட்களாவது தேவை. எதிர்பார்க்கப்பட்ட வலுவை அடைய குறைந்தது 28 நாட்கள்  தேவை. எனவே இந்த 7 நாட்களும் வெயிட் பண்ணிதான் மீண்டும் concrete போடா முடியும். அத்துடன் அண்டர் வாட்டர் concrete கட்டுமானம் என்பது இலகுவான காரியம் இல்லை. நிறைய டைம் தேவைப்படும்

நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை.

ஆனாலும் சீனாக்காரன் எங்கயோ போய்ட்டான்....

மேலை நாடுகளில், நாடுகளுக்கு தேவையான இந்த பாலங்களின் நிர்மாணிப்பு 17ம் நூறாண்டில் ஆரம்பித்து ஏறத்தாள 99 வீதம் நிறைவடைந்து விட்டது.

பணம் ஈட்டிக் கொண்ட, சீனா தனது நாட்டில், இப்போது தான் இவற்றினை அமைப்பதால், மேற்கு, மூக்கில் விரலை வைக்குமளவுக்கு நவீனத்துவம் புகுந்துள்ளது. இதனையே ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தி, மனிதவலுவுக்கு சிறைக்கைதிகளையும் பயன்படுத்திக் கொள்வதால், சேமிக்கவும் செய்கிறது.

உதாரணமாக இலங்கையில் பிரிட்டிஸ்காரர் அமைத்த ரயில்வே, வவுனியா முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரை உள்ள பாதைக்கும்...  வவுனியா முதல் யாழ் வரை, மாத்தறை முதல் கதிர்காமம் வரை அண்மையில் அமைக்கப்பட்ட பாதைக்கும் வித்தியாசம் உள்ளதே....

உண்மையில், உங்களை போன்ற பொறியியளாளர்கள், மேற்கிலும் பார்க்க, சீனாவில் உங்கள் துறை சார்ந்து என்ன நடக்கிறது என்றே பார்க்கவேண்டும்.

Edited by Nathamuni

சிங்களம் முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பகுதிகளை சிறுக சிறுக ஆக்கிரமித்து தமிழர்களின் தாயக கோட்பாட்டுக்கு அடி நாதமாக இருக்கும் வடக்கு கிழக்கை இணைக்கும் பாரம்பரிய பிரதேசத்தை துண்டாடிக் கொண்டு இருக்கும் போது இப் பாலம் பற்றிய செய்தி வருகுது. கண்டிப்பாக இது சிங்கள ஆக்கிரமிப்பை மேலும் வேகமாக முன்னெடுக்க செய்யும் ஒரு விடயம்.

வழக்கம் போல தமிழ் தேசிய கூத்தமைப்பும் அதை எதிர்க்கும் கட்சிகளும் தமக்குள் அடிபட்டு கொண்டு இதையும் கோட்டை விடப் போகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

இது மட்டுமல்ல.. நயினாதீவுக்கு நடுக்கடலுக்குள்ளால்.. நல்ல தண்ணி போகப் போகுது. அதற்கான வேலை திட்டங்களும் நிகழ்கின்றன. அதோடு புங்குடுதீவின் முகப்பில் பெரிய புத்தர் அமர்ந்திட்டார். அதுவும் மிக விரைவில்.. நயினாதீவு நாக விகாரை பக்த கோடிகளின் வாழ்விடமாகும்.

சிங்களம் தனது ஆக்கிரமிப்புத் தேவைக்கு தேவையான அனைத்தையும்.. அபிவிருத்தி என்ற போர்வைக்குள் செய்து வரும் நிலையில்.. எம் மக்களில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் ஊரில் இன்னும் அதே நிலையில் தான் உள்ளனர்.

அவர்களுக்கு UNDP ஆல் வழங்கப்பட்ட 7 இலட்சம் வீட்டுத்திட்டத்தை கூட 3 இலட்சத்தோடு அரைகுறையாக முடித்துவிட்டு.. மிச்சத்தை ஆட்டையும் போட்டிருக்கிறார்கள்.. சொறீலங்கா அதிகாரிகள். 

இந்த நிலையில்.. இந்தப் பாலங்கள் எம் நிலத்தை நிரந்தரமாக சிங்கள மயமாக்கும் நோக்கின் செயலே ஆகும்.

சிங்கள பக்கம் எல்லாம்.. காணிகளின் விலை அசுர நிலையை அடைந்துள்ளது. குருணாகல்.. கேகாலை.. பொல்காவலை.. கண்டி.. என்று எல்லா இடமுமே காணிகளின் விலை அதிகூடிவிட்டது. 

ஆனால்.. தமிழர் நிலம் மட்டுமே... இப்போ.. எடுப்பார் கைப்பாவை போலாகிவிட்டது. அதனை சிங்களர்களும் இஸ்லாமியர்களும் ஆட்டையைப் போடத் துடிக்கிறார்கள். 

நாம் எம் மண்ணையும் உரிமைகளையும் கண் முன்னே இழந்து கொண்டிருக்கிறோம்..... வெறும் போலி வெளிநாட்டு மோகத்தினாலும்.. எம் போலி அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டும். 🙄

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

நாம் குடிபெயர ஆர்வம் காட்டுவதால், காணிகளை விற்க விரும்புகிறோம்.

பணம் அதிகமாக கொடுக்கக் கூடிய யாரும் வாங்கிக்கொள்கின்றனர்.

மறுபுறம் திரும்பி பணத்துடன் செல்லும் நம்மவர்களுடன் போட்டி போட முடியாது கொள்பிட்டி முதல், கல்கிசை வரை தமிழருக்கு விற்றுவிட்டு போகின்றனர்.

ஆகவே இது டிமாண்ட் அண்ட் சப்ளை தானே. 

அரசு பிளான்ரேசன் முறையில் பலாத்காரமாக குடியேற்றாமல் இருந்தால் போதும்.

On 2/11/2019 at 2:13 PM, Nathamuni said:

நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை.

ஆனாலும் சீனாக்காரன் எங்கயோ போய்ட்டான்....

மேலை நாடுகளில், நாடுகளுக்கு தேவையான இந்த பாலங்களின் நிர்மாணிப்பு 17ம் நூறாண்டில் ஆரம்பித்து ஏறத்தாள 99 வீதம் நிறைவடைந்து விட்டது.

பணம் ஈட்டிக் கொண்ட, சீனா தனது நாட்டில், இப்போது தான் இவற்றினை அமைப்பதால், மேற்கு, மூக்கில் விரலை வைக்குமளவுக்கு நவீனத்துவம் புகுந்துள்ளது. இதனையே ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தி, மனிதவலுவுக்கு சிறைக்கைதிகளையும் பயன்படுத்திக் கொள்வதால், சேமிக்கவும் செய்கிறது.

உதாரணமாக இலங்கையில் பிரிட்டிஸ்காரர் அமைத்த ரயில்வே, வவுனியா முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரை உள்ள பாதைக்கும்...  வவுனியா முதல் யாழ் வரை, மாத்தறை முதல் கதிர்காமம் வரை அண்மையில் அமைக்கப்பட்ட பாதைக்கும் வித்தியாசம் உள்ளதே....

உண்மையில், உங்களை போன்ற பொறியியளாளர்கள், மேற்கிலும் பார்க்க, சீனாவில் உங்கள் துறை சார்ந்து என்ன நடக்கிறது என்றே பார்க்கவேண்டும்.

அண்ணா நீங்கள் கூறுவதுபோல அதி நவீன இயந்திரங்கள் இருப்பது உண்மைதான். ஆனால் இந்த இயந்திரங்கள் பவிப்பதெண்டால் அந்த புரஜெக்ட் மிகவும் பெரிதாக இருக்க வேண்டும். இந்த மாதிரி 1km நீள பாலத்துக்கு இந்தமாதிரி கனரக நவீன இயந்திரங்களை கொண்டுவருவது மிகவும் நடை முறைச்சிக்கல் நிறைந்த  மற்றும் செலவு கூடின விடையம். நான் 2014 -2015 காலப்பகுதியில் கத்தார் நாட்டில் வேலை பார்க்கும்போது அங்கை இதுமாதிரி நவீன பிரிட்ஜ் டேக்கிங் மெஷின் பாவித்து தான் Doha மெட்ரோ லைன் கடினவங்கள். அது நீண்ட தடம் எண்ட படியால் இந்த மெஷினை பாவித்தார்கள். அதைவிட கத்தார் அரசாங்கத்துக்கு பணம் ஒரு பெரிய விடியும் இல்லை. இந்தமாதிரி மெஷின் மூலம் பிரிட்ஜ் டெக் மட்டும்தான் போட முடியும். பைல், பைல் cap, பியர்ஸ் மற்றும் abutment என்பன சாதாரண முறையில்  தான் கட்டிட வேண்டும். இதற்க்கு நீண்ட காலம் தேவை.

அண்ணா அடிப்படியில் நான் ஒரு பொறியியலாளன் இல்லை. நான் ஒரு கணிய அளவையியலாளன் (Quantity Surveyor). 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.