Jump to content

பாசமலர்ச் சோலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

cbbek-5r454.jpg

பாசமலர்ச் சோலை

கை நிறைய மலர்கள் புன்னகையின் இதழ்கள்
கண்களிலோ மொழிகள் கலகலக்கும் ஒலிகள்

பாசமலர்ச் சோலை பால் மணக்கும் மழலை
நேசமுடன் வருடும் மயிலிறகாய் விரல்கள்

சிரிப்பினிலோ உவகை சிணுங்கலிலோ உரிமை
மொழிகளில்லா உலகில் மோகனமாய் விழிகள்

பஞ்செனவே கால்கள் பழங்களென விழிகள்
பிஞ்செனவே விரல்கள் கொஞ்சுகின்ற பார்வை

கண்சிமிட்டும் அழகு கை அசைப்பில் அழைப்பு
சிந்துகின்ற சிரிப்பு சேய் அவனின் துடிப்பு

அபிநயமோ வேதம் அணைப்பினிலோ மோகம்
என்னவென்று வியக்கும் எடுத்தணைத்தால் மயக்கம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 மயக்கும் மழலைகள் கவிபாட வைத்துள்ளார்கள்.  அழகோ அழகு அவர்களின் சிரிப்பு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறிவிலிருந்து பிறக்கும் கவிதைகளை விட  இதயத்தில் இருந்து பிறக்கும் கவிதைகள் சுகமானவை ......!   🌺

சுட்டிகளுக்கேற்ற குட்டிக் கவிதை......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, நிலாமதி said:

 மயக்கும் மழலைகள் கவிபாட வைத்துள்ளார்கள்.  அழகோ அழகு அவர்களின் சிரிப்பு 

மடியில் தவழும் மழலைகள் கவி பாட வைத்துள்ளார்கள் நன்றிகள் நிலாமதி

27 minutes ago, suvy said:

அறிவிலிருந்து பிறக்கும் கவிதைகளை விட  இதயத்தில் இருந்து பிறக்கும் கவிதைகள் சுகமானவை ......!   🌺

சுட்டிகளுக்கேற்ற குட்டிக் கவிதை......!  😁

உண்மைதான் சுவி. குட்டிக் குட்டிக் கவிதைகளாய்  என் மடி தவழும் பேரக் குழந்தைகள். 

உண்மைதான் சுவி. குட்டிக் குட்டிக் கவிதைகளாய்  என் மடி தவழும் பேரக் குழந்தைகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கள்ளமில்லா உள்ளங்களின் பிரதிபலிப்பு.....எவ்வாறு இருக்கும் என்பதற்கு....உங்கள் கவிதை;யும்....படமும் நல்ல எடுத்துக்காட்டு....!

வாழ்த்துக்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றிகள் புங்கையூரன் கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்பை பார்த்துக்கொண்டே இருக்கலாம். வாழ்த்துக்கு நன்றிகள்

Posted
5 hours ago, Kavallur Kanmani said:

சிரிப்பினிலோ உவகை சிணுங்கலிலோ உரிமை

மொழிகளில்லா உலகில் மோகனமாய் விழிகள்

மெட்டுப் போட்டுப் பாடுதற்கு உகந்த கவி வரிகள். 😊

கவிதையை வாசித்தபோது உள்ளமும், முகமும் மலர்ந்தது. குழந்தைகள் உலகத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள், அக்கா. 😊

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மழலைகள் அருகில் இருந்துவிட்டால் எம் மனக் கவலைகள் அனைத்தும் மறந்துவிடுகிறோமல்லவா? குழந்தையாய் மனிதன் இருந்து விட்டால் குழப்பம் கலக்கம் ஏதுமில்லை என்று தெரியாமலா பாடி வைத்துள்ளார்கள். உங்கள் கருத்துக்கு நன்றிகள் மல்லிகை வாசம்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகான கவிதை.

கள்ளமில்லா குழந்தைகள் எல்லாக் கவலைகளையும் மறக்கடிக்கச்செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேரப் பிள்ளைகளுடன் குத்தாட்டம் போடுறதை சொல்லாமல் சொல்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/27/2019 at 1:12 PM, Kavallur Kanmani said:

படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் கிருபன்

கடந்த இரண்டு மாதங்களாக எதிர்பாராத வரையில் வேலைப்பளு அதிகரித்துவிட்டது. அதனால் ஆறுதலாக ஆக்கங்களை வாசிக்கமுடியவில்லை. ஒவ்வொரு சொல்லையும் செதுக்கி எழுதும் ஆக்கங்களை செய்திகளையும் அரசியல் கட்டுரைகளையும் மேய்வதுபோல படிப்பது எழுதுபவர்களை அவமதிப்பதாகும் என்பதால் இன்னமும் பலவற்றைப் படிக்காமல் உள்ளேன். எனினும் எல்லாவற்றையும் விரைவில் படித்துவிடுவேன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுபவித்து எழுதிய அழகான கவிதை உணர்வுக்குள் தேங்குவதால் விமர்சிக்கமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.