Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள்

MR-MS-RW-CBK-1-300x197.jpgசிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோர் பங்கேற்றனர்.

மைத்திரிபால சிறிசேனவும் சந்திரிகாவும் அண்மைக்காலமாக சந்தித்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அதுபோன்றே மகிந்த ராஜபக்சவை சந்திரிகா கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஒரே வரிசையில் நேற்றைய நிகழ்வில் அமர்ந்திருந்தனர்.

MR-MS-RW-CBK-2.jpg

இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், 2015 அதிபர்ட தேர்தலில் ஜோன் அமரதுங்கவின் பங்களிப்பை தன்னால் மறக்க முடியாது என்று கூறினார்.

அத்துடன், மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர் என்பதால் தான், அவரால் நீண்ட காலம் அரசியலில் நிலைத்திருக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/02/28/news/36642

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர்

மக்கள் ஏற்றுக்கொண்டு மகிழ்வோடு வாழ்வதற்கு இவர் என்ன செய்தார்...... ???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Paanch said:

மக்கள் ஏற்றுக்கொண்டு மகிழ்வோடு வாழ்வதற்கு இவர் என்ன செய்தார்...... ???

ஜோன் அமரதுங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
ஜோன் அமரதுங்க
பதவியில் உள்ளார்
பதவியேற்பு 
1989
கம்பஹா மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு 
2010
தனிநபர் தகவல்
பிறப்பு மே 21, 1940(அகவை 78)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
பணி அரசியல்வாதி
தொழில் சட்டத்தரணி
சமயம் ரோமன் கத்தோலிக்கம்

ஜோன் அமரதுங்க (JOHN AMARATUNGA, M.P ; (பிறப்பு: மே 21, 1940) இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கம்பஹாமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இத்தனை தடவை சிங்கள மக்களால் சும்மா தெரிவு செய்யப்பட்டிருக்க மாட்டார்.

17 hours ago, Paanch said:

மக்கள் ஏற்றுக்கொண்டு மகிழ்வோடு வாழ்வதற்கு இவர் என்ன செய்தார்...... ???

இவர் ஒரு சிங்கள கிறிஸ்தவர்.

இவரின் அலுவலகம் கந்தானையில் இருந்தது -  1987 இல்.

சிங்கள மக்கள் அவரை நாடி உதவிகள் கேட்க வருவார்கள்.

நான் ஒரு முறை இவரை சந்தித்து கதைத்திருக்கிறேன்.

நல்ல மனிதர் 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

ஜோன் அமரதுங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
ஜோன் அமரதுங்க
பதவியில் உள்ளார்
பதவியேற்பு 
1989
கம்பஹா மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு 
2010
தனிநபர் தகவல்
பிறப்பு மே 21, 1940(அகவை 78)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
பணி அரசியல்வாதி
தொழில் சட்டத்தரணி
சமயம் ரோமன் கத்தோலிக்கம்

ஜோன் அமரதுங்க (JOHN AMARATUNGA, M.P ; (பிறப்பு: மே 21, 1940) இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கம்பஹாமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இத்தனை தடவை சிங்கள மக்களால் சும்மா தெரிவு செய்யப்பட்டிருக்க மாட்டார்.

5 minutes ago, thulasie said:

இவர் ஒரு சிங்கள கிறிஸ்தவர்.

இவரின் அலுவலகம் கந்தானையில் இருந்தது -  1987 இல்.

சிங்கள மக்கள் அவரை நாடி உதவிகள் கேட்க வருவார்கள்.

நான் ஒரு முறை இவரை சந்தித்து கதைத்திருக்கிறேன்.

நல்ல மனிதர் 

http://www.dailymirror.lk/recomended-news/Politician-Involved-in-Acquiring-Property/277-162666

இந்த வேலையை செய்த அரசியல் வாதி ஜான் என்று கீழே பின்னூட்டம் இட்டுள்ளனர்.

5 minutes ago, Nathamuni said:

http://www.dailymirror.lk/recomended-news/Politician-Involved-in-Acquiring-Property/277-162666

இந்த வேலையை செய்த அரசியல் வாதி ஜான் என்று கீழே பின்னூட்டம் இட்டுள்ளனர்.

1987 இல் நல்லவராக இருந்தவர், இப்போதும் நல்லவர் என்று எனக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, nunavilan said:

ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள்

MR-MS-RW-CBK-2.jpg

ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள் என்பதை விட....
ஒரே வரிசையில் சிங்களவர்கள் என்பதே பொருந்துமென நினைக்கின்றேன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

1987 இல் நல்லவராக இருந்தவர், இப்போதும் நல்லவர் என்று எனக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியுமா?

ஆகா ... நல்லவரா இருந்தவர்.... நம்ம துளசியை பார்த்தாப் பொறவு தான் இப்படியாய் போனாரோ?😀

Edited by Nathamuni

9 hours ago, Nathamuni said:

ஆகா ... நல்லவரா இருந்தவர்.... நம்ம துளசியை பார்த்தாப் பொறவு தான் இப்படியாய் போனாரோ?😀

அவரை நாடி வரும் மக்களுக்கு நல்லது செய்பவர், நல்லவர்தானே!

அவரின் தனிப்பட்ட கொடுக்கல், வாங்கல் எல்லாம் நமக்கெதற்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.