Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகப்புத்தக காதலை நம்பிவந்த புலம்பெயர்தமிழர் பணம் -நகையை பறிகொடுத்துள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகம் ஊடாக காதலித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவர் 55 லட்ச ரூபாய் பணம் நகை என்பவற்றை யாழில் பறிகொடுத்துள்ளார். குறித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்தவர் பணத்தை பறிகொடுத்த நிலையில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் வாழ்வதாக கூறி முகப்புத்தகம் ஊடாக ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரை குறித்த பெண் காதலிப்பதாக கூறி முகநூலில் காதலித்துள்ளார்.அதனை நம்பி குறித்த புலம்பெயர் தமிழர் கோப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த தை மாதம் வந்துள்ளார். அவருடன் அவருடைய முகப்புத்தக காதலியும் வந்து ஒரு வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இவ்வாறு 14 நாட்கள் கடந்த பின்னர் திடீரென ஒருநாள் முகப்புத்தக காதலி வீட்டிலிருந்த பணம், நகைகள், பொருட்கள் என சுமார் 55 லட்சம் ரூபாயினை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவார் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://globaltamilnews.net/2019/114910/

  • கருத்துக்கள உறவுகள்

14 நாட்கள்...  சரிதான்

பேசின கணக்கு படி, காசை, நகையை தந்துட்டு, இப்ப களவெடுத்துக் கொண்டு ஓடிவிட்டார் என்று வேண்டுமென்றே சொல்கிறார் என்று சொன்னால், இவருக்கு தான் பிரச்சணை.

இவர் தமிழ் பேசினாலும், ஜெர்மனி நாட்டு உல்லாசப் பயணி என்பதை மறக்கக்  கூடாது.

இப்படித்தான்.... இங்க ஒருத்தர், இந்தியாவில வியாபாரம், முதலீடு செய்கிறேன் எண்டு கிளம்பினார். கடைசீல, அங்க ஓர் 33 வயது பெண், இரண்டு பிள்ளையளோட, இவரை மயக்கி, அங்கயே குடியமர்ந்து, இங்குள்ள இரண்டு வளர்ந்த பிள்ளைகளை விட்டு, மனைவிக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார், இங்குள்ள சட்டம் புரியாமல்.

புரோகிராசியார், வெறும் கையோட, மனிசியோட வந்து, இங்க உழைத்த சகலத்துக்கும், இந்தியாவில போட்டது  அனைத்துக்கும், 50% அவவுக்கு உரிமை, கொடுத்துப்போட்டு போலாம் எண்டோன்ன.... ஐயப்பனுக்கு பகிடி வெற்றி  தெரியல்ல... நான் சும்மா, பகிடி விட்டுப் பார்த்தான் எண்டு நெளிய.... மனிசி, பிள்ளையள், அதெல்லாம் சரிவராது, 50% வெட்டு எண்டு நிக்கினம்.

முழுசுறார்.....  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த ஜேர்மன் உல்லாச/சல்லாப பயணிக்கு ஊரிலை தூரத்து சொந்தபந்தம் ஏதாவது இருக்குமே?  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அந்த ஜேர்மன் உல்லாச/சல்லாப பயணிக்கு ஊரிலை தூரத்து சொந்தபந்தம் ஏதாவது இருக்குமே?  :unsure:

ஜேர்மன் என்றதும் நீங்களும் ஓடியாந்துட்டியளே  அந்த மனுசன் எதை நம்பி ஏமாந்தானோ ?😆

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இங்கு புலம்பெயர் தேசத்தில் நம்மவர் நேர்மையாக நடந்து கொள்வதுபோல் கதைக்கிறோம் எனது நண்பரின்கதையை சொன்னால் அனுதாபப்படுவீர்கள். 

இலண்டனில் வசிக்கும் ஒரு  தமிழ்த்தொலைக்காட்சி அறிவிப்பாளருடன் குறுகியநாள் நட்பு. இந்த அறிவிப்பாளர் தனது மனைவியுடன் சென்று சில நாட்கள் நண்பரின் குடும்பத்துடன் விடுமுறையை கழித்தபின் அவர்களின் பூர்வீகம் பொருளாதாரம் வாழ்க்கைவசதி என்பவற்றை அறிந்து திரும்பியபின் வட்ஸ்அப் இன்ஸ்ரகிராம் என்பவற்றினூடாக சிலமாதங்கள் தொடர்பை பேணியபடி இருந்த காலகட்டத்தில் திடீரென்று ஒரு குண்டை தூக்கிபோட்டார். ஒரு பொது விடயத்தில் தான் யாருக்கோ பொறுப்பு நிற்கப்போய் ஒரு சங்கடமான நிலையில் மாட்டுப்பட்டிருப்பதால் குறைந்தது ஒரு இலட்சம் பவுண்களாவது இருந்தால் தான் அதிலிருந்து மீளலாம் என்று கடல்கடந்து வாழும்  எனது நண்பருக்கு சொல்ல நண்பரும் தன்னால் இயன்ற ஒரு கணிசமான தொகையை உடனடியாக  தொலைக்காட்சி அறிவிப்பாளருக்கு கடனாக கொடுத்து உதவினார். ஒருமாத தவணையில் கடனை திருப்பி கொடுப்பதாக ஏற்பாடு.
 
சில மாதங்கள் கழிய கடனை திருப்பிக்கேட்ட நண்பருக்கு இந்தா வருகுது அந்தா வருகுது என்று பதில்சொல்லிகடத்திய தொலைக்காட்சி அறிவிப்பாளர் இறுதியில் உங்களிடம் வாங்கிய கடன் போல் மேலும் பலரிடம் வாங்கித்தான் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்தேன். எனக்கு உதவி செய்ததற்கு மிக்க நன்றி. மிகவிரைவிரல் சில இந்திய பிரபலங்களை அழைத்து  இசை நிகழ்ச்சியொன்றை செய்து அதில் கிடைக்கும் இலாபத்தில் உங்கள் அனைவரதும் கடன்களை அடைப்பேன் என்று உறுதியாக சொல்ல எனது நண்பரும் காத்திருந்தார். 

இப்போது அறிவிப்பாளர் செய்மதி தொலைக்காட்சியை விட்டு இணையதொலைக்காட்சிக்கும் மாறிவிட்டார். இசைநிகழ்ச்சி நடந்தபாடுமில்லை பணத்தை திருப்பிகொடுத்த கதையுமில்லை. அறிவிப்பாளரைச் சந்திப்பதானால் இலண்டனில்  விம்பிள்டன் பிள்ளையார் கோவில் சென்றால் ஆள் கறுப்பாக இருந்தாலும் அவரை காணலாம் என்று சிலர் சொல்லி நண்பர் அங்கு சென்றும் தேடினார் அங்கும் காணவில்லை எங்கு இருக்கிறார் என்றும் தெரியாது. அவருக்கு வளர்ந்த ஒரு ஆண்பிள்ளை ஜேர்மனி அல்லது பிரான்சிலும் ஒரு மகள் இலண்டனிலும் வசிப்பதாக தகவல்.  இலங்கையிலும் வானொலி அறிவிப்பாளராக தொழில் புரிந்தவர் பின் போர்காலத்தில் புலம்பெயர்ந்து வந்தவர். யாழ் இந்துவின் பழைய மாணவர். ஆள் பற்றிய தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். 

இவையனைத்தும் எனது கண்முன் நடந்தவை. எனது நண்பர் இந்த மோசடியில் அகப்பட்டு  ஒரு தமிழன் இன்னுமொரு தமிழனுக்கு இப்படியும் செய்வானா என்று மனநிலை குழம்பி போய் யாரிடம் போய் சொல்வது என்று தெரியாமல் விரக்தியுடன் அலைகிறார். 

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.