Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலூசிஸ்தான் எரிவாயு விநியோக குழாய்க்கு தீ – பலூச் விடுதலைப் புலிகள் பொறுப்பேற்பு…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலூசிஸ்தான் எரிவாயு விநியோக குழாய்க்கு தீ – பலூச் விடுதலைப் புலிகள் பொறுப்பேற்பு…

March 9, 2019

Baloch-Liberation-Tigers.png?resize=670%

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள எரிவாயுக் குழாய்க்கு தீ வைத்த சம்பவத்திற்கு பலூச் விடுதலைப் புலிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பலூசிஸ்தானில் உள்ள தேரா பக்தி பகுதியில் இருந்து பாகிஸ்தானின் ஏனைய பகுதிகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகின்ற நிலையில் நேற்றையதினம் சுயி எரிவாயு ஆலைக்கு அருகே உள்ள குழாய்க்கு தீவைத்து   இன்நதெரியாத நபர்கள் தீவைத்து  தகர்த்துள்ளதனால் பயங்கர சத்தத்துடன் குழாய் வெடித்து, தீப்பிடித்ததில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்ததாகவும் செய்தி வெளியாகியிருந்தது.

எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் இந்த சம்பவத்திற்கு பலூசிஸ்தான் விடுதலைக்காக போராடி வரும் பலூச் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  தங்கள் பகுதியின் இயற்கை வளங்களை பாகிஸ்தான் சுரண்டுவதாகவும், எரிவாயுவை பஞ்சாப் பகுதிக்கு கொண்டு செல்வதால் தங்கள் பகுதி மக்களுக்கு எரிவாயு கிடைப்பதில்லை எனவும் குற்றம்சுமத்தி அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/115576/

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் நோக்கமும்.. தேச விடுதலை என்பதாக இருக்கிறது. இஸ்லாமிய மதப் பயங்கரவாதமாக இருக்கக் கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

பலூசிஸ்தான் எரிவாயு விநியோக குழாய்க்கு தீ – பலூச் விடுதலைப் புலிகள் பொறுப்பேற்பு…

March 9, 2019

Baloch-Liberation-Tigers.png?resize=670%

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள எரிவாயுக் குழாய்க்கு தீ வைத்த சம்பவத்திற்கு பலூச் விடுதலைப் புலிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

றோ

இந்திய 'ரோ' இப்போது பகிரங்கமாக புகுந்து விளையாடுது!

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் என்ற பெயருக்கு சொந்தக்காரர்களாக அதிகாரபூர்வமாக  எந்த உரிமமும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இல்லாத நிலையை பயன்படுத்தி இயக்கத்தின் பெயருக்கு  களங்கம் கற்பிக்கும் அதி உச்ச தந்திரோபாய செயற்பாடுகளை இந்திய அரசு முன்னெடுத்துச்செல்வது இந்த காலகட்டத்தில் சாதாரண ஒரு செய்தியாக கருத முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

Bhindranwala Tigers Force of Khalistan

இப்படி ஒரு அமைப்பும் இருந்தது ஆகவே.....போர்குணத்தை காட்ட புலி என்ற அடையாளத்தை விடுதலை இய‌க்கங்கள்....தெரிவுசெய்கின்றன் என்பது எனது கருத்து...

  • கருத்துக்கள உறவுகள்

பாலுச்சிஸ்த்தான் பாக்கிஸ்த்தானின் காஷ்மீர் !

பாலுச்சிஸ்த்தானில் பாக்கிஸ்த்தானின் ஆக்கிரமிப்பிற்கெதிராகவும் பொருளாதாரச் சுரண்டலுக்கெதிராகவும் சில அமைப்புகள் போராடி வருகின்றன. அண்மையில்க்கூட, இப்பகுதியில் சீனாவின் முதலீட்டில் கட்டப்பட்டுவரும் எண்ணெய் வழங்கக் குழாயை இவர்கள் தகர்த்திருந்தனர். இது இரண்டாவது தடவையாக நடந்திருக்கிறது.

இவர்களுக்கு இந்தியா மறைமுக உதவிகளைச் செய்துவருகிறது. ஆயுதங்கள், பணம் மற்றும் தார்மீக ஆதரவு அடிப்படையில் இது நடைபெறுகிறது. ஈழத்தில் 80களின் ஆரம்பகாலத்தில் தமிழியக்கங்களுக்குச் செய்த அதே வகையான உதவிகளை இந்தியா பாலுச்சிஸ்த்தான் மக்களுக்குச் செய்கிறது. இது முழுக்க முழுக்க அம்மக்களுக்கான விடுதலைக்கு அல்லாமல், பாக்கிஸ்த்தானைத் தொடர்ச்சியாக ஒரு அழுத்தத்தில் வைத்திருக்கவும், சுமூகமான நிலையினை முற்றாக இல்லாதொழிக்கவுமே செய்யப்படுகிறது. 

சர்வதேச செய்தி நிறுவனங்கள் பல இம்மக்களது போராட்டத்தை ஆவணப்படமாகவும் செவ்விகளாகவும் எடுத்திருக்கிறார்கள். இம்மாகாணத்தில் பாக்கிஸ்த்தானிய அரசுக்கெதிராகப் போராடிவரும் போராளிகள் ஒரு நிலப்பகுதியை தமது கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இவர்களின் தலைவர் என்றழைக்கப்படும் முன்னாள் மன்னர் பரம்பரையைச் செர்ர்ந்த ஒருவர் வெளிப்படையாகவே இந்தியா தமக்கு உதவுவதை ஒப்புக்கொண்டுள்ளார். பாக்கிஸ்த்தான் அரசுக்கெதிரான தமது போராட்டத்திற்கு எவர் உதவிசெய்தாலும் தாம் வரவேற்பதாகக் கூறுகிறார்.

விடுதலைப் புலிகள் பற்றியும் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் பற்றியும் கரிசணை கொண்டுள்ள இம்மக்கள், புலிகள் அழிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ளமுடியாத, புரிந்துகொள்ள முடியாத ஒரு சம்பவம் என்று கூறுகிறார்கள். புலிகளை தாம் மாதிரியாகக் கொண்டு போராடிவருவதாகவும் கிலாகித்திருக்கிறார்கள். ஆனால், புலிகள் அழிந்ததுபோல தாம் அழியப்போவதில்லை, மாற்று வழிகள் பற்றிச் சிந்திக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

முடிந்தவர்கள் இவர்களது போராட்டம் பற்றி தேடிப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Who are the Baloch Liberation Tigers?

The Baloch Liberation Tigers is known to be a pro-freedom group formed in the year 2011.
The militant group considers Pakistan its opponents and has waged a struggle to claim equal rights for the Baloch people in Pakistan.
It believes the Baloch people have been oppressed by Pakistan for decades and now need to be liberated.
The group blew up the pipeline on Friday as they blame Pakistan for exploiting their resources, reported ANI.
The group has often protested the fact that gas from Balochistan is supplied to Punjab province of Pakistan whereas people in Balochistan have no fuel for themselves.
In the year 2013, the BLT had asked all Baloch leaders to refrain from contesting elections "sponsored by evil Pakistani establishment."
It had said that contesting these elections would be an insult to Baloch martyrs who have laid down their lives fighting for the rights of their people.
"We request all baloch people not to attend rallies of baloch leaders and do not vote to anyone, rather be at home and pray for success of our sarmachars," the BLT said in a press release. "Baloch leaders should remember sacrifice of our sarmachars and our proud heritage and culture, we hope they get enlighten and withdraw from elections."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.