Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த இரத்தத்தில் கைநனைத்தோர் |

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரத்தத்தில் கைநனைத்தோர் |

 

ஜெரா

 

By
 Jera Thampi
 -
54521523_1164016347110045_57610402949968
%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AF%E0%AE%BE%E0%

வன்னியைப் பெருநிலமென்பர். பெருமளவு விவசாய நிலமும், அதற்குச் சமனான பெருங்காடும் இருப்பதானாலேயே இப்பெயரைப் பெற்றதென்பர். வன்னியில் பூர்வீகமாக வாழும் மக்களைப் பற்றி ஆழமாக ஆராய்ந்தால், அந்தப் பெருநிலத்தைவிடப் பெரியளவான துயரமிகு கடந்த காலங்களைக் கடந்து வந்திருப்பர். பெரியளவான இயற்கை அனர்த்தங்கள், இடப்பெயர்வுகள், விலங்கு தாக்கங்கள், கிராம சண்டைகள், அந்நியர்களின் படையெடுப்புக்கள், அதனால் உண்டான போர்கள் என வன்னி பெருநிலம் கடந்து வந்த வரலாற்றின் பெரும்பாகம் அங்கு வாழும் மக்களின் இரத்தத்தால் கழுவப்பட்டதுதான்.

IMG_2202-300x200.jpgவன்னி மக்கள் சுமக்கும் இந்தத் துயரப் படலத்திற்குப் பின்னால், ஒரு நாட்டின் இராணுவம் மட்டுமே உள்ளது எனக்கூறமுடியாது. அவலங்களில் சிக்கி சின்னாபின்னமானோரைத் தேடிப் போய், அவர்களின் கதைகளைக் கேட்டால், அந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் பின்னால் பல்வேறு நாட்டவரின் கைகள் இருந்திருப்பதை அறியலாம். இவை இன்று நேற்றோ, இறுதிப் போர் வேளையிலோ இடம்பெற்றவையல்ல. மாறாக இலங்கையின் இனமுரண்கள் அரும்பத்தொடங்கிய காலத்திலேயே இடம்பெற்றிருக்கின்றன. அத்தகைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டு சாட்சியமாக எஞ்சியிருந்தோர், 2009 இல் இறந்துபோயினர். அதிலும் எஞ்சிய ஒருவர்தான், இந்தப் படுகொலை சம்பவத்தின் சாட்சியாக இருக்கிறார்.

வன்னியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடுவுக்குப் பின்புறமாக பிரமந்தனாறு எனப் பெயர்பெறும் விவசாய கிராமம் ஒன்றுள்ளது. அந்தக் கிராமத்தின் தொடக்கப்பகுதியில் இருக்கிறார் விநாயகமூர்த்தி கணேசமூர்த்தி. 60 வயதை நெருங்கியவர். பரிகாரியார். (நாட்டு வைத்தியர்). அத்துடன் இயற்கை அனர்த்தங்களை எதிர்வு கூறக்கூடியவர்தான் என அறிமுகம் செய்கிறார். 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சுனாமி பேரனர்தத்தை ஒரு மாதத்திற்கு முன்பே எதிர்வு கூறியிருக்கிறார். அதற்குச் சான்றாக அவர் கூறிய எதிர்வு கூறலை மேற்கோள்காட்டி வெளியான பத்திரிகை செய்திகளின் துண்டங்களை கத்தரித்து கோவையிட்டும் வைத்திருக்கிறார்.

ஐயா உங்கட வாழ்க்கையில மறக்க முடியாத சம்பவம் ஒன்ற சொல்லுங்கோவன்?எனக்கேட்டால், அவர் ‘அந்த சம்பவத்தை’ உடனடியாகவே நினைவுபடுத்துகின்றார்.
‘1985 ஆம் ஆண்டு பத்தாம் மாசம் ரெண்டாம் திகதி, காலம இருக்கும். நான் வீட்டில இருந்து வெளிக்கிட்டு பள்ளிக்கூடம் வந்துகொண்டிருந்தன். அப்ப எனக்கு 13 வயது. இப்ப சங்கக் கடை இருக்கிற இடத்தில அருள்முருகன் ரேடர்ஸ் என்றொரு கடையிருந்தது. அதின்ர முதலாளி சிவபாதம். நான் கடையடிக்கு வர, கடைக்குப் பின்னால இருந்து ரெண்டு ஆமிக்காரர் என்னைக் கூப்பிட்டாங்கள். நான் பயத்தில ஓடவும் முடியாமல், அவங்களிட்ட போனன். முகத்தில கரி பூசியிருந்தாங்கள். ஓரளவு கிட்ட போனதும், என்னைப் பிடிச்சிற்றாங்கள். நேர கடைக்குப் பின் பக்கமாக இழுத்துக்கொண்டு போனாங்கள். அங்க பார்த்தால், நிறைய ஆமிக்காரர் வரிசையில படுத்துகிடக்கிறாங்கள். சிலர் முகத்துக்கு கரி பூசியிருக்கிறாங்கள். பக்கத்தில இருந்த பற்றைக்காடெல்லாம் ஆமிக்காரர் இருந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறாங்கள். ஆனால் அதில் அனேகம் பேர் வெள்ளக்காரங்கள். எங்கட ஆக்கள் இல்ல.

பிறகு அறிஞ்சன், இஸ்ரேல்காரர் இங்க வந்து, எப்பிடி ஆக்கள படுகொலை செய்யிறதென்று ட்ரெயினிங் குடுத்தவங்களாம். அந்த ட்ரெயினிங் தான் அன்றைக்கு அங்க நடந்தது’. வேள்ளைக்காரர் என்றதும், அவருடன் உரையாடுவதில் புதிய உற்சாகம் ஏற்பட்டுவிடுகிறது. ‘இது புதுசா இருக்கே’ என்ற சிந்தனை மேலிட பரிகாரியாரின் கதையைக் கேட்கக் காதுகளைக் கூர்மையாக்கிக்கொள்கின்றேன்.

அந்த இடத்தை சுற்றிப்பார்த்தன். பிரமந்தனாற்றை சேர்ந்த அதிகமான ஆம்பிளைள் அங்க பிடிபட்டிருக்கிறாங்கள். எல்லாரின்ர கைகளும் பின்னுக்கு கட்டப்பட்டிருக்கு. எல்லாரையும் முட்டுக்காலில் குனிஞ்சபடி வரிசையில் இருத்திவச்சிருக்கினம். அதை நான் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கேக்குள்ளயே, என்னை பிடிச்சிக்கொண்டு வந்தவங்களில் ஒருவன், தன்ர பாக்ல இருந்து ஆண்கள் அணியும் பழைய உள்ளாடை ஒன்றை எடுத்தான். அதை என்ர முகத்தில கண்ணை மறைக்கும்படி போட்டான். மற்றாக்களுக்கும் அப்படித்தான் உள்ளாடைகள போட்டு கண்ண மறைச்சிருக்கிறாங்கள். எனக்கு தலை சின்னனெண்டபடியாலும், உள்ளாடையின்ர துணி கண்ணறையா இருந்தாலும், வெளியில என்ன நடக்குதென்று மங்கலாக தெரியுது. உள்ளாடைய என் தலைக்கு மாட்டிவிட்டிற்று, கடையில கிடந்த இழக் கயிற்றைக் கொண்டு வந்து, என்ர கைய பின்னால இழுத்து கட்டினவங்கள். கட்டிப்போட்டு, என்ர பின்பக்கத்த நல்லா மடிச்சி, கட்டின கை வளைவுக்குள்ள இழுத்து செருகினாங்கள். எனக்கு கை நீளமா இழுபட்டமாதிரி இருந்தது. அப்பிடியே என்னைய தூக்கி, மண்ணெண்ணெய் பெரலோட சாத்திவிட்டாங்கள். என்னைய சாத்திவிட்டிற்று அதில நின்ற ரெண்டு ஆமிக்காரரும், றோட்டுக்குப் போனாங்கள்.

றோட்டில சத்தியசீலன் சயிக்கிளில் வந்துகொண்டிருக்கிறார். அவர் கள்ளிறக்கும் வேலைதான் செய்யிறவர். என்னைய எல்லாம் தன்ர சயிக்கிளில் பள்ளிக்கூடம் ஏத்திக்கொண்டு போய் விடுறவர். நல்ல திடகாத்திரமான ஆம்பிள. இடுப்பில சரம் நல்லா மடிச்சிக் கட்டியிருக்கிறார். கள்ளு சீவுறதுக்கான கத்தி பெட்டி இடுப்பில இருக்கு.

british_mercenaries_training_srilanka_poசத்தியசீலன மறிச்சி, ஏதோ தென்னை மரத்தக் காட்டி கேட்டாங்கள். அவர் சயிக்கிள நிப்பாட்டிப்போட்டு, அவடத்தில நின்ற தென்னையில் ஏறி, பெரியதொரு இளநீர் குலைய இறக்கினார். அவர் இறக்கின கையோட எல்லா ஆமிக்காரரும் அவடத்துக்குப் போயிற்றாங்கள். சத்தியசீலன் நல்ல ஸ்ரைலா இளநீர் வெட்டி குடுக்க எல்லாரும் குடிக்கிறாங்கள்.

இந்த சந்தர்ப்பத்தில நான், என்னை சாத்தி வச்சிருந்த எண்ணெய் பெரலுக்கு, எண்ணெய் வெளிய வாறதுக்கு பொருத்தியிருந்த பைப்பில இழக்கயிற்று முடிச்ச செருகி ரெண்டுதரம் இழுத்தன் கட்டு அவிழ்திற்று. அந்த நாளையில எண்ணெய் அளந்துகுடுக்க பெரலில் அப்படியொரு பைப் பொருத்தியிருப்பாங்கள். இப்பத்தையான் தண்ணி பைப் மாதிரி இருக்கும். கை அவிழுப்பட்டதும், நான் அங்க நடக்கிற சம்பவங்கள வடிவா பார்க்கத்தொடங்கினன்.

சத்தியசீலன் இளநீர் எல்லாம் குடுத்து முடிச்சிற்று, வெளிக்கிட்டுப்போறதுக்கு சயிக்கிள எடுத்தார். உடன அதில நின்ற ஆமிக்காரன் சத்தியசீலனின் நெத்திக்கு நேர துவக்க நீட்டினான். எனக்கு விளங்கீற்று, ஆளுக்கு சூடு விழப்போகுதென்று. சத்தியசீலன் சயிக்கிள துவக்க நீட்டின ஆமிக்கு மேல தள்ளிவிட்டார் அவன் எதிர்பார்க்காமல் இடறுப்பட்டு விழ, திருப்பியும் சயிக்கிள தூக்கி அவனுக்கு மேல போட, சயிக்கிள் பாருக்குள்ள அவனின்ர தலை சிக்கீற்று. ஆனாலும் அவன் தன்ர ரெண்டு கையாலும் சத்தியசீலன பிடிச்சிக்கொண்டான். மற்ற ஆமிக்காரர் சுட வலம்பார்க்கிறாங்கள். ஆனால் சத்தியசீலன் தன்ர பாலக் கத்திய எடுத்து, சயிக்கிள் கொழுவுப்பட்ட ஆமிக்காரரின் கழுத்துக்கு கிட்ட கொண்டு போறார். அவன் தள்ளுப்பட்டு தடுக்கிறான். இப்பிடியே கொஞ்ச நேரம் இழுபட, மற்ற ஆமிக்காரர் எல்லாம் ஓடிவந்து சத்தியசீலன பிடிச்சி தனி எடுத்திட்டாங்கள். சத்தியசீலன உதைஞ்சி கீழ விழுத்தி, தறதறவென்று இழுத்துக்கொண்டு போய் பக்கத்தில இருந்த மதகில கிடத்தினாங்கள். மல்லாக்க கிடத்திப்போட்டு, அவர் இடுப்பில கட்டியிருந்த சரத்த மேல தூக்கிப்போட்டு, அவரின் அந்தரங்க உறுப்பிலயே மாறிமாறி சுட்டாங்கள். அந்த இடத்திலயே அவரின்ர உடம்பு சல்லடையாகிற்று.

அந்த வார்த்தைகளில் இருக்கும் வலி நம்மை தொற்றிக்கொள்கிறது. கவலையும், பயமும் மேலிட பரிகாரியின் வார்த்தைகளை எதிர்பார்க்கிறேன்.
”இனி இங்க இருக்கிற ஆபத்தென்று விளங்கிற்று. நான் ஒவ்வொருவராக கட்டியிருந்த ஆக்கள அவிழ்க்கிறன். ஓவ்வொருவரும் மாறிமாறி மற்ற ஆக்கள அவிழுங்கோ. பின்பக்கத்தால ஓடுவம் என்று கிசுகிசுத்தன். ஆனால் ஒவ்வொருவரையும் நான் அவிழ்த்ததுதான் தாமதம், மற்றாக்கள அவிழ்க்காமலே ஓடத்தொடங்கீற்றாங்கள். சரியா நினைவில்ல, கிட்டத்தட்ட 15 பேர் இருக்கும். கடைசியா இருந்தவர அழித்துவிட ஆள் கடையின்ர முன்பக்கத்தால வெளிக்கிடுது. போக வேண்டாம், போனால் சுடுவாங்கள் என்று சொன்னன். இல்ல தம்பி, என்ர மணிக்கூட்ட பறிச்சிப்போட்டாங்கள். அதை வாங்கிக்கொண்டு வாறன் என்று கடைக்கு வெளியால போனார். நான் பின் பக்கத்தால ஓடத் தொடங்கினன். கடைப் பக்கம் ஒரே வெடிச்சத்தம் கேட்கத் தொடங்கீற்று. பிறகு ஹெலிஹொப்ரர் சுத்தி சுத்தி அந்தப் பகுதியெல்லாம் சுட்டது. நாங்கள் ஒழிச்சிற்றம்.

பின்னேரம்போல கடையடிப் பக்கம் போய் பார்த்தம். ஒரே பிணக்காடாக இருந்து அந்த இடம். அந்த இடத்திலயே 17 பேர் இறந்து கிடந்தாங்கள். தூரத்தூரமாக சுட்டுப்போட்டிருந்தாங்கள். சில நாட்களுக்குப் பிறகும் ஆக்களின்ர உடற்பாகங்கள் வயலுகளில் கிடந்தும், மிருகங்கள் சாப்பிட்டபடியும் எடுத்தனாங்கள். நான் நினைக்கிறன், அந்த சம்பவத்தில 30 பேருக்குக் கிட்ட சுடப்பட்டிருக்கலாம்’
பரிகாரியாரின் உரையாடல் நிறைவடைய, அவரின் முகத்தில் ஒரு பாரக்குறைவு தென்பட்டதைப்போன்றிருந்தது. இப்படியாக வன்னியில் வாழும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் வலிமிகு துயரக் கதைகள் ஏராளமானவை. அவற்றில், இதுபோன்று, நம்பமுடியாத சில உண்மை சம்பவங்களும் உண்டு.

http://oorukai.com/?p=2386&fbclid=IwAR3DOSACc7DO3qlxsyuMe26o1Tixk-N0jCBNBm1GSPfnSTKaKy90J5WUHa0

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தின் கண்முன்னே ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைகளை இல்லை என்று அரசும், அதற்குச் சார்பான உலகநாடுகளும் மறுக்கும்போது..... எதிராக எதுவுமே செய்யமுடியாத கையறு நிலையில் எஞ்சிய தமிழினம் இருக்கும்போதும்.... இந்த ஒரு பரிகாரியார் சொல்வதைமட்டும் உண்மை என்று நம்பச்சொன்னால்! எவர் நம்புவார்கள்.!! 'ஏழைசொல் அம்பலம் ஏறாது.' இன்றைய தமிழன்சொல் உலகத்தில் ஏறாது. 

  • கருத்துக்கள உறவுகள்

85ம் ஆண்டே/அதற்கு முதல்  இஸ்ரேல்காரன் ஊர்ல இருந்திருக்கான்....ஆச்சரியமாய் இருக்கு 
 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜப்பான் காரனுக்கு மூளையே இல்லை. சும்மா சுனாமி எச்சரிக்கை வலையமைப்பு அது இது எண்டு காச கரியாக்கிறான். எங்கட பரியாரியை கொண்டே கடல் நடுவில ஒரு கம்பில கட்டித் தொங்கவிட்டா, மனிசன் ஒரு மாசத்துக்கு முன்னமே வானிங் கொடுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

85ம் ஆண்டே/அதற்கு முதல்  இஸ்ரேல்காரன் ஊர்ல இருந்திருக்கான்....ஆச்சரியமாய் இருக்கு 
 

https://wideawakegentile.wordpress.com/2014/09/29/srilanka-mossad-ltte-and-the-rajiv-gandhi-assassination/

83 ல் ஜே.ஆரால் புலிகளை அழிக்க  மொசாட் வரவழைக்கப்பட்டது. 

 

13 hours ago, goshan_che said:

இந்த ஜப்பான் காரனுக்கு மூளையே இல்லை. சும்மா சுனாமி எச்சரிக்கை வலையமைப்பு அது இது எண்டு காச கரியாக்கிறான். எங்கட பரியாரியை கொண்டே கடல் நடுவில ஒரு கம்பில கட்டித் தொங்கவிட்டா, மனிசன் ஒரு மாசத்துக்கு முன்னமே வானிங் கொடுக்கும்.

நீங்கள் எப்ப யாழுக்கு வருவீர்கள் என்பதை கடல் நடுவே கம்பில கட்டி தொங்க விட்டால் தெரிந்து விடும்.😋

  • கருத்துக்கள உறவுகள்

இதன் காணொளி 3-4 நாட்களுக்கு முன்பு நாதமுனியால் இணைக்கப்பட்டிருந்தது.
ஐபிசி யால் தயாரிக்கப்பட்டிருந்தது.

70 களின் கடையிலேயே இஸ்ரேல் உள்நுழைந்துவிட்டதென்றே எண்ணுகிறேன்.

இராணுவத்தை இருத்த முதல் மக்களை அங்கே குடியேற்றி பின்னர் இராணுவமும் விகாரைகளையும் உருவாக்க இவர்கள் தான் காரணம் என்று முன்னர் யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது  இனத்தின்  ரத்தத்தில் தோய்ந்த  நாடுகள் நூறுக்கு  மேல்..

அத்துடன்  அநேகமான அரச  அரச  சார்பற்ற அமைப்புக்களும்  தான் (ஐநா  உட்பட)

 

இவை  எமக்கான  நீதியை தீர்வை  தரமாட்டா

ஆனால் எமக்கு  ஒரே  ஒரு  நம்பிக்கையுண்டு

எமக்கான  தீர்வை  நீதியை  தராமல்

இவர்களால் நீதி தர்மம்  பற்றியோ

இன்னொரு  இனத்துக்குள்ளோ அல்லது மக்களுக்குள்ளோ

நீதி தீர்வு  தர்மம்   என்று  சொல்லி  புகவோ

அல்லது சமாதானம் பற்றி  பாடமெடுக்கவோ  இனி  வரலாறு  இடம் தராது

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.