Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்தவர் இலங்கை தமிழரான நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

56598170_1305297299594766_50760681603276

.காலில் காயங்களோடு இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் காணப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது அவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று  மாலை 3.20 மணியளவில் வட மேற்கு லண்டனில் ஹாரோ பகுதியில் வலம்புரி காஷ் அண்ட் கரி என்ற கடையில் ஒருவர்  கத்திக்குத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அந்த பகுதியில் கத்தியுடன் ஓடித்திரிந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

56509984_280404552891873_301947685221852

 இந்நிலையில் கத்திக்குத்துக்கு உள்ளானர் மீட்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து , இறந்தவர் தமது கடைக்கு ஓடி வந்து கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டதாகவும் அரை மணி நேரம் கழித்தும் வெளியே வராத காரணத்தால் தாம் அங்கு சென்று பார்த்த போது அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் கடையின் பணியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் எல்லா இடங்களிலும் இரத்தம் காணப்பட்டதாகவும் உடனே பொலிசாருக்கும் நோயாளர் காவு வண்டிக்கும் தான் தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்தார். .

56496339_2340873722861496_35696693740862

தமது சி.சி.டிவி கமராக்களை பொலிசார் பார்வையிட்டதாகவும் அதில் உயிரிழந்தவர் - காலில் இரத்தக் காயத்துடன் சாதாரணமாகவே நடந்து சென்றது பதிவாகியுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் தமது கடைக்கு அருகிலுள்ள பலசரக்குக் கடையில் வேலைபார்த்து வந்தவரெனவும் எப்பொழுதும் தமது கடைக்கு வந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருப்பார் எனவும் தெரிவித்துள்ள கடை உரிமையாளர் அவர் நல்ல மனிதன் என்றும் வன்முறைகளில் ஒருபோதும் ஈடுபடாதவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர் ஒரு இலங்கை தமிழர்  என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

56618709_2354239541510815_17311772783620

இதேவேளை இவரது மரணம் குறித்து பிரேதப் பரிசோதனையின் பின்னரே தீர்மானிக்க முடியும் என ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது கத்தி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து இன்னமும் அறியப்படவில்லை என்றும் வேறு வகையான ஆயுதங்கள் எவையும் சம்பவ இடத்துக்கு அருகில் காணப்படவில்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதொடு சம்பவம் தொடரிபில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

http://www.virakesari.lk/article/53522

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தமிழாக்களும் இப்ப கத்தி தூக்க வெளிக்கிட்டினமோ😟

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

லண்டனில் தமிழாக்களும் இப்ப கத்தி தூக்க வெளிக்கிட்டினமோ😟

லண்டன் தமிழாக்கள் ரூற்றிங்கில் பொலிஸ் ஸ்ரேசனுக்கு முன்பே ஒருவரைக் கண்டதுண்டமாகப் பத்து ஆண்டுகளுக்கு முன் வெட்டியவர்கள் ரதி. 

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய கொலையாளிகளை உடனடியாக நாடு கடத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இரங்கல்கள்..!

 

'கூகிள் மேப்'பில் பார்த்ததில் ஊரை பார்த்தா நல்லாதான் இருக்கு, வந்த இடத்தில் சச்சரவு இல்லாமல் பொழைச்சமா, வாழ்ந்தோமான்னு இல்லாமல் ஏன் இந்த முரண்பட்ட வாழ்க்கை? 🙄

Lon.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.