Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று தமிழ்ப்புத்தாண்டா? அது உண்மையா?

Featured Replies

  • தொடங்கியவர்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

57198855-2292871684285090-62767385386460

1928 லே இந்து பண்டிகையாக இருக்கு 

அது போக இப்ப விதண்டா வாதம் வைக்கிற ஆட்களிடம் ரதி அவர்கள் முன்னோர்களை 10 சந்ததியினருக்கு முன்னர் உள்ள ஆட்களின் பெயரை கேட்டால் சொல்லாமாட்டார்கள் இப்படித்தான் இருக்கு நிலமை அப்படி சரியாக சொன்னாலும் அதை ஆரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனென்றால் அவர்களைத்தான் யாருக்கும் தெரியாதே  அது போலத்தான் இதுவும்  அவர்களும் கொண்டாடித்தான் இருப்பார்கள் 

1832 ல் Bramin New Year ஆக இருந்த‍து 1928 இந்து புதுவருடமாக இப்போது தமிழ் புது வருடமாக  திரிவடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.  தனிக்காட்டு ராஜா நீங்கள் கூறியது போல் 10 சந்ததி என்ன 2 - 3 சந்த‍த்திக்கு முன்கூட எவரையும் தெரியாது. காரணம் இந்த இந்து பைத்தியக்கார கலண்டர் முறை. நல்ல வேளை ஐரோப்பியர் இங்கு வந்து  அறிவு பூர்வமான கலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார்கள். அல்லது இப்போதும்  100 வருடத்திற்கு முன்பு என்ன நடந்தத‍து என்பது தெரியாத பேதைகளாக நாம்இருந்திருப்போம். ஐரோப்பியர் இங்கு எம்மை அடிமை படுத்தினாலும் கல்வியை கொடுத்தார்கள். ஆரியர்கள் மற்றயவர்களுக்கான கல்வியை  மறுத்து அடிமுட்டாள்கள் ஆக்கினார்கள். அறிவுக்கு ஒவ்வாத மூடப்பழங்களை பரப்பினார்கள்.

 @ மல்லிகை வாசம் மீண்டும் உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நீங்கள் கூறிய தகவல் தவறு  3000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர் செய்த அட்டூழியங்கள் என்று கூறி இருந்தீர்கள்.  அது தவறு 2000 ஆண்டுகளாக  அவர்கள் செய்த செ்யது வரும்  அட்டூழியம் என்று கூறினால் தான் சரியாக இருக்கும். ஏனென்றால் வெறும் 200 வருடத்திற்கு முதல் ஆங்கிலேயர் தடைச்சட்டம் கொண்டுவரும் வரை உடன்கட்டை ஏறுதலை நடைமுறைப்படுத்தினா்கள். பெண்களை கோவலில் பொட்டுக்கட்டிவிடும் தேவதாசி முறையை  நடைமுறைப்படுத்தினார்கள். இந்த முட்டாள்தனங்களை  ஆங்கில அரசு தடை செய்த போது எமது சமய நம்பிக்கை புண்படுகிறது என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதையும் மீறி தான் ஆங்கில அரசு  இந்தமுட்டாள் தனங்களை தடை செய்த‍து.  இன்னும் ஒரு தகவல் இந்தியாவில் பிளேக் நோய் பரவிய போது அதை தடுக்கும் முயற்சியில் ஆங்கில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்த‍து. அதற்காக பிளேக் நோயை பரப்பும் எலிகளை  அழித்த போது எமது பிள்ளையாரின் வாகனத்தை கொன்று ஆங்கிலேயர் மத நம்பிக்கையை புண்படுத்துவதாக இந்த  கும்பல் ஓலமிட்ட வரலாறும் உண்டு.

  • Replies 89
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Justin said:

இந்துக்களின் பண்டிகையை தமிழ் பண்டிகை என்று அழைப்பது பொருத்தமில்லை என்று சொன்னால் இவ்வளவு மூர்க்கமான எதிர்ப்பா? இந்த எதிர்ப்பின் கீழே இழையோடும் மதவாதம்  தான் நெருட வைக்கிறது. பத்து தலைமுறைக்கு முன்னால் நபர்களின் அடையாளம் என்ன, பெயர்கள் என்ன என்று வேறு கவலைப் படுகிறார்கள்! ஏன் கண் முன்னால் இருக்கும் இந்த தலைமுறையின்/நபரின் அடையாளம் போதாதா? அதுவல்லவா முக்கியமானது?  

கிறிஸ்தவத்திலும் பல பிரிவுகள் உள்ளனவே?  ஐயா தாங்கள் எப்படி? :grin:

எந்த பகுதியின் சார்பு?  :cool:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மல்லிகை வாசம் said:

இன்னொரு மதத்தவரின் நம்பிக்கையை தெளிவாக விளக்கியும் மீண்டும் மீண்டும் புண்படுத்தினால் எதிர்க்கமாட்டார்களா? இது மதவாதம் அல்ல. ஒருவரது நம்பிக்கையை புண்படுத்தும் போது இயற்கையாக ஏற்படும் கோபம். நீங்கள் வாழும் நாட்டில் இப்படி மத நம்பிக்கையைப் புண்படுத்தும் சூழல் தானா காணப்படுகிறது. நீங்களும் அதை ஆதரிக்கிறீர்களா?

நான் எல்லா மதங்களையும் மதிப்பவன். ஆனால் இவர்கள் தான் குறை காண்கிறார்கள். 

இங்கே மத நம்பிக்கை எங்கே புண்படுத்தப் பட்டது? இந்து மதத்தின் ஒரு பண்டிகை தமிழரின் பண்டிகை அல்ல என்பதே வாதம்! அது சரியானதா என்று வாதிட ஏன் புண்பட வேண்டும்? நத்தார் தமிழரின் பண்டிகை அல்ல என்று எனக்கு யாரும் சொன்னால் நான் அதை புண்படுத்தலாகப் பார்க்கப் போவதில்லை! றமழான் தமிழரின் பண்டிகை அல்ல என்று யாரும் சொன்னால் ஒரு இலங்கை முஸ்லிம் அதை புண்படுத்தலாகப் பார்க்கப் போவதில்லை! ஏன் இந்துக்கள் மட்டும் தமிழோடு இந்து மதமும் இணைக்கப் பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? அது மறுதலிக்கப் படும் போது அது இந்துக்களை ஏன் புண்படுத்துகிறது? இது மத வாதமாக எப்படி இல்லாமல் போகிறது என்று விளக்குக்கள்?

15 hours ago, மல்லிகை வாசம் said:

தமிழ்ப் புத்தாாாண்டு என்று நாம் கொண்டாடுவதற்்கான விளக்கத்தை ஏற்கனவே நா தந்துவிட்டேன். 

ஐரோப்பியர், மத்திய கிழக்கினர் இன்னும் பிற அந்நியர் தமது மதத்தை ஈழத்தில் திணிக்கும் முனனர் அங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் - தமிழர்கள் கொண்டாடிய புத்தாண்டு என்றபடியால் தமிழ்ப் புத்தாண்டு என்று பரவலாக அழைக்கப்படுகிறது என்று சொன்னேன். அக்காலத்தில் இந்துக்கள் , தமிழர் எல்லாம் ஒருவரே. இதனால் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வது தவறல்ல. 

இன்று ஆங்கிலப் புத்தாண்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு சித்திரைப் புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என அழைக்கின்றனர். ஆனால் இது மதம் சார்ந்த பண்டிகையே. 

ஐரோப்பியரின் மதங்களை இங்கு குறிப்பிட வேண்டிய காரணம் மீண்டும் மீண்டும் நீங்கள் ஆரியத் திணிப்பைக் காரணம் காட்டி எழுதியதால் தான்.

துண்டு துண்டாக கருத்துக்களைப் பார்க்காமல், முழுக்கருத்துக்களையும் வாசித்தால் நான் சொன்னது புரிந்திருக்கும். 

 

 

 

ஒ.கே, உங்கள் வாதப்படி ஆரியர் திணித்ததை தமிழர்கள் ஏற்றுக் கொண்டதால் இந்துப் புத்தாண்டு தமிழ் புத்தாண்டாக ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும்! அப்ப ஐரோப்பியரும் அரேபியரும் திணித்த மதங்களின் பண்டிகைகளும் தமிழ்ப்பண்டிகைகளாக ஏற்றுக் கொள்ளப் பட வேண்டுமா? திணித்த காலம் தானே வித்தியாசம்? திணிப்பு ஒன்று தானே?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடையாளம் என்பது எது ??? கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா ????

நீங்கள் என்னவென்று நீங்கள் உணர்வதே அடையாளம்! நான் உணர்வது முதலில் நான் தமிழன், பின் நான் கிறிஸ்தவன், பின் நான் அமெரிக்கன், கடைசியாக நான் ஒரு விஞ்ஞானி! இவற்றையெல்லாம் பெருமையோடு நான் சம்பந்தப் படுத்துவதில்லை! நான் பெருமையோடு அணியும் அடையாளம் அப்பா என்ற அடையாளம் மட்டுமே!

 

15 hours ago, குமாரசாமி said:

கிறிஸ்தவத்திலும் பல பிரிவுகள் உள்ளனவே?  ஐயா தாங்கள் எப்படி? :grin:

எந்த பகுதியின் சார்பு?  :cool:

இது ஏன் இங்கே முக்கியம்?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/14/2019 at 6:28 PM, நீர்வேலியான் said:

இது எல்லோராலும் முடியாது, குறிப்பாக தமிழ் பெண்கள் மத்தியில். பச்சை முடிந்துவிட்டது.  

எங்கள் இந்த சந்ததியில் மட்டும் தான். அதன்பின் வெளிநாடுகளில் குறைந்துவிடும். ஏற்கனவே முன்பும் இதுபோன்ற பல திரிகள் யாழில் ஓடியிருக்கின்றன. எத்தனையோ எழுதலாம் ஆனால் எந்தப்பயனும் இல்லை என்பதால் எழுதவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Justin said:

நீங்கள் என்னவென்று நீங்கள் உணர்வதே அடையாளம்! நான் உணர்வது முதலில் நான் தமிழன், பின் நான் கிறிஸ்தவன், பின் நான் அமெரிக்கன், கடைசியாக நான் ஒரு விஞ்ஞானி! இவற்றையெல்லாம் பெருமையோடு நான் சம்பந்தப் படுத்துவதில்லை! நான் பெருமையோடு அணியும் அடையாளம் அப்பா என்ற அடையாளம் மட்டுமே!

 

இது ஏன் இங்கே முக்கியம்?

தேவை என்பதால் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கள் இந்த சந்ததியில் மட்டும் தான். அதன்பின் வெளிநாடுகளில் குறைந்துவிடும். ஏற்கனவே முன்பும் இதுபோன்ற பல திரிகள் யாழில் ஓடியிருக்கின்றன. எத்தனையோ எழுதலாம் ஆனால் எந்தப்பயனும் இல்லை என்பதால் எழுதவில்லை.

 

உங்களுக்கு தமிழன் என்ட அடையாளம் இல்லாமல் ***** மாதிரி எங்கட இனம் அழிந்து போகணும்...அதுக்கு தானே போராடுகிறீர்கள்...வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎4‎/‎16‎/‎2019 at 11:55 AM, ரதி said:

பூசம் என்னும் நட்சத்திரம் முருகனுக்குரியது...அதாவது தை மாசம் பூச நட்சத்திரத்தில் முருகன் பிறந்தார் 🤔

 

,முருகனுக்கு பார்வதி வேல் கொடுத்த நாள் தான் தை பூசம் என்று கள உறவு ஒருவர் தனி மடலில் சுட்டிக் காட்டி இருந்தார்...பிழையான தகவலுக்கு மன்னிக்கவும் 
 

On 4/17/2019 at 8:23 AM, tulpen said:

மல்லிகை வாசம் மீண்டும் உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். 

பரவாயில்லை ருல்பென். இதில் என்ன தொந்தரவு இருக்கு. 😊

On 4/17/2019 at 8:23 AM, tulpen said:

நீங்கள் கூறிய தகவல் தவறு  3000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர் செய்த அட்டூழியங்கள் என்று கூறி இருந்தீர்கள்.  அது தவறு 2000 ஆண்டுகளாக  அவர்கள் செய்த செ்யது வரும்  அட்டூழியம் என்று கூறினால் தான் சரியாக இருக்கும்

இந்த ஆண்டுக் கணக்குகள் குழப்பகரமானதாக இருக்கக் காரணம், ஆரிய வருகை என்பது ஒரு குறுகிய காலத்தில் நிகழ்ந்திருக்கச் சாத்தியமில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்திருக்கலாம் என்றும் சில தகவல்கள் சொல்கின்றன. இது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் முழுமையாக முடிந்து உறுதியான ஓர் ஆண்டுக்காலம் சொல்லப்பட முடியுமா என்று எனக்குச் சந்தேகமாக உள்ளது. புதைபொருள் ஆராய்ச்சியையும், பழங்கதைகளையும் வைத்தே இது பற்றி அனுமானிக்க வேண்டியதாக உள்ளது.

On 4/17/2019 at 8:23 AM, tulpen said:

னென்றால் வெறும் 200 வருடத்திற்கு முதல் ஆங்கிலேயர் தடைச்சட்டம் கொண்டுவரும் வரை உடன்கட்டை ஏறுதலை நடைமுறைப்படுத்தினா்கள். பெண்களை கோவலில் பொட்டுக்கட்டிவிடும் தேவதாசி முறையை  நடைமுறைப்படுத்தினார்கள். இந்த முட்டாள்தனங்களை  ஆங்கில அரசு தடை செய்த போது எமது சமய நம்பிக்கை புண்படுகிறது என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதையும் மீறி தான் ஆங்கில அரசு  இந்தமுட்டாள் தனங்களை தடை செய்த‍து.  இன்னும் ஒரு தகவல் இந்தியாவில் பிளேக் நோய் பரவிய போது அதை தடுக்கும் முயற்சியில் ஆங்கில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்த‍து. அதற்காக பிளேக் நோயை பரப்பும் எலிகளை  அழித்த போது எமது பிள்ளையாரின் வாகனத்தை கொன்று ஆங்கிலேயர் மத நம்பிக்கையை புண்படுத்துவதாக இந்த  கும்பல் லமிட்ட வரலாறும் உண்டு.

இப்படிச் சில சம்பவங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலேயரின் ஏறத்தாழ 150 வருடக் கொள்ளையை நியாயப்படுத்த முடியாது ருல்பென். அந்நியர் ஆட்சியில் சில மனிதாபிமானமுள்ள மனிதர்களும் பதவியில் இருந்துள்ளனர். அவர்கள் காலத்தில் இவ்வாறான நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது வியப்பல்ல. 

ஒரு நாட்டை அனுமதியில்லாமல் ஆக்கிரமித்து மக்களின் சுதந்திரத்தைப் பறித்து, நாட்டைக் கொள்ளையடித்த ஐரோப்பியரைப் போற்றுவது, நம்மூரில் சில கட்சிகள் நம்மக்களை வேலை கொடுக்கிறோம், நல்ல வீதிகள் போட்டுத் தாறோம் என்று ஏமாற்றியதை நம்பி அவற்றைத் தூக்கிப்பிடிப்பது போன்றது அல்லவா?

மேலும் ஆங்கிலேயர் அமிர்தசரஸில் அப்பாவி மக்களைக் கொன்ற ஜாலியன்வாலா பாக் படுகொலையை மறக்க முடியுமா? இப்படிப் பல அடக்குமுறைகளால் நிறைந்தது தான் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம். 

On 4/17/2019 at 11:36 PM, Justin said:

இங்கே மத நம்பிக்கை எங்கே புண்படுத்தப் பட்டது? இந்து மதத்தின் ஒரு பண்டிகை தமிழரின் பண்டிகை அல்ல என்பதே வாதம்!

தலைப்பு அவ்வாறு தான் உள்ளது. ஆனால், பின் வந்த சில கருத்துக்கள் கொண்டாடுவதையே ஏதோ ஒரு செய்யக்கூடாத செயலாகச் சித்தரித்தமையால் நானும் அதற்கேற்ப ஐரோப்பிய ஆக்கிரமிப்பு பற்றியும் எழுதவேண்டியிருந்தது. (முதலாவது பக்கத்தில் உள்ள கருத்துக்களை மீண்டும் வாசிக்கவும்). 

On 4/17/2019 at 11:36 PM, Justin said:

ஏன் இந்துக்கள் மட்டும் தமிழோடு இந்து மதமும் இணைக்கப் பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? அது மறுதலிக்கப் படும் போது அது இந்துக்களை ஏன் புண்படுத்துகிறது? இது மத வாதமாக எப்படி இல்லாமல் போகிறது என்று விளக்குக்கள்?

சுலபமான விடை இது தான்: ஐரோப்பியர், அரேபியர் வருகைக்கு முன்னர் அங்கே இருந்த தமிழர் இந்துக்கள் மட்டுமே. அவர்கள் கொண்டாடிய புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு ஆக அழைக்கப்டுகிறது.

தமிழோடு இணைக்கப்பட வேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் தமிழும், இந்து மதமும் பல காலமாக ஈழத்தில் இணைந்தே காணப்பட்டது. இது மத வாதம் அல்ல. வரலாறு அப்படித்தான் உள்ளது. பின்னர் இடையில் வந்த மதங்களுக்காக தமிழ்ப் புத்தாண்டின் பெயரை மாற்றச் சொல்வது, தமிழ் நாட்டில் தமிழர் மட்டுமல்ல தெலுங்கர், மலையாளிகள் போன்று இன்னும் பல மொழி பேசுபவர்கள் வசிக்கின்றனர் என்பதற்காக 'தமிழ் நாடு' என்ற பெயரை மாற்றச் சொல்வது போலாகும். 

இவ்வாறு நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு பண்டிகையின் பெயரை மாற்றச் சொன்னால் மனம் புண்படுவது இயல்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, மல்லிகை வாசம் said:

சுலபமான விடை இது தான்: ஐரோப்பியர், அரேபியர் வருகைக்கு முன்னர் அங்கே இருந்த தமிழர் இந்துக்கள் மட்டுமே. அவர்கள் கொண்டாடிய புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு ஆக அழைக்கப்டுகிறது.

தமிழோடு இணைக்கப்பட வேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் தமிழும், இந்து மதமும் பல காலமாக ஈழத்தில் இணைந்தே காணப்பட்டது. இது மத வாதம் அல்ல. வரலாறு அப்படித்தான் உள்ளது. பின்னர் இடையில் வந்த மதங்களுக்காக தமிழ்ப் புத்தாண்டின் பெயரை மாற்றச் சொல்வது, தமிழ் நாட்டில் தமிழர் மட்டுமல்ல தெலுங்கர், மலையாளிகள் போன்று இன்னும் பல மொழி பேசுபவர்கள் வசிக்கின்றனர் என்பதற்காக 'தமிழ் நாடு' என்ற பெயரை மாற்றச் சொல்வது போலாகும். 

இவ்வாறு நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு பண்டிகையின் பெயரை மாற்றச் சொன்னால் மனம் புண்படுவது இயல்பு. 

"இடையில்" என்பது உங்கள் கணிப்பில் எத்தனையாவது வருடம்? நிச்சயமாக 3000 இல்லையென நினைக்கிறேன்! 

தமிழை ஒரு மத அடையாளத்துள் அடக்கி விடாதீர்கள் என்பது தான் நிழலியினதும் ருல்பெனினதும் கருத்துகளின் அடியிழை! இதன் கருத்து தமிழுக்கு மதம் இல்லை என்பது தானேயொழிய தமிழர் தழுவும் மதத்திற்கெல்லாம் தமிழ் ஆசனம் கொடுத்து பண்டிகைப் பெயர்களை சதா மாற்றிக் கொண்டிருக்க வேண்டுமென்பதல்ல! இதை உங்களுக்குப் புரிய வைக்க முடியாது! ஏனெனில் தமிழர்களின் அடையாளமாக இந்து மதம் இருக்க வேண்டுமென்று நினைக்கும் இந்து மதவாதியாக நீங்கள் இருப்பது தான்!

எந்த மதத்திற்கும் பாதுகாப்பு அவசியமில்லை என நான் நினைக்கிறேன்! அவை மக்களின் மூடத் தனத்தால் நிலைத்திருப்பவை! ஆனால், தமிழ் என்ற மொழிக்கும் அது தரும் சில அரிய பாரம்பரியங்களுக்கும் பாதுகாப்புத் தேவை! அந்தப் பாரம்பரியங்களில் சில மதச் சார்பின்மையும் கல்வி, முயற்சி ஊக்கம் என்பன! இந்தத் தமிழ் பாரம்பரியங்கள் தான் உங்கள் போன்ற சில இந்து மதவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகும் என நினைக்கிறேன்!

இது போன்ற திரிகளில் பிற்போக்குடையோர் அதிகம் நடமாடுவதால் நான் பங்கு கொள்வது குறைவு! எனவே இதுவே என் கடைசிக் கருத்து இங்கே!

 

On 4/17/2019 at 11:36 PM, Justin said:

உங்கள் வாதப்படி ஆரியர் திணித்ததை தமிழர்கள் ஏற்றுக் கொண்டதால் இந்துப் புத்தாண்டு தமிழ் புத்தாண்டாக ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும்! அப்ப ஐரோப்பியரும் அரேபியரும் திணித்த மதங்களின் பண்டிகைகளும் தமிழ்ப்பண்டிகைகளாக ஏற்றுக் கொள்ளப் பட வேண்டுமா? திணித்த காலம் தானே வித்தியாசம்? திணிப்பு ஒன்று தானே?

ஆரியத் திணிப்புக்கு முன்னரே சித்திரைப் புத்தாண்டைத் தமிழர் கொண்டாடியதைக் கூறும் ஓர் கட்டுரையைக் கீழே இணைக்கிறேன்:

https://tamilandvedas.com/tag/தமிழ்-புத்தாண்டு-எது/

இப்படி ஏராளம் கட்டுரைகள் உண்டு. இதற்கு முரணாக தைப்பொங்கல் நாளையே புத்தாண்டு எனக் கொள்்ள்ள வேண்டும் என்று வாதிக்கும் கட்டுரைகளும் உண்டு. இது இன்று நேற்றுத் தொடங்கிய விவாதமல்ல. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக இந்தச் சர்ச்சை தொடர்கிறது. 

இந்த முடிவில்லாத சர்ச்சை அவசியமில்லாத ஒன்று என்பதால் தான் சொன்னேன் இது பற்றிய வீணான விவாதங்களை விட்டு சமகாலத்தில் எது முக்கியமோ அவற்றில் கவனம் செலுத்துவோம் என்று. 

 

5 minutes ago, Justin said:

தமிழை ஒரு மத அடையாளத்துள் அடக்கி விடாதீர்கள் என்பது தான் நிழலியினதும் ருல்பெனினதும் கருத்துகளின் அடியிழை! இதன் கருத்து தமிழுக்கு மதம் இல்லை என்பது தானேயொழிய தமிழர் தழுவும் மதத்திற்கெல்லாம் தமிழ் ஆசனம் கொடுத்து பண்டிகைப் பெயர்களை சதா மாற்றிக் கொண்டிருக்க வேண்டுமென்பதல்ல!

இங்கு தமிழை மத அடையாளமாக்க முனையவில்லை. தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் எனது கருத்து.

8 minutes ago, Justin said:

அந்தப் பாரம்பரியங்களில் சில மதச் சார்பின்மையும் கல்வி, முயற்சி ஊக்கம் என்பன! இந்தத் தமிழ் பாரம்பரியங்கள் தான் உங்கள் போன்ற சில இந்து மதவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகும் என நினைக்கிறேன்!

அப்படியா? நீண்ட கால வரலாற்றை உடைய புத்தாண்டின் பெயரை மாற்றுவதை எதிர்த்தால் ஒட்டுமொத்தமாக மதவாத முத்திரை குத்துகிறீர்களே?

கல்வியில் மதச் சார்பின்மை அவசியமென்றால் ஈழத்தில் அமெரிக்கன் மிஷனறிகளின் நெறிகளுக்குக் கட்டுப்பட்ட கல்விச் சாலைகளின் அவசியம் என்ன? 

13 minutes ago, Justin said:

இந்தத் தமிழ் பாரம்பரியங்கள் தான் உங்கள் போன்ற சில இந்து மதவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகும் என நினைக்கிறேன்

தமிழ்ப்பாரம்பரியங்களை 

மதிக்கும் நான் மற்றைய மதங்களையும் மதிப்பவன். இது பற்றி நீண்ட விளக்கம் இங்கு நான் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் நான் பின்பற்றும் மதத்தில் யாராவது அநாவசியமாக் குறை கண்டால் அதை எதிர்ப்பதும் தவறில்லை என நினைக்கிறேன்.

24 minutes ago, Justin said:

இது போன்ற திரிகளில் பிற்போக்குடையோர் அதிகம் நடமாடுவதால் நான் பங்கு கொள்வது குறைவு! எனவே இதுவே என் கடைசிக் கருத்து இங்கே!

நானும் பங்கு கொள்வது மிக அரிது தான். 

இன்னொன்று, முற்போக்கு என்பது பாரம்பரியமாக வந்தவற்றையெல்லாம் கண்மூடித்தனமாக எதிர்ப்பது அல்ல. மற்றவர்களின் மத நம்பிக்கையை அநாவசியமாகப் புண்படுத்துவதும் பிற்போக்குத்தனமானது தான். 

இது கிட்டத்தட்ட பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ விரும்பி ஒரு பெண் 'ஆட்டக்காரியாக' வாழ்வது போன்றது. அவ்வாறு தான் இருக்கிறது இன்றைய சில 'முற்போக்காளரின்' (???) சிந்தனை! 😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.