Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கின்றது. நடைபெற்ற துன்பங்கள் காரணமாக நாங்கள் பெரும் கவலை அடைந்திருந்தாலும் கூட அதற்குள்ளே இந்நாடு இனக்கலவரம் என்ற துன்பத்திற்குள்ளே விழவில்லை என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் மிகப் பொறுப்புடனும், மிக கவனமுடனும் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார். ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் என்று நான் நினைக்கின்றேன்
அதே போல இங்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் ஆகிய நாம் கூடி நடைபெற்ற துன்ப நிகழ்வுகளில் கொலையுண்ட, காயமுற்ற, பாதிக்கப்பட்ட அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை பற்றி சிந்திக்கும் அதே வேளையிலே முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கும் வந்துள்ளோம்..

இங்கு நான் ஒரு விடயத்தை பகிரங்கமாக கூறிட விரும்புகிறேன். பாதுகாப்பு துறை, சட்டம் ஒழுங்கு துறை சீர்கெட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளின் மீது பழி போட்டுவிட்டு அரசியல் தலைமை கையை துடைத்துக் கொள்வதையிட்டு நான் அரசாங்க அமைச்சர் என்ற வகையில் வருத்தமடைகின்றேன். வெட்கமடைகின்றேன் என்பதை இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் தலைமையின் சீர்கேடு காரணமாகவே அதிகாரிகள் சீர் கெட்டுள்ளனர்.

எனது மாவட்டமான கொழும்பின் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொல்லப்பட்ட பலரை நான் நேரடியாக அறிவேன். குண்டு வெடித்த சில நிமிடங்களில் நான் அங்கு சென்றேன். அங்கே தம் தாய்மார்களை, தந்தைமார்களை, சகோதரர்களை, பிள்ளைகளை இழந்து அந்த மக்கள் அடைந்த வேதனையை நேரிடையாக கண்டேன். அவற்றை என் வாழ்வில் ஒருபோதும் என்னால் மறக்க முடியாது.

இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நான் காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தேன். மாவனல்லையில் ஆரம்பிக்கப்பட்ட சில பயங்கரவாத செயல்கள், அதையடுத்து வனாத்தவில்லுவில் 100 கிலோகிராம் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பிடிக்கப்படும் கட்டத்தை அடைந்தது. அங்கு அடையாளம் காணப்பட்ட, கைது செய்யப்பட்ட சிலர், ஒரு அரசியல்வாதியால் அழுத்தம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக, இங்கே எம்பி விமல் வீரவன்ச கூறினார். இது உண்மையா? அப்படி சிபாரிசு செய்து பயங்கரவாதிகளை தப்ப வைத்த அரசியல்வாதி யார் என்பதை தெரிந்து கொள்ள நாடு இன்று விரும்புகின்றது.

அதே போல 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்றுக்கு முன்னர், கிழக்கு மாகாண காத்தான்குடியிலே ஒரு சோதனை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 21ம் தினம் உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு தாக்குதல்களுக்கு முன்னோடியாக நடந்த ஒரு சோதனை வெடிப்பே, காத்தான்குடியில் நிகழ்ந்தது என பரவலாக பேசப்படுகிறது. அதாவது சோதித்து பார்க்கும் ஒரு முன்னோடி வெடிப்பை நடத்தியுள்ளனர். இது உண்மையா? அந்த வெடிப்பு சம்பவம் விசாரிக்கப்பட்டதா? யாரும் கைது செய்யப்பட்டார்களா? கைதான பயங்கரவாதிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனரா? அதில் எவராவது அரசியல்வாதிகள் தலையிட்டனரா? இந்த விபரங்களையும் அறிந்துக்கொள்ள நாடு விரும்புகின்றது.

ஆகவே இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த பயங்கரவாதம் திடீரென்று 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதற்கும் உண்மையான இஸ்லாத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது. மிகப்பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாதத்தை விரும்பவில்லை. ஆனால், இந்த பயங்கரவாதத்துக்கு பின்னால், அரசியல்வாதிகள் எவரும் உள்ளார்களா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே இந்த பயங்கரவாதத்தை முற்று முழுதாக துடைத்து எறிய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

http://www.thamilan.lk

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, colomban said:

1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள்.

இனக்கலவரம் நடாத்தியவர்கள் தேவாலயம் கோவில்களுக்கு குண்டு போட்டவர்கள் புத்தகசாலை நுhலகம் எரித்தவர்கள் எல்லோரும் இன்னமும் உங்களுடன் கூடவே இருக்கிறார்கள்.
தேவையேற்பட்டால் மீண்டும் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மணோ கணேசன் அவர்கள் கஞ்சா போட்டூவிட்டுக் கதைப்பதுபோல் கதைக்கிறார்

83 ல் தமிழர்மீது திட்டமிட்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டபோது அதன் பின்புலமாக தென்பகுதியில் எந்தவொரு பொதுமக்கள்மீதான தாக்குதல்களையும் தமிழர்தரப்புச் செய்யவில்லை, மிகவும் திட்டமிட்டரீதியில் காடையர்களை ஒன்றுகூட்டி காவல்துறையின் உதவியுடன் செய்யப்பட்ட இனச்சுத்திகரிப்பு.

இவ்வாராம் நடந்தது அப்படியானதல்ல மிகவும் திட்டமிட்டு பொதுமக்களையும் அப்பாவிகளையும் கொலைக்குண்டுத்தாக்குதல் செய்துவிட்டு அப்படி ஒழிந்திருக்கும் ஒரு கும்பலைச்சேர்ந்தவர்கள் செய்த குரூரம்.

இதில் மக்ழ்சியடையக்கூடியது இதுவரையில் அச்சமூகம்மீது பெருமளவு தாக்குதல் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பதே.

அதற்காக தமிழினம் வன்முறை செய்தது அதற்காக எண்பத்துமூன்றில் சிங்களவர் அவர்கள்மீது தாக்குதல் நடாத்தினார்கள் எனும் புதிய வரலாறை மணோ கணேசன் எமக்குள் உள்நுழைக்கிறார்.

காரணம் மணோகணேசன் மற்றும் சிங்களக்கட்சியினருக்கு முஸ்லீம்களது தயவு எதிர்காலத்தில் தேவைப்படுகிறது. ஆகவேதான் தமிழர்களை வன்முறையாளர்களாகவே இனம்காட்ட முயல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

இனக்கலவரம் நடாத்தியவர்கள் தேவாலயம் கோவில்களுக்கு குண்டு போட்டவர்கள் புத்தகசாலை நுhலகம் எரித்தவர்கள் எல்லோரும் இன்னமும் உங்களுடன் கூடவே இருக்கிறார்கள்.
தேவையேற்பட்டால் மீண்டும் செய்வார்கள்.

அவங்கள் இப்ப நல்ல பிள்ளைகள் ...தமிழர்களிடமிருந்து பாவம்ன்னிப்பு கிடைத்து விட்டது அவ‌ர்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

அவங்கள் இப்ப நல்ல பிள்ளைகள் ...தமிழர்களிடமிருந்து பாவம்ன்னிப்பு கிடைத்து விட்டது அவ‌ர்களுக்கு

என்ன நல்ல பிள்ளைகள்?
மோதகமும் கொழுக்கட்டையும் உருவம் தான் வித்தியாசம்.உள்ளுக்கு எல்லாம் ஒன்று தான்.

வித்தியாசமென்னவென்றால் முன்னர் தாங்களே முன்னின்று செய்தார்கள்.
இப்போ தமிழனை வைத்து தமிழனை அழித்த மாதிரி 
முஸ்லீமை வைத்து முஸ்லீமையே அழித்து அடக்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

மணோ கணேசன் அவர்கள் கஞ்சா போட்டூவிட்டுக் கதைப்பதுபோல் கதைக்கிறார்

83 ல் தமிழர்மீது திட்டமிட்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டபோது அதன் பின்புலமாக தென்பகுதியில் எந்தவொரு பொதுமக்கள்மீதான தாக்குதல்களையும் தமிழர்தரப்புச் செய்யவில்லை, மிகவும் திட்டமிட்டரீதியில் காடையர்களை ஒன்றுகூட்டி காவல்துறையின் உதவியுடன் செய்யப்பட்ட இனச்சுத்திகரிப்பு.

இவ்வாராம் நடந்தது அப்படியானதல்ல மிகவும் திட்டமிட்டு பொதுமக்களையும் அப்பாவிகளையும் கொலைக்குண்டுத்தாக்குதல் செய்துவிட்டு அப்படி ஒழிந்திருக்கும் ஒரு கும்பலைச்சேர்ந்தவர்கள் செய்த குரூரம்.

இதில் மக்ழ்சியடையக்கூடியது இதுவரையில் அச்சமூகம்மீது பெருமளவு தாக்குதல் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பதே.

அதற்காக தமிழினம் வன்முறை செய்தது அதற்காக எண்பத்துமூன்றில் சிங்களவர் அவர்கள்மீது தாக்குதல் நடாத்தினார்கள் எனும் புதிய வரலாறை மணோ கணேசன் எமக்குள் உள்நுழைக்கிறார்.

காரணம் மணோகணேசன் மற்றும் சிங்களக்கட்சியினருக்கு முஸ்லீம்களது தயவு எதிர்காலத்தில் தேவைப்படுகிறது. ஆகவேதான் தமிழர்களை வன்முறையாளர்களாகவே இனம்காட்ட முயல்கிறார்.

எழுஞாயிறு , நீங்கள் மனோ கணேசனின் கருத்தை தவறாக உள்வாங்கிக்கொண்டீர்கள் போல இருக்கிறது.
நான் நினைக்கிறேன் அவர் இங்கே கூற வருவது 1983 இல் வடக்கில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து ஒட்டு 
மொத்த இலங்கையிலும், தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்தை போன்று இன்று இலங்கையில் நடந்திருக்கும் சம்பவங்களை சாட்டாக வைத்துக்கொண்டு முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு இனக்கலவரம் வராமல் பார்த்துக்கொள்ளக்கூடிய பக்குவத்தில் நாடு இருப்பதாக சொல்கிறார்.

I think.... இதுவே மஹிந்தவின் அரசாங்க காலத்தில் நடந்திருக்குமானால் எதிர்வினை உடனடியாக அமைந்திருக்கும் என நம்பலாம். 
 
  • கருத்துக்கள உறவுகள்

இதுவே புத்த விகாரைகளில் நடந்திருந்தால் தெரிந்திருக்கும். 

7 minutes ago, Sasi_varnam said:

எழுஞாயிறு , நீங்கள் மனோ கணேசனின் கருத்தை தவறாக உள்வாங்கிக்கொண்டீர்கள் போல இருக்கிறது.
நான் நினைக்கிறேன் அவர் இங்கே கூற வருவது 1983 இல் வடக்கில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து ஒட்டு 
மொத்த இலங்கையிலும், தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்தை போன்று இன்று இலங்கையில் நடந்திருக்கும் சம்பவங்களை சாட்டாக வைத்துக்கொண்டு முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு இனக்கலவரம் வராமல் பார்த்துக்கொள்ளக்கூடிய பக்குவத்தில் நாடு இருப்பதாக சொல்கிறார்.

I think.... இதுவே மஹிந்தவின் அரசாங்க காலத்தில் நடந்திருக்குமானால் எதிர்வினை உடனடியாக அமைந்திருக்கும் என நம்பலாம். 
 
மஹிந்த இருந்து இருப்பினும் கலவரம் ஏற்பட்டு இருக்காது. ஏனெனில் ஒரு கலவரம் வந்தால்  அரசியல் ரீதியில் பயனடையவது சிறுபான்மை இனம் என சிங்களம் கண்டு கொண்டு இருப்பதால் சர்வதேசத்தின் ஆதரவையும் இழந்து விடும்

அதை விட சிறுபான்மையினரை சிறுக சிறுக அழிக்கவே சிங்களம் விரும்பும்.

இனி இலங்கையில் முஸ்லிம்களின் நிலை நேற்று இருந்ததை போல் இருக்க போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

உண்மை தான்...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

மஹிந்த இருந்து இருப்பினும் கலவரம் ஏற்பட்டு இருக்காது. ஏனெனில் ஒரு கலவரம் வந்தால்  அரசியல் ரீதியில் பயனடையவது சிறுபான்மை இனம் என சிங்களம் கண்டு கொண்டு இருப்பதால் சர்வதேசத்தின் ஆதரவையும் இழந்து விடும்

இனக்கலவரம் எப்போது நடக்க வேண்டுமென்பதை அரசியல்வாதிகள் தான் நிர்ணயிக்க வேண்டும்.

11 minutes ago, நிழலி said:

இனி இலங்கையில் முஸ்லிம்களின் நிலை நேற்று இருந்ததை போல் இருக்க போவதில்லை

இதைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

மணோ கணேசன் அவர்கள் கஞ்சா போட்டூவிட்டுக் கதைப்பதுபோல் கதைக்கிறார்

83 ல் தமிழர்மீது திட்டமிட்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டபோது அதன் பின்புலமாக தென்பகுதியில் எந்தவொரு பொதுமக்கள்மீதான தாக்குதல்களையும் தமிழர்தரப்புச் செய்யவில்லை, மிகவும் திட்டமிட்டரீதியில் காடையர்களை ஒன்றுகூட்டி காவல்துறையின் உதவியுடன் செய்யப்பட்ட இனச்சுத்திகரிப்பு.

இவ்வாராம் நடந்தது அப்படியானதல்ல மிகவும் திட்டமிட்டு பொதுமக்களையும் அப்பாவிகளையும் கொலைக்குண்டுத்தாக்குதல் செய்துவிட்டு அப்படி ஒழிந்திருக்கும் ஒரு கும்பலைச்சேர்ந்தவர்கள் செய்த குரூரம்.

இதில் மக்ழ்சியடையக்கூடியது இதுவரையில் அச்சமூகம்மீது பெருமளவு தாக்குதல் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பதே.

அதற்காக தமிழினம் வன்முறை செய்தது அதற்காக எண்பத்துமூன்றில் சிங்களவர் அவர்கள்மீது தாக்குதல் நடாத்தினார்கள் எனும் புதிய வரலாறை மணோ கணேசன் எமக்குள் உள்நுழைக்கிறார்.

காரணம் மணோகணேசன் மற்றும் சிங்களக்கட்சியினருக்கு முஸ்லீம்களது தயவு எதிர்காலத்தில் தேவைப்படுகிறது. ஆகவேதான் தமிழர்களை வன்முறையாளர்களாகவே இனம்காட்ட முயல்கிறார்.

19 minutes ago, Sasi_varnam said:

எழுஞாயிறு , நீங்கள் மனோ கணேசனின் கருத்தை தவறாக உள்வாங்கிக்கொண்டீர்கள் போல இருக்கிறது.
நான் நினைக்கிறேன் அவர் இங்கே கூற வருவது 1983 இல் வடக்கில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து ஒட்டு 
மொத்த இலங்கையிலும், தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்தை போன்று இன்று இலங்கையில் நடந்திருக்கும் சம்பவங்களை சாட்டாக வைத்துக்கொண்டு முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு இனக்கலவரம் வராமல் பார்த்துக்கொள்ளக்கூடிய பக்குவத்தில் நாடு இருப்பதாக சொல்கிறார். -----

எழுஞாயிறு,  மனோகணேசனின் பேச்சை  தவறாக புரிந்து கொண்டார் என்றே கருதுகின்றேன்.
சசிவர்ணத்தின் கருத்துடன் உடன் படுகின்றேன்.  

மனோகணேசன்,  அமைச்சராக இருந்து கொண்டு அப்படித்தான் பேசமுடியும்.
இதனை தமிழில்...  "வஞ்சக புகழ்ச்சி" என்று சொல்வார்கள்.
அதாவது அரசை புகழ்ந்து விட்டு... தமிழர்களுக்கு நடந்த தவறுகளையும்,
இப்போது... செய்து கொண்டிருக்கும், தவறுகளையும் சொல்லிக் காட்டியுள்ளார்.

10 hours ago, colomban said:

1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன். 1983, 1977ம் ஆண்டுகளிலே நேரடியாக இத்தகைய அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் முகம் கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இழப்புகளை சந்தித்த எத்தனையோ அப்பாவி தமிழ் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். அதே போல 58ம் ஆண்டுகளில் எனது தந்தையர், எங்களது மூதாதையர் இத்தகைய கொடுமைகளுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்திருந்தார்கள்.

இது போன்று சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதங்களைப் பற்றி பகிரங்கமாக கதைக்காத வரை தமிழர்களுக்கு தீர்வுகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் கிடைக்கப்போவதில்லை.

இவ்வளவு காலமும் ஒரு அமைச்சராக எதையும் சாதிக்காத மனோகணேசன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரச பயங்கரவாதங்களைப் பற்றி பகிரங்கமாக கதைப்பதை பாராட்டலாம்.

அண்மையில் வீரகேசரி கூட "சிங்கள-பௌத்த ஆக்கிரமிப்புக்கள் ..." என்ற வகையில் முதற்பக்கத்தில் ஒரு தலையங்கத்தை பிரசுரித்திருந்தது.

இவை காலதாமதமான முன்னேற்றமாக இருந்தாலும், வரவேற்கப்பட வேண்டிய மாற்றம். சில உண்மைகளை தைரியமாக பகிரங்கமாக தமிழர் கதைக்கப்பழக வேண்டும். அப்போது மட்டும் தான் உருப்படியான தீர்வை நோக்கி நகர முடியும்.

அதை விட்டுவிட்டு சம்மந்தன்-சுமந்திரன்-மாவை பேர்வழிகள் போல சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதங்களுக்கு வெள்ளையடித்து எதையும் சாதிக்க முடியாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.