Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிச் சுற்றில் சிறிலங்கா நுழைந்தால் மகிந்த மேற்கிந்திய தீவு பயணம்.

Featured Replies

இறுதிச் சுற்றில் சிறிலங்கா நுழைந்தால் மகிந்த மேற்கிந்திய தீவு பயணம்.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் துடுப்பாட்ட போட்டிகளில் சிறிலங்கா அணி இறுதிச் சுற்றுக்கு தெரிவானால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

பார்படோஸ்ன் ஹென்சிங்ரன் ஓவல் மைதானத்தில் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது.

நான்கு நாள் பயணமாக இத்தாலி சென்றுள்ள மகிந்த எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நியூசிலாந்திற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் நடைபெறவுள்ள துடுப்பாட்டப் போட்டிகளின் முடிவுகளை பொறுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு பயணத்தை மேற்கொள்வார்

இதனிடையே சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளதாகவும் சிறிலங்காவின் அணி இறுதியாட்டத்திற்கு தெரிவானால் அவர் அங்கு தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

தகுதி பெறா விட்டால் இத்தாலியிலேயே "குவார்ட்டர்" அடித்து விட்டுக் குப்புறப் படுக்குமாமோ இந்த மந்தி? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவரை அங்கே எப்படி அனுமதிப்பார்கள்?

ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவரை அங்கே எப்படி அனுமதிப்பார்கள்?

இவங்க அப்டி பட்ட பயங்கரவாதிகளைதான் ஏற்றுகொள்வார்கள் . :angry:

அப்ப நூற்றுக்கணக்கான மயூரன்கள் திரும்பவும் அங்க போய் மகிந்துவுக்கு புலிக்கொடி காட்டவேண்டும்! விளையாட்டு மைதானத்தில் இறுதி ஆட்டத்தில் பல தமிழீழ தேசிய கொடிகளை பறக்கவிட வேண்டும்...

f_74667m_a17edaa.jpg

pulixy6.jpg

f_74667m_a17edaa.jpg

pulixy6.jpg

f_74667m_a17edaa.jpg

pulixy6.jpg

f_74667m_a17edaa.jpg

pulixy6.jpg

f_74667m_a17edaa.jpg

pulixy6.jpg

மைதானத்திற்குள் இறங்காமல் பார்வையாளர் பகுதியிலிருந்து புலிக்கொடி காட்டுவது தப்பாகுமா?

புலிக்கொடி ஒரு பொதுவான ஈழத்தமிழரின் கொடி. புலிகள் தங்கள் சின்னமாக மஞ்சள் நிற புலியும் கறுத்த வட்டமும் அதில் தங்களது பெயரையும் எழுதியுள்ளார்கள். எனவே இன்று தமிழீழத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பயன்படுத்தப்படும் புலி தேசியக் கொடி ஒரு இனத்தின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கின்றது.

விடுதலை புலிகளால் தேசியக்கொடி தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

அமெரிக்காவில் புலிகொடியை ஏற்றி விளையாட்டுப்போட்டி நடத்திய போது அங்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அது தமிழர்களின் விளையாட்டுப்போட்டி அவர்கள் விரும்பிய தங்களது அடையாளத்தை பாவிக்கலாம் என்று பொலிசார் தெரிவித்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்ட இறுதி ஆட்டத்தினை காண மகிந்த மேற்கிந்திய தீவுக்களுக்கு பயணம்

[வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2007, 06:20 ஈழம்] [அ.அருணாசலம்]

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணி இறுதி ஆட்டத்திற்கு தெரிவானதைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியை காண்பதற்காக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கிந்திய தீவுகளுக்கு நேற்று மாலை புறப்பட்டுள்ளார்.

இறுதி ஆட்டத்தில் சிறிலங்கா அணியுடன் அவுஸ்திரேலிய அணி மோதுகின்றது.

இதனிடையே இறுதி ஆட்டத்தில் சிறிலங்கா அணி வெற்றிபெற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தனது வாழ்த்துச் செய்தியை சிறிலங்கா அணிக்கு அனுப்பியுள்ளது.

நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி உறுப்பினரான ரவி கருணாநாயக்க உலகக்கோப்பைக்கான துடுப்பாட்டத்தில் சிறிலங்கா அணி வெற்றி பெற்று நாட்டுக்கு கீர்த்தியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

- புதினம்

ரோமாபுரி எரிந்தபோது அன்நாட்டுமன்னன் பிடில் வாசித்ததாக கதை.இலங்கைநாடும் மக்களும் அல்லோலப்பட ஜனாதிபதி கீரிக்கட்டு பார்க்க பல லட்சம் மைல் கடந்து போவதென்பது வேடிக்கையிலும் வினோதமானவொன்றாகத்தான் தெரிகிறது

இந்த மந்தி எல்லாம் எதுக்கு அங்கே போகுது? சர்வதேச மன்னிப்புச் சபை இலகுவாக பிரசாரம் செய்யலாம், இலங்கையில் மனித உரிமைகளை கெடுப்பதி இந்த மங்கிதான் என்று 100 கோடி மக்களுக்கு காட்டலாம்

இந்த மந்திக்கு ,ஒரு இனத்தின் அவலத்தைவிட கிரிக்கட் தான் முக்கியமாய் போட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

மைதானத்திற்குள் இறங்காமல் பார்வையாளர் பகுதியிலிருந்து புலிக்கொடி காட்டுவது தப்பாகுமா?

புலிக்கொடி மட்டும் தான் காட்ட வேண்டுமென்றில்லை. மக்கள் படுகொலைகள் குறித்த செய்திகளையும் காட்டலாம். அல்லது அது பற்றிய விளம்பரங்களையும் செய்யலாம்.

மகிந்தவைப் பொறுத்தவரைக்கும் கிரிக்கட் வெற்றியை வைத்து, தமிழரின் படுகொலைக்கு தூபம் போட முயற்சிக்க கூடும். சிலவேளைகளில் ஜநாவிற்கு டக்ளஸ் தேவானந்தாவைக் கொண்டு போய்த் தான் தமிழெதிரி இல்லை என்று காட்ட முயற்சித்தது போன்று, இங்கே முரளிதரனுக்கு கெளரவம் கொடுப்பது போன்ற சூழ்ச்சி எதுவும் செய்யக் கூடும்.

இதன் மூலம் தன்னைத் தமிழன எதிரியில்லை என்று காட்ட முயற்சிக்கலாம். இது ஒரு பாரதூரமான விடயமாகும். இந்த உலகக் கோப்பை சிறிலங்கா வெற்றிபெறும் என்ற நம்பிக்கை சிங்கள அரசுக்கு இருக்கின்றது. உலகத்தின் நெருக்கடிகளில் இருந்து ஓரளவு தப்பித்துக் கொள்வதற்கு இது தான் தேர்ந்தெடுக்க கூடிய வழி.

மேலும் இலங்கையணி வெற்றி பெற்றால் அந்த வெற்றி இலங்கை குறித்தான மனிதஉரிமைகள் குறித்து சொல்லப்படுகின்ற செய்திகளை தாழ்த்தும் என்று மகிந்த சிந்தித்திருக்கலாம். இதனால் தான் அவசரப்பட்டு, அணிக்கு ஊக்கம் கொடுக்கின்ற முயற்சியில் வெளிக்கிட்டுள்ளார்.

இலங்கையின் அரச பயங்கரவாதத்தின் படுகொலைகள் பற்றி உலகத்திற்கு தெரிய வைப்பதும், இலங்கை அணி வெற்றிபெறக் கூடாது என்று நேர்த்தி வைப்பதும் தான் எமக்குள்ள வழி. மேலும் முரளிதரன் என்ற ஒரு நபர் மட்டும் தமிழினத்தின் அடையாளமல்ல, கிழக்கிலும் வடக்கிலும் அரச பயங்கரவாதத்தால் பட்டினியால் வாடுகின்ற மக்களும் தமிழ்மக்கள் தான் என்பதை உலகத்திற்கு புரிய வைக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 27-04-2007 22:56 மணி தமிழீழம் [மயூரன்]

மகிந்த ராஜபக்ச தேசிய துப்பாட்ட அணி வீரர்களுடன் கலந்துரையாடி மகிழந்தார்

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உலகக்கிண்ண இறுதிப் போட்டியைப் பார்வையிட இன்று புறப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து புறப்பட்ட மகிந்த ராஜபக்ச லண்டன் ஊடாக மேற்கிந்தியத் தீவுகளைச் சென்றடைந்தார்.

பாபடோஸ் பிறிஜ்டவுனில் நாளையதினம் நடைபெறவிருக்கும் உலகிகிண்ண துடுப்பாட்டப் போட்டியில் ஒஸ்ரேலியா மற்றும் சிறீலங்கா அணிகள் மோதும் நிலையில் இன்று சிறீலங்கா தேசிய துடுப்பாட்ட அணி வீரர்களை மகிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடி மகிந்துள்ளார்.

In The Final Sri Lanka Will Lose

Finally Sri Lanka Will Lose

மேற்சொன்ன எனது கருத்தில் தனிப்பட்ட காழ்ப்புணர்வு எதுவும் கிடையாது. தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தமிழர்களுக்கு எதிரான பிரசாரத்திற்காகவும், போருக்கான நிதி திரட்டவும், இராணுவத்தின் போரிடும் மனவலிமையை அதிகரிக்கவும் தான் ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்துகிறது. கிரிக்கட் வெற்றியையும் "சிங்கத்தை எவரும் வெல்ல முடியாது" என்று சிறுபிள்ளைத்தனமாக இராணுவ வீரர்கள் மத்தியில் இனவெறியை தூண்டும் பிரசாரத்திற்காக தான் பயன்படுத்தும். விளைவு இன்னும் பல அப்பாவி தமிழர்களின் உயிர்கள் தான் பலியாகும்.

ஸ்ரீலங்காவை பொறுத்தவரை மதமும் கல்வியும் விளையாட்டும் பேரினவாத அரசியலுடன் கலந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. போர் என்றால் போர்! சமாதானம் என்றால் சமாதானம்! என்று தமிழர்களை பார்த்து அறைகூவல் விட்ட ஜே.ஆரின் வார்த்தைகளை தான் நாமும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

யுத்த காலத்தில் அரசியல் என்றும் விளையாட்டு என்றும் தமிழர்கள் பிரித்து பார்த்தால் அது இனவெறி ஸ்ரீலங்கா அரசின் குண்டு வீச்சுக்களால் சிதறி இறந்த ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களுக்கும், வீடிழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு மரங்களின் கீழும் தெருவோரங்களிலும் வாழும் 3 லட்சம் தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்

Edited by vettri-vel

மகிந்த எருமைக்கு நாட்டில வேலை இருந்தால் தானே வேலை செய்யிறதுக்கு பிறகு என்ன பொழுது போக்கிற்கு கிரிக்கட்டு போக வேண்டியது தானே வேலை இல்லாடடிக்கு பெண்டிலை தூக்கி உடற்பயிற்சி செய்தாலும் பரவாயில்லை

எல்லோருமாக சேர்ந்து எமது மனங்களில் படங்களாக கற்பனை செய்வோம் சிறிலங்கா அணி தோற்று வெறும் கையுடன் வருவதைபோல நிட்சயமாக மனங்களில் கற்பனை படங்களாக தோன்றியவை பல புதுமைகளை கொடுத்திருக்கின்றது.

In The Final Sri Lanka Will Lose

Finally Sri Lanka Will Lose

சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

[சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007, 17:54 ஈழம்] [கலாநிதி என்.மாலதி]

சிறிலங்கா துடுப்பாட்ட அணியைத் தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை விவரிக்கிறது இந்த செய்தி ஆய்வு.

அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள்.

ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதனை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும்.

இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள்.

விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்பது பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமானாலும், அது ஒன்றோடு ஒன்று பிணைந்தே இருக்கிறது என்பதனையும் எவரும் மறுப்பதற்கில்லை.

உலக வரலாற்றில் அரசியலும் விளையாட்டும் இணைந்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் அநேகம்.

உலகக்கிண்ண சுற்று இறுதிப் போட்டியை காண்பதற்காக மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்றிருக்கும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவை கேலி செய்து வீரகேசரி வெளியிட்ட கேலிச்சித்திரம்

தென்னாப்பிரிக்க இனவாத அரசியலை ஒழிப்பதற்கு அந்நாட்டின் விளையாட்டுப் புறக்கணிப்பு மிகவும் துணைபோனது அண்மையில் உலகில் மிகவும் பிரபல்யமாக நடந்தேறிய ஒரு விடயம்.

அதுவும் முக்கியமாக மேல்நாடுகளில் இந்த புறக்கணிப்பு பரவலாக விவாதிக்கப்பட்ட விடயம். இங்கு அரசியலும் விளையாட்டும் கலந்து ஒரு நன்மையான முடிவை தந்தமையானது, விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வேண்டும் என்ற விவாதத்தை வலுவற்றதாகச் செய்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டின் இனவாத அரசியலுக்கு எதிரான புறக்கணிப்பு பல அரங்குகளில் நடைபெற்றது. மொன்றியோல் நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஒலிம்பிக் போட்டியை 22 ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணிப்புச் செய்தன.

அங்கு ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்காவோடு விளையாட்டுப் போட்டிகள் நடத்திய நியூசிலாந்து நாடும் பங்கு பற்றியதனையே ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்தன. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவோடு ஏனைய நாடுகள் விளையாட்டுத் தொடர்புகளை வைத்திருப்பதில்லை என்று 1977 இல் கிலெனீகல் என்ற இடத்தில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இது போல் வேறு பல அரசியல் காரணங்களுக்காக விளையாட்டுத் தொடர்பை வெவ்வேறு நாடுகளும் துண்டித்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் பல உள்ளன.

உதாரணமாக 1980 ஆம் ஆண்டில் மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா புறக்கணிப்புச் செய்தது. மொஸ்கோ ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பாகவே இதனை அமெரிக்கா செய்தது.

ஈராக் நாடு 1990 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்வதனை ஆசிய ஒலிம்பிக் குழு தடை செய்தது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தனை எதிர்த்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். தென்னாப்பிரிக்காவின் இனவாதமற்ற விளையாட்டுக் குழுவின் தலைவரான ஜோ இபிரகிம் விளையாட்டுப் புறக்கணிப்புக்கூடாக எப்படி அரசியலை மாற்றலாம் என்பதனை பின்வருமாறு கூறுகிறார்,

"விளையாட்டுப் புறக்கணிப்பு ஒரு நாட்டை அது பாராமுகமா இருக்கும் அதனுடைய அரசியல் விடயங்களில் மாற்றங்கள் செய்ய செய்வதற்கு மிகவும் உதவக்கூடியது ஒன்று. உலகில் பல இடங்களில் இப்படியான புறக்கணிப்பு நியாயமானதாக இருக்கும்".

தென்னாப்பிரிக்க விளையாட்டுப் புறக்கணிப்புப் பற்றி இன்று பல புத்தகங்கள் வெளிவந்திருப்பதும் இதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

ஒரு நாட்டின் விளையாட்டு அந்நாட்டின் அரசியலோடு எப்படி சார்ந்திருக்கிறது என்பதனை பல கோணங்களில் இருந்து ஆராயலாம்.

ஒரு நாட்டின் தேசியம் எப்படி விளையாட்டின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது என்பது அரசியலுக்கும் விளையாட்டுக்கும் உள்ள பிணைப்பை சுட்டிக்காட்டும் ஒரு விடயம். இன்னும் ஆழமாக பார்க்கப் போனால், அரசியலுக்கும் விளையாட்டுக்கும் உள்ள பிணைப்பு பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானிகள் ஆராயும் விடயமாக மாறி வருவதனை அவதானிக்கலாம்.

இது, உலக அரங்கில் விளையாட்டும் அரசியலும் எவ்வாறு பிணைந்திருக்கின்றது என்பதனையும் அது எவ்வளவு முக்கியதான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது என்பதனையும் காட்டுகிறது.

"போட்டிக்கு அப்பால்: விளையாட்டும் அரசியலும்" (More Than a Game: Sports and Politics by Martin Barry Vinokur) என்ற புத்தகத்தில் மாட்டின் வினோகர் பின்வருமாறு கூறுகிறார்,

"நாடுகள் விளையாட்டின் மூலம் தேசியத்தை வளர்த்து எடுக்கின்றது. விளையாட்டு ஒரு நாட்டின் பரப்புரைக்கான முக்கிய கருவியாகப் பயன்படுகின்றது".

மேல் நாடுகளில் விளையாட்டு இன்று மிகவும் முக்கிய ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஆகையால் இது ஒரு அரசியல் கருவியாக உபயோகிக்கப்படும் சந்தர்ப்பங்களும் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் விளையாட்டு பிரேயோகிக்கப்படும் விதங்களை மேல்நாட்டவர் அங்கும் அரசியலும் விளையாட்டும் பிணைந்துள்ளது என்ற அதே கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பார்கள்.

இலங்கைத்தீவில் துடுப்பாட்ட விளையாட்டு இன்று எடுத்துள்ள முக்கியத்துவத்தை இந்தப் பின்னணியில் ஆராந்து பார்க்கலாம். முக்கியமாக சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியின் அண்மைய வெற்றிகளை தமிழர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதனை மேல்நாட்டவர் அவதானிக்கும் போது அவர்கள் தமிழ்த் தேசியத்தை தவறாக மதிப்பிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.

பிரபல எழுத்தாளரான மாமனிதர் சிவராம்; (தராக்கி) ஒரு கட்டுரையில் சிறிலங்கா துடுப்பாட்டம் தமிழ்த் தேசியத்திற்கு எப்படி ஆபத்தானதாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

அண்மையில் பல அனைத்துலக ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அணியின் வெற்றிகளையும், சில தமிழர்கள் அந்த அணிக்குக் கொடுக்கும் ஆதரவையும் மிகைப்படுத்தி இது தமிழ்-சிங்கள ஒற்றுமைக்கு வழிவகுக்குமா என்ற கேள்விகளை எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர்.

இதன் மூலம் மேல் நாட்டவர், தமிழர் இந்த அணிக்கு கொடுக்கும் ஆதரவை எப்படி நோக்குவார்கள் என்பதனையும், சிங்களவர் எப்படி கிரிக்கட் மூலம் தமிழ் தேசியத்தை மறைக்கலாம் என்று சிந்திக்கிறார்கள் என்பது பற்றியும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இவ்வாறே ஆழிப்பேரலையால் ஏற்பட்ட அழிவுக்குப் பின்னரும் தமிழ், சிங்கள சமூகங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அனைத்துலக சமூகம் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்ன என்பது வரலாறு.

அரசியலும் விளையாட்டும் ஒன்றுடனொன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள். ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும்.

இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள்.

தொடர்புபட்ட செய்தி: தென்னாப்பிரிக்காவைப் போல் சிறிலங்காவுக்கும் துடுப்பாட்டத் தடை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தீவிரம்

Australia v Sri Lanka, World Cup final, Barbados

Sri Lanka lose Tharanga chasing 282

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த எருமைக்கு நாட்டில வேலை இருந்தால் தானே வேலை செய்யிறதுக்கு பிறகு என்ன பொழுது போக்கிற்கு கிரிக்கட்டு போக வேண்டியது தானே வேலை இல்லாடடிக்கு பெண்டிலை தூக்கி உடற்பயிற்சி செய்தாலும் பரவாயில்லை

எல்லோருமாக சேர்ந்து எமது மனங்களில் படங்களாக கற்பனை செய்வோம் சிறிலங்கா அணி தோற்று வெறும் கையுடன் வருவதைபோல நிட்சயமாக மனங்களில் கற்பனை படங்களாக தோன்றியவை பல புதுமைகளை கொடுத்திருக்கின்றது.

நீங்கள் சொன்னது பலித்து விட்டது. :rolleyes::lol::o:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.