Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களை ஓரங்கட்டவேண்டாம் என்று ஜனாதிபதியிடம் வேண்டினார் ரிஷாத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களை ஓரங்கட்டவேண்டாம் என்று ஜனாதிபதியிடம் வேண்டினார் ரிஷாத்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியூர்தீனுக்கும் இடையில் நேற்று முன்தினம் பின்னிரவில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

rishad-bathiudeen-maithripala-sirisena.j

இச்சந்திப்பின்போது, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு படையினருக்கு ஆலோசனை வழங்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் படைத்தரப்பினர் சிலர் நடந்து கொள்ளும் முறைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள். அசௌகரியங்கள் குறித்தும் எடுத்துத்துரைத்தார்.

பள்ளிவாசல்களுக்குள் சப்பாத்துக் கால்களால் அங்குள்ள புனித குர்ஆன் பிரதிகள், அரபு கித்தாபுகளை உதைத்து வீசுவது, பள்ளிவாசல்களில் கடமைபுரியும் இமாம்கள் கத்தீப்மார்களுடன் தரக்குறைவாகப் பேசி சந்தேகத் தோரணையில் நடந்து கொள்ளும் செயற்பாடுகளால் முஸ்லிம்கள் மன வேதனைக்குள்ளாவதாகவும் விளக்கியுள்ளார்.

குறிப்பாக, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு முஸ்லிம் சமூகமும் சம்பூரணமாக ஒத்துழைக்கையில் சகலரையும் குற்ற உணர்வுடன் நோக்கும் ஒரு சில படையினரின் போக்குகள் ஒரு சமூகத்தையே ஓரங்கட்டும் முயற்சிகளாகவே உள்ளன. வீடுகளில் சமையலறைகளிலுள்ள சிறு,சிறு கத்திகள் இரும்புகள், பாத்திரங்களைக் கூட சில இனவாத ஊடகங்கள் ஆயுதங்களாகச் சித்தரித்துக் காட்டுவதாலும். பேசுவதாலும் மாற்று சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாகக் காண்பிக்க முயற்சிக்கப்படுகிறது.

இது சில வேளைகளில் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளை பாழ்படுத்திவிடும். இன உறவுகளிடையே இடைவெளியை ஏற்படுத்த முனையும் இவ்வூடகங்கள் சிங்கள, முஸ்லிம் முறுகல்களுக்குத் தூபமிடுவதாக உள்ளமை தமக்குப் பெரும் கவலையளிப்பதாகவும் கூறினார்.

குற்றவாளிகளைப் பூண்டோடு அழிக்க முஸ்லிம்கள் வழங்கும் பூரண ஆதரவைப் படையினர் புரிந்து கொண்டு செயற்படுவதனூடாகவே அடிப்படைவாதத்தை தனிமைப்படுத்தி அவர்களை ஒழிக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே தாடி, தொப்பி, ஜுப்பா போன்ற இஸ்லாமியக் கலாசார அடையாளத்துடன் தோன்றும் சகல முஸ்லிம்களையும் சந்தேகக் கண்ணுடன் நோக்குவதைத் தவிர்ந்து நடந்து கொள்ளுமாறு படையினருக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் அமைச்சர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/55304

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை என்னவென்றால்.. இவர்களே முஸ்லீம் ஊர்காவல் படைகளாகவும்.. ஜிகாத் ஒட்டுக்குழுக்களாகவும்.. சொறீலங்கா அரச பயங்கரவாதப் படைகளின் உறுப்பினர்களாகவும்.. சொறீலங்கா அரச பயங்கரவாத உளவாளிகளாகவும் இருந்து.. இதனை தமிழ் மக்களுக்கு எதிராக ஆண்டாண்டு காலமாகச் செய்து வந்துள்ளனர்.

எமது தங்கை கிருசாந்தி குமாரசாமியை கொன்று புதைத்த கூட்டங்களோடு கூட.. இவர்களின் தொடர்பு. கொழும்பில் தமிழ் இளைஞர்கள் மீதான சித்திரவதைகளை சிங்கள இனப்படுகொலை படை அதிகாரிகளுக்கு நிகராக முஸ்லிம் படை அதிகாரிகளும் உளவாளிகளும் அரங்கேற்றி இருந்தனர்.

அன்று சேர்ந்து போட்ட கூத்து.. இன்று இவர்கள் மீதான ஊழியாகி (வினையாகி) உள்ளது.. அவ்வளவே.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அன்று சேர்ந்து போட்ட கூத்து.. இன்று இவர்கள் மீதான ஊழியாகி (வினையாகி) உள்ளது.. அவ்வளவே.  

ம்ம் அதேதான் வினை விதைத்தால் அதை அறுவடை செய்தே ஆகவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

இவரது நண்பர், மூன்று ஜிகாதிகளின் தந்தையை விடச் சொல்லி கேட்கக் கூடிய, தில் கொண்டஆள் தான் இவர்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையேயான அரசியல் குழப்பத்தினால், (பெயர் குறிப்பிடாமல்) ஜிகாதிகளுடன் தொடர்புள்ளவர்களாக தெளிவாக தெரிபவர்கள் (இவர்) இன்னும் அமைச்சரவையில் இருக்கும் துரதிருஷ்ட நிலை உள்ளதாக ஆங்கில பத்திரிகை தெரிவிக்கிறது.

ரணில் தான், இவரை நீக்க கோரவேண்டும. நீக்கினால், ரணில் பதவி அம்போ. மறுபுறம் மகிந்தா காத்திருக்கிறார்.

ஆகவே இவர் காட்டில் மழை தான்.

இலங்கை ஒரு பௌத்த நாடு, 70% மக்கள் இந்த மதத்தை தம் மதமாக அடையாளம் காண்கிறார்கள். இதை அரசியல் தலைவர்களும் மகாநாயக்கர்கள் மூலம் தக்க வைக்கிறார்கள். 

ஆனால், சர்வதேசத்திற்கு தான் ஒரு பல் மத நாடாகாவும் சகலருக்கும் சம உரிமைகள் வழங்ப்படுவதாயும் வெற்றிகரமாக கூறி வருகின்றது. 

முஸ்லீம் - தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து  தமது மக்களுக்காக குரல் கொடுக்கவிட்டால், இலங்கையில் எல்லோரும் ஊதும் பிரித் மட்டுமே கேட்கும்.  அரச மரங்கள் மட்டுமே சந்திகளில் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இலங்கை ஒரு பௌத்த நாடு, 70% மக்கள் இந்த மதத்தை தம் மதமாக அடையாளம் காண்கிறார்கள். இதை அரசியல் தலைவர்களும் மகாநாயக்கர்கள் மூலம் தக்க வைக்கிறார்கள். 

ஆனால், சர்வதேசத்திற்கு தான் ஒரு பல் மத நாடாகாவும் சகலருக்கும் சம உரிமைகள் வழங்ப்படுவதாயும் வெற்றிகரமாக கூறி வருகின்றது. 

முஸ்லீம் - தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து  தமது மக்களுக்காக குரல் கொடுக்கவிட்டால், இலங்கையில் எல்லோரும் ஊதும் பிரித் மட்டுமே கேட்கும்.  அரச மரங்கள் மட்டுமே சந்திகளில் இருக்கும். 

தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைத்து பலத்துடன் உரிமைகளை வாங்கலாமே என்று சம்பந்தரும் தலையால கிடங்கு கிண்டிப் பார்த்தாரே.

மிதப்பில திரிஞ்சினமே. ஹக்கீம் போன்ற மிதவாதிகள் கூட, வாயை திறக்க முடியாதவாறு ஹிஸ்புல்லா, றிசாட் கோஸ்டிகளின் அலம்பறை இருந்தது.

ஹிஸ்புல்லா, றிசாட் அரசியல் எடுபடாது. முஸ்லீம் மக்கள் நிராகரிப்பார்கள். அத்துடன் அவர்களது எதிர்கால அரசியல் முனைவுகள் சிங்களத்தினால் தடுக்கப்படும். 

இன்று அவர்களாக சம்பந்தரிடம் வரவேண்டிய புற சூழல் உண்டாகி உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.