Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்ணீர்

Featured Replies

நமக்கு ஏராளமான மழை கிடைத்த போதும் நமக்கு ஏன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது? அவற்றை நாம் முறையாக சேமிக்காததே இதற்கு காரணம்!

ஆயுதங்கள் மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தில் வல்லமைமிக்க இஸ்ரேல், நீர்ப்பாசன தொழில்நுட்பங்களிலும் சர்வதேச அளவில் பிரபலமானது.

பாலைவனத்தில் பசுமையை கொண்டுவரமுடியும் என்ற அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்திக் காட்டிய நாடு இஸ்ரேல்.

தண்ணீரின் ஒரு துளியைக் கூட வீணடிக்காமல் இருக்கும் பண்பை இஸ்ரேலிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் இஸ்ரேல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது.

இஸ்ரேலில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் பாதியளவு மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் என்பது குறிப்பிடத்தக்கது.

1. காற்றில் இருந்து நைட்ரஜனை உறிஞ்சும் தன்மை கொண்ட மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவையே இஸ்ரேலில் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களின் வழியாக நைட்ரஜன் சத்து, நிலத்திற்கு இயல்பாகவே செல்கிறது. இந்த உபாயம் எந்தவித செலவும் இல்லாமல் நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. இந்த அமைப்புமுறை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பயனளிக்கக்கூடியது.

2. இஸ்ரேலின் சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பம். பயிருக்கு துளித்துளியாக தொடர்ந்து நீர் வழங்கப்பட்டால், சாகுபடி சிறப்பாக இருக்கும் என்ற யோசனையே இதன் அடிப்படை. இந்த முறையில் தண்ணீர் நேரடியாக நிலத்திற்கு செலுத்தப்படும் அல்லது பயிரின் வேருக்கு அருகில் விடப்படும்.

3. பயிரின் கீழ்பாகம் வரை தண்ணீர் செல்வதற்காக குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தண்ணீரை குறைந்த அளவு பயன்படுத்தி, அதில் இருந்து அதிக பயன்களைப் பெறுவது இதன் நோக்கம். மணற்பாங்கான பாலைவனப் பகுதியில் நல்ல தண்ணீர் அதிகம் கிடைக்காத நிலையில், பசுமையை கொண்டு வர சொட்டு நீர்ப்பாசனம் தான் அடிப்படை காரணியாக இருக்கிறது.

4. பிற நாடுகளில் ஆற்றல் பயன்பாடுகளுக்காக மரம் வெட்டப்படும் நிலையில், இஸ்ரேல் சூரியசக்தி மூலம் தனது ஆற்றல் தேவைகளை நிறைவேற்றுகிறது.

5. உவர்நீர் மற்றும் தரம் குறைந்த நீரிலும் விளையக்கூடிய பயிர்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆலிவ் முதல் அர்கன் வரையிலான மரங்களுக்கு இவற்றையே பயன்படுத்துகிறார்கள்.

6. பாலைவனப் பகுதிகளில் வளரும் பயிர்களிலும் இஸ்ரேலியர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பாலைவனத்தில் பணத்திற்காகவும், புரேட்டின் சத்துக்காகவும் மீன்வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதற்கு உவர்நீரே பிரதானம் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில், உவர் நீருக்கு உகந்த விவசாயம் மேற்கொள்வதால், அங்கு விவசாயம் உவப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாலைவனத்திலும் பசுமை பூத்துக்குலுங்குகிறது.

 https://www.bbc.com/tamil/global-40522516

à®à®¸à¯à®°à¯à®²à¯: மணலில௠மலரà¯à®®à¯ பà®à¯à®®à¯

  • Replies 59
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில்... இருக்கின்ற தண்ணீரை....மாசு படுத்தாமல் இருக்க, 
மனிதருக்கு  விழிப்புணர்வு அவசியம்.சுன்னாகத்தில் செய்த மாதிரி... 
பல்லாயிரக்  கணக்கான லீற்றர்  கழிவு எண்ணையை, நிலத்தில் ஊற்றியதால்... 
இன்று அப்பிரதேச மக்கள் குடிக்க நீர் இல்லாமலும்,
பல்வேறு நோய்களுடன் போராடிக் கொண்டும் இருக்கின்றார்கள்.

மனிதனுக்கு மிக மிக அத்தியாவசியமானது நீர். அந்த நீரை மாசு படுத்தி,
கொடிய செயலை செய்தவர்களுக்கு, இதுவரை தண்டனை கிடைத்ததாகவும் தெரியவில்லை.
தமிழ்நாட்டிலும்,  இதே... நிலைமைதான். வளமான பூமியை பாலைவனம் ஆக்க, 
அரசியல்வாதிகள் பணத்துக்காக  ஒரு இனத்தின் வாழ்வாதாரத்தை பாழாக்குகின்றார்கள்.

  • தொடங்கியவர்
நீரின்றி உயிர்கள் வாழ்தல் அாிது.நீரினால் மட்டுமே உயிா்கள் வாழ்கின்றன என்பதான்ல்தா உலகைப் படைத்த இறைவன் பெரும் பகுதி நீராகவும் எஞ்சிய பகுதி நிலமாகவும் படைத்தான்.
 
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மன்னர்கள் காலத்தில்கூட அமைச்சர்களை நோக்கி எழுப்பப்படும் முதல் கேள்வி ”மாதம் மும்மாாி மழை பொழிகின்றதா? மக்கள் நலமுடன் வாழ்கின்றனரா” என“பதே ஆகும்.இதிலிருந்தே மாாி என்னும் மழை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நன்கு விளங்கும்.
 
வடமாகாணம்  ஏனைய  மாகாணங்களை  விட  நீர்பற்றாக்குறை  கொண்ட மாகாணமாகும். அதிஸ்ட வசமாக யாழ் குடா நாடு நிலக்கீழ் நீர் பெற்ற நிலப்பரப்பாக இருப்பினும் நீர் முகாமைத்துவம் குறைந்த பகுதியாகவே உள்ளது.இதற்கு நாம் யுத்த நிலையை காரணம் கூறி  அமைதி  காண  முடியாது.  எமது  பாரம்பரிய  முறைமையுடன்;  எம்மவர்களின்  பண்புசார் நிலைமைகளும் பாதகமாக அமைவதை கூறியே ஆகவேண்டும்.மாற்ற எண்ணங்களை உள்வாங்க தயங்கும் நிலை விவசாய நடவடிக்கைகளிலும் திட்ட செயற்பாடுகளிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
 
தமிழில், உறவு ஒருவரின் ஆய்வுக்கட்டுரையை கீழே காணலாம். 
  • தொடங்கியவர்

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

நீரின்றி அமையாது உலகு... இது வள்ளுவர் வாக்கு. இன்னொரு உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது.

பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள

2070 தமிழகம் பாலைவனமாகும் :

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

- முகநூல் பக்கத்தில் இருந்து 

https://www.vikatan.com/news/miscellaneous/158557-what-nitin-gadkari-should-do-first-in-tamilnadu-instead-of-godavari-krishna-interlinking.html?fbclid=IwAR2QhwNK-6Dxr2rfHBIs79sliKtYAkM8QM_CVULLZjParnE3Y5JmuMMHYRs

 

  • தொடங்கியவர்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடுகள் மத்தியில் போதுமான தண்ணீர் கிடைக்கும் வீடு.

 

 

  • தொடங்கியவர்
 

#TamilEntrepreneur #தமிழ் #தாய்மண் #பொருளாதாரம் #மரம் #மண் #பிராணவாயு #கரியமலவாயு #புவிவெப்பம் #வரட்சி #தண்ணீர்

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கத் தவறினால் ஆறு, ஏரி, குளங்களில் பார்த்த தண்ணீரை 'கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும் என தமிழக அரசை எச்சரித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இலவசங்களைத் தவிர்த்து அணைகள் கட்ட வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது வெள்ளநீர் வீணாகக் கடலில் கலந்தது. இதையடுத்து சென்னையில் நவீன நீர் மேலாண்மை திட்டத்தை செயல் படுத்தக் கோரி வழக்கறிஞர் விபிஆர்.மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, ''வருவாய் ஆவணங்களில் ஏரி புறம்போக்கு என உள்ள நீர்பிடிப்புப் பகுதியை அதிகரிப்பதன் மூலம் வெள்ளநீர் வீணாகக் கடலுக்கு செல்வதைத் தடுக்க முடியும். ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் வெள்ள சேதமும் கட்டுப்படுத்தப்படும்'' என வாதிட்டார்.

சென்னை மாநகருக்கு ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைக்கு பதிலாக 550 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான தண்ணீர் வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டர், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 200 மில்லியன் லிட்டர், கல்குவாரிகளில் இருந்து 30 மி.லி., எஞ்சிய 140 மி.லி. பூண்டி, புழல் ஏரிகளில் இருந்தும் எடுக்கப்படுகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für திலà¯à®ªà®©à¯ பிரபாà®à®°à®©à¯.

தண்ணீர்  அருந்தாமல்,  சாதாரண ஒரு மனிதனால்,
ஐந்து மணித்தியாலத்துக்கு மேல் தாங்குவது கடினம்.

மாவீரன்  திலீபன்.... அகிம்சை போராட்டத்தில், 
பன்னிரண்டு நாட்கள், நீர் அருந்தாமல்... செய்த உண்ணாவிரதம் மறக்க  முடியாதது.

இந்தியாவின்,  மகாத்மா  காந்தி, என சொல்லப் படும் அவரே...
தண்ணீர்  குடித்துக் கொண்டு தான்,  உண்ணா விரதம்  இருந்து,
இந்தியாவுக்கு.... சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

காற்றில் இருந்து நீரை பெறக்கூடிய இயந்திரம் - தொழில்நுட்பம்.  

 

  • தொடங்கியவர்

முல்/மாங்குளம் மத்திய மாக வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொகுதி மாணவர்களின் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

 

 

  • தொடங்கியவர்

?t=30

தாய்ப்பாலும் தண்ணீரும் ஒன்றாகத்தான் இருந்தது 

2030 கண்டிப்பா இது நடக்கும் தமிழகத்தில் அதுக்கு முன் நாம் எல்லோரும் விழித்துக் கொள்ள வேண்டும் காப்பரேட் கம்பெனி முதலில் தமிழகம் முழுவதும் மூட செய்ய வேண்டும்

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் என்னும் மிருகம். மனதை பாதித்த காணொளி. 😰

On 5/29/2019 at 6:25 AM, ampanai said:

நமக்கு ஏராளமான மழை கிடைத்த போதும் நமக்கு ஏன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது? அவற்றை நாம் முறையாக சேமிக்காததே இதற்கு காரணம்!

ஆயுதங்கள் மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தில் வல்லமைமிக்க இஸ்ரேல், நீர்ப்பாசன தொழில்நுட்பங்களிலும் சர்வதேச அளவில் பிரபலமானது.

பாலைவனத்தில் பசுமையை கொண்டுவரமுடியும் என்ற அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்திக் காட்டிய நாடு இஸ்ரேல்.

தண்ணீரின் ஒரு துளியைக் கூட வீணடிக்காமல் இருக்கும் பண்பை இஸ்ரேலிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் இஸ்ரேல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது.

இஸ்ரேலில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் பாதியளவு மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் என்பது குறிப்பிடத்தக்கது.

1. காற்றில் இருந்து நைட்ரஜனை உறிஞ்சும் தன்மை கொண்ட மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவையே இஸ்ரேலில் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களின் வழியாக நைட்ரஜன் சத்து, நிலத்திற்கு இயல்பாகவே செல்கிறது. இந்த உபாயம் எந்தவித செலவும் இல்லாமல் நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. இந்த அமைப்புமுறை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பயனளிக்கக்கூடியது.

2. இஸ்ரேலின் சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பம். பயிருக்கு துளித்துளியாக தொடர்ந்து நீர் வழங்கப்பட்டால், சாகுபடி சிறப்பாக இருக்கும் என்ற யோசனையே இதன் அடிப்படை. இந்த முறையில் தண்ணீர் நேரடியாக நிலத்திற்கு செலுத்தப்படும் அல்லது பயிரின் வேருக்கு அருகில் விடப்படும்.

3. பயிரின் கீழ்பாகம் வரை தண்ணீர் செல்வதற்காக குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தண்ணீரை குறைந்த அளவு பயன்படுத்தி, அதில் இருந்து அதிக பயன்களைப் பெறுவது இதன் நோக்கம். மணற்பாங்கான பாலைவனப் பகுதியில் நல்ல தண்ணீர் அதிகம் கிடைக்காத நிலையில், பசுமையை கொண்டு வர சொட்டு நீர்ப்பாசனம் தான் அடிப்படை காரணியாக இருக்கிறது.

4. பிற நாடுகளில் ஆற்றல் பயன்பாடுகளுக்காக மரம் வெட்டப்படும் நிலையில், இஸ்ரேல் சூரியசக்தி மூலம் தனது ஆற்றல் தேவைகளை நிறைவேற்றுகிறது.

5. உவர்நீர் மற்றும் தரம் குறைந்த நீரிலும் விளையக்கூடிய பயிர்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆலிவ் முதல் அர்கன் வரையிலான மரங்களுக்கு இவற்றையே பயன்படுத்துகிறார்கள்.

6. பாலைவனப் பகுதிகளில் வளரும் பயிர்களிலும் இஸ்ரேலியர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பாலைவனத்தில் பணத்திற்காகவும், புரேட்டின் சத்துக்காகவும் மீன்வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதற்கு உவர்நீரே பிரதானம் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில், உவர் நீருக்கு உகந்த விவசாயம் மேற்கொள்வதால், அங்கு விவசாயம் உவப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாலைவனத்திலும் பசுமை பூத்துக்குலுங்குகிறது.

 https://www.bbc.com/tamil/global-40522516

à®à®¸à¯à®°à¯à®²à¯: மணலில௠மலரà¯à®®à¯ பà®à¯à®®à¯

பயனுள்ள பதிவு. தண்ணீரின் முக்கியத்துவத்தை இன்னும் மனித ஜந்துக்கள் உணரவில்லை. எதிர்காலச் சந்ததிகள் நீரின்றி தவிக்கும் நிலைக்கு நாமும் நம் அலட்சியப்போக்கும் காரணமாக அமையும்.

"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு " 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

தண்ணீர் பிரச்னையில் கொல்லப்பட்ட தஞ்சை சமூக ஆர்வலர் - தலைமகனை இழந்து தவிக்கும் குடும்பம்!

ஆனந்த்பாபுவுக்கு இரண்டு அக்கா, ஒரு தங்கச்சி அதில் ஒரு அக்காவுக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது. அவருக்கு மூளை வளர்ச்சியடையாத, கை, கால்கள் செயல் இழந்த நிலையில் 14 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உடல் நிலை முடியாத அப்பா, அம்மா என அந்தக் குடும்பத்துக்கே இவன்தான் ஜீவாதாரமாக, வாழ்வாதாரமாக இருந்தான். அவன் இல்லாமல் போனதால் அந்தக் குடும்பே, தற்போது நிர்கதியாய் நிற்கிறது. இனி எதிர்காலத்துக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் தலைமகனை இழந்து தவித்து வருகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/159405-tanjore-youth-beaten-to-death-over-water-sharing-dispute.html?fbclid=IwAR3GsLe-ZuleJhp69yDx2HLk8M__-8Ik47JhAeDE2gjfagVGwXgts9UNji8

  • தொடங்கியவர்

 

வீட்டுக் கூரையில் விழும் ஒவ்வொரு மழைத்துளியையும் சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்தும் விவசாயி | Water

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

கடும் தண்ணீர் தட்டுப்பாடு - சென்னையில் 4000 உணவகங்கள் மூட ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு

தண்ணீர் தட்டுப்பாட்டால் ஐ.டி.ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்ய ஐ.டி.நிறுவனங்கள் அறிவுறுத்தல்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®°à¯

"சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் மேலும் ஐந்து மையங்கள் உடனடியாக தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் இந்தத் திட்டம் சரியானதா, இதனால் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா, இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?"

தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம், எந்த மூலையில் பார்த்தாலும் பொதுமக்களின் கூக்குரல், தெருக்குழாய்கள் முன்னே அணிவகுக்கும் காலிக்குடங்கள், வற்றிய கிணற்றில் ஊசலாடும் வாளி, குடிநீர் கேட்டு சாலைமறியல், ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தண்ணீர்ப் பிரச்னைக்காகத் தீக்குளிப்பு முயற்சி, தண்ணீருக்காகக் கத்திக்குத்து, `தண்ணீர் இல்லை' எனத் தீயணைப்பு நிலையங்கள் கைவிரிப்பு... இதுபோன்று எங்கு கேட்டாலும் `தண்ணீர் இல்லை’ என்கிற பேச்சு மட்டும்தான். இப்போது தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது தண்ணீர்த் தட்டுப்பாடு.

தொடர் போராட்டத்தில் மக்கள்...கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்... 'கொஞ்சம் பொறுங்கள் கடல்நீரைக் குடிநீராக்கித் தருகிறோம்' என்கிறார்கள் ஆட்சியாளர்கள். தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வாகப் பல்வேறு தரப்பினரால் ஒரு சேர முன்வைக்கப்படும் ஒரே மாற்று, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் மேலும் ஐந்து மையங்கள் உடனடியாக தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் இந்தத் திட்டம் சரியானதா, இதனால் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா, இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

கடல்நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுத்து, குடிநீராக மாற்றும் முறையே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். பொதுவாகக் காய்ச்சி வடித்தல் (Thermal distillation) மற்றும் எதிர் சவ்வூடு பரவல் (Reverse Osmosis - RO) என்ற இரண்டு தொழில்நுட்பமுறைகள் இருப்பினும் எதிர் சவ்வூடு முறையே பெரும்பாலும் உலகநாடுகளால் பரிந்துரைக்கப்படுகிறது. சர்வதேச உப்பு நீக்கும் சங்கத்தின் (International Desalination Association) அறிக்கையில், 2015 வரையிலான கணக்கெடுப்பின்படி, உலக அளவில் சுமார் 150 நாடுகளில் 18,000 உப்பு நீக்கும் தொழிற்சாலைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற வறட்சி மிகுந்த வளைகுடா நாடுகளில் மட்டும் 55 சதவிகிதம் கடல்நீர் பயன்பாட்டில் உள்ளது. சவுதி அரேபியாவின் செங்கடல், பெர்சியன் வளைகுடாவில் மட்டும் கடல்நீரை குடிநீராக்கக்கூடிய 27 ஆலைகள் உள்ளன.

திட்டத்தின் விளைவுகள், ஆபத்தில் உலகச் சமநிலை!

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தின் 840 மைல் கடற்கரைப்பகுதியில் 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பொசைடன் (Poseidon) உள்ளிட்ட நிறுவனங்களின் 21 கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் இருந்தன. இதன்மூலம் நவாடா (Nevada), ஆரஞ்ச் கவுண்டி (Orange county) உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

இந்த ஆலைகளின் தாக்கத்தால் கடல்வளம் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளானது என `பசிபிக் இன்ஸ்டிட்யூட் வாட்டர் புரோகிராம்' (Pacific Institute’s Water Program) என்ற அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. `Desalination: An Ocean of Problems' என்னும் பெயரிலான அந்த ஆய்வறிக்கையில், ``கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளினால், ஆண்டுதோறும் சுமார் 3.4 மில்லியன் அளவிற்கு மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. இதனால் மீனவர்கள் சுமார் 165 மில்லியன் பவுண்ட் அளவிலான மீன்களை நாள்தோறும் இழக்கின்றனர். மேலும் சுமார் 717.1 மில்லியன் பவுண்ட் அளவிற்கு எதிர்கால மீன்பிடி இருப்பை இழப்பதோடு, சுமார் $212.5 மில்லியன் டாலர் அளவு பொருளாதார இழப்பையும் சந்திக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் ஹேதர் கூலே (Heather Cooley), “கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் நீரை உறிஞ்சுவதனாலும், கரிப்பு நிறைந்த நச்சு நீரை வெளியேற்றுவதனாலும் கடலின் சுற்றுபுறச்சூழல் வெவ்வேறு முறைகளில் மாசடைகிறது. இந்தப் பகுதிகளில் கடல் உயிரினங்கள் வாழ்வதும் அரிதாகும் சூழல் ஏற்படுகிறது” என்று தெரிவிக்கிறார்.

சுத்திகரிப்பு செய்யப்பட்ட கடல்நீர் போக மீதமுள்ள வேதிகலந்த உப்புநீர் மீண்டும் கடலுக்குள்ளேயே செலுத்தப்படும். சாதாரண கடல்நீரின் உப்புத்தன்மையை விட உட்செலுத்தப்படும் எஞ்சிய நீரின் தன்மை இரண்டு மடங்கு உப்புத்தன்மை வாய்ந்தது. கடல்நீரின் உப்புத்தன்மை இயல்பாக மூன்று சதவிகிதம். ஆனால் வெளியேற்றப்படும் நீரின் உப்புத்தன்மை ஆறு சதவிகிதம். இந்த உப்புநீரோடு சுத்திகரிப்பில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்களும் சேர்ந்து வெளியேறுவதால் நச்சு நிறைந்த உப்பாக (Toxic Brine) மாறி கடலில் கலக்கிறது. இதனால் அந்தப் பகுதி முழுமையும் ரசாயன மண்டலமாக மாறி, உயிர்வாழத் தகுதியற்ற இடமாக மாறுகிறது. பெரும்பாலும் சிறிய உயிரினங்களே அழிவுக்குள்ளாவதனால் உணவுச்சங்கிலியின் அடிப்படையே இதனால் அறுபடுகிறது. சர்வதேசக் கடல்நீர் வல்லுநர்கள் 'அழிவுப்பகுதி' (Dead Zone or Kill Zone) என்று அழைக்கிறார்கள். சுழற்சிமுறையில் இந்த நீரே மீண்டும் குடிநீராக சுத்திகரிக்க உள்ளிழுக்கப்படுகிறது.

திட்டத்தின் பின்னணி என்ன?

'ஃபுட் & வாட்டர் வாட்ச்' (Food & Water Watch) என்ற பொதுநல அமைப்பின் அறிக்கையில், ``கடல்நீரைக் குடிநீராக்கும் முறை, நம் பாரம்பார்ய முறையைவிட நான்கு மடங்கு செலவு மிகுந்த தொழில்நுட்பம். பெருமளவு மின்சார விரயமும் ஏற்படும். போரான் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் கடல்நீரில் உள்ளன. ஆனால் சாதாரண குடிநீரில் அவை கிடையாது. சுத்திகரிப்பின் மூலம் 50 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை மட்டுமே இவை நீக்கப்படும். இந்தத் தொழில்நுட்பத்தால் கடல்வாழ் உயிரினங்கள் அழியும். தண்ணீர் மாசுபடும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். உலக வெப்பமயமாதல் உண்டாகும்!” என எச்சரிக்கை விடுக்கிறது. 

தமிழகத்தில் தடம்பதித்த திட்டம்:

 

சென்னை மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலைதான், தெற்காசியாவிலேயே மிகப்பெரியது. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியிலும் ரூ.5,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. அடுத்தடுத்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்பணிகளும் நடந்து வருகின்றன. சென்னை மட்டுமல்லாது ரூ.700 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரிலும், ரூ.1000 கோடியில் விழுப்புரம் மாவட்டத்திலும், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி எனத் தொடர்ந்து தமிழகக்  கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பெரும் பொருள்செலவில் தயாராகி வருகின்றன.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது அந்தப் பகுதி மக்கள் வரவேற்றனர். ஆனால், பாதிப்பை நேரடியாக உணர்ந்த பின்னர் அந்த ஆலைகளுக்கு எதிராக ``NO DESAL PLANT” என்ற கோஷத்துடன் குழந்தைகளும், பெண்களும், மீனவர்களும் என ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநாட்டில் மட்டுமல்ல தமிழ்நாட்டில், சென்னை நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையிலிருந்து விநாடிக்கு 2,000 லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுவதால், அப்பகுதி குடிநீர், உப்புநீராக மாறியிருக்கிறது.

மேலும் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவக்குப்பத்தில் 200 அடிக்குக் கடல்நீர் உட்புகுந்து சமுதாயக்கூடம், வலைப்பின்னல் கூடமெல்லாம் இடிந்து விழுந்தன. கடலின் மேற்பரப்பில் வேகமாகக் கழிவுநீர் பாய்வதனால் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் உடைந்து கடலில் அடித்துச் செல்லப்பட்டன. இதுபோன்ற தொடர் நிகழ்வால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அப்பகுதி மக்கள் ஆலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இதேபோல் சென்னை மீஞ்சூரிலும் போராட்டம் நடந்தது. 

இயற்கையே இயங்கியல் தத்துவம்:

தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என வான்மழை பார்த்து வாழ்ந்த மக்கள் இன்று கடலை நோக்கி நகர்வது காலக்கொடுமை. கடல்நீரிலிருந்து உப்பு வடித்த கூட்டம், இப்போது உப்புநீரிலிருந்த குடிநீரை வடிக்கும்வழியில் ஒதுங்குகிறது. நவீனத்தின் பெயரால் நரக வாழ்க்கை வாழ்கிறது. குடிநீர்ப் பிரச்னைகளுக்குக் கடல்நீரைக் சுத்திகரிக்கும் ஆலைகள் ஒருபோதும் நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியாது. அது மக்களின் தாகத்தைத் தணிப்பதற்கு மாறாக, நிறுவனங்களின் லாபத்தையே கணிக்கின்றன.  

  • தொடங்கியவர்

சென்னையில் மட்டும் சுமார் 4,000 ஏரிகள்வரை பயன்பாட்டில் இருந்தன. ஆண்டுக்குச் சராசரியாக 1,350 மி.மீ மழை பொழிகிறது. குடியிருப்புகளாக மாறிவிட்ட ஏரிகளைத் தவிர்த்து விட்டு, இப்போதுள்ள சில நூற்றுக்கணக்கான ஏரிகளையாவது தூர்வாரி, சீர்செய்து பெய்யக்கூடிய மழைநீரைச் சேகரித்தாலே குடிநீர்ப் பஞ்சம் என்பது எப்போதும் இருக்காது. மேலும் காவிரி, பாலாறு, வைகை, தாமிரபரணி போன்ற தமிழக நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைத் தேக்கிவைத்து குடிநீருக்கும், விவசாயத்திற்கும் ஆண்டுமுழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுபோன்ற பணிகளைச் செய்ய, கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைப்பதற்கான செலவைக் காட்டிலும் குறைவான தொகையே ஆகும். `அறிவற்றங் காக்குங் கருவி' என எழுதியவன் தமிழன். எனவே, அறிவுத் தெளிவோடு செயல்படுவோம்!

https://www.vikatan.com/news/coverstory/159740-seawater-desalination-plant-an-effect-of-commodification.html?fbclid=IwAR0m2l3JLUf8ynhA0XFUn17feTjlFcIt3xaEEYsRCRtcwiIbmJ7H6DC9zKw

  • கருத்துக்கள உறவுகள்

வீடுகளில் பாவித்து வெளியேறும் தண்ணீரை  இரண்டு வகையாக பிரிகிறார்கள்.

Grey Water 
Black Water 

முந்தியது, குளிப்பு, கழுவுதல் போன்றவை நடந்த பின் வெளியேறுவது.

இரண்டாவது, மனித கழிவுகளுடன் (flush) வெளியேறும் நீர்.

இந்த இரண்டாவது வகையில், நோய் தரக்கூடிய கிருமிகள் இருப்பதால், அதனை மீள் பாவனைக்கு பயன்படுத்த முடியாது.

ஆனால், முதலாவது வகை கழிவு நீரை, சேமித்து, வடிகட்டி flush தேவைகளுக்கு பாவித்து, தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும் என்ற சிந்தனை இப்போது வந்துள்ளது.

வீட்டில் இருக்கும் ஒவொருவரும் மலம், சிறுநீர் என, flush மூலம் வெளியே அனுப்பும் நீரை, இந்த முதலாவது வகை நீரை பாவிப்பதன் மூலம் தடுக்கலாம் என நினைக்கிறார்கள்.

விரைவில் அது பாவனைக்கு வரும். தண்ணீர் தட்டுப்பாடுள்ள நாடுகளில் இது விரைவில் வரலாம்.

Image result for using grey water for flushing toiletsImage result for using grey water for flushing toilets

  • தொடங்கியவர்

ஒரு ஆறு கிடையாது... 
மழையும் பெய்யாது... 
தண்ணீர்ப் பஞ்சமும் இல்லை ! உலகில் இப்படியும் ஒரு நாடு

வளைகுடாவில் சவுதி உள்ளிட்ட பல நாடுகள் மழை மறைவு பிரதேசங்கள்தான். மழை பெய்தால் அவர்களுக்குத் தீபாவளிபோல. ஈராக், சிரியாவில் ஓடும் டைகரீஸ் ஆறு மட்டுமே வளைகுடாவில் ஓடும் பெரிய நதி.  

à®à®µà¯à®¤à®¿ à®à¯à®à®¿à®¨à¯à®°à¯ திà®à¯à®à®à¯à®à®³à¯ à®à®®à¯à®¨à¯à®¤ à®à®à®à¯à®à®³à¯

உலகிலேயே ஒரு ஆறுகூட இல்லாத நாடு சவுதி அரேபியா. சவுதி மட்டுமல்ல பஹ்ரைன், அமீரகம் ஓமன், ஏமன், கத்தார் போன்ற நாடுகளிலும் நிரந்தரமான ஆறுகள் கிடையாது. எப்போதாவது மழை கொட்டினால் திடீர் ஆறுகள் உருவாகும். அப்படியென்றால் இந்த நாடுகள் எப்படி தண்ணீர்ப் பிரச்னையைச் தீர்த்துக்கொள்கின்றன என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? சிம்பிள்... கடல்நீரைக் குடிப்பதற்கு உகந்ததாக்கிக் கொள்கிறார்கள். கடல் நீரில் உப்புத் தன்மையை நீக்கிப் பல நிலைகளில் கொதிக்க வைத்து குடிநீராக மாற்றிக் கொள்கிறார்கள். 

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத், கடற்கரையிலிருந்து 467 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரின் மக்கள் தொகை சுமார் 35 லட்சம். பாரசீக கடல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு தங்குதடையில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.  இதற்காக மொத்தம் 17 இடங்களில் 27 குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் சவுதியில் உள்ளன. கிட்டத்தட்டச் சவுதியின் 4 கோடி மக்களுக்கும் தங்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கிறது. வளைகுடாவின் முக்கிய நகரங்களான ஜெட்டா, துபாய், அபுதாபி, ஷார்ஜா, தோஹா போன்ற எல்லா நகரங்களிலுமே கடல் நீரைக் குடிநீராக்கி பயன்படுத்துகிறார்கள். 

சென்னை அருகே நெம்மேலி, மீஞ்சூர் பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கேயிருந்து தினமும் 10 கோடி லிட்டர் கடல்நீர் குடிநீராக்கப்படுகிறது. தென்சென்னை மக்களுக்கு இந்தத் திட்டம்தான் கொஞ்சம் கைகொடுக்கிறது.  சென்னை போன்ற தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள நகரங்களுக்காகக் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் அரசு போதிய கவனம் செலுத்தினால் வருங்காலத்தில் தண்ணீர்ப் பிரச்னையைச் சமாளிக்க முடியும். 

https://www.vikatan.com/news/world/159710-no-river-in-this-saudi-but-no-water-crisis-also.html?fbclid=IwAR1KGYj4GcywOQEiMcgDY5ivBjF4HWnXgeEThudNh_YJb_dIaxHkX3SYT3c

 

 

 

 

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

D9EMWRuUwAELdcn.jpg:large

  • தொடங்கியவர்

தண்ணீர் சினிமா... தண்ணீர் பஞ்சத்தை திரை முன் கொண்டுவந்த கத்தி, அறம்!

https://tamil.news18.com/videos/shows/water-scarcity-issue-tamil-movies-akp-167335.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.