Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி

கி.தவசீலன்Jun 02, 2019 | 3:56
by in செய்திகள்

maithripala-300x200.jpg

அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தலையீடு செய்யும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று அதிபர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“போராட்டத்தை ஆரம்பிக்க முன்னதாக, அத்துரலியே ரத்தன தேரர் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து, முதலில் கலந்துரையாடியிருக்க வேண்டும்.

அவர் அவ்வாறு செய்யாத நிலையில், இந்த விடயத்தில் இப்போதைக்குத் தலையிடும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை” என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அதேவேளை, “சிறிலங்கா அதிபரிடம் கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதால், தாம் தலையீடு செய்ய விரும்பவில்லை என்றும், எனினும் செவ்வாயன்று அமைச்சரவைக் கூட்டத்தில்  இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வேன் எனவும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா, கூறினார்.

 

http://www.puthinappalakai.net/2019/06/02/news/38282

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot_20190531_065911.jpg

et2.jpg

அத்துரலியே ரத்தன தேரர்.... இன்னும் இரண்டு நாள் பல்லை கடித்துக் கொண்டு. 
உண்ணாவிரதம் இருந்தால், ஜனாதிபதியே... தலதா மாளிகைக்கு வந்து, அவரின் கோரிக்கையை... கேட்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

et2.jpg

அத்துரலியே ரத்தன தேரர்.... இன்னும் இரண்டு நாள் பல்லை கடித்துக் கொண்டு. 
உண்ணாவிரதம் இருந்தால், ஜனாதிபதியே... தலதா மாளிகைக்கு வந்து, அவரின் கோரிக்கையை... கேட்பார். 

தேரருக்குப் பின்னால் செருப்புகள்.! கோரிக்கையைக் கேட்பார்களா...? கொடுப்பார்களா...?? 🤣 😲

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

தேரருக்குப் பின்னால் செருப்புகள்.! கோரிக்கையைக் கேட்பார்களா...? கொடுப்பார்களா...?? 🤣 😲

என்னுடைய கோரிக்கையை... அரசு கேட்கா விட்டால், 
செருப்பாலை  அடிவிழும்  என்று தேரர் "சிம்பாலிக்கா" சொல்கிறதற்கு  தான்....
2 சோடி "பாட்டா" செருப்பு வைத்திருக்கிறார்.  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிà®à¯à®à¯à®à®³à¯ பà¯à®°à®¾à®à¯à®à®®à¯

கம்மென்று... உண்ணாவிரதம் இருந்த தேரர், படுத்து விட்டார்.
இனி... மைத்திரி,  வரத்தான் வேணும். :grin:

ரிஷாத் பதியுதீனுக்கு அமைச்சுப் பதவியை வழங்கியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ஹிஸ்புல்லாவுக்கும் அசாத் சாலிக்கும் ஆளுநர் பதவிகளை வழங்கியவர் ஜனாதிபதி மைத்திரி. 
ஆக அரசியல் வாதிகளின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் நிலை போல உள்ளது,

அடுத்து, இவர்கள் பதவி விலகினால்,  அடுத்த கணமே பயங்கரவாத குற்றப்புலனாய்வுத்துறை தங்கள் மீது பாயும் என்பதுடன் கைது, விசாரணை என்பன இடம்பெறாவிட்டால் அதனை வலியுறுத்தியதாகவும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றும் நடக்கும் என்ற நடுக்கமும் குறித்த மூவரிடமும் ஏற்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பிà®à¯à®à¯à®à®³à¯ பà¯à®°à®¾à®à¯à®à®®à¯

கம்மென்று... உண்ணாவிரதம் இருந்த தேரர், படுத்து விட்டார்.
இனி... மைத்திரி,  வரத்தான் வேணும். :grin:

உண்ணாவிரதம் எண்டா, ஏசி, தலைமாட்டில வைப்பு, கால்மாட்டில செப்பு எண்டு பார்த்து பழகின படியால, இது சேர்ப்பில்லை.

8 hours ago, தமிழ் சிறி said:

அத்துரலியே ரத்தன தேரர்.... இன்னும் இரண்டு நாள் பல்லை கடித்துக் கொண்டு. 
உண்ணாவிரதம் இருந்தால், ஜனாதிபதியே... தலதா மாளிகைக்கு வந்து, அவரின் கோரிக்கையை... கேட்பார். 

மைத்திரியே வராவிட்டாலும் இன்னும் சில நாட்களில் அவர் உண்ணாவிரதத்தை முடித்து விடுவார். 😀

நாளை 12 மணிக்கு முன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடு முழுவதும் திருவிழாவை காணலாம் எச்சரிகின்றார்- ஞானசார தேரர்....
?v=605834459911402
 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உண்ணாவிரதம் எண்டா, ஏசி, தலைமாட்டில வைப்பு, கால்மாட்டில செப்பு எண்டு பார்த்து பழகின படியால, இது சேர்ப்பில்லை.

உண்ணாவிரதம் இருப்பது... கறுப்புக் கண்ணாடிக் காரர் இல்லை. புத்த பிக்கு.
அவருக்கு ஏதாவது நடந்தால், ஸ்ரீலங்காவில்... இரத்த ஆறு ஓடும்,  ஐயா....  😄

Bildergebnis für பà®à®¿à®à¯à®à¯à®®à¯à®²

Bildergebnis für பà®à®¿à®à¯à®à¯à®®à¯à®²

1 hour ago, Lara said:

மைத்திரியே வராவிட்டாலும் இன்னும் சில நாட்களில் அவர் உண்ணாவிரதத்தை முடித்து விடுவார். 😀

ஏன்... புத்த பிக்கு, பசி தாங்க மாட்டாரா?  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பிà®à¯à®à¯à®à®³à¯ பà¯à®°à®¾à®à¯à®à®®à¯

கம்மென்று... உண்ணாவிரதம் இருந்த தேரர், படுத்து விட்டார்.
இனி... மைத்திரி,  வரத்தான் வேணும். :grin:

நீங்க ஒன்னு. தலைமாட்டிலை ஒன்னு, கால்மாட்டிலை ஒன்னு என்று கருநாநிதிபோல் தனக்கும் வாய்க்கவில்லையே.! மொட்டையைப் போட்டுவிட்டேனே! என்ற கவலை அவருக்கு, படுத்துவிட்டார்..!! 🙄🙄   

1 hour ago, தமிழ் சிறி said:

ஏன்... புத்த பிக்கு, பசி தாங்க மாட்டாரா?  :grin:

தண்ணி குடிச்சு குடிச்சே ஆள் இப்பிடி சுருண்டு படுத்திட்டுதெண்டால் மருத்துவரை வரவழைச்சு உண்ணாவிரதத்தை முடிச்சு வைச்சாலும் வைப்பினம். 😀

D8DCvffUYAAabUO?format=jpg&name=900x900

1 hour ago, ampanai said:
நாளை 12 மணிக்கு முன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடு முழுவதும் திருவிழாவை காணலாம் எச்சரிகின்றார்- ஞானசார தேரர்....
 

எல்லாம் அரசியல் நாடகம். சொல்லி வைச்சு செய்யினம்.

D8CjPEMUYAENp1C?format=jpg&name=small

உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்தார் அதுரலிய ரத்ன தேரர்

கடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் போராட்டத்தை சற்றுமுன்னர் நிறைவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

F3D4F8DE-0690-407A-8A05-0CFEF39E75DA.jpg

உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த அதுரலிய ரத்ன தேரர் வைத்திய பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

5AE6770E-AA67-4B6F-B3C9-7C2037022F92.jpg

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளதாக உண்ணாவிரத போராட்டத்திலீடுபட்டிருந்த அதுரலிய ரத்ன தேரருக்கு மத்திய மாகாண ஆளுநர் அறிவித்ததையடுத்து தேரர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனக் கோரியும் அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் எனக் கோரியும் கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ( 31.05.2019 ) உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்டார்.

இதையடுத்து, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது இராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் இன்று கையளித்திருந்த நிலையில், இரு ஆளுநர்களின் பதவி விலகல் இராஜிநாமா கடிதங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் கோரிக்கைக்கு குறித்த தீர்வினை வழங்குமாறு கோரியே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவசர கடிதங்களையும் எழுதியிருந்தனர்.

இதையடுத்தே உண்ணாவிரதப் போராட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் கைவிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/57384

சிங்கள நாட்டின் அழிவிற்கு ஒரு முக்கிய காரணம் பௌத்த துறவிகளின் அரசியல் தலையீடு, இனவாதம்.


கௌதம புத்தர் இருந்திருந்தால் வெட்கப்பட்டிருப்பார்.

குருவை மிஞ்சிய சீடன் 

61861879_482073179197553_648278594394941

தற்போது இடம்பெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சார்பில் திசர பெரேராவை முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க வேண்டுமென வலியுறுத்தி மீகொட பகுதியைச் சேர்ந்த  நபர் ஒருவர் மரத்தில் ஏறியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் குறித்த நபர் இன்று காலை 8.45 மணியளவில் மரத்தில் ஏறிய அவர் தனது போராட்டத்திற்கு முடிவு தெரியும் வரை தான் மரத்திலிருந்து இறங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/57422

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.