Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார்.

சாதி ரீதியான ஒடுக்கு முறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.

குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம், நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான் என ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.

‘சமூக பங்களிப்பு’

ராசுகுமார், "ஓர் அரசர் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் யாருடைய வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இருந்ததோ, அந்த வர்க்க நலனை அரசர்கள் பாதுகாத்து கொண்டுதான் இருந்தார்கள். அதனை நாம் மறுத்துவிட முடியாது. எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஆனால், அதே நேரம் தாங்கள் இருக்கின்ற சமூகத்தில் அன்றைய சமூக பொருளியல் நிலையில் அந்த சமூகத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அந்த மன்னர்கள் எப்படி அழைத்து சென்றார்கள் என பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால்தான் ராஜராஜ சோழனின் பங்களிப்பை நாம் புறந்தள்ள முடியாது" என்கிறார் மே.து.ராசுக்குமார்.

ராஜராஜன் சோழன் காலம் இருண்டகாலமா? - வரலாற்றாசிரியர் பேட்டிபடத்தின் காப்புரிமை Facebook

"வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது. இதன் மூலமாக உற்பத்தி பெருகியது. உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது. உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது. ஒரு அரசன் பிற நாடுகளை பிடித்ததை வைத்தே அவரை குற்றஞ்சாட்டுவோமாயின், இங்கு எந்த அரசரையும் புகழ முடியாது" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராசுகுமார்.

மே.து.ராசுகுமார் பிறகாலச் சோழர் கால வாழ்வியல், சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல், தமிழகத்தொல் சாதியக் குடிகளின் மேலேற்றமும் கீழிறக்கமும் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.

'தீண்டப்படாதார் குறித்த குறிப்புகள்'

மே.து. ராசு குமார் Image caption மே.து. ராசுக்குமார்

பறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும் ராசுகுமார், "தீண்டதகாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் பறையர்கள் தீண்டத் தகாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள்? பறையர்கள் அந்த காலத்தில் தீண்டதகாதவர்களாக இல்லை. அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டதகாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம். அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்திருக்கலாம். விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டத்தகாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது என் மதிப்பீடு" என்கிறார்.

'கற்பிதங்கள்'

"இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன. பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார். அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது. அதில், "சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்" என்கிறார். பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை. பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் " என்று ராசுக்குமார் குறிப்பிடுகிறார்.

ராஜராஜன் சோழன் காலம் இருண்டகாலமா? - வரலாற்றாசிரியர் பேட்டிபடத்தின் காப்புரிமை M Niyas Ahmed

"ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை. பங்குதான் தரப்பட்டது. அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது. இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது. இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல். மற்றொன்று 'குடிநீங்கா பிரமதேயம்'. ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.

சரி. இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும். 'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல. வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது, யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'. அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள். இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள். உழுகுடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள். ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை" என்று ராஜராஜ சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை விவரிக்கிறார் மே.து.ராசுக்குமார்.

'உயர்நிலை'

"சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள். மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை. அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்." என்கிறார் ராசுக்குமார்.

https://www.bbc.com/tamil/india-48587731

எம் கண் முன்னே நடந்த போராட்டத்தினை பற்றியே  எத்தனை எழுந்தவிதமான கதைகள் கட்டுவோரை பார்த்து கொண்டிருக்கிறோம் 
இது 1000 ஆண்டுகளிற்கு முந்திய வரலாறு தானே எப்படி வேணும்னாலும் உளறிகொட்டிட்டு போய்டலாம் 

" 2000ஆண்டு காலம் என் சமூகம் அடிமையாக இருந்து வருகிறது"- கடந்த மாதம் 
" 1000 ஆண்டுகளிற்கு முன்னர்  ராஜராஜ சோழன் காலத்தில் தான் எங்கள் நிலங்கள் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டன" - நேற்று 
அடுத்த மாதம் ???? 

எல்லாற்றுக்கும் முட்டுக்கொடுக்கவும் ஒருகூட்டம் சுற்றி இருக்கும் தானே

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, அபராஜிதன் said:

எம் கண் முன்னே நடந்த போராட்டத்தினை பற்றியே  எத்தனை எழுந்தவிதமான கதைகள் கட்டுவோரை பார்த்து கொண்டிருக்கிறோம் 
இது 1000 ஆண்டுகளிற்கு முந்திய வரலாறு தானே எப்படி வேணும்னாலும் உளறிகொட்டிட்டு போய்டலாம் 

" 2000ஆண்டு காலம் என் சமூகம் அடிமையாக இருந்து வருகிறது"- கடந்த மாதம் 
" 1000 ஆண்டுகளிற்கு முன்னர்  ராஜராஜ சோழன் காலத்தில் தான் எங்கள் நிலங்கள் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டன" - நேற்று 
அடுத்த மாதம் ???? 

எல்லாற்றுக்கும் முட்டுக்கொடுக்கவும் ஒருகூட்டம் சுற்றி இருக்கும் தானே

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

எம் கண் முன்னே நடந்த போராட்டத்தினை பற்றியே  எத்தனை எழுந்தவிதமான கதைகள் கட்டுவோரை பார்த்து கொண்டிருக்கிறோம் 
இது 1000 ஆண்டுகளிற்கு முந்திய வரலாறு தானே எப்படி வேணும்னாலும் உளறிகொட்டிட்டு போய்டலாம் 

நியாசு அகமது என்ற வரலாற்று ஆய்வாளருக்கு ராச ராச சோழனை இழிவுபடுத்தினால் அது தமிழனையும் இழிவுபடுத்துவது போலாகும் என்ற எண்ணம் தோன்றி பிபிசி தமிழுக்கு இந்தப் பேட்டியைக் கொடுத்திருக்கலாம்.  

ஆரியர் வருகைபற்றிப் பார்த்தபோது கிடைத்தவை. வர்ணாச்சிரமம் முறையைக் கொண்டுவந்து மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி தங்களை உயர்நிலையில் வைத்துப் பாதுகாத்து வருபவர்கள் ஆரியர்களே என்பதையே சரித்திர வரலாறுகளும், புராணக் கதைகளும் இன்றும் இயம்பிநிற்கின்றன.

ஆரியர் வருகையாலும், ஆரிய வல்லாண்மையாலும், வடமொழித் தாக்கத்தாலும் தமிழ்மொழி பெரிதும் தாக்கமுற்றது. ஆரியர்கள் தம்வேதக் கருத்துகளைத் தமிழ் மக்களிடம் வலிந்து புகுத்தலாயினர். தமிழ் மன்னர்களைப் பல்வேறு வகைகளில் திசைத்திருப்பி தங்களுடைய இருப்புகளையும், ஏந்துகளையும் இந்நாட்டில் தக்கவைத்துக் கொண்டனர். மெல்ல மெல்ல இந்நாட்டில் நிலவிய நானிலத் தெய்வ வழிபாடுகளைப் புறக்கணிக்குமாறு செய்தனர். தமிழர் மதங்களான (சிவனிய, மாலிய) மதங்களில் தங்கள் வேதக் கருத்துகளைப் புகுத்தலாயினர். முத்தெய்வ வழிபாட்டை நுழைத்தனர். சமற்கிருதச் சொலவங்களையும் புரியாத மந்திரங்களையும் பாடல்களையும் மக்களிடைப் பழக்கப்படுத்தினர்.

இறை நம்பிக்கை என்ற பெயரில் தங்கள் மொழி, பண்பாடு, நாகரிகத்தை இந்த மக்களிடை, மண்ணிடையில் நுழைத்து அதன்வழி தங்கள் வாழ்வு அடிப்படையை வலுவாக அமைத்து கொண்டனர்.

முதலில் ஆரிய எதிர்ப்பைத் தொடங்கியவர்கள், சிவனிய சமயக் குரவர்களான நால்வரே. ஆரிய மந்திரங்களை எதிர்த்து அருமையான இன்னிசைப் பாடல்களான தேவாரம், திருவாசகத்தை இந்நாடு முழுவதும் வலம்வந்து பரப்பினர். அண்மைக் காலத்தில் இந்தித் திரைப்பாடல்களே தமிழ்நாட்டில் முணுமுணுத்துக் கொண்டிருந்த போது, தமிழ் இசையமைப்பாளர் ஒருவரின் திரையிசைத் தாக்கத்தால் தமிழ்ப் பாடல்களுக்குத் தமிழ்மக்கள் திசைமாறி வந்தனரே அதுபோல்தான் தமிழ்நாடு முழுவதும் வலம்வந்த அவர்கள், தமிழ்நாட்டின் ஒவ்வொரு திருத்தளங்களுக்கும் சென்று அவற்றின் சிறப்பைப் பற்றி பாடி, தமிழர்களுக்குத் தங்கள் இடத்தின்மீதான பற்றை உருவாக்கினர்.

தில்லையம்பதியைப் பற்றியும் தோடுடையுடைய செவியன்எனத் தொடங்கும் பாடல்வழி சீர்காழி பற்றியும், இதேபோல் இம்மண் தளங்களைப் பாடினமாத்திரத்தில் அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் உள்ள மக்கள் அப்பாடலில் ஈடுபாடு கொள்வதும் அதன்வழி இம்மண்ணின்மீது பற்று உண்டாவதும், மொழிபுரியாத பாடல்களில் அயன்மையும் உருவானது. இவ்வாறு தமிழினத்தை இம்மண்ணிற்குரிய தமிழ்ச்சமயங்களின்மீது பற்று ஏற்படச் செய்தனர்.

வந்தேறி ஆரியர்களுக்கு இவர்கள்தாம் பெருமளவில் முதன்மை எதிரியாயினர். பன்னிரு திருமுறைதான் எதிர்க்கும் மூலப்பொருள் ஆனது. அவற்றைக் கோவில்களிலேயே வைத்து பூட்டி, மக்களிடம் பரவாது தடுத்தனர்.

பிற்காலச் சோழனான இராசராசன் ஆரியர்களுக்கு நல் அடிமையாகக் கிடைத்தான். சமற்கிருதத்திற்கு ஆக்கங்கள் செய்து கொடுத்தான். அவர்களுக்காக அறச்சாலைகள் கட்டுவித்தான். நிலங்களை ஒதுக்கினான். பிற்காலத்தில் அவனுக்கு ஏதோ ஒரு விழிப்புணர்வு தோன்றி பன்னிரு திருமுறைகளை அவர்களிடமிருந்து மீட்டெடுத்துக் கொடுத்தான். தேவாரம், திருவாசகம் ஓதுவதற்கு முனைப்பாக ஏற்பாடு செய்தான். அவன் அன்றைக்கு அவற்றை மீட்கவில்லையானால் அன்றைக்கே அவை அழிக்கப்பட்டிருக்கும். அவனின் அச்செயற்பாடும் ஆரிய எதிர்ப்புக்கு பெருமளவில் உதவியது.

அவனுக்குப் பிறகு இராசேந்திரன் தம் தந்தை வழியிலேயே கங்கை கடாரம்வரை சென்று அங்காங்கு சிவனியக் கோவில்களைக் கட்டித் தேவாரம் திருவாசகம் வழி இறை வழிபாடு நடக்குமாறு நிறுவினான். இன்றைக்கும் கீழ்நாடுகளில் பலவற்றிலும் தமிழில் தேவார வழிபாடு நடப்பதற்கு அதுவே அடிப்படையாகும். எனினும் அதன்பிறகு சோழ ஆட்சி வீழ்ந்தது

தெலுங்கர், மராட்டியர் இன்னும் யார்யாரோ தமிழ்நாட்டை ஆண்டு மேய்ந்துத் தள்ளினர். ஆங்கிலேயன் கைப்பற்றினபோதும், ஆங்கிலர்க்கு நேரடியாகத் தமிழர் அடிமைப்பட வில்லை. நம்மை ஏற்கனவே அடிமைப்படுத்திக் கொண்டிருந்த அண்டை ஆண்டையர்கள் விசயநகரப்பேரரசு போன்றவர்களிடம் கப்பம் கட்டுவதை மாற்றி ஆங்கிலேயரிடம் கப்பம் கட்டினர். கப்பம் கட்டுமிடம் மட்டுமே இடம் மட்டுமே மாறியது. நாம் எங்கு யாரிடம் அடிமைப் பட்டிருந்தோமோ அதுவே தொடர்ந்தது. ஆங்கிலேயர் சென்றபின்னும்கூட மாற்றம் ஏதும் பெரிதாக நடந்துவிடவில்லை

விசயநகரப் பேரரசின் ஆட்சியில் ஒரே வீச்சில் தமிழ்நாடே, தமிழினமே அலைக்கழிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சிறிய பெரிய நிலவுடைமையாளர்கள் அனைவரும் நிலமிழந்து போயினர். சிறு நிலவுரிமையாளர்கள் கூலிகளாக்கப்பட்டனர். பெரு நிலவுடைமையாளர்கள் கையிலெடுக்க முடிந்த சொத்துகளை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தமிழ்நாட்டிலிருந்து எங்கெங்கோ வெளியேறினர். இன்றைக்குத் தமிழீழத்திலிருந்து தமிழர்கள் உலகெங்கும் சிதறியோடுவதுபோல் முன்பொரு காலத்தில் உலகெங்கும் அவ்வாறு சிதறி ஓடிய இனந்தான் தமிழினம்

ஓடவும் முடியாது நலிந்துபோன எஞ்சிய தமிழினமே தமிழ்நாட்டில் மிஞ்சிய கூலிகளாகவும் பாழைகளாகவும் தங்கிப்போயினர். அன்று ஒடுங்கிப்போன தமிழினம் இன்றுவரை ஒடுக்கப்பட்டே உள்ளது

தமிழினம் நேரடியாக ஆங்கிலர்க்கு அடிமையாக இருந்ததில்லை.

அதேபோல் ஆரியர்களும் நம்மை என்றுமே ஆட்சி செய்ததில்லை. நம்மை ஆண்ட அரசர்களை வயப்படுத்திக்கொண்டு தங்களின் கருத்தைச் செயற்படுத்திக் கொண்டிருந்தனர். தங்கள் செயற்கை மொழியைத் தமிழுடன் கலந்து வாழவைத்துக் கொண்டிருந்தார்கள்.

மக்களை நான்கு குலமாகப் வேறுபடுத்திப் பிரித்துத் தங்களை உயர்குலமாகக் காட்டிக்கொண்டு உயர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதெல்லாம் அவர்கள் இந்த இனத்தை ஆளுவதற்கு மறைமுகமாகச் செய்த சூழ்வினைகள்.

ஆனால், தமிழினத்தை அடிமைப்படுத்தி, தமிழ்நாட்டை நேரடியாக ஆண்டவர்கள் தெலுங்கர்கள், மராட்டியர்கள், களப்பிரர்கள் இவர்கள் போன்றோரே

ஆங்கிலேயேர் வந்தபோதும் தமிழினத்தைப் பிழிந்து கப்பம் கட்டியவர்கள் அவர்களே. நேரடியாக நாம் பிழியப்படவே இல்லை. கட்டபொம்மு (வீரபாண்டியக் கட்டபொம்மன்) கப்பம் கட்ட மறுத்தான் என்றால் விசயநகரப் பேரரசுக்குக் கட்டவேண்டிய பணத்தை ஆங்கிலேயனுக்குக் கட்டமறுத்தான். அவன் தமிழ் அரசனுமல்லன். விசயநகரப் பேரரசு அமர்த்திய பாளையக்காரர்களில் ஒருவன். ஒரு தமிழனை வைத்து வீரபாண்டியன்என்ற தமிழ் மன்னனின் பெயரைச் சேர்த்து ஒரு கட்டபொம்முஎன்ற தெலுங்குப் பாளையக்காரன் கதையைத் திரைப்படமாக்கிப் புகழ் பரப்பிவிட்டவர் பந்தலு’. இதற்குக் கதையாக்கம் ம.பொ.சி. என்ற தமிழர். எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?’ என்ற உரையாடலைக்கேட்டு உணர்வு வயப்பட்டு எழுச்சி பெற்றார்கள் எம் தமிழர் அனைவரும். எம்குலப்பெண்கள்என்றதும் தமிழ்க்குலம்என்று தவறாக எண்ணிக்கொண்டு, அவர்களாகவே புளகாங்கிதம் அடைந்துபோனால் அதற்கு அவர்கள் பொறுப்பல்லர்

தமிழைப்போல் தமிழரும் ஆற்றல் பெற்றவர்கள். விழிக்கத்தான் இல்லை. தமிழர் என்ற பெருமையுணர்வு இல்லை. திராவிட முகமூடி போட்டுக்கொண்டு காற்றில் வாள் வீசுகிறோம். அனைத்துத் துறையிலும் திறன்பெற்று அயலவர்க்கு உழைக்கிறோம். திரும்பிப் பார்த்தால் சொந்த மண்ணுக்கு நம்மைப் பெற்ற சொந்தங்களுக்காக உழைத்தது ஒன்றுமேயில்லை

ஒன்றால் தன்னலம்; இல்லையேல் அயலார் நலம் என்று போய்விடுகிறோம். நமக்கு நாமே வளையங்களைப் போட்டுக் கொள்கிறோம். குடும்பம், ஊர், சாதி என்ற வரையறைக்கு அப்பால் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் சிறிது உழைத்தால் நம்மை யாரும் வெல்ல முடியாது. தற்சார்பு மேலோங்கும்

இறைக்கொள்கை, சமயம், சாதி இவற்றையெல்லாம் தனிப்பட்டச் செய்திக்குள் போட்டு அடக்கிக்கொண்டு தமிழால் வெளிப்படுவோம்

தமிழ்ப் பணி என்பது எளிதான பணியுமன்று. தமிழை, இன்றைய பின்தோன்றி முன்னேறிய மொழிகளுக்கு இணையாகக் கொண்டு போவது என்பது எளிய பணியுமன்று. முயல் தூங்கி ஆமைவெல்லும் கதைதான் இப்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Paanch said:

வந்தேறி ஆரியர்களுக்கு இவர்கள்தாம் பெருமளவில் முதன்மை எதிரியாயினர். பன்னிரு திருமுறைதான் எதிர்க்கும் மூலப்பொருள் ஆனது. அவற்றைக் கோவில்களிலேயே வைத்து பூட்டி, மக்களிடம் பரவாது தடுத்தனர்.

101 % உண்மை தோழர்..👍

https://tamil.oneindia.com/news/2008/07/08/tn-arumugasamy-othuvar-allegedly-attacked.html

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

திரு முறைகளெல்லாம் உக்கி அழிந்து போகுமளவுக்குப் பூட்டி வைக்கப்பட்டப் பட்டமை திட்டமிடப்பட்ட, நிறுவனமயப்பட்ட சதிச்செயலாகவே தோன்றுகின்றது.  வடமொழியில் பூசை ழிபாடுகள் நடத்தப்பட வேண்டுமென்ற பிராமணீயக் கொள்கையின் அடிப்படையில் அக்கால மன்னர்களின் ஒத்துழைப்புடன் இந்தச் சதிச்செயல் நிறைவேற்றப்பட்டுள்ளது.  காலம் கடந்து விட்டதால்  இவையெல்லாம் எப்படி நடந்தன என்ற வரலாற்று உண்மைகள் மறைந்து போய்விட்டன.

இவையெல்லாவற்றையும்விட தமிழகத்திலிருந்த பௌத்த சமணப் பள்ளிகளும் குருமார்களும் ஈனஇரக்கமின்றிக் கொல்லப்பட்டது மிகவும் கவலலை தரும் விடயமாகும்.  இதற்குச் சைவர்களே பெரிதும் காரணர்களாயிருந்தனர்.

மொத்தத்தில் எமக்கு உள்ளும் புறமும் இருந்து எதிரிகள தமிழின் வளர்ச்சியைத் தடுத்தனர்.  தனிய ஆரியர்களே தமிழ் மொழியின் வீழ்ச்சிக்குக் காரணமெனக் கூறமுடியாது.

இருப்பினும் வள்ளுவர், கம்பர், இளஙகோ, திருத்தக்க தேவர், சமய குரவர்கள், சேக்கிழார், நம்பியண்டார் நம்பி  எனறு பலராலும் தமிழ் காப்பாற்றப்பட்டமை நமது பேரதிஸ்டமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

 

இணைப்பிற்கு நன்றி விசுகர்!
இப்படியான தகவல் நிறைந்த பேச்சுக்களை இன்றைய எமது இளம் சமுதாயத்திற்கு காண்பிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.