Jump to content

என் இனிய தமிழீழ நண்பர்களே,


Recommended Posts

பதியப்பட்டது

என் இனிய தமிழீழ நண்பர்களே,

சென்ற வருடமே யாழில் பதிவு செய்திருந்த போதிலும் தமிழில் எழுதும் முறையை தற்போதுதான் அறிந்துகொண்டேன். இனிமேல் அடிக்கடி வந்து உஙகள் எல்லாருடனும் கூடிக்குலாவுவேன்.

எனது பிறப்பிடம் அல்வாய் மாலிசந்தி. சிறுவயதில் திருகோணமலயில் வசித்தேன். திருகோணமலை கோணேஸ்வர வித்தியாலயத்தில்(தற்போது கோணேஸ்வரா இந்துக்கல்லூரி என்று அழைக்கிறார்கள்) ஆரம்பக்கல்வியும் பின்பு ஆறாம் வகுப்பிலிருந்து பருத்திதுறை ஹாட்லிக்கல்லூரியிலும் பயின்றேன். எனது பால்ய நண்பர்கள் பலரது தொடர்புகள் இல்லாமலே போய்விட்டது.

எனது சுயசரிதையை பின்பு பார்ப்போம். மீண்டும் வருவேன். நண்றி, வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாருங்கள் சிறு புள்ளி உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Posted

வாருங்கள் நண்பரே, நீங்கள் முன்னரே கேட்டிலிருந்தால் கள உறவுகள் உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்கள், ஒரே பாட சாலையில் படித்திருக்கிண்றோம். உங்கள் பெயரை அழகான தமிழில் பதிந்தால் என்னும் அழகாயிருக்கும்

Posted

நன்றி வானவில், வல்வை மைந்தன் மற்றும் இன்னிசை நண்பர்களெ. Small Point இனை சிறு புள்ளி என்று மாற்ற விருப்பம். எப்படியென்று யாராவது எனக்கு சொல்லித்தருவீர்களா?

Posted

வணக்கம் வாங்கோ

Posted

வணக்கம்..வாருங்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சிறுபுள்ளி.அவசரப்பட்டு எல்லாத்தையும் அவுத்து போடாதைங்க.காலம் போகப் போக தேவை ஏற்பட்டால் அவுத்துவிடுங்க.

Posted

ஆமா சிறு புள்ளி வந்தீங்க....உள்ள வாங்க வந்து சலூட் அடிங்க எனக்கு. :lol:

லம்போதரன் அந்த கேம்ரிட்ஜ் ஆளோ...அட நம்ம லம்போதரந்தான்...நான் கூட புலநாய்வு செய்ய அவரை தேடிக்கிட்டு இருக்கேன்....பெல்சவுத் லண்டனில வெலைசெய்யிரார் அவர்??. :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்கள் வரவு நல்வரவரகட்டும். கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிதாய் இருக்கட்டும்.

Posted

நான் ஈழத்தமிழன் கிடையாது, இருந்தாலும் உங்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Posted

நன்றி நண்பர்களே! வாயார வரவேற்ற யாழ் கள உறவுகளுக்கும் நயமாக அறிவுரை கூறி எச்சரித்த நண்பர்களுக்கும் நன்றி. யாழ் கள இணையத்தின் சிலமாதகாலமாக வாசகனாகயிருந்து அவதானித்ததிலிருந்து ஒன்றைப்புரிந்துகொண்டேன். அதாவது இங்கு நிறைய பெரும்புள்ளிகள் கவிதை, கதை, கட்டுரை, குறும்படம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று தமது திறமையை இன்னோரன்ன துறைகளில் காட்டி வருகையில் சிறுபுள்ளியாகிய என்னுடைய எளிய கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வார்களா என்றோர் ஏக்கம் என்னுள் இருந்ததுண்டு. ஆயினும் உங்கள் வரவேற்பு சிறிது உற்சாகமளிக்கிறது.

பலவருடங்களிற்கு முன்பு "அன்னையின் அன்பு" என்ற தலைப்பில் "கிழமை நாட்களை" தொடர்புபடுத்தி ஒரு கவிதை எழுதினேன். யாழ் களத்தில் அன்னையை வணங்கி எனது அந்த கவிதையை முதலில் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். அக்கவிதை பற்றிய உங்கள் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்.

அன்னையின் அன்பு

அன்பின் மறுபெயர் அன்னை -அவள்

அன்பிற்க் கென்றும் தாழ் பணிவோம்.

அங்கமெலாம் நோக

ஐயிரண்டு திங்கள் ஆக

தங்க மெனப் பெற்றெடுத்தாள்

தரணியில் பெருமை கொள்ளவெ

ஏங்கி செவ்வாய் பாலிற்க் கூறவே

இன்னமுது முலையூட்டி

பொங்கி வரும் அன்போடு

அற்புதன் என நாமமிட்டாள். -- (அன்பின்)

வி யாழன் போடு இசை பொழிந்து

கண்ணிமை மூடித்துயில் கொள்ள

பவித்திரமாய் வெள்ளித் தொட்டிலுள்

பாங்காய் வளர்த்திப் போர்த்தி

நாவி லேயவன் நாம மேயூற

நினைவிலோ ஆசனிச் சுவை இனிக்க

ஓவியமாய் ஞாயிறு போல்

ஒளி வீசுகின்றானே. -- (அன்பின்)

--------------------------------------

மீண்டும் சந்திப்போம். - சிறுபுள்ளி

Posted

சகோதரி சிறுபுள்ளி ..உங்கள் கவிதை பிரமாதம் பாராட்டுக்கள்.

இந்தத்தளத்தில் உங்களுக்குத் தெரிந்தவர்களின் உண்மையான பெயர் விபரங்களைப் பதிவு செய்வது அவ்வளவு நல்லதல்ல. நீங்கள் ரொம்ப சின்னப் பிள்ளையாக இருப்பீங்கள் போலத்தோன்றுகிறது.

வடிவேலு சார் வந்து உங்களுக்கு அறிவுரை சொல்லுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சின்னப்புள்ளி வாருங்கோ.

Posted

சகோதரி சிறுபுள்ளி ..உங்கள் கவிதை பிரமாதம் பாராட்டுக்கள்.

இந்தத்தளத்தில் உங்களுக்குத் தெரிந்தவர்களின் உண்மையான பெயர் விபரங்களைப் பதிவு செய்வது அவ்வளவு நல்லதல்ல. நீங்கள் ரொம்ப சின்னப் பிள்ளையாக இருப்பீங்கள் போலத்தோன்றுகிறது.

வடிவேலு சார் வந்து உங்களுக்கு அறிவுரை சொல்லுவார்.

வல்வை மைந்தன் உங்கள் பேரின் :P இரகசியமும் அதுவா? வல்வைமைந்தன் என்று கூறுவது பொய்தானே?

Posted

சகோதரி சிறுபுள்ளி ..உங்கள் கவிதை பிரமாதம் பாராட்டுக்கள்.

இந்தத்தளத்தில் உங்களுக்குத் தெரிந்தவர்களின் உண்மையான பெயர் விபரங்களைப் பதிவு செய்வது அவ்வளவு நல்லதல்ல. நீங்கள் ரொம்ப சின்னப் பிள்ளையாக இருப்பீங்கள் போலத்தோன்றுகிறது.

வடிவேலு சார் வந்து உங்களுக்கு அறிவுரை சொல்லுவார்.

அவர் ஹாட்லியில படிச்சவர் என்டு சொல்லியிருக்கிறார், நீங்க அவரை சகோதரி என்டு அழைக்கிறீங்க???

Posted

வல்வைமைந்தன், உங்கள் அறிவுரையை கவனத்தில் கொண்டேன். பெயர்கள் யாவும் நீக்கப்பட்டுள்ளது.

நான் சிறுமியா? ஓரு சிறிய சந்தேகம். புதிதாக யாழ் களத்திற்க்கு வருபவர்களை இப்படியா பகிடி வதைக்கு உட்படுத்துவது?

Posted

நான் இந்தத் தளத்தை எனது குடும்பமாகவும் இங்குள்ளோர் எல்லோரையுமே சகோதரம் என்று அழைப்பது தான் எனது வழமை. இந்தத்தளத்தில் எனது நோக்கமே வேறு, எனது உண்மையான பெயரும் வேறு. இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாங்கோ சின்னப்புள்ளி, இங்கு என்னதான் நடக்குது? தங்களை அரசியல்வாதி என்று காட்டிக்கொண்டவர்கள் மீது கதை வேறு விதமாக போகிறமாதிரி இருக்குதே?

Posted

இன்னிசை, வானவில், வல்வை மைந்தன், தூயா, ஈழவன், கறுப்பி, ஈழப்பிரியன், ஸ்பை, ஆதிவாசி, நயினை அம்மா, ஆர்.எம் சித்தா, குமாரசாமி, சுட்டி மற்றும் ஈழநிலா உங்கள் அனைவரது வரவேற்புக்கும் மிக்க நன்றி. முகம் தெரியாது ஒருவரோடு ஒருவர் கருத்துக்களை பரிமாறுகிறோம். இது எங்களுக்கு சாதகமா பாதகமா என்பதைவிட தமிழ் பேசுகின்ற அனைவரும் ஒன்றுகூடுகின்ற தளமாக யாழ் தளம் இருப்பதையிட்டு மகிழ்ச்சி. நானும் நகைச்சுவையோடு எழுதி உங்களனைவரையும் சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் விருப்பம். அதனை சிறுகதை, கவிதை போன்ற வடிவங்களில் படிப்படியாகப் பார்ப்போம்.

உங்களைப்பற்றியும் அறிந்துகொள்ள விருப்பம். யாழின் பழைய பக்கங்களைப் புரட்டிப்பார்துத்தான் அறிந்து கொள்வதா? அல்லது இங்கேயே சுருக்கமாக அறியத்தருவீர்களா?

நன்றி. சிறுபுள்ளி.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிங்க‌ள‌வ‌ர்க‌ளிலும் எத்த‌னையோ ந‌ல்ல‌துக‌ள் இருக்கின‌ம் அண்ணா ப‌ழ‌கி பார்த்தால் தான் தெரியும்     போர் இருத‌ர‌ப்புக்கும் வ‌ராம‌ இருந்து இருக்க‌னும் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த‌ நாடாக‌ இல‌ங்கை எப்ப‌வோ மாறி இருக்கும்..................இல‌ங்கை தீவில் என்ன‌ தான் இல்லை...................அமெரிக்கா ஜ‌ப்பான் நாட்டின் மீது குண்டு போட்ட‌ போது அந்த‌ நாட்டை மீண்டும் க‌ட்டி எழுப்ப‌ அப்ப‌ இருந்த‌ இல‌ங்கை அர‌சாங்க‌ம் ஜ‌ப்பானுக்கு பெரிய‌ ப‌ண‌ உத‌விய‌ செய்த‌து...........................
    • தமிழ்த் தேசியம் என்பது உங்கள் வீட்டுச்  சீர்தனம் அல்ல, அதற்கு நீங்களும் விசுகரும் மட்டும் சொந்தங் கொண்டாடுவதற்கு.  (உங்கள் இத்தனை குழப்பங்களுக்கும் உங்கள் சிந்தனை,  கிரகிக்கும் குறைபாடுதான்  காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. )
    • மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  
    • இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன்  பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு  தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.