Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கு விசாரணை நிறைவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

lakshman-720x450.jpg

லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கு விசாரணை நிறைவு!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முத்தையா சகாதேவன் (வயது 62) சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  உயிரிழந்தார்.

குறித்த மரணத்துக்கு பின்னர் கதிர்காமர் கொலை வழக்கை நடத்துவதில்லை என மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், கொழும்பிலுள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/லக்ஸ்மன்-கதிர்காமர்-படுக/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் சந்தேக நபர்களே, குற்றவாளிகளல்ல.!

சம்பவம் நடைபெற்ற வேளையில், இலங்கையின் பிரதமராவதற்குரிய தகுதிகள் 100% கதிர்காமருக்கே இருந்தது. அந்தத் தகுதிதான் அவரைக் கொண்டுபோனது.!! 

  • கருத்துக்கள உறவுகள்

லக்ஸ்மன் கதிர்காமர்: நீலன் திருச்செல்வம், ராஜினி திராகம, பிரேமதாசா, ராஜீவ் காந்தி, அதிபர் ஆனந்தராஜா வரிசையில் படுகொலை செய்யப்பட்ட புத்திஜீவிகளில் இவரும் ஒருவர். 

முத்தையா சகாதேவன்: 15 வருடங்கள் எந்தவித காரணமும் இன்றி தடுத்து வைக்கப்பட்டு அநியாயமாக உயிரிழ‌ந்த ஓர் ஏழை மனிதன்.

மனிதனது அதிகாரப்போட்டியில் முத்தையா போன்ற எத்தனை அப்பாவிகள் இப்படி தினம் தினம் சாகின்றார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, colomban said:

லக்ஸ்மன் கதிர்காமர்: நீலன் திருச்செல்வம், ராஜினி திராகம, பிரேமதாசா, ராஜீவ் காந்தி, அதிபர் ஆனந்தராஜா வரிசையில் படுகொலை செய்யப்பட்ட புத்திஜீவிகளில் இவரும் ஒருவர். 

பிரேமதாச ,ராஜீவ் காந்தி 😂😀😂😀😂😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

பிரேமதாச ,ராஜீவ் காந்தி 😂😀😂😀😂😀

பாவம்  அவர் வைச்சுக்கிட்டா  வஞ்சகம்  செய்கிறார்??

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

இவர்கள் அனைவரும் சந்தேக நபர்களே, குற்றவாளிகளல்ல.!

சம்பவம் நடைபெற்ற வேளையில், இலங்கையின் பிரதமராவதற்குரிய தகுதிகள் 100% கதிர்காமருக்கே இருந்தது. அந்தத் தகுதிதான் அவரைக் கொண்டுபோனது.!! 

இப்படி எழுதி அர்ப்பணிப்புகளை கொச்சைப்படுத்தாமல், கடந்து செல்வதே நலம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நந்தன் said:

இப்படி எழுதி அர்ப்பணிப்புகளை கொச்சைப்படுத்தாமல், கடந்து செல்வதே நலம்.

நந்தன் உங்களை பொறுத்தவரை இவையெல்லாம் அர்ப்பணிப்பு, அந்த ஏழையை பொறுத்தவரை மிகபொரும் இழப்பு

உண்மையான கொலையாளிகள் எங்க இருக்கினம் என்டு கண்டுபிடிக்காமலே காலத்தை கடத்திட்டினம்! முந்தி கைதுசெய்யப்பட்ட சிலர் வெளிநாட்டு அழுத்தங்களால் விடுவிக்கப்பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, colomban said:

நந்தன் உங்களை பொறுத்தவரை இவையெல்லாம் அர்ப்பணிப்பு, அந்த ஏழையை பொறுத்தவரை மிகபொரும் இழப்பு

இவையெல்லாம் விடுதலையை ஆதரித்தவனுக்கே இன்னும் புரியல, விடுப்பு பார்த்தவனுக்கா புரியப்போகிறது.(இதுக்கு மேல ஒருத்தர் எழுதியிருக்கிறார். பாருங்க ... முடியல)

15 hours ago, Paanch said:

இவர்கள் அனைவரும் சந்தேக நபர்களே, குற்றவாளிகளல்ல.!

சம்பவம் நடைபெற்ற வேளையில், இலங்கையின் பிரதமராவதற்குரிய தகுதிகள் 100% கதிர்காமருக்கே இருந்தது. அந்தத் தகுதிதான் அவரைக் கொண்டுபோனது.!! 

நீங்கள் கூறுவது சரி. 

கதிர்காமர் பிரதமராவதற்கான சந்தர்ப்பம் இருந்தது. அதனால் அவரை அரசியல் கொலை செய்ய முயன்றார்கள்.

அதைவிட போர் நிறுத்தத்தை குழப்பும் முயற்சியாகவும் இக்கொலையை செய்து புலிகளில் பழி போட முயன்றார்கள்.

ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய, இலங்கை இராணுவம், பொலிஸ், உளவுத்துறை உட்பட பலருக்கு கொலையில் பங்குள்ளதாக சில சிங்களவர்களே எழுத முன்னர் வாசித்திருக்கிறேன்.

புலிகள் தாம் ஒரு கொலை செய்தால் தாம் செய்தார்கள் என உரிமை கோருபவர்கள். இக்கொலையை தாம் செய்யவில்லை என மறுத்திருந்தார்கள்.

Denying any involvement in the assassination of Sri Lanka's Foreign Minister Mr. Lakshman Kadirgamar, LTTE's Political Head, Mr. S. P. Thamilchelvan Saturday condemned Colombo for hastily blaming the Liberation Tigers for the killing. Thamilchelvan said that there are several forces opposed to the Cease Fire Agreement (CFA) in the South. "We also know that there are sections within the Sri Lankan Armed forces operating with a hidden agenda to sabotage the CFA," he said and urged Colombo to conduct a thorough investigation to identify the assassins.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=15616

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிக்கும் சனி பிடிச்சிட்டுது.இனி ஒன்றும் சொல்வதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காமாளைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம். உண்மைகளையும் மஞ்சள் நிறமாகவே உணரமுடியும்.

உன்னைச்சொல்லிக் குற்றமில்லை என்னைச்சொல்லிக் குற்றமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.