Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு; 03 வருட சிறை

Featured Replies

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஹெக்டர் தர்மசிறி, ஆறு ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்று வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளார். கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன நேற்று அவருக்கு இந்த சிறைத் தண்டனையை வழங்கினார்.

அத்துடன் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மேற்படி ஊழல் குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இலஞ்ச ஆணைக்குழு அவர் மீது 15 ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. எனினும் 6 குற்றச்சாட்டுகளில் மட்டுமே அவரை நீதிபதி குற்றவாளியாகத் தீர்ப்பளித்ததுடன் ஏனைய 9 குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுதலை செய்தார்.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒருவருட சிறைத்தண்டனை என்ற ரீதியில் மொத்தமான 6 வருட சிறைத்தண்டனையை மூன்று வருடங்களில் நிறைவுபடுத்த வேண்டுமென நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

2007 ஆம் வருடம் மாத்தளை பிரிவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்தபோது சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மினுவாங்கொடையில் உள்ள தனது வீட்டில் தனிப்பட்ட வேலைகளுக்குப் அமர்த்திக்கொண்டதாக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கிய போது குறிப்பிட்டார்.

https://www.thinakaran.lk/2019/07/03/உள்நாடு/36661/முன்னாள்-பொலிஸ்-மாஅதிபர்-மீது-ஊழல்-குற்றச்சாட்டு-03-வருட-சிறை

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒருவருட சிறைத்தண்டனை என்ற ரீதியில் மொத்தமான 6 வருட சிறைத்தண்டனையை மூன்று வருடங்களில் நிறைவுபடுத்த வேண்டுமென நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

2007 ஆம் வருடம் மாத்தளை பிரிவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்தபோது சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மினுவாங்கொடையில் உள்ள தனது வீட்டில் தனிப்பட்ட வேலைகளுக்குப் அமர்த்திக்கொண்டதாக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கிய போது குறிப்பிட்டார்.

6 வருட தண்டனையை 3 வருடத்தில் எப்படி முடிப்பது? ரைம் மிசின் சிறிலங்காவில கண்டுபிடிச்சிட்டாங்களோ?!

இப்ப இங்க இருக்கிற மேலதிகாரிகள் எல்லாம் உள்ளயெல்லோ இருக்கவேணும்!

1 hour ago, ஏராளன் said:

6 வருட தண்டனையை 3 வருடத்தில் எப்படி முடிப்பது? ரைம் மிசின் சிறிலங்காவில கண்டுபிடிச்சிட்டாங்களோ?!

இப்ப இங்க இருக்கிற மேலதிகாரிகள் எல்லாம் உள்ளயெல்லோ இருக்கவேணும்!

6 வருட தண்டனையை 9 மாதத்தில் முடித்து பொது மன்னிப்புடன் வெளியில் வந்த ஞானசார தேரருடன் ஒப்பிடும் போது 3 வருடம் கொஞ்சம் அதிகம். 😀

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி பதவி விலகு என்று சொன்னவுடனே,விலகியிருந்தால் இப்ப உள்ளுக்குள்ள போக வேண்டி வந்திருக்காது 

36 minutes ago, ரதி said:

மைத்திரி பதவி விலகு என்று சொன்னவுடனே,விலகியிருந்தால் இப்ப உள்ளுக்குள்ள போக வேண்டி வந்திருக்காது 

அந்த முன்னாள் போலீஸ் மா அதிபர் வேறு இவர் வேறு. மைத்திரி விலகச் சொன்னது  பூஜித் ஜயசுந்தர வை. இவரல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

6 வருட தண்டனையை 3 வருடத்தில் எப்படி முடிப்பது? ரைம் மிசின் சிறிலங்காவில கண்டுபிடிச்சிட்டாங்களோ?!

இப்ப இங்க இருக்கிற மேலதிகாரிகள் எல்லாம் உள்ளயெல்லோ இருக்கவேணும்!

ஏலவே ரிமாண்டில் இருந்த நாட்களை கழித்து, பொது விடுமுறைகளை கழித்து, நன்னடத்தைய மேலும் பல நாட்களை கழித்து, மீதம் இருக்கும் நாட்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பு சரியில்லை.

33 minutes ago, goshan_che said:

ஏலவே ரிமாண்டில் இருந்த நாட்களை கழித்து, பொது விடுமுறைகளை கழித்து, நன்னடத்தைய மேலும் பல நாட்களை கழித்து, மீதம் இருக்கும் நாட்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பு சரியில்லை.

அப்படியல்ல, அவர்கள் முறையே அவ்வாறு தான். ஞானசார தேரருக்கு 19 வருட சிறைத்தண்டனையை 6 வருடங்களில் அனுபவிக்க சொல்லி தீர்ப்பு வழங்கியிருந்தார்கள். பிறகு ஆள் 9 மாதம் 3 வாரங்களில் பொது மன்னிப்பில் வெளில வந்திட்டார். 😀

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அங்கதான் போய் இனி பாங் லோன் எடுக்கோணும். 5 வருச கடனை, 2 வருசத்தில கட்டிடலாம் 😂

35 minutes ago, Lara said:

அப்படியல்ல, அவர்கள் முறையே அவ்வாறு தான். ஞானசார தேரருக்கு 19 வருட சிறைத்தண்டனையை 6 வருடங்களில் அனுபவிக்க சொல்லி தீர்ப்பு வழங்கியிருந்தார்கள். பிறகு ஆள் 9 மாதம் 3 வாரங்களில் பொது மன்னிப்பில் வெளில வந்திட்டார். 😀

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

அந்த முன்னாள் போலீஸ் மா அதிபர் வேறு இவர் வேறு. மைத்திரி விலகச் சொன்னது  பூஜித் ஜயசுந்தர வை. இவரல்ல.

நன்றி நிழலி நான் பொலீஸ்மா அதிபர் என்றதும் மாறி நினைத்து விட்டேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.