Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Udhayanidhi-Stalin.jpg

இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின்.

தி.மு.க.வின் முக்கிய பதவியான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அறிவிப்பு நாளை (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 1980களில் அனைத்துக் கட்சிகளும் இளைஞர் இயக்கத்தைக் கட்டமைக்க ஆரம்பித்தபோது தி.மு.க.வும் இளைஞர் அணியை உருவாக்கியது. அதன் முதல் செயலாளராக மு.க.ஸ்டாலின் செயற்பட்டார். அவரைத் தொடர்ந்து கனிமொழி, அழகிரி, தயாநிதி மாறன் என வாரிசுகள் பதவியேற்றனர்.

இந்நிலையில், நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் கட்சித் தலைமையை ஏற்றுள்ள தந்தைக்கு உதவியாக உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு, மாவட்டம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. இளைஞரணி தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட வாரியாக தி.மு.க. தலைமைக்கு கடிதம் அனுப்பி வைத்தனர்.

கமல், ரஜினி, சீமான் போன்றவர்கள் அரசியலுக்கு வரும் நிலையில் தி.மு.க.வும் புதிய வடிவம் எடுக்கவும் இளம் தலைமுறையினர் மத்தியில் கட்சியை வலுவாகக் கொண்டு செல்லவும் முடிவெடுத்தாகவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

இதனால் தி.மு.க. இளைஞரணியின் மாநிலத் தலைமைக்கு உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் வெள்ளக்கோயில் சாமிநாதன் திடீரென தனது இராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பினார். அதை மேலிடமும் ஏற்றுக்கொண்டது.

இதனால் இளைஞரணி பொதுச் செயலாளர் பொறுப்பு வெற்றிடமாகவுள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி பொதுச்செயலாளராக அறிவிக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக தி.மு.க. வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இளைஞரணி-செயலாளராகிறார்-உ/

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காலம் போல் தெலுங்கர் கூட்டம் நினைக்குது நடப்பது தற்கொலைதான் திமுகவுக்கு வழி .

  • கருத்துக்கள உறவுகள்

34wg0h.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உதயநிதி ஸ்டாலின்: தயாரிப்பாளர் - கதாநாயகன் - தி.மு.க இளைஞரணி செயலாளர்

தி.மு.கவின் புதிய இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் தி.மு.கவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுவார் என நீண்டகாலமாகவே பேச்சுகள் அடிபட்டுவந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இளைஞரணித் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ. சாமிநாதன் கடந்த ஜூன் 17ஆம் தேதியன்று தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அந்த ராஜினாமா குறித்து அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், இந்த நியமன உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் பங்கு

1977ல் பிறந்த உதயநிதி ஸ்டாலின் டான் பாஸ்கோ பள்ளியில் பள்ளிக்கல்வியையும் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டப்படிப்பையும் முடித்தார்.

இதற்குப் பிறகு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படங்களைத் தயாரித்துவந்தார். 2009ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு கிருத்திகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டார். அந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சிப் பதவி ஏதேனும் அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், வெள்ளக்கோவில் சாமிநாதன் தான் வகித்துவந்த இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பல மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக்க வேண்டுமெனக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தலைமைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில், இந்த அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

தி.மு.கவின் இளைஞரணி என்பது 1980ல் மதுரையில் உள்ள ஜான்சி ராணிப் பூங்காவில் ஒரு அமைப்பாகத் துவங்கப்பட்டது. இதன் அமைப்பாளர்களில் ஒருவராக அந்தத் தருணத்தில் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

இதற்குப் பிறகு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென அமைப்புகளை உருவாக்கினர். அதற்குப் பிறகு மாநில அளவில் அதன் செயலாளராக மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/india-48868980

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ராலின்..... தனது 60 வயதுக்கு மேலும், 
தி.மு.க இளைஞரணி செயலாளராக இருந்து சாதனை படைத்தவர்.
தந்தையின்... சாதனையை, உதயநிதி  முறியடிப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/KJ58I1nbeF0

சில வருடங்களுக்கு முன்னரே இதை கணித்து சொல்லிவிட்டார் சீமான்.

  • கருத்துக்கள உறவுகள்

நயந்தாரா அடுத்த கொ.ப.செ 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people smiling, text

 

Image may contain: 3 people, people smiling

Image may contain: 1 person, text

அப்போ உதயநிதியும், முதல்வராக முடியாதா... :grin:

Edited by தமிழ் சிறி

மீண்டும் வாரிசு அரசியலை முன்னெடுக்கும் திமுக, தமிழ்நாட்டிற்கு வெட்கக்கேடு...இதன் மூலம் திமுகவின் மீதுள்ள எதிர்ப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling

தலை மயிரை...  ஆராவாது, கொஞ்சுவார்களா?

முத்தம் என்பது.. அன்போடு... பாசத்தோடு, திடீர் என்று....
கன்னத்தில்,  உச்சம் தலையில் என்று...
அவர்களின் உறவு முறைக்கு, அமையும்.

இந்த.... திருட்டு  குடும்ப,   "முத்தம்"  வித்தியாசமாக உள்ளது.

அந்த, அரிய.... காட்சியை பார்த்து,  கருணாநிதியே..
"கெக்கெக்கே.... பிக்கக்கே..."   என்று சிரிப்பது, மிக நன்றாக உள்ளது. 😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

1996ம் ஆண்டு விகடனிலிருந்து

————————————————————————

"அரசியலில் இஷ்டமில்லை... பிசினஸ்தான் உதயநிதி ஐடியா!" - 'அப்பா' ஸ்டாலின் #VikatanPokkisham

17 Apr 2013 1 AM

Updated:04 Jul 2019 12 PM

வெளியே கிளம்பினால் பிள்ளைகள் ராஜ்யம்! 

 

கோபாலபுரம் நாலாவது தெரு முதல்வரின் இல்லம்...

வீட்டின் மாடிப் பகுதியில்தான் கருணாநிதியின் வாசம். கீழ் போர்ஷன் ஸ்டாலின் குடும் பத்துக்கும், அவர் தம்பி தமிழரசு குடும்பத்துக்கும்!

தந்தையுடன் திருவாரூருக்குச் சென்று திரும்பியிருந்த ஸ்டாலின், தன் குடும்பத்துடன் நம்மைச் சந்திக்கச் சம்மதம் தெரிவித்திருந்தார். செல்போன் அழைப்புகளுக்குத் திறமையான ஒரு செக்ரெட்டரியாக கணவர் சார்பில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார் ஸ்டாலினின் மனைவி துர்கா. நெற்றியில் ஒரு ரூபாய் சைஸுக்குப் பளீரென்ற திலகம்!

''கல்யாணத்துக்கு முன்னே வரைக்கும் சின்னப் பொட்டுதான். இங்கே வந்தப்புறம் அத்தை (தயாளு அம்மாள்) வெச்சுக்கறதைப் பார்த்து எனக்கும் பிடிச்சுப்போச்சு. எங்க வீட்டுப் பெண்களின் முத்திரை இது!''

தயக்கம் ஏதுமின்றி மளமளவெனத் தன் மனைவி பேசுவதைத் தனக்கேயுரிய ஒருக்களித்த உதட்டோரப் புன்னகையுடன் ரசிக்கிறார் ஸ்டாலின்! அவர்களது திருமணம்பற்றி விசாரித்த உடனே துர்கா சற்றே கூச்சத்துடன் அமைதி காக்க... ஸ்டாலின் பேச ஆரம்பித்தார்.

''துர்காவை எனக்குப் பார்த்துக் கல்யாணம் செஞ்சுவெச்சது மாறன் மாமாதான். அவரோட மனைவிக்கு இவ உறவுமுறை. மாநிலக் கல்லூரியில் பி.ஏ. ரெண்டாவது வருஷம் படிக்கும்போது, எனக்குக் கல்யாணம். 22 வயசு. துர்காவுக்கு 17. திடீர்னு திருவெண்காடுக்குக் கூட்டிட்டுப்போய் துர்காவைக் காட்டினாங்க. கல்யாணத்துக்காக நான் பார்த்த ஒரே பெண் துர்காதான். அவளுடைய அழகு, பணிவு, சாந்தம் எல்லாம் என்னை உடனே சம்மதிக்கவெச்சிடுச்சு!''

திருமணம் நடந்த ஆறே மாதங்களில்தான் 'மிசா’ பயங்கரம். கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறையில் உடம்பாலும் மனதாலும் அடுத்தடுத்து அடிபட்டார் ஸ்டாலின்.

''புது மனைவியைப் பிரிஞ்சிருக்கோம்கிற என் உணர்வுகளைவிட, இதனால் துர்கா எந்த அளவுக்கு அதிர்ச்சி அடைஞ்சிருப்பானு நினைக்கிறப்பதான் கஷ்டமா இருந்தது. 'நீ அவனைக் கல்யாணம் பண்ணிட்ட நேரம்... அவன் சிறைக்குப் போயிட்டான்’னு அவள் சொந்தக் கிராமத்துல அவளைப் பத்தி யாராவது, ஏதாவது பேசப்போய், அதனால் அவ உடைஞ்சிடுவாளோனு ரொம்பப் பயப் பட்டேன்!''

காபியை நம் முன் வைத்தபடி துர்கா சொன்னார்... ''நான் அதிர்ச்சி அடைஞ்சேன் என்பது நிஜம்தான். ஆனா, இவரது சிறைவாசத்தால் நான் துளிகூட நம்பிக்கை இழக்கலை. சொல்லப்போனா, அந்த ஒரு வருஷப் பிரிவுதான் முதன்முதலா எங்களுக்குள்ளே அதிகமான நெருக்கத்தையே உருவாக்கினது. வாரத்துக்கு ஒரு நாள்... அதுவும் இருபது நிமிஷம் மட்டுமே அவரைப் பார்த்துப் பேசிக்கலாம்னு ஜெயில்ல ஆர்டர் போட்டாங்க. இருபது நிமிஷத்தில் என்ன பேசிக்கிறது? மௌனமாப் பார்த்துட்டே நின்னுட்டு இருப்போம்!''

இப்போதும் கண்கள் கலங்கின துர்காவுக்கு. கருணா நிதியும் தயாளு அம்மாளும் துர்காவை 'சாந்தா’ என்று தான் கூப்பிடுகிறார்கள்!

''என்னோட பேர் 'துர்கா’னு சாமி பேரா இருந்ததால், நான் இந்த வீட்டுக்கு வந்ததும் மாமா (கலைஞர்) என் பெயரை 'சாந்தா’னு மாத்திட்டார்.''

- வாழ்க்கைப்பட்டது புகழ்பெற்ற ஒரு நாத்திகக் குடும்பத்துக்கு என்றாலும், துர்காவுக்குக் கடவுள் பக்தி நிறைய!

வெள்ளிக்கிழமைகளில், வீட்டுக்கு எதிரே இருக்கும் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்குத் தவறாது செல்கிறார். துர்காவின் 'நான்-வெஜ்’ சமையல் முதல்வரின் உறவினர்கள் அத்தனை பேர் மத்தியிலும் பிரசித்தம். மீன் வகையறாக்களை ஆசையோடு ஒரு கை பார்க்கிற ஸ்டாலினுக்கு இதில் பெருமை!

'நாம் இருவர் நமக்கிருவர்’ குடும்பம் ஸ்டாலினுடையது. மகன் உதயநிதிக்கு வயது 20. லயோலா கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு. துறுதுறுப்பும் சிரிப்பும் நிறைந்த மகள் செந்தாமரை பத்தாம் வகுப்பு போகிறார். வயது 15.

''வீட்டில் நீங்கள் எப்படி..?'' - ஸ்டாலினை நோக்கி நாம் கேட்டா லும், உதயநிதியும் செந்தாமரையும் ''எங்க செல்ல அப்பா!'' என்று கட்டிக்கொள்கிறார்கள் தந்தையை!

பிள்ளைகள் இருவரையும் பக்கத்தில் இழுத்துவைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருப்பது ஸ்டாலினுக்கு ரொம்பப் பிடித்த விஷயம். ராத்திரி 12 மணிக்கு வந்தால்கூட, 'ஏய்... கொஞ்ச நேரம் பேசிட்டுத் தூங்கலாமா?’ என்று அவர்களை எழுப்பிவிடுவாராம்.

''காரணம், இளமையில் என் அப்பாவுடன் நான் கழித்தது மிகக் கொஞ்சம் நேரம்தான். 'என்னுடன் இருங்கள்... என்னுடன் பேசுங்கள்...’ என்று என் அப்பாவிடம் சொல்ல முடியவில்லை. ஆனால், என் மகன் என்னிடம் ஆயிரம் கேள்விகள் கேட்கிறான். சண்டை போடுகிறான்!'' என்கிறார் ஸ்டாலின்.

என்ன வேலை இருந்தாலும் சரி... மாதம் ஒரு முறையாவது குடும்பத்தோடு வெளியே போய் ஏதாவது ஹோட்டலில் சாப்பிடுவது... அபூர்வமாக ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் டிரைவ் இன் தியேட்டருக்குக் குடும்பத்துடன் போய்ப் படம் பார்ப்பது என்று பழக்கம்!

வெளியே கிளம்பினால் பிள்ளைகள் ராஜ்யம்தான்...

'அப்பா, நீயே கார் ஓட்டு’ என்று பிள்ளைகள் டிரைவரை இறக்கிவிட்டுவிடுவார்கள். அந்த மாதிரி 'ஹோம்லி’யான தருணங்களில் ஸ்டாலின் போட வேண்டிய டிரெஸ்கூட அவர்கள் விருப்பப்படிதான். ஸ்டாலினின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் துர்கா எடுத்துத் தரும் பேன்ட், ஷர்ட்டுக்கு இந்தத் தருணங்களில்தான் வேலை வரும். 'சூர்யா’ டி.வி. தொடரில் நடித்தபோது ஸ்டாலின் தைத்துக்கொண்ட சஃபாரி சூட், கறுப்புக் கண்ணாடிஎல்லாம்கூட சில சமயம் பீரோவில் இருந்து வெளியே வரும்.

''அரசியலில் என் பையனுக்குத் துளியும் இஷ்டமில்லை. எம்.பி.ஏ. படிச்சிட்டு, ஏதாவது பிசினஸ் பண்ணணும்கிறதுதான் அவன் ஐடியா'' என்று உதயநிதியைப் பார்க்கிறார்.

அரசியல்வாதியின் பிள்ளை என்பதையே எதிர்மறையான ஒரு விஷயமாகக் காட்டி, லயோலா கல்லூரியில் தன் மகனைச் சேர்க்கத் தயங்கியதை நினைவுகூர்ந்தார் ஸ்டாலின். ''வேண்டாங்க... சேர்ந்துட்டு ஸ்டிரைக்... அது இதுனு செஞ்சா எங்களுக்குக் கஷ்டம்'' என்றார்களாம். இப்போது நிலைமை தலைகீழ். கல்லூரி மாணவர் தேர்தலில் நிற்கச் சொல்லி லயோலா கல்லூரி பிரின்சி பால் வற்புறுத்தியும்கூட உதயநிதி மறுத்துவிட்டா ராம்.

மகள் செந்தாமரை..? அவரால்தான் வீட்டில் சலங்கை சத்தம் கேட்கிறது. வழுவூர் ராமைய்யா பிள்ளையின் மகன் சாம்ராட்டிடம் பரதம் கற்றுவருகிறார் செந்தாமரை.

''ஸ்டாலின் என்றாலே வேகமானவர்... சட்டென்று கோபப்படக்கூடியவர்... முரட்டுத்தனமானவர் என்ற ஒரு பேச்சு இருக்கிறதே..?'' - இப்படி ஒரு கேள்வியை முன்வைத்தோம்...

''நீங்க சொல்றது சரிதான்... நான் கொஞ்சம் வேகமானவன்தான். ஆனா, இப்போ இல்லே... 'குறிஞ்சி மலர்’ தொடரில் 'அரவிந்தன்’ கேரக்டரில் எப்போ நடித்தேனோ... அன்றோடு அந்தக் குணங்கள் மாறிவிட்டன. மிக மென்மையான, எதையும் யோசித்து அலசி முடிவெடுக்கும் அரவிந்தனாக நான் நடித்ததைப் பலரும் விரும்பிப் பாராட்டினார்கள். இப்படித்தான் மக்கள் நம்மைப் பார்க்க விரும்புகிறார்கள் என்று புரிந்துவிட்டது. என் அவசரம், வேகம் எல்லாம் போய் நிதானமும் பொறுமையும் வந்தது!''

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததுமே எழுந்துவிட்ட சர்ச்சைக்குரிய அந்தக் கேள்வியைக் கேட்டோம். ''உங்களுக்கு ஏன் அமைச்சர் பதவி தரப்படவில்லை? அதனால் உங்களுக்கு மனக்கசப்பு இல்லையா?''

ஐந்து நொடிகள் இடைவெளி விட்டுப் பின் பேசினார் ஸ்டாலின். ''கட்சி ஜெயிச்சு வந்தவுடனே நான் அப்பாவைச் சந்திச்சு முதல்ல சொன்ன விஷயமே, 'எனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேணாம்’ என்பதுதான். அப்பாவின் எண்ணம் என்னவாக இருந்ததுனு எனக்குத் தெரியாது. நான் முந்திக்கிட்டு அப்படிச் சொன்னதுக்குக் காரணம் இருக்கு. அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் நம்ம ஆட்சி வந்திருக்கிறதால், நிறையப் பேருக்கு அமைச்சர் ஆசை இருந்திருக்கும். அவர்களில் பலர் கட்சிக்காக நிறைய உழைத்தவர்களாக இருப்பார்கள். பதவி தராமல் மறுக்கவும் முடியாது... நானே, அமைச்சர் பதவியை வேண்டாம்னு மறுத்துவிட்டால், 'ஸ்டாலினே மறுத்துவிட்டார்’ என்று அப்புறம் அவர்கள் அதிகம் சங்கடம் தராமல் விட்டுக்கொடுத்துவிடுவார்கள் என்று நான் நினைத்தேன்!''

''முதல்வரைப் பல விஷயங்களில் நீங்கள் நிர்பந்தப்படுத்துவதாகவும், அதனால்தான் முதல்வர் தனிக் குடித்தனமே போகப்போவதாகவும் சொல்லப்படுகிறதே?''

''எங்க வீட்டை நேரில் பார்த்தீங்கல்ல! இங்க, என் மனைவி - குழந்தைகள், தம்பி தமிழரசுவின் மனைவி - குழந்தைகள், அப்பா - அம்மானு மொத்தம் பத்துப் பேர் குடியிருக்கோம். அப்பாவைப் பார்க்க வர்ற பிரமுகர்கள், தொண்டர்கள்... என்னைப் பார்க்க வர்றவங்கனு வெளி ஹால்ல எப்பவும் நிக்கற கூட்டம் வேறு! அன்பான இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சமாளிக்க முடியாதுனு க்ரீன்வேஸ் ரோட்ல அப்பாவுக்கு வீடு பார்த்தாங்க. ஆனா, அதுவும்கூட இன்னும் முடிவாகல!

ஒரேயொரு விஷயம் மட்டும் சொல்றேன்... 'என் மகனுக்கு ஒரு அப்பாங்கிற முறையில் நான் பதவி எதையும் தரலே. ஆனா, மகன்கிற முறையில் அவன் எனக்கு நிறையப் பெருமைகளைத் தேடித் தந்திருக்கான்’னு அப்பாவே பத்திரிகையில் என்னைப் பத்திக் கேட்டவங்களுக்குப் பதில் சொல்லியிருக்கார். அப்பா வாயால் இப்படியரு பாராட்டு வாங்கிறதைவிடப் பெரிய பதவி வேற இருக்கா என்ன?''

https://www.vikatan.com/oddities/miscellaneous/31360--2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

1996ம் ஆண்டு விகடனிலிருந்து

————————————————————————

"அரசியலில் இஷ்டமில்லை... பிசினஸ்தான் உதயநிதி ஐடியா!" - 'அப்பா' ஸ்டாலின்

இப்போதெல்லாம்... அரசியலும்,  நல்ல வருமானம் தரும்... ஒரு கொழுத்த  பிசினஸ் தானே.....  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மகன் ஸ்டாலின் அவர்கள் அடுத்த தலைமைப்பொறுப்பில் தி மு கவுக்கு வருவாரா என் கருனாநியிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு 

வாரிசுகளைத் தலைவராக்க தி மு க ஒன்றும் சங்கர மடம் இல்லை எனக் கருனாநிதி கூறியிருந்தார் அவ்வார்த்தையை அவராலேயே காப்பாற்ற முடியாதுபோனது இப்போ உதயநிதி 

இந்த உதயநிதியின் பொண்டாட்டிதான் ஆதப்பாக்கத்தில் சென்ரல்போர்ட் அதாவது சிபிஎஸ் ஈ பாடசாலை ஒன்றை நடாத்துகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

அட... ஸ்ரீ ரெட்டியின்,  "லிஸ்ட்டில"  உதயநிதியும் இருக்கிறார்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people and text

அட... ஸ்ரீ ரெட்டியின்,  "லிஸ்ட்டில"  உதயநிதியும் இருக்கிறார்.  :grin:

snapshot.jpg

ரெட்டி அம்மணி, உன்ர லிஸ்ட் மிக பெரியது..!  ஆனாலும் காணொளி இணைத்தால் நம்புற மாதிரி இருக்குமல்லவா..? 😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.