Jump to content

இத்தால் சகலரும் அறிவது


Recommended Posts

Posted

அறிவித்தல்

யாழ் இணைய கருத்துக்களத்தின் மட்டுறுத்தினர்களாக பணியாற்றிய இராவணன், மதன் ஆகியோர் நேரமின்மை போன்ற காரணங்களால் தொடர்ந்து கருத்துக்களத்துக்கு வருகை தருவதில்லை - மட்டுறுத்தல் பணிகளில் தொடர்ந்து செயலாற்ற முடியவில்லை. இதன் காரணமாக மேலும் அவர்களுக்கு சுமையைக் கூட்டாமல், மட்டுறுத்தல் பணிகளில் இருந்து விடுவிக்கிறோம்.

கருத்துக்கள நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றி, பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட மட்டுறுத்தினர்கள்:

யாழ் (சுரதா)

இளைஞன்

இராவணன்

மதன்

இளங்கோ

கரவை பரணி

கபிலன்

கவிதன்

யாழரசி

யாழினி

இதுவரை காலமும் கருத்துக்கள நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றியதற்கும், பல்லாயிரக் கணக்கானோர் பார்வையிடும் இக் கருத்துக்களத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல உதவியமைக்கும் கருத்துக்கள நிர்வாகம் இவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. கருத்துக்களத்தில் அவர்களின் பணியும், தமது பெறுமதிமிக்க நேரத்தை ஒதுக்கி வழங்கிய ஒத்துழைப்பும் என்றும் நினைவிலும், குறிப்பிலும் இருக்கும்.

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டும், ஒவ்வொருநாளும் எழுதப்படும் கருத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டும் புதிய மட்டுறுத்துனர் ஒருவரை இன்று இணைத்துக் கொள்கிறோம். இவரது நிர்வாகப் பெயர்: எழுவான்.

இதனடிப்படையில் இப்போது கருத்துக்கள நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றும் மட்டுறுத்தினர்கள்:

யாழ்பிரியா

யாழ்பாடி

இணையவன்

எழுவான்

கருத்துக்கள உறவுகள் அனைவரும் கருத்துக்கள விதிமுறைகளை மதித்து செயற்படுவதோடு, கருத்துக்கள மட்டுறுத்துனர்களின் மட்டுறுத்தல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நட்புடன் கேட்டுக்கொள்கின்றோம். :huh:

  • 1 month later...
  • Replies 75
  • Created
  • Last Reply
Posted

அறிவித்தல்

யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம்,

நாளுக்கு நாள் யாழ் இணையத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியே கருத்துக்களம் பகுதி மட்டுமல்லாது, யாழ் இணையத்தின் ஒளித்தடம் பகுதியும் பலராலும் தொடர்ந்து பார்க்கப்படுகிற ஒரு பகுதியாக இருக்கிறது. ஒருநாளைக்கு ஒருவராலேயே பல தடவைகள் பல பக்கங்கள் பார்க்கப்படுகின்றன. அந்தவகையில் யாழ் இணையத் தளத்தின் பாவனையின் அளவு அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக இது மேலும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக நேற்றும் இன்றும் தகவல் வங்கியின் செயற்பாட்டில் இடையிடையே தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தடங்கல்களை களைந்து யாழ் இணையத்தின் இயக்கத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். தகவல் வங்கி, தள வழங்கி ஆகியவற்றின் செயற்திறனை அதிகரித்து வேகமாகவும், தடங்கல் இன்றியும் யாழ் இணையப் பக்கங்களைப் பார்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். எனவே, அதுவரை ஏற்படும் தடங்கல்களுக்கு வருந்துகிறோம். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

நன்றி

நட்புடன்,

யாழ் இணைய நிர்வாகம்

Posted

திருத்தம் செய்தல்

கருத்துக்கள உறவுகளே,

கருத்துக்களத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் புதிய பதிவைத் தொடங்குவதற்கும், தொடங்கிய தலைப்புக்கு பதிலளிப்பதற்கும், உங்கள் பதிவுகளில் உள்ள (எழுத்துப்)பிழைகளைத் திருத்துவதற்கும் உங்களுக்கு அனுமதியுள்ளது. இதனை, குறிப்பாக திருத்தம் செய்வதற்கான அனுமதியை, நீங்கள் தவறாகப் பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தோம்.

ஆனால், புதிதாக களத்தில் இணைந்துகொண்ட உறுப்பினர் கரிகாலன் நேற்று இரவு தான் தொடங்கிய தலைப்பில் தனது கருத்துக்களையெல்லாம் நீக்கியிருக்கிறார். இது அவருக்கு பதிலெழுதிய அனைத்து கருத்துக்கள உறவுகளையும் அவமதிக்கிற அதேவேளை, கருத்துக்கள நிர்வாகத்தினரை மேலும் மேலும் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் இறுக்கமாக்கச் செய்கிறது.

ஒரு புதிய தலைப்பை தொடங்குவதற்கு முதல் அல்லது ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் பொறுமையுடன் யோசிக்கவேண்டும். கருத்தை எழுதியதன் பின்னும் - மற்றவர்கள் உங்கள் கருத்துக்களுக்கு பதிலளிக்காத வரை - உங்கள் கருத்தில் திருத்தம் செய்வதற்கான அனுமதி உள்ளது. ஆனால், உங்கள் கருத்துக்கு ஏனையவர்கள் பதிலெழுதிய பின்னர் உங்கள் கருத்தை முற்றாக நீக்குவதோ, உங்கள் கருத்தின் உள்ளடக்கப் பொருளை மாற்றுவதோ தவறானது. ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் பலதடவை யோசியுங்கள். எழுதியதன் பின் அதற்கான விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற விடயங்கள் நடைபெறாது என நம்புகிறோம். கருத்துக்கள உறவு கரிகாலன் அவர்களுக்கு இன்றிலிருந்து தனது ஆக்கங்களைத் திருத்துவதற்கு அனுமதி இல்லை. அத்துடன் எச்சரிக்கை ஒன்றும் வழங்கப்படுகிறது.

  • 6 months later...
Posted

அறிவித்தல்

இனிவரும் காலங்களில் நிர்வாகம் தொடர்பான கருத்துக்களை நேரடியாக எமக்கு (தனிமடலூடாக) அறியத்தரலாம். பொதுவான கருத்துக்களம் தொடர்பான அல்லது கருத்தாடல்கள் தொடர்பான கருத்துக்களை யாழ் உறவோசை பகுதியில் முன்வைக்கலாம். ஆலோசனைகளையும் அங்கே பதியலாம். இது கருத்தியல் அடக்குமுறையாகப் படலாம். ஆனால், இப்படியான ஒரு முடிவை மேற்கொள்வதற்கு இன்றைய கருத்துக்கள சூழலே காரணம்.

இதுவரைகாலமும் மென்போக்கை நாம் கடைப்பிடித்து வந்தோம். ஆனால், கருத்துக்களம் குப்பைக்கூடமாகவும் - மனவக்கிரங்களையும், மனோவிகாரங்களையும் கொட்டும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் - இனிவரும் காலங்களில் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்க இருக்கிறோம். ஈவிரக்கம் இன்றி கருத்துக்கள விதிமுறைகள் அமுல்படுத்தப்படும். கருத்துக்கள விதிமுறைகளுக்கு உட்பட்டு சுதந்திரமான கருத்தாடலை செய்ய இங்கு அனுமதியுண்டு. கருத்துக்கள விதிமுறைகளை இதுவரை வாசிக்காதவர்கள் மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். கருத்துக்கள விதிமுறைகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனின் கருத்துக்களத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது கருத்துக்களை எழுதாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.

அதிகம் கோபப்படுபவர்கள், அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள், உளநலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் கருத்துக்களத்தில் எழுதுவதையோ அல்லது கருத்துக்களத்தில் கருது்துக்களை வாசிப்பதையோ தவிர்த்துக்கொள்வது நல்லது. கருத்துக்களத்துக்கு வருகை தருவதால் உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கோ அல்லது உளவியல் தாக்கங்களுக்கோ நாம் பொறுப்பாளியாக முடியாது.

கருத்துக்கள நிர்வாகம் தொடர்பாக குறைகள் இருப்பின், அவற்றை பட்டியலிட்டு கருத்துக்கள நிரந்தரப் பொறுப்பாளர் மோகனுக்கு தனிமடலில் அனுப்பி வைக்கலாம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது பதிலளிக்கப்படும். உங்கள் ஆலோசனைகளையும் எமக்கு தனிமடலில் அனுப்பி வைக்கலாம். பரிசீலிக்கப்படும்.

Posted

அறிவுறுத்தல்

யாழ் இணைய கருத்துக்களம் ஒரு தமிழ்க் கருத்துக்களம். தமிழில் கருத்துக்களைப் பதிவதற்கான களம். இங்கே ஆங்கிலத்தில் கருத்துக்கள் எழுதப்படுவது தவிர்க்கப்படவேண்டும். கருத்தாடலின் தேவை கருதி ஆங்கில மொழியிலான ஆவணங்களை இணைக்கலாம். ஆனால், கருத்துக்கள் தமிழிலே அமையவேண்டும். முக்கிய செய்திகளை ஆங்கில மொழியில் வருகிறபோது அவற்றின் சுருக்கத்தை தமிழில் எழுதி அதன்கீழே ஆங்கிலச் செய்தியை இணைக்கலாம்.

அதேபோல், கருத்துக்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதும் தவிர்க்கப்படவேண்டும். தமிழ் தெரியாத ஆங்கிலச் சொற்களென்றால் அவற்றை ஆங்கிலத்திலேயே எழுதலாம். ஆனால், தமிழ் தெரிந்தும் - கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் (பட், டியர், ஹல்லோ போன்றன:lol: தமிழில் எழுதுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இனிவரும் காலங்களில் இவற்றை உறுப்பினர்கள் கவனத்தில் எடுப்பீர்கள் என நம்புகிறேன். தொடர்ந்தும் இதுபோன்ற கோமாளித்தனமான - தமிழ் மொழியைச் சிதைக்கும் வகையிலான கருத்துக்கள் இடம்பெறின் நடவடிக்கை எடுக்கப்படும். கருத்துக்களில் இடம்பெறும் குறிப்பிட்ட தமிழில் எழுதப்படும் ஆங்கிலச் சொற்களை (பட், டியர், ஹல்லோ போன்றன) மட்டுறுத்துனர்கள் தமிழில் மாத்துவார்கள் என்றோ அல்லது குறிப்பிட்ட அந்த சொற்களை மட்டும் நீக்கிவிட்டு முழுக் கருத்தையும் அனுமதிப்பார்கள் என்றோ எதிர்பார்க்கவேண்டாம். அப்படியான சொற்கள் இடம்பெறும் கருத்துக்கள் முற்று முழுதாக நீக்கப்படும். எனவே, இனிமேல் கருத்துக்கள் எழுதும்போது இதனைக் கவனத்தில் கொள்ளுங்கள். எழுதிய பின்னரும் ஒருமுறை படித்துப் பார்த்து அப்படிச் சொற்கள் இடம்பெற்றிருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.

நன்றி

  • 1 year later...
Posted

kumuthan என்கிற உறுப்பினர் யாழ் இணைய கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்.

பின்வரும் காரணங்களால் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மீளப்பெறப்பட்டுள்ளது:

1. பிற இணையத்தள செய்திகளை தனது வலைப்பதிவில் இணைத்துவிட்டு, அதனை பின்பு யாழ் கருத்துக்களத்தில் தனது செய்தியாக இணைத்தமை.

2. ஆக்கங்களின் உண்மையான மூலத்தை குறிப்பிடாமல், யாழ் கருத்துக்களத்தில் அவற்றை இணைத்தமை.

3. யாழ் கருத்துக்களத்தை கருத்தாடலுக்கான களமாகப் பயன்படுத்தாமல், தனது வலைப்பதிவுக்கான விளம்பரத்தளமாக பயன்படுத்தியமை.

4. பலமுறை அறிவுறுத்தியும், அதனைப் புறந்தள்ளி, கருத்துக்கள விதிமுறைகளை மீறியமை.

Posted

archunan என்னும் பெயரில் கருத்தெழுதும் உறுப்பினர் கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்

தடை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் பின்வருமாறு:

1. பல தடவைகள் தலைப்புக்கு பொருத்தமில்லாமல் வேறு ஒரு விடயத்தை திணிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டமை.

2. ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இல்லாமல் வெறுமனே தனிநபர் தாக்குதலாக கருத்துகளை எழுதியமை.

3. கருத்துக்களத்தை ஆக்கபூர்வமான கருத்தாடற் களமாக பயன்படுத்தாமல் தமது தனிப்பட்ட விரோதங்களை வெளிப்படுத்தும் களமாக பயன்படுத்தியமை.

4. அதை மட்டுமே முதன்மை நோக்காக கொண்டு கருத்துக்களத்தில் எழுதியமை.

  • 3 weeks later...
Posted

paranthan என்னும் பெயரில் கருத்தெழுதும் உறுப்பினர் கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்

தடை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் பின்வருமாறு:

1. செய்திகளின் நேரடி மூலத்தினை குறிப்பிடாமை

2. பலமுறை அறிவுறுத்தப்பட்டும், கருத்துக்கள விதிமுறையை பின்பற்றாமை

  • 4 weeks later...
Posted

நம்பி என்கிற உறுப்பினர் யாழ் இணைய கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்.

பின்வரும் காரணங்களால் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மீளப்பெறப்பட்டுள்ளது:

- செய்திகளை முழுமையாக இணைக்காமை

- செய்திகளின் மூலத்தை நேரடியாக எழுதாமை

  • 2 years later...
Posted

விருப்பு வழங்கும் (like) முறைமை

நேற்றில் இருந்து (08-ஏப்ரல்-2012) பச்சை / சிவப்பு புள்ளிகள் வழங்கும் முறைமை மாற்றப்பட்டு விருப்பு வழங்கும் (like) முறைமை அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்த முறை மாற்றம் தொழில்நுட்ப ரீதியான மாற்றம் என்பதால் கள உறுப்பினர்கள் ஏற்கனவே பெற்றிருந்த பச்சை மற்றும் சிவப்பு புள்ளிகளின் எண்ணிக்கை அனைத்தும் பூச்சியத்துக்கு வந்துள்ளது (reset ஆகியுள்ளது).

  • 5 months later...
Posted

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மற்றும் கருத்துக்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டு நிழலி, இணையவனுக்கு உதவியாக புதிய மட்டுறுத்துனர்களாக நுணாவிலான் மற்றும் நியானி ஆகியோரை இன்று முதல் யாழ் கருத்துக்களத்தில் இணைத்துக் கொள்கிறோம். கருத்துக்கள உறவுகள் அனைவரும் உங்கள் ஒத்துழைப்பை நுணாவிலான் மற்றும் நியானி ஆகியோருக்கு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

  • 4 months later...
Posted

எச்சரிக்கை

 

கள உறவுகள் மட்டுமே பார்க்கக்கூடிய நாற்சந்தியில் உள்ள விடயத்தை உறவோசைப் பகுதிக்கு காவி வந்ததாலும், பூட்டப்பட்ட திரியின் கருத்தாடலை வேறு திரியில் தொடர முனைந்ததாலும் துளசிக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

Posted

எச்சரிக்கை


நாற்சந்தியில் பூட்டப்பட்ட திரியின் கருத்தாடலை மீண்டும் உறவோசை பகுதியில் தொடர முனைந்ததால் ரதி, விசுகு ஆகியோருக்கு தலா ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.


 

Posted

எச்சரிக்கை


தொடர்ந்தும் கள உறவுகள் சிலரைச் சீண்டும் கருத்துக்களைப் பதிந்ததால் வண்டுமுருகனுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

 

Posted
easyjobs  க்கு ஒரு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டுள்ளது. காரணங்கள்:
 
முழு இணைப்பையும் கொடுக்காமை.இரு முறை சொல்லியும் மீண்டும் முழு இணைப்பையும் கொடுக்காமல் வாசர்கர்களை தனது தளத்துக்கு இழுக்கும் தந்திரம்.அதற்காக யாழ்களத்தை பயன்படுத்துதல்.    
  • 2 weeks later...
Posted

எச்சரிக்கை


கள விதிகளை முற்றாக புறக்கணித்து மிக அநாகரீகமான சொற்பதங்களைப் பல கருத்துக்களில் பாவித்தமை காரணமாக தமிழ் சிறிக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

  • 2 weeks later...
Posted

பல தடவைகள் அறிவுறுத்தப்பட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டும் அவற்றை அலட்சியம் செய்து ஒரே விதமான செய்திகளைத் தனித் தலைப்புகளில் ஆரம்பிப்பதால் chinnavan னுக்கு 3 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

யாழில் பதியப்படும் செய்திகளுக்கு வெளியே இணைப்புக் கொடுக்கப்படுவதால் முன்பு போன்று ஒரே மாதிரியான செய்திகளை ஒரே தலைப்பில் ஒன்றிணைப்பதில் சிரமங்களை மட்டுறுத்தினர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஒரே விடயத்தை இரு தலைப்புகளில் கருத்தாடல் செய்வதும் சாத்தியமற்றது. ஆகவே செய்திகளை இணைக்கும்போது அது ஏற்கனவே உள்ளதா எனக் கவனிக்குமாறு தயவுடன் வேண்டுகிறோம்.

Posted

எச்சரிக்கை



மட்டுறுத்தப்பட்ட கருத்தை திரும்பவும் இரு தடவைகள் பதிந்தமைக்காக யாழ்அன்புக்கு இரு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

களவிதி: மட்டுறுத்தப்பட்ட கருத்துகளை மீண்டும் பதிவதும் வேறு தலைப்புகளில் கொண்டுவந்து பிரசுரிப்பதும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்

Posted

திரிக்கு சம்பந்தமில்லாமல் வெறுமனே ஆத்திரமூட்டுவதற்காக பதில்களை வழங்கியமைக்காக அர்ஜுனுக்கு எச்சரிக்கைப் புள்ளி 1 வழங்கப்படுகின்றது.

  • 2 weeks later...
Posted

எச்சரிக்கை

 

யாழின் கறுப்புப்பட்டியலில் உள்ள தளத்தில் இருந்து மூலம் குறிப்பிடாமல் செய்தி ஒன்றை இணைத்தமைக்காக துன்னையூரானுக்கு இரு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.
 

 

Posted

எச்சரிக்கை

 

--நிர்வாகத்தினர் தனிமடல்களில் வேண்டுகோள்கள் விடுத்தும், தொடர்ந்தும் கள விதிகளை கருத்தில் எடுக்காது தொடர்ச்சியாக கண்ணியமற்ற சொற்களை பயன்படுத்தியமையால் ஆசான் இற்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Posted

அநாகரீகமான முறையில் கருத்துக்கள் எழுதியதனால் துன்னையூரான் 7 நாட்கள் கருத்துக் களத்தில் தடை செய்யப்பட்டுள்ளார்.

Posted
 
யாழ்கள உறவுகளுக்கு, புங்கையூரானுக்கு வாழ்த்து தெரிவித்து (பச்சை புள்ளிகளுக்கு) திறக்கப்பட்ட திரி சில கோப்புக்களை  ஒருங்கிணைக்க முற்பட்ட போது தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டது என்பதை மிக்க மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
  • 2 weeks later...
Posted

எச்சரிக்கை


திரி ஒன்றில் சக கள உறவு ஒருவரை அநாகரீகமான முறையில் நையாண்டி செய்ததற்காக சுண்டலுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்குகின்றேன். பாலியல் ரீதியான வசைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அனுமதிக்கப்படமாட்டாது.

Posted

நிர்வாகத்தினரை விமர்சித்துத் திண்ணையில் எழுதியமைக்காக துளசிக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍................ நல்ல ஒரு முடிவும், முன்னுதாரணமும்............ நாமலே பட்டம் இல்லாவிட்டால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று சொன்னதைத் தான் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது...................🤣.  
    • 'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
    • 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன.  அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே.  ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.          
    • யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலார் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.   யாழ்ப்பாணம் - சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது,  அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்திருக்கிறது.   சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலார் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.   எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் சிறிதும் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலார் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார். அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர். இதேநேரம் -  இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் 11 ஆம் திகதி நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=197232
    • நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்  மொஹமட் ரிஸ்வி சாலிஹ்இ தலைமைத்துவத்தில் நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திஇ தனது தொழில்முறை தகுதிகள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் அவர்இ சான்றிதழ்கள் மூலம்இ தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரியில் 1986இல் பெற்ற ஆடீடீளு பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் லாரிங்கோ ஓட்டோரினோலஜி டிப்ளோமா (னுடுழு) உட்பட தனது தகுதிகளை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். https://tamilwin.com/article/deputy-speaker-of-parliament-s-qualifications-1734102374
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.