Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓனர் ராஜகோபால் கவலைக்கிடம்.. மருத்துவர்கள் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Saravana Bhavan owner Rajagopal Health is bad said by doctors

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓனர் ராஜகோபால் கவலைக்கிடம்.. மருத்துவர்கள் தகவல்

ஜீவஜோதி என்பவரது கணவர் சாந்தகுமரை கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுள் தண்டனையை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜகோபால், கடந்த சில நாட்களாக சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ராஜகோபாலின் உடல்நிலை மோசமாக உள்ளதாக ஸ்டான்லி மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கொலை வழக்கில் தண்டனை பெற ராஜகோபாலுடன் சரணடைந்த ஜனார்த்தனன் என்பவருக்கும், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜாதகம், ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்த சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலில் சில சறுக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து ஜோதிடரை அணுகி ஆலோசனை கேட்டார். அப்போது சிறிய வயது பெண்ணை 3-ஆவதாக திருமணம் செய்தால் உங்கள் வாழ்வில் ஏற்றம் வரும் என ஜோதிடர் கூறியுள்ளார்.

Saravana Bhavan owner Rajagopal Health is bad said by doctors

இதனை நம்பிய ராஜகோபால் தனது ஓட்டலில் பணிபுரிந்த மேலாளரின் மகளான ஜீவஜோதி மீது கண் வைத்தார். ஆனால் ஜீவஜோதி ஏற்கனவே பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்திருந்தார். எனினும் சற்றும் யோசிக்காத ராஜகோபால் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கடத்தி சென்று கொடைக்கானலில் கொலை செய்தது தெரிய வந்தது.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் கூலிப்படையை சேர்ந்த டேனியல், தமிழ்செல்வன், சேது ஜனார்தனன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர் இந்த கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதையும் எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார் ஆனால் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது கடந்த 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

ஆனால் தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் உள்ளதாக கூறி சரணடைவதிலிருந்து விலக்கு கேட்டு ராஜகோபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் உடனடியாக சரணடைய உத்தரவிட்டது இதனையடுத்து கடந்த 9-ம் தேதி மாலை வடபழனி தனியார் மருத்துவமனையிலிருந்து, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதற்கு முன்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு முழுஉடல் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ராஜகோபாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு மருத்துவர்கள் கூறினர். இ

தனையடுத்து 5 நாட்களுக்கு மேலாக அவருக்கு ஸ்டான்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக ஸ்டான்லி மருத்துவர்கள் தற்போது கூறியுள்ளனர்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/saravana-bhavan-owner-rajagopal-health-is-bad-said-by-doctors-356933.html

Edited by தமிழ் சிறி

சரவண பவன்’ ராஜகோபால் காலமானார்

உலக அளவில் பல கிளைகளை கொண்ட சரவணபவன் ஹோட்டல் குழுமத்தின் அதிபர் ராஜகோபால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

உடல்நலக்குறைவுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு ஒரு கொலைக்குற்றம் தொடர்பாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

2009-ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை செல்வதற்கு எதிராக அவர் கடுமையாக போராடி வந்தார். கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி சிறை செல்வதை தவிர்க்க அவர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

சரவணபவன் ஹோட்டல் குழுமத்துக்கு உலகெங்கிலும் 80-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. நியூ யார்க், லண்டன், சிட்னி போன்ற பெரு நகரங்களிலும் இந்த ஹோட்டலுக்கு கிளைகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த குழுமத்தில் பணிபுரிகின்றனர்.

ஜோதிடர் ஒருவரின் ஆலோசனை பேரில் தனது பணியாளர்களில் ஒருவரின் மனைவியை திருமணம் செய்துகொள்ள அவர் விரும்பியதாக கூறப்பட்டது.

'சரவண பவன்' ராஜகோபால் காலமானார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடந்த 2001-இல் இப்பெண்ணின் கணவர் காணாமல்போன நிலையில், அதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். பின்னர் காட்டுப்பகுதி ஒன்றில் அந்த பெண்ணின் கணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.

2003-ஆம் ஆண்டில் அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தை அச்சுறுத்தியதாக ராஜகோபால் மீது குற்றம்சாட்டப்பட்டது.

2004-ஆம் ஆண்டில் ராஜகோபாலுக்கு உள்ளூர் நீதிமன்றம் ஒன்று 10 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக 2009-இல் உயர் நீதிமன்றம் அதிகரித்தது.

கடந்த மார்ச் மாதத்தில் இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

https://www.bbc.com/tamil/india-49027217

  • கருத்துக்கள உறவுகள்

The founder of the largest Indian chain of restaurants offering southern food at home and abroad, "Dosa King" P. Rajagopal, died on Thursday, nearly four months after he lost his final appeal against a murder conviction.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®°à®µà®£ பவன௠à®à®£à¯à®£à®¾à®à¯à®à®¿

ஆயுள் தண்டனை கைதியாகி,  மரணித்த ராஜகோபால்.

தனிப்பட்ட வாழ்க்கையில் மோசமான தோல்வியை தழுவி, மிகுந்த மனக்கஷ்டத்துடனேயே மரணித்திருக்கிறார் சரவண பவன் அண்ணாச்சி. இவருக்கும் ஒரு கடைசி ஆசை இருந்திருக்கிறது!

இன்று உலகம் முழுவதும் இத்தனை கிளைகளை அண்ணாச்சி உருவாக்கி உள்ளார் என்றால், இதற்கு எத்தனை அர்ப்பணிப்பு வேண்டும், எத்தனை உழைப்பு வேண்டும்? வெறும் வளர்ச்சி என்று மட்டும் இதை சுருக்கி விட முடியாது.

அண்ணாச்சிக்கு முருகன் என்றால் ரொம்பவும் உயிர். அதனால்தான் கிருபானந்த வாரியாரின் சீடராகவும் விளங்கி, தன்னுடைய ஓட்டலுக்கு சரவண பவன் என்று பெயரும் வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளையில் 'நவதிருப்பதி' என்கிற பிரமாண்ட கோவிலைகூட இவர் உருவாக்கியுள்ளார்.

எவ்வளவு சீக்கிரம் உயரத்துக்கு போனாரோ, அவ்வளவு சீக்கிரம் கீழே வந்து விழுந்து விட்டார். அப்போது விழுந்தவர்தான் கடைசி வரை எழவே இல்லை. எழ முடியவும் இல்லை. ஆனாலும் அண்ணாச்சி தன்னுடைய கடைசி ஆசையை குடும்பத்தினரிடம் சொன்னாராம்.

அது, தான் இறந்துவிட்டால்கூட, அதாவது இறந்த தினத்தன்று கூட, சரவண பவன் ஓட்டல்களை திறந்தே வைத்திருக்க வேண்டும் என்பதுதானாம் அந்த ஆசை.

அதன்படி, இன்று சரவண பவன் ஓட்டல்கள் வழக்கம் போல் திறந்தே இருக்கும் என்றும், இரவு 8 மணிக்குப் பின்னர் தான் மூடப்படும் என்றும் ஓட்டல் சார்பாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த உடல் வீட்டில் கிடந்தாலும், அவரது ஆசைப்படி எல்லா ஓட்டல்களும் திறந்தே வைக்கப்பட்டு உள்ளன. கடந்த 18 வருஷமாக நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து, ஆயுள் கைதியாகவே உயிரை விட்டாலும், அண்ணாச்சியின் கடைசி ஆசையை நினைக்கும்போது மனம் கனத்து போகிறது!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/saravana-bhavan-rajagopals-last-wish-357355.html

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக பத்திரிக்கைகள் இவர் மரணத்திற்கு ஏன் இவ்வளவு ஒப்பாரி வைக்கின்றன என தெரியவில்லை. இவர் ஒரு கொலைகாரர். அழகிய குடும்பம்பப் பெண்ணின் மேல் உள்ள இச்சையினால் அவரது கணவனை கொலை செய்தவர்.  எனவே எதை நாம் விதைபோமோ அதுவே வந்து சேரும். உலகமெல்லாம் போற்றக்கூடிய வியாபரிகாக இருக்கலாம், ஆனால் அப்பாவி கணவனை கொன்றவர்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, colomban said:

தமிழக பத்திரிக்கைகள் இவர் மரணத்திற்கு ஏன் இவ்வளவு ஒப்பாரி வைக்கின்றன என தெரியவில்லை. இவர் ஒரு கொலைகாரர். அழகிய குடும்பம்பப் பெண்ணின் மேல் உள்ள இச்சையினால் அவரது கணவனை கொலை செய்தவர்.  எனவே எதை நாம் விதைபோமோ அதுவே வந்து சேரும். உலகமெல்லாம் போற்றக்கூடிய வியாபரிகாக இருக்கலாம், ஆனால் அப்பாவி கணவனை கொன்றவர்.

அவர் அந்த பெண்ணில் மேல் உள்ள இச்சையினால் செய்தார் என்பதை ஜோதிடத்தை நம்பி மோசம் போனார் என்பதே பொருத்தமாயிருக்கும்...அந்த சோதிடர்  இந்த நேரம்,நட்சத்திரத்தில்  பிறந்த பெண்ணை கட்ட சொல்லி இருக்கலாம்...முதலில் ஜோதிடரை பிடித்து தூக்கில் போடோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

தாமதித்த நீதி, மறுக்கப் பட்ட நீதி. 53 வயதில் கொலை செய்திருக்கிறார்.

18 வருடங்களாக ஒரு கொலையை செய்துவிட்டு,சிறைக்கு போகாமல் வியாபாரத்தை வளப்படுத்தி விட்டு இப்போ 71 வயசில் ஆஸ்பத்திரியில் போய்படுத்து, கடைசிவரை சிறைக்கு போகாமலே உயிரை விட்டுள்ளார்.

10 வருட தண்டனையை கூட ஏற்க மனமின்றி குறைத்து கேட்கப் போய், அதை ஆயுள் தண்டனையாக மாற்றி இருக்கிறது கோர்ட்.

சம்பளம் வாங்குபந்தானே பொண்டாட்டியை கேட்டா தந்துட்டுபோறான், இல்லை எண்டா தூக்கிடாலம் என்ற எழிய தமிழ் முதலாளி மனோநிலையில் இருந்த, திருநீறு பூசிய ஒரு இழி ஜந்து இந்த மனிதன்.

#பணத்திமிர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பிலை உள்ள போடிமார் செய்யாத  ஜில்மா வேலைகளா? போடிமாரின் பண்ணை வீடுகளில் வைப்பாட்டிகளுக்காக நடக்காத கொலைகளா?
சரவணபவன் அண்ணாச்சிக்கு இது முதல் கொலையாக இருக்காது எண்டது என்ரை அனுமானம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாய் விற்ற காசு குரைக்காது என்பார்கள்;  ஆனாலும் முன்பு சரவணபவனில் சாப்பிட்டதை நினைக்க இப்ப சத்தி வாற மாதிரி இருக்கே , இது என்ன சோதனை சரவணா ??  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.