Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடாதீர்கள்; சபையில் சம்பந்தன் காட்டம்

Featured Replies

புதிய அரசியலமைப்பை வழங்குவதாக கூறி மக்கள் ஆணையை பெற்ற இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்து பாராளுமன்றத்தில் பேசும்போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு பேசிய அவர் மேலும் கூறியதாவது;

போர் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்தும் இன்னும் தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வு இல்லை.தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்.சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது.

சர்வதேச சமூகம் அரசியல் , இராஜதந்திர , பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்க வேண்டும்.புலிகளை தோற்கடிக்க உதவியது சர்வதேச சமூகம். இதனால் பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே. தமிழருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் பிரிவினையை விரும்பியிருக்கவில்லை.நாட்டை பல வழிகளில் பிரிப்பது நாட்டுக்கோ தமிழருக்கோ நன்மையில்லை. அதுதான் சமஷ்டிக் கட்சியின் கொள்கை.ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வே தமிழர்களின் விருப்பமாகும்.நாடு சக்திமிக்க ஒன்றாக மாற வேண்டுமானால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

சமூக , கலாசார உரிமைகளை கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையை உங்களால் மறுக்க முடியுமா?1956 ஆம் ஆண்டில் இருந்து வட கிழக்கு மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்த அரசு பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

சிங்கள பௌத்த மயமாக்கல் வடக்கு கிழக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதால் தான் தமிழர் பிரச்சினை தீர்வு தாமதமாகிறதா என்று தமிழ் மக்களும் நாங்களும் அச்சம் கொண்டுள்ளோம். இது சூட்சுமமாக முன்னெடுக்கப்படுகிறது.

எல் எல் ஆர் சி அறிக்கையின் சிபாரிசுகளை நிறைவேற்றுங்கள்.சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்சி செய்தால் அது தவறு. அப்படிச் செய்தால் நீங்கள் தோல்வியடைந்த அரசாக, செல்லுபடியற்ற அரசாக ஆகிவிடுவீர்கள்.எனவே உச்சபட்ச அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்றார்.

http://thinakkural.lk/article/32281

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் எதுவும் கிட்டடியில் வருது போல் உள்ள சிலமன் ?

  • தொடங்கியவர்

"பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

பிளவுபடாத நாட்டுக்குள் முறையான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இல்லாவிட்டால் இந்த அரசாங்கம் தொடர்ந்து பயணிக்க முடியாதநிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். 

அத்துடன் அரசாங்கம் தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் எமது நாடு தொடர்பான நம்பிக்கை சர்வதேசத்திடம் இல்லாமல் போகும். 

பாராளுமன்றத்தில் இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிடடார்.

 

https://www.virakesari.lk/article/61217

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

புதிய அரசியலமைப்பை வழங்குவதாக கூறி மக்கள் ஆணையை பெற்ற இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழர்களை ஏமாற்றிய அரசுகள் இதுவரை வெற்றியடைந்ததாகத் தான் வரலாறு கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ யெஸ் நாங்கள் ஏமாற மாட்டோம் 
தலீவரு சம்மந்தம் அவர்கள் அப்படியொரு நிலையை 
தமிழர்களுக்கு விடமாட்டார்.

ஒரு தமிழனாக சிங்களவர்களை பங்குக்கு நானும் எச்சரிக்கிறேன். 

  • தொடங்கியவர்

புதிய அரசியலமைப்பு துரிதமாக கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று சபையில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சபையில் உறுப்பினர்கள் போதியளவு பிரசன்னமாகியிருக்காத நிலைமை அவதானிக்ககூடியதாக இருந்தது.

 

குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் சபையில் முன்வைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கு அதியுச்ச அதிகார பரவலாக்கம் அவசியம் என்றும், அது ஒன்றிணைந்த பிரிக்கப்படாத இலங்கைக்குள் அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார். தற்போது சிங்களத் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். எவ்வாறிருப்பினும், இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இதை தவிர்த்து, தமிழ் மக்கள் வேறு எந்த தீர்வினையும் ஏற்பார்கள் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், சபை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாதமை சபாபீடத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.  நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு கூட்ட மதிப்பெண் என்று கூறப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 இற்கு குறையாமல் இருத்தல் வேண்டும். இந்த நிலையில், சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட்ட மதிப்பெண் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேவினால் குறித்த விடயம் சபாபீடத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. 

இதையடுத்து, கோரம் ஒலிக்கப்பட்டதன் பின்னர் கூட்ட மதிப்பெண்ணுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை சபையில் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தன் தனது உரையை தொடர்ந்தார். 

எவ்வாறிப்பினும், அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றிய சந்தர்ப்பத்தில், சபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரசன்னம் போதியளவில் இல்லாமை குறித்து அவரும் சுட்டிக்காட்டியிருதார்இதேவேளை, குறித்த விவாதத்தில் தாம் உரையாற்றிய சந்தர்ப்பத்திலும், உறுப்பினர்களின் எண்ணிக்கை போதியளவு இருக்கவில்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தனது உரையில் சுட்டிக்காட்டினார். 

குறித்த விவாதத்தில் உரையாற்றி தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமார், தவறுகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை திருத்திக்கொண்டு சரியான பாதையில் செல்ல அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

http://www.hirunews.lk/tamil/221014/புதிய-அரசியலமைப்பு-குறித்து-த-தே-கூட்டமைப்பு-ஒத்திவைப்பு-வேளை-பிரேரணை

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

புதிய அரசியலமைப்பு துரிதமாக கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று சபையில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சபையில் உறுப்பினர்கள் போதியளவு பிரசன்னமாகியிருக்காத நிலைமை அவதானிக்ககூடியதாக இருந்தது.

---------

எவ்வாறிருப்பினும், சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், சபை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாதமை சபாபீடத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.  நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு கூட்ட மதிப்பெண் என்று கூறப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 இற்கு குறையாமல் இருத்தல் வேண்டும். இந்த நிலையில், சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட்ட மதிப்பெண் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேவினால் குறித்த விடயம் சபாபீடத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. 

roflphotos-dot-com-photo-comments-20190411190919.jpg

சம்பந்தனின் கருத்துக்களை.... தமிழர் மட்டுமல்ல, சிங்களவரும் கணக்கில் எடுப்பதில்லை என்று தெரிந்து விட்டது. 
இந்த அவமானத்திற்கு பின்.. சம்பந்தன் அரசியலை விட்டே ஒதுங்குவது தான்...  மானஸ்தனுக்கு அழகு.

 

  • தொடங்கியவர்
8 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தனின் கருத்துக்களை.... தமிழர் மட்டுமல்ல, சிங்களவரும் கணக்கில் எடுப்பதில்லை என்று தெரிந்து விட்டது. 
இந்த அவமானத்திற்கு பின்.. சம்பந்தன் அரசியலை விட்டே ஒதுங்குவது தான்...  மானஸ்தனுக்கு அழகு.

முற்றிலும் உண்மை. இவர்கள் சபையில் பேசும்பொழுது சகல சிங்களவர்கள் 'வெளிநடப்பு' செய்கிறார்கள்.

ஒரு கொள்கை இன்றி சகலதிற்கும் நடாத்தும் இணக்க அரசியலின் விளைவே இது.    

 

 

On 7/25/2019 at 4:35 PM, ampanai said:

புதிய அரசியலமைப்பை வழங்குவதாக கூறி மக்கள் ஆணையை பெற்ற இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சம்பந்தன் செத்த பிணங்களுக்கு முன்னால ஒப்பாரி வைக்கிற மாதிரி தெரியுது.

  • தொடங்கியவர்

மக்களின் ஆதரவை பெறுவதற்காக சம்பந்தனின் நாடகம் அரங்கேற்றம் - அனந்தி விசனம்

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்ற போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத காரணத்தினால் நாங்கள் உங்களுக்கு தருகின்ற ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடிய சூழல் ஒன்று உருவாகியிருக்கின்றது என சம்பந்த ஐயா தெரிவித்துள்ளார் என முன்னாள் வடக்கு மாகாண சபை மகளிவர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன்.

ananthi.jpg

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு  ஒரு நிபந்தனையில்லாத ஆதரைவ வழங்கிவிட்டு, தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்ற போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத காரணத்தினால் நாங்கள் உங்களுக்கு தருகின்ற ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடிய சூழல் ஒன்று உருவாகியிருக்கின்றது என சம்பந்த ஐயா பாராளுமன்றத்திலே கூறியிருப்பது, எதிர்வரும் தேர்தல் காலங்களில் தாங்கள் வாக்குப் பெறும் நோக்கில், மக்களிடம் நாங்கள் இவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்திருந்தோம் என்ற செய்தியைக் தெரிவிப்பதற்காகவே இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வௌ்ளிக்கிழமை நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா மிகவும் காட்டமாக கருத்துத் தெரிவித்திருந்ததை தொலைக்காட்சி ஊடாக பார்க்கக் கூடியதாக இருந்தது. உண்மையில் இன்னும்  3 மாத காலங்களில் ஜனாதிபதித் தேர்தல் வருகின்றமையால் மூன்று மாத காலம் தான் இந்த அரசு ஆட்சியில் இருக்கப் போகின்றது.

இந்நிலையில் தான், இத்தனை வருடங்கள் 2015 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என மூன்றும் கட்சிகளும் இணைந்து ஆட்சி மாற்றத்தினை கொண்டுவந்து இத்தனை வருடங்கள் கடந்த நிலையில், இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்ற போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத காரணத்தினால் நாங்கள் உங்களுக்கு தருகின்ற ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடிய சூழல் ஒன்று உருவாகியிருக்கின்றது என சம்பந்த ஐயா தெரிவித்துள்ளார். 

உண்மையில் அவர்களுடைய பதிவி  இருக்கின்ற ஒரு வருடமோ இரண்டு வருடமோ முன்னதாக இந்த அழுத்தத்தை பிரயோகத்திருக்க வேண்டும். ரணிவில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியலிருந்து நீக்கப்பட்ட 51  நாள் குழுபத்தில் இருந்து அண்மையில் பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லாம் பிரேரணை வரை எந்தவொரு தடங்கலும் இல்லாமல் ஒரு நிபந்தனையில்லாத ஆதரைவ இந்த அரசுக்கு வழங்கிவிட்டு இப்பொழுது கூறுவதென்பது எதிர்வரும் தேர்தல் காலங்களில் தாங்கள் வாக்குப் பெறும் நோக்கில் மக்களிடம் நாங்கள் இவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்திருந்தோம் என்ற செய்தியைக் கூறுவதற்காகவே இவ்வாறான கருத்திதை தெரிவித்துள்ளதாக பார்க்க வேண்டியுள்ளது.

உண்மையில் இவர்கள் இதயசுத்தியுடன் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கா தீர்வு எட்டப்படவேண்டும் என்ற நிலை இருந்திருதால் இவர்கள் ஆரம்பகாலத்தில் இருந்தே இரண்டு கட்சிளுக்கும் ஆட்சி அமைக்கின்ற ஆதரவை கொடுத்தது போன்று, இவர்களுக்கான அந்த அழுத்தங்களையும் பிரயோகித்திருக்க வேண்டும்.

சம்பந்தர் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக இருந்போதும் கூட இந்த அழுத்தத்தை பிரயோகித்திருப்பதாக நான் எந்த ஒரு ஊடகத்திலும் அறியக்கூடியதாக இருக்கவில்லை. ஆனால் இந்த மூன்றுமாத காலத்திற்குள் ஜனாதிபதியோ பிரதமரோ எதனையும் செய்துவிடுவதற்கு வாய்ப்பேதும் இல்லை. விரும்பினால் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக கம்பரெலியா உதவித்திட்டத்தையும், வேலையற்றவர்களுக்கான வேலை வாய்ப்பினையும் இந்த மூன்று மாதகாலத்திற்குள் வழங்காலாம். 

ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று வருவதன் ஊடாகத்தான் எங்களுடைய பல பிரச்சினைகள் நில ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விடுதலை உட்பட பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டிய சூழலை கொண்டு வந்திருக்காலம்.  மேலும் வடக்கு மாகாண சபையில் இருந்போது இந்த வடமாகத்திற்குட்பட அமைச்சுக்களினுடைய பல பிரச்சினைகளை தன்னும் அல்லது அந்த வடக்கு மாகாணதுக்குரிய வரவேண்டிய நேரத்தில் வரவேண்டிய நிதிகளுக்குகூட அரசாங்கதிற்கு அழுத்தம் கொடுக்காதவர்கள் தான் இந்தக் கூட்டமைப்பினர். 

இப்பொழுது பிரதமருடைய ஆட்சிக் கவிழ்ப்பிற்கு துணைபோகாத காரணத்தினால் அவர்களுக்கு 50 மில்லியன் வரையான அபிவிருத்திக்கான நிதி வழங்குவதாக பேசப்பட்டிருந்தது. ஆனால் வடக்கு மாகாணத்துக்குரிய முன்னாள் மகளிர் விவகார அமைச்சராக நான் இருந்த காலத்தில் ஐந்து மாவட்டங்களுக்குமுரிய மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமுக சேவை, கூட்டுறவு, தொழில்துறை என்ற வகையில் அத்தனை பிரிவுக்குமே எங்களுகக்கு வழங்கப்பட்டது வெறும் 83 மில்லியன்.

வெறும் 83 மில்லியனை மாணகத்துக்குரிய அமைச்சிற்கு தந்து விட்டு, தன்னுடைய ஆட்சிக் கவிழ்ப்பிற்கு துணைபோகாத காரணத்தினால் 50 மில்லியன்வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடைய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது உண்மையில் வெளிப்படையான கூட்டமைப்பினுடைய வாக்குவங்கியை அதிகரிப்பதற்கான ஒரு இலஞ்சமே.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்மைப்பினர்  வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை, அழுத்தங்களைக்கூட நகர்த்த முடியாத நிலையில் நாங்கள் மாகாண சபையில் ஒரு தீர்வு திட்டத்தை எழுதினோம். இந்த தீர்வுத்திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் ஐயா இருந்தபோது அதைக் கையளித்தோம்.

அதேபோன்று சபாநாயகரிடமும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா கையளித்திருந்தார். ஆனால் அந்த தீர்வுத்திட்டம் எதுவுமே வராத நிலையில் இப்பொழுது இவர்கள் மக்களை ஏமாற்றுகின்ற செயலில் இந்த அழுத்தத்தை பாராளுமன்றத்தில் பிரயோகித்திருக்கின்றனர் என்றார்.

https://www.virakesari.lk/article/61283

On 7/26/2019 at 6:33 PM, ampanai said:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு  ஒரு நிபந்தனையில்லாத ஆதரைவ வழங்கிவிட்டு, தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்ற போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத காரணத்தினால் நாங்கள் உங்களுக்கு தருகின்ற ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடிய சூழல் ஒன்று உருவாகியிருக்கின்றது என சம்பந்த ஐயா பாராளுமன்றத்திலே கூறியிருப்பது, எதிர்வரும் தேர்தல் காலங்களில் தாங்கள் வாக்குப் பெறும் நோக்கில், மக்களிடம் நாங்கள் இவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்திருந்தோம் என்ற செய்தியைக் தெரிவிப்பதற்காகவே இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏமாற்றால் முயற்சியை அம்மையார் அப்பிடியே பிட்டுப்பிட்டு வைச்சிருக்கார்!

இதுக்கு மேலையும் மானம் ரோஷம் உள்ளதுகள் கூட்டமைப்பில இருக்காதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.