Jump to content

நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்!

Recommended Posts

Posted
2 hours ago, tulpen said:

தங்கள் புரிதலுக்கும் தொடர்ந்த  சிறப்பான கருத்துக்களுக்கும் நன்றி. பயணத்தில் இருப்பதால் wifi வசதி இல்லாததால் விரிவாக எழுத முடியவில்லை. 

இந்து மத நிகழ்வுகள் பற்றிய திரிகளில் தொடர்ந்து கடவுள், கோவில், இந்துக்களை மட்டம் தட்டி எழுதுவதன் மூலம் இந்துக்களின் வெறுப்பை சம்பாதிப்பதை விட உருப்படியாக எதையும் செய்ய முடியாது. வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் கோவில்களுடன் நேரத்தை செலவிடுவார்கள் என்று இன்னொரு திரியில் எழுதிய நீங்கள் இங்கு உங்களை சமூக விரும்பி போல் காட்டிக்கொள்ளும் நிலையில்.

தனது கருத்தை நியாயப்படுத்த பின் பார்ப்பனர்கள் பற்றிய விமர்சனத்தை அதற்குள் புகுத்துவது. (பார்ப்பனர்கள் பற்றி விமர்சனம் வைக்க வேறு திரிகள் உண்டு).

தமிழகத்திலுள்ள மக்களே பார்ப்பனர்கள் மீதான விமர்சனத்தை வைப்பவர்கள், இந்துத்துவாவை எதிர்ப்பவர்கள். ஆனால் திருவிழா, விசேட நிகழ்வுகளுக்கு கோவில்களுக்கு செல்பவர்கள். 

கடவுளை வைத்து பணம் உழைப்பவர்கள் என்றால் (உங்கள் மற்றும் மருதங்கேணி வார்த்தையில்) அது அனைத்து மதங்களிலும் தான் நடக்கிறது.

Lourdes இல் மாதா Bernadette என்பவருக்கு காட்சியளித்தார் என்று சொல்கிறார்கள். அதை நம்புபவர்கள் உள்ளார்கள். அவர்களை முட்டாள் கூட்டம் என்று யாரும் மட்டம் தட்டுவதில்லை.

கடவுளை வழிபடுவோருக்கு அதனால் மன நிம்மதி கிடைக்கிறது, அதனால் கோவில்களுக்கு செல்கிறார்கள்.

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/6/2019 at 3:13 PM, ஈழப்பிரியன் said:

நல்லதொரு சிந்தனை.
ஆனால் இதை எல்லா மதத்தினருமே செய்கிறார்கள்.
ஆனபடியால் நீங்கள் சொல்லுவது
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போலவே.

இதனை, இதமான குளிர்மையான ஒளி தரும் சந்திரனுக்கு ஒப்பிடுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை.

இந்திரனுக்கு ஒப்பிட்டு நாணிக் கோணி அருவருக்க வேண்டும். 

Posted
On 8/7/2019 at 1:27 AM, Maruthankerny said:

இந்து மதம் என்பதே பார்ப்பான சிந்தனைதான் 
இதுக்கும் தமிழனான எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை 

சிவனை கடவுள் என்று ஏற்பதிலும்  சிவன் + சக்தி இல் உலகம் இயங்குகிறது 
என்ற உண்மையை ஏற்பதிலும்  
தமிழர்களை வேல் கொண்டு காத்த மூத்த அரசன் முருகனை வணங்குவதிலும் 
எனக்கு முரண்பாடு இல்லை.

தமிழ் முருகனுக்கு சமஸ்கிரதம்தான் புரியும் என்ற வேதாந்தம்தான் 
பல வேதத்தாந்திகளை உருவாக்குகிறது.

சிவனை முழுமுதற்கடவுளாக வணங்குவது சைவம். முருகனை முழுமுதற்கடவுளாக வணங்குவது கௌமாரம். கௌமாரம் பின் சைவத்துடன் இணைக்கப்பட்டது.

அதே போல் பல மதங்கள் ஒன்றிணைந்து தான் இந்து மதம் உருவானது.

பிக்குகள் பௌத்தத்தை பரப்பியது போல் பிராமணர்கள் இந்து மதத்தை பரப்பினார்கள். அதனால் தான் சமஸ்கிருதத்தில் பூசை செய்கிறார்கள்.

பல தமிழர்கள் முருகனை வழிபட்டதால் முருகன் தமிழன் என்கிறார்கள். 

Posted

மதங்கள் இணைக்கப்படாமல் இருந்திருந்தால் அத்திவரதர் இப்ப வைணவ (வைஷ்ணவ) சமயத்தில் இருந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Athi varathar Darshan in Trichy also

ஒரே நேரத்தில் 2 அத்திவரதர்.. காஞ்சியில் ஒன்னு.. திருச்சியில் இன்னொன்னு.. மக்களுக்கு டபுள் சந்தோஷம்!

தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 2 அத்திவரதர் தரிசனம் தந்துள்ளார். இதனால் பக்தர்கள் ஏராளமான மகிழ்ச்சியில் உள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் சேவை தற்போது நடைபெற்று வருகிறது.

விடிகாலை 3 மணி முதலே கூட்டம் முண்டியக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் ஒருநாளைக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வருகிறார்கள்.

எத்தனையோ பேர், நெரிசல் காரணமாக அத்திவரதரை தரிசிக்க முடியாமல், கோயில் வரை சென்று ஊர் திரும்பும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, அத்திவரதரை தரிசிக்க இயலாதவர்களுக்கு திருச்சியில் அத்திவரதர் அருள்பாலிக்கிறார்.

ஆம்.. திருச்சி பெரிய கடை வீதியில் ஸ்ரீ கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் கோவில் ரொம்ப பிரசித்தி பெற்றது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.. இந்த கோயிலில்தான் அத்திவரதர் தரிசித்துள்ளார். கடந்த 3 நாட்களாக சயன கோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் இன்று முதல் வரும் 10ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நின்றகோலத்தில் அருள்பாலிக்க உள்ளார்.

இதனால் அத்திரவரதரை காண ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 2 அத்திவரதரின் தரிசனம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/trichirappalli/athi-varathar-darshan-in-trichy-also-359584.html

Posted
1 hour ago, Lara said:

சிவனை முழுமுதற்கடவுளாக வணங்குவது சைவம். முருகனை முழுமுதற்கடவுளாக வணங்குவது கௌமாரம். கௌமாரம் பின் சைவத்துடன் இணைக்கப்பட்டது.

அதே போல் பல மதங்கள் ஒன்றிணைந்து தான் இந்து மதம் உருவானது.

......

பல தமிழர்கள் முருகனை வழிபட்டதால் முருகன் தமிழன் என்கிறார்கள். 

தமிழர்கள் தொன்று தொட்டு சிவனையும் வழிபடுகிறார்கள். ஆனால் முருகனை தானே தமிழ் கடவுள் என்கிறோம், அது ஏன்?

தமிழர்கள் முருகனை வழிபட்டாலும் தம்மை கௌமாரிகள் என்று அடையாள படுத்தாமல் சைவர்கள் என்று அழைப்பதன் காரணம் என்ன?

1 hour ago, Lara said:

பிக்குகள் பௌத்தத்தை பரப்பியது போல் பிராமணர்கள் இந்து மதத்தை பரப்பினார்கள். அதனால் தான் சமஸ்கிருதத்தில் பூசை செய்கிறார்கள்.

பிக்குகள் பாளியிலா உலகெங்கும் பூசை செய்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Lara said:

இந்து மத நிகழ்வுகள் பற்றிய திரிகளில் தொடர்ந்து கடவுள், கோவில், இந்துக்களை மட்டம் தட்டி எழுதுவதன் மூலம் இந்துக்களின் வெறுப்பை சம்பாதிப்பதை விட உருப்படியாக எதையும் செய்ய முடியாது.

உண்மைகள் மறைக்க படும் வரைக்கும் .சொந்த புத்தி துருப்பிடித்து இருக்கும்வரைதான் அப்படி 
உங்கள் கருத்துப்படி நான் இப்போ துல்பன் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிக்கொண்டு 
நிற்கவேண்டும். தமிழகத்திலும் இப்போ சொந்த புத்தி இருக்கிறவன் 
இந்த அருவெறுப்புக்களை பார்க்க தொடங்கி இருக்கிறார்க்ள்.
மக்களை தொடர்ந்தும் வறுமையிலும் துன்பத்திலும் வைத்திருப்பதால் இந்துமதம் 
வாழ கூடியதாக இருக்கிறது. அடுத்த தலைமுறை கேள்வி கேட்க தொடக்கி இருப்பதால் 
யார் இவர்? என்ற அடிப்படை கேள்விக்கே விடை இல்லாத லூசு தனத்தை 
பின் பற்றுவதுக்கு பின்னடிக்க்கிறார்கள் .... இதை புலம்பெயர் ஈழத்தமிழரிடம் தெளிவாக காணலாம். 

வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் கோவில்களுடன் நேரத்தை செலவிடுவார்கள் என்று இன்னொரு திரியில் எழுதிய நீங்கள் இங்கு உங்களை சமூக விரும்பி போல் காட்டிக்கொள்ளும் நிலையில்.

உங்களின் கருத்து சரியாக புரியவில்லை?
கோவிலில் வேலை வெட்டி பார்க்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? 

தனது கருத்தை நியாயப்படுத்த பின் பார்ப்பனர்கள் பற்றிய விமர்சனத்தை அதற்குள் புகுத்துவது. (பார்ப்பனர்கள் பற்றி விமர்சனம் வைக்க வேறு திரிகள் உண்டு).

பார்ப்பான்தான் இந்த கேவலங்களின் சிருஷ்ட்டி 
பார்ப்பானை விட்டு விட்டு எப்படி இந்துமதம் பற்றி பேசுவது?

தமிழகத்திலுள்ள மக்களே பார்ப்பனர்கள் மீதான விமர்சனத்தை வைப்பவர்கள், இந்துத்துவாவை எதிர்ப்பவர்கள். ஆனால் திருவிழா, விசேட நிகழ்வுகளுக்கு கோவில்களுக்கு செல்பவர்கள். 

தெரிந்தோ தெரியாமலோ கண்ணை மூடிய கடவுள் பக்த்தியலோ 
இன்று தமிழகத்திலும் ஈழத்திலும் இருக்கும் கோவில்கள் எமது முன்னையோர்கள் 
கட்டியது அவர்கள் வேர்வை உழைப்பு அதில் உண்டு. பார்ப்பானின் கேவலங்களுக்காக 
தலை நிமிர்ந்து நிற்கும் நல்லூரையோ  மதுரை மீனாட்ச்சி அம்மன் கோவிலுக்கோ  கேதீஸ்வரத்துக்கோ 
நாம் போகாமல் இருக்க வேண்டும் என்று இல்லை. அங்குதான் எனது முன்னோரின் எச்சமும் உழைப்பும் மிஞ்சி இருக்கிறது .......... நான் போய்க்கொண்டுதான் இருக்கிறேன். பார்ப்பானின் கடவுளை தேடி அல்ல.
ஊர் திருவிழா தேர் என்பதெல்லாம் தமிழரின் பாரம்பரியம் இதுக்கும் பார்ப்பனனுக்கும் தொடர்பில்லை.
இடையில் வந்து அவன் அவற்றை ஆடடையை போட்டதுதான் வரலாறூ.

ஆண்மீகம் வேறு .... பார்ப்பானின் பித்தலாட்டம் வேறு 
நீங்கள்தான் இரண்டையும் ஒன்றாக போட்டு காப்பாற்ற துடிக்கிறீர்கள். 

கடவுளை வைத்து பணம் உழைப்பவர்கள் என்றால் (உங்கள் மற்றும் மருதங்கேணி வார்த்தையில்) அது அனைத்து மதங்களிலும் தான் நடக்கிறது.

இல்லை என்று யார் மறுக்கிறார்?
பார்ப்பனின் உழைப்பு வேண்டி தின்றுவிட்டு 
நீ சூத்திரன் என்று எமது சமூகத்துக்கு விரோதமாகவே போகிறதே 
உங்களுக்கு கண்னுக்கு தெரியவில்லையா? அல்லது நடிக்கிறீர்களா? 
இதுக்கும் மற்ற மதத்துக்கும் என்ன தொடர்பு காண்கிறீர்கள்?

Lourdes இல் மாதா Bernadette என்பவருக்கு காட்சியளித்தார் என்று சொல்கிறார்கள். அதை நம்புபவர்கள் உள்ளார்கள். அவர்களை முட்டாள் கூட்டம் என்று யாரும் மட்டம் தட்டுவதில்லை.

யாரும்? என்று நீங்கள் யாரை சொல்ல வருகிறீர்கள்?
மாதா என்று ஒருவர் இருந்தால் உலக மக்களுக்கு மாதாவாக இருக்க வேண்டும் 
பிரான்சின் ஒரு கிராமத்து ஆட்டு காரனுக்கு மாதவ இருப்பவர் .. அவருக்குத்தான் மாதா 
எனக்கு எப்படி மாதாவாக முடியும்? என்ற சொந்த புத்தி இல்லாதவன்   தனது மதம் புரியாதவன்தான் 
லூட்ஸுக்கு போவான். சாதாரண புத்தியில்  லூட்சிலே அருளை துறந்து பிடிக்கும் மாதா சேர்ச்சுக்களில் 
குண்டுபோட்டு மக்களை கொன்றபோது எங்குபோனார் என்றுதான் சிந்திக்கும். 

கடவுளை வழிபடுவோருக்கு அதனால் மன நிம்மதி கிடைக்கிறது, அதனால் கோவில்களுக்கு செல்கிறார்கள்.

பொன்னாலையில் அல்லேலூயா கூட்டம் போட்ட கோஸ்ட்டியும் 
போனவர்களும் அப்படித்தானே சொல்கிறார்கள் ... அந்த திரியில் உங்களுக்கும் மற்றவர்க்கும்  அப்படி எழுத வரவைல்லையே?  உண்மையான மன நிம்மதி இருப்பவன் வீட்டிலேயே கடவுளை காண்பான் 
இந்த காவடி ஆடும் கூட்டம் தன்னையும் ஏமாற்றி ஊரையும் ஏமாற்றுகிறதே தவிர .... உண்மையான மன நிம்ம்மதி அடைய முடியாது. இது பின்னாளில் மனநோயாகத்தான் வருகிறது இதனால்தான் சமூகம் கெடுகிறது.
சாயிபாபா  நித்தியானந்தா போன்ற கள்ள சாமியிடம் போகிறவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள் 
கஞ்சா பத்திவிட்டு  மாறி மாறி பாலியல் கொள்ளுமட்டும் நிம்மதியத்தான் தெரியும் ..... பின்பு இந்த சமூக விரோதிகள் சமூகத்துக்குள் நுழையும்போது பாலியல் துஸ்பிரயோகம்  மற்றும் ஏமாற்று வேலைகள் மட்டுமே அரங்கேறுகிறது. 
போகின்றவர்கள்ளை நாம் தடுக்கவில்லை .........
அப்பிடியே படி படியாக மன நிம்மதி அடைஞ்சு கையிலாசம் இமயமலை என்று போய்விடுங்கள் 
திரும்பி ஏமாந்த நிலையில் கடவுளாலும் எந்த துயரமும் தீர்க்க படாத ஏமாளிகளாக நீங்கள் சமூகத்து திரும்பும்போதுதான் ......... மனநோய் முத்திய நிலையில் சமூகத்துக்கு பாரமாகி அதை கெடுக்குறீர்கள். 

Posted
2 hours ago, Jude said:

தமிழர்கள் தொன்று தொட்டு சிவனையும் வழிபடுகிறார்கள். ஆனால் முருகனை தானே தமிழ் கடவுள் என்கிறோம், அது ஏன்?

தமிழர்கள் முருகனை வழிபட்டாலும் தம்மை கௌமாரிகள் என்று அடையாள படுத்தாமல் சைவர்கள் என்று அழைப்பதன் காரணம் என்ன?

பிக்குகள் பாளியிலா உலகெங்கும் பூசை செய்கிறார்கள்?

ஆதிகாலத் தமிழர்களிடையே முருக வழிபாடு இருந்து வந்துள்ளது என்பதால் முருகனை தமிழ் கடவுள் என்கிறார்கள். நான் அவ்வாறு எழுதியதில்லை. மருதங்கேணி முருகன் தமிழ் மன்னன் என்று எழுதியிருந்தார். அதற்கு தான் நான் பதில் எழுதியிருந்தேன்.

ஆரம்பத்தில் முருகனை வழிபட்டவர்கள் கௌமார சமயத்தவர்களாக தான் இருந்தார்கள். பின் கௌமாரம் சைவத்துடன் இணைக்கப்பட்டதால் சைவர்கள் என அழைக்கிறார்கள். இப்பொழுது சைவம் வேறு சமயங்களுடன் சேர்ந்து இந்து சமயமாகியதும் இந்துக்கள் என்ற பெயரை பயன்படுத்துவது போல்.

பிக்குகள் முன்பு பாளி மொழியில் தான் தொடர்புகளை பேணி வந்தார்கள், புத்த மதத்தை போதித்து வந்தார்கள், சம்பவங்களை குறித்து வைத்தார்கள். மகாவம்சமே பாளி மொழியில் தான் எழுதப்பட்டது. பாளி மொழியும் கலந்து தான் சிங்களமே உருவானது. இலங்கையில் பிக்குகள் வழிபாட்டு முறைக்கு என்ன மொழியை பயன்படுத்துகிறார்கள் என எனக்கு தெரியாது.

சில நாடுகளில் பாளி மொழியில் தான் “பண” சொல்கிறார்கள் என வாசித்திருக்கிறேன்.

இலங்கையில் தமிழர்கள் முன்பு தமிழ் பௌத்தர்களாக இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்ப இந்து, கிறிஸ்தவ தமிழர்களை பௌத்தர்களாக மாற சொல்வதா? 😀

தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இருந்தால் தமிழில் பூசை செய்யும் முறையை கொண்டு வரலாம்.

1 hour ago, Maruthankerny said:

பொன்னாலையில் அல்லேலூயா கூட்டம் போட்ட கோஸ்ட்டியும் 
போனவர்களும் அப்படித்தானே சொல்கிறார்கள் ... அந்த திரியில் உங்களுக்கும் மற்றவர்க்கும்  அப்படி எழுத வரவைல்லையே?  உண்மையான மன நிம்மதி இருப்பவன் வீட்டிலேயே கடவுளை காண்பான் 

கடவுளை வழிபடுவோருக்கு அதனால் மன நிம்மதி கிடைக்கிறது. அதனால் கோவிலுக்கு போகிறார்கள் என எழுதியிருந்தேன்.

பொன்னாலையில் அல்லேலூயா கூட்டம் மதம் மாற்ற போனது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் தமிழை படியுங்கள்.

கடவுள் இல்லை என்ற கொள்கையில் உள்ள உங்களுக்கு மக்கள் வீட்டில் கடவுளை கண்டாலென்ன கோவிலில் கண்டாலென்ன என்ன பிரச்சினை? 😀

Posted
59 minutes ago, Maruthankerny said:

உங்களின் கருத்து சரியாக புரியவில்லை?
கோவிலில் வேலை வெட்டி பார்க்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? 

வேலை வெட்டி உள்ளவர்களும் தான் கோவிலுக்கு செல்பவர்கள். உருவ வழிபாட்டு முறைக்காக செல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Lara said:

சிவனை முழுமுதற்கடவுளாக வணங்குவது சைவம். முருகனை முழுமுதற்கடவுளாக வணங்குவது கௌமாரம். கௌமாரம் பின் சைவத்துடன் இணைக்கப்பட்டது.

அதே போல் பல மதங்கள் ஒன்றிணைந்து தான் இந்து மதம் உருவானது.

பிக்குகள் பௌத்தத்தை பரப்பியது போல் பிராமணர்கள் இந்து மதத்தை பரப்பினார்கள். அதனால் தான் சமஸ்கிருதத்தில் பூசை செய்கிறார்கள்.

பல தமிழர்கள் முருகனை வழிபட்டதால் முருகன் தமிழன் என்கிறார்கள். 

ஒவ்வையார் தமிழில் எழுதியதால் 
பல தமிழர்கள் அவரை தமிழர் என்கிறார்கள் என்று நீங்கள் எழுதவில்லை என்று மகிழ்ச்சி. 

முருகன் எழுத்து ஆதாரங்களில் வாழும் ஓர் தமிழ் அரசன் 
அவரை தமிழன் என்கிறார்கள் எனும் உங்கள் திருப்பு புரியவில்லை. 

உலகமக்கள் எல்லோருக்குமே முதல் கடவுள் இடியும் மின்னலும்தான் 
இதற்கு விளக்கம் தெரியவில்லை தம்மை மீறி ஒரு ஆத்வேக சக்தி மேலே இருப்பதாக நம்பினார்கள் 
இங்கிருந்துதான் முதன் முதலில்  ஆறறிவை அடைந்த மனித மிருகத்துக்கு கடவுள் அறிமுகமாக்கினார். 
தமிழர்கள் மூத்த நாகரிகம் அடைந்தவர்கள் என்பதால்  இந்த கடவுள் பற்றிய அறிவை மேம்படுத்தினார்கள் 
அதில் சமணம் பிறந்து இருக்கிறது ... எமது உயிர் எங்கிருந்து வருகிறது? எங்கு போகிறது? இடையில் இந்த வாழ்வில் எம்மை ஒருவன் படைத்து   இருந்தால் அவனின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்? என்ற கேள்விகளுடன்தான் சமணம் பிறந்திருக்க சாத்தியம் ...... இது குடும்ப வாழ்வை பற்றியதாக இருக்கவில்லை 
உங்கள் தனிப்பட்ட வாழ்வு உயிர் சம்பந்தமாக இருந்தது..... புத்தர் ஒரு சமண துறவி எனபதால் புத்தமும் இதை தழுவியே வந்தது. ஆதலால் பின்னாளில் குடும்ப சமூக வாழ்வோடு ஒவ்வகூடியதாக சைவம் பிறந்து இருக்கிறது  இது கி.மு 3000-4000 ஆண்டாக இருக்கலாம்  ........ 

அதன் பின்பு வந்தது எல்லாம் அதைவைத்து மக்களை ஏய்த்து பிழைக்க பார்ப்பான் உருவாக்கிய 
கேவலம்கள்தான் எமது முன்னையோர் தமது வாழ்வையே அர்ப்பணித்து நட்ச்சத்திர அசைவுகளை வைத்து எழுதிய  ஜோதிகள்பற்றிய அறிவுகளை திருடி ஜோதிடம் என்று ஆக்கி ஏமாற்றினான். பொய் புராண புரட்டுக்களை  உருவாக்கி தான்தான் தேவஜாதி என்றான். எமது முன்னையோர் அணுவையும் அதன் அசைவையும்  வைத்து படைத்த சிவன் + சக்தியை   திருடி மீதி பொய்களை புனைந்தான். இஸ்லாமியர்களின்  முகமது நபியின்  கிருமிகள் நுண்ணணுங்கிகள் பற்றிய அறிவை படித்து  தீட்டு புண்ணியம் என்று  புனைந்தான். இந்தியாவில்  1000 வருட காலத்தில் கட்டபட்ட பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உண்டு  எதாவது ஒன்றை  பிராமணன் கட்டி இருக்கிறாரானா? எல்லாவற்றையும் ஆடையை போட்ட்துதான் வரலாறு. 

Posted
10 minutes ago, Maruthankerny said:

முருகன் எழுத்து ஆதாரங்களில் வாழும் ஓர் தமிழ் அரசன் 
அவரை தமிழன் என்கிறார்கள் எனும் உங்கள் திருப்பு புரியவில்லை. 

ஆதி தமிழர்களிடையே முருக வழிபாடு வெவ்வேறு வழிகளில் இருந்தது.

பின்னைய முருக வழிபாடு வேறுபட்டது.

அதில் ஒன்று தான் முருகன் மன்னன் என்பது.

10 minutes ago, Maruthankerny said:

ஒவ்வையார் தமிழில் எழுதியதால் 
பல தமிழர்கள் அவரை தமிழர் என்கிறார்கள் என்று நீங்கள் எழுதவில்லை என்று மகிழ்ச்சி. 

முருகன் தமிழ் மன்னன் என நீங்கள் எழுதியதற்கு, தமிழர்கள் பலர் முருகனை வழிபட்டதால் முருகன் தமிழன் என்கிறார்கள் என பதிலளித்தேன்.

முருகன் தமிழனா இல்லையா என்ற ஆராய்சிக்குள் நான் செல்லவில்லை. தமிழர்களிடையே இருந்த முருக வழிபாட்டு முறை பின் ஏனையோரின் முருக வழிபாட்டு முறையுடன் கலந்து மாற்றப்பட்டது என்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/5/2019 at 9:24 PM, Lara said:

இது என்ன IKEA இல் விற்கும் தளபாடங்கள் போல் என்று நினைச்சிட்டீங்களோ? 😀

பிரான்ஸிலுள்ள Lourdes க்கு ஒரு வருடத்திலேயே பல மில்லியன் சனம் போறது. அவர்களுக்கு நல்ல பணம் வருவாயாக கிடைக்கிறது. 

அப்பகுதியே ஒரே விற்பனைப்பொருட்கள் நிறைந்து business மயமாக காட்சியளிக்கும்.

பலர் அங்கு bath எடுத்தால் தமது நோய்கள் குணமாகும், புனிதமாவார்கள் என்றெல்லாம் நினைத்து கியூவில் நின்று அதையும் செய்வார்கள்.

எமது பிரான்ஸ் வாழ் கிறிஸ்தவ ஈழத்தமிழர்கள் பலரும் நேர்த்தி வைச்சிட்டு வேற lourdes க்கு போறவை.

நீங்கள் சுவிஸில் வசிப்பவர் என்று profile இல் பார்த்தேன். உங்களுக்கு இவை பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கலாம்.

பக்தர்கள் முட்டாள்கள் என்றால் உலகமே முட்டாள்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. அனைவருக்கும் பாடம் எடுக்கப்போகிறீர்களா?

பிரான்ஸிலுள்ள Lourdes க்கு சனம்  போவது  பற்றி விரிவாக  எழுதலாம்  என நினைக்கின்றேன்

நேரம் தான்  கிடைக்குதில்லை

Posted
27 minutes ago, விசுகு said:

பிரான்ஸிலுள்ள Lourdes க்கு சனம்  போவது  பற்றி விரிவாக  எழுதலாம்  என நினைக்கின்றேன்

நேரம் தான்  கிடைக்குதில்லை

நேரமொதுக்கி எழுதுங்கள். எனது கத்தோலிக்க நண்பர்கள் ஒவ்வொரு வருடமும் சென்று வருவார்கள்.

நான் சில வருடங்களுக்கு முன் ஒரு முறை அவர்களுடன் சென்றிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்பந்தம் முடிச்சு கதைப்பது போல அத்திவரதரில் தொடங்கி, முருகன் தமிழ்க் கடவுளா என்று போய் லூர்ட்ஸ் மாதாவின் அருளைப் பெறும் வழிவகைகளில் வந்து நிற்கின்றது. 😫

நான் பின்பற்றும் கம்யூனிச மதத்தைத்தான் அத்திவரதரும் பின்பற்றுகின்றார் என்று நினைக்கின்றேன். 😂 சதிக்கோட்பாட்டாளர்கள் அதைத் தவறு என்று திரியை நீட்டிமுழக்காமல் ஒத்துக்கொள்ளவேண்டும்😱😜

Posted
31 minutes ago, கிருபன் said:

விஷ்ணுவின் சயன நிலையை குறிப்பதற்காக அத்திவரதரை சயன நிலையில் வைத்தார்கள். நின்ற நிலையை குறிப்பதற்காக நின்ற நிலையில் வைத்தார்கள். அதை மட்டம் தட்டி எழுதப்பட்ட கருத்தால் திரி நீண்டு விட்டது.

மருதங்கேணி அவர்கள் முருகன் தமிழ் மன்னன் என எழுதியதால் அது பற்றி எழுதப்பட்டது.

இப்ப Lourdes க்கு “சனம் போவது” பற்றி தானே விசுகு அவர்கள் எழுதலாம் என கூறினார். 

நீங்களும் உங்கள் பங்குக்கு கம்யூனிஸம், சதிக்கோட்பாளர்கள் என்று மேலும் புகுத்தி விட்டு தான் செல்கிறீர்கள். 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Lara said:

ஆதி தமிழர்களிடையே முருக வழிபாடு வெவ்வேறு வழிகளில் இருந்தது.

பின்னைய முருக வழிபாடு வேறுபட்டது.

அதில் ஒன்று தான் முருகன் மன்னன் என்பது.

முருகன் தமிழ் மன்னன் என நீங்கள் எழுதியதற்கு, தமிழர்கள் பலர் முருகனை வழிபட்டதால் முருகன் தமிழன் என்கிறார்கள் என பதிலளித்தேன்.

முருகன் தமிழனா இல்லையா என்ற ஆராய்சிக்குள் நான் செல்லவில்லை. தமிழர்களிடையே இருந்த முருக வழிபாட்டு முறை பின் ஏனையோரின் முருக வழிபாட்டு முறையுடன் கலந்து மாற்றப்பட்டது என்பதால்.

தமிழர்களை தவிர்த்து யார் முருகனை வழிபடுகிறார்கள் என்று உங்களால் எழுத முடியுமா?
அறிய ஆவல். 
இப்போதைய முருகன் அப்போதைய முருகன் என்று ஒன்றும் இல்லை 
கி.மு 3500 ஆண்டளவில் தான் சைவம் இருந்து இருக்கிறது அதன் பின்புதான் முருக வழிபாடு இருக்கிறது 
கந்தபுராணம் வாசித்துப்பாருங்கள் 
முருகன் ஒரு மன்னன் என்பது அதில் தெளிவாக இருக்கிறது. பின்னாளில் அதிதீவிர கடவுள் ஆக்கினார்கள் 
என்பதுதான் உண்மை.
ஒவ்வை மன்னன் பற்றி எழுதுகிறார் 
அப்போதைய அரசனின் மகன் சிறுவனாகவும் இருந்து இருக்கிறான் ....... அவன் வளர்ந்துதான் வள்ளியை மணம் முடித்து இருக்க நிறைய சாத்தியம் உண்டு ....... பின்பு முருகனுக்கு இரண்டு மனைவி என்று இவர்கள் திரித்து வைத்திருக்கிறார்கள். 

32 minutes ago, Lara said:

விஷ்ணுவின் சயன நிலையை குறிப்பதற்காக அத்திவரதரை சயன நிலையில் வைத்தார்கள். நின்ற நிலையை குறிப்பதற்காக நின்ற நிலையில் வைத்தார்கள். அதை மட்டம் தட்டி எழுதப்பட்ட கருத்தால் திரி நீண்டு விட்டது.

இதில் மட்டம் தட்ட என்ன இருக்கு?
படுத்தி வைத்த சிலையை நிமிர்த்தி வைத்துவிட்டு இழிவிலும் இழிவாக 
40 வருடத்துக்கு ஒருமுறைதான் நிமுருவார்   சொறிவார் என்று கடவுளை 
அவர்களி விட வேறு யாராலும் மட்டம் தட்ட முடியுமா? என்று நீங்கள்தான் எழுத வேண்டும். 

இந்த கேவலமான பித்தலாட்டத்தை ஆறறிவு உள்ள எவனும் பார்த்தால் சிரிப்புதான் வரும்.
இதில் இறை பக்தி வந்தால் ..... அவர்கள் சமூகத்துக்கு தீங்கானவர்கள் என்பது  திண்ணம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Maruthankerny said:

தமிழர்களை தவிர்த்து யார் முருகனை வழிபடுகிறார்கள் என்று உங்களால் எழுத முடியுமா?
அறிய ஆவல். 
இப்போதைய முருகன் அப்போதைய முருகன் என்று ஒன்றும் இல்லை 
கி.மு 3500 ஆண்டளவில் தான் சைவம் இருந்து இருக்கிறது அதன் பின்புதான் முருக வழிபாடு இருக்கிறது 

வால்காவில் இருந்து கங்கைவரை என்ற நூலில் முருகன் முன்னர் மன்னராக இருந்தவர் என்றுதான் உள்ளது. 

சிவனுக்கு அசோக சுந்தரி என்று ஒரு மகள் இருக்கின்றார் தெரியுமா?

யாழ் கள சதிக்கோட்பாளர் சரியாக அவரை உரித்து வைத்தமாதிரி என்று ஒரு பக்ஷ்சி சொல்கின்றது😂

30226850_824407701095812_614492059321286

Posted
3 hours ago, Maruthankerny said:

மிழர்களை தவிர்த்து யார் முருகனை வழிபடுகிறார்கள் என்று உங்களால் எழுத முடியுமா?
அறிய ஆவல். 
இப்போதைய முருகன் அப்போதைய முருகன் என்று ஒன்றும் இல்லை 
கி.மு 3500 ஆண்டளவில் தான் சைவம் இருந்து இருக்கிறது அதன் பின்புதான் முருக வழிபாடு இருக்கிறது 
கந்தபுராணம் வாசித்துப்பாருங்கள் 
முருகன் ஒரு மன்னன் என்பது அதில் தெளிவாக இருக்கிறது. பின்னாளில் அதிதீவிர கடவுள் ஆக்கினார்கள் 
என்பதுதான் உண்மை.
ஒவ்வை மன்னன் பற்றி எழுதுகிறார் 
அப்போதைய அரசனின் மகன் சிறுவனாகவும் இருந்து இருக்கிறான் ....... அவன் வளர்ந்துதான் வள்ளியை மணம் முடித்து இருக்க நிறைய சாத்தியம் உண்டு ....... பின்பு முருகனுக்கு இரண்டு மனைவி என்று இவர்கள் திரித்து வைத்திருக்கிறார்கள். 

ஆதிகால தமிழர்களின் முருக வழிபாடு என்பது வெவ்வேறு வழிகளில் இடம்பெற்றது.

மூதாதையோரை வணங்கிய மக்கள் அவர்கள் இறந்ததும் நடுகல் நாட்டி வணங்கியதும் போர் வீரர்கள் இறந்ததும் நடுகல் நாட்டி வணங்கியதும் முருக வழிபாடாக இருந்தது.

அதே போல் சூரிய வழிபாடும் மருவி முருக வழிபாடாக கடைப்பிடிக்கப்பட்டது.

வேட்டையாடியோர் வேலை வழிபட்டு வந்த முறையும் முருக வழிபாடாக இருந்தது.

பின்னர் குறிஞ்சி நில கடவுளான முருகுவை (சேயோன்) முருகனாக வழிபட ஆரம்பித்தார்கள்.

பின் ஆரியர்கள் தமிழர்களின் முருக வழிபாட்டுடன் ரிக் வேதத்திலுள்ள ஸ்கந்தா என்பதை புகுத்தி முருக வழிபாட்டை பரப்பினார்கள். குப்தர் காலத்தில் இந்தியா முழுதும் பரவியிருந்த முருக வழிபாடு குப்தப்பேரரச வீழ்ச்சியின் போது இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வீழ்ச்சியடைந்து தமிழர் பகுதிகளில் நிலை கொண்டது.

ஸ்கந்த புராண என்பது ஆரியர்களால் எழுதப்பட்டு தமிழில் கந்த புராணமாக மொழிபெயர்க்கப்பட்டது.

பௌத்த சமயத்தை பின்பற்றுவோரும் முருகனை ஒரு கடவுளாக வணங்குபவர்கள். இலங்கை, சீனா போன்ற நாடுகளிலேயே முருகனை பௌத்தர்கள் ஒரு கடவுளாக வைத்திருக்கிறார்கள்.

Posted
15 hours ago, கிருபன் said:

வால்காவில் இருந்து கங்கைவரை என்ற நூலில் முருகன் முன்னர் மன்னராக இருந்தவர் என்றுதான் உள்ளது. 

சிவனுக்கு அசோக சுந்தரி என்று ஒரு மகள் இருக்கின்றார் தெரியுமா?

யாழ் கள சதிக்கோட்பாளர் சரியாக அவரை உரித்து வைத்தமாதிரி என்று ஒரு பக்ஷ்சி சொல்கின்றது😂

30226850_824407701095812_614492059321286

சிவனுக்கு இப்படி ஒரு மகள் எப்போது பிறந்தார். இவ்வளவு காலம் ஏன் மறைத்து வைத்திருந்தார்கள். இன்னும் சில காலத்தில் அந்த குழந்தை பாரவதிக்கு பிறக்கவில்லை என்றும் வரும். எல்லாம் கற்பனை தானே.  இன்னும் பிள்ளைகள் இருந்தால் அதற்கும் கோவில் கட்டி துதிபாடி நேரத்தை விரயம் செய்யலாம்.  

Posted
46 minutes ago, tulpen said:

சிவனுக்கு இப்படி ஒரு மகள் எப்போது பிறந்தார். இவ்வளவு காலம் ஏன் மறைத்து வைத்திருந்தார்கள். இன்னும் சில காலத்தில் அந்த குழந்தை பாரவதிக்கு பிறக்கவில்லை என்றும் வரும். எல்லாம் கற்பனை தானே.  இன்னும் பிள்ளைகள் இருந்தால் அதற்கும் கோவில் கட்டி துதிபாடி நேரத்தை விரயம் செய்யலாம்.  

சிவனுக்கும் பார்வதிக்கும் அசோக சுந்தரி என்ற மகள் இருந்ததாக பத்மபுராணத்தில் கூறப்பட்டிருக்கிறது என வாசித்திருக்கிறேன். குஜராத்தில் அசோக சுந்தரியை வழிபடுவார்கள், ஏனைய பகுதிகளிலுள்ள மக்கள் அது பற்றி அறிந்தது குறைவு. இப்ப குஜராத்துக்கும் போய் பிரச்சாரம் செய்யப்போகிறீர்களா? 😀

Posted
38 minutes ago, Lara said:

இதற்கெல்லாம் பிரச்சாரம் தேவையில்லை லாறா. மக்களின் சிந்திக்கும் அறிவுத் திறனை வளர்த்தாலே போதுமானது. 

Posted
15 minutes ago, tulpen said:

இதற்கெல்லாம் பிரச்சாரம் தேவையில்லை லாறா. மக்களின் சிந்திக்கும் அறிவுத் திறனை வளர்த்தாலே போதுமானது. 

புராணங்கள், இதிகாசங்கள், வரலாறுகள் கற்பனைகளுடன் கலந்து எழுதப்பட்டுள்ளது என்பது கடவுளை வணங்கும் பலருக்கு தெரிந்த விடயம் தான்.

சைவம் - சிவன்

கௌமாரம் - முருகன்

காணபத்தியம் - பிள்ளையார்

இவை இணைக்கப்பட்ட போது தான் முருகன், பிள்ளையார் சிவனின் பிள்ளைகளானர்.

குஜராத்தில், வங்காளத்தில் விரத கதைகள் மூலம் பரவலாக அறியப்பட்ட தேவதை அசோக சுந்தரி என கூறுகிறார்கள். அதனால் அவரை வழிபடும் முறை அங்கு இருக்கிறது என நினைக்கிறேன்.

அவரையும் பின்னர் சிவன் - பார்வதி பிள்ளையாக்கியிருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Lara said:

சிவனுக்கும் பார்வதிக்கும் அசோக சுந்தரி என்ற மகள் இருந்ததாக பத்மபுராணத்தில் கூறப்பட்டிருக்கிறது என வாசித்திருக்கிறேன். 

நேற்றுத்தானே வாசித்தீர்கள்😂🤣

கூகிளைத் தட்டினால் எல்லாம் கிடைக்கும். குப்பையா குண்டுமணியா என்று யாருக்குத் தெரியும்? 😜

Posted
1 hour ago, கிருபன் said:

நேற்றுத்தானே வாசித்தீர்கள்😂🤣

கூகிளைத் தட்டினால் எல்லாம் கிடைக்கும். குப்பையா குண்டுமணியா என்று யாருக்குத் தெரியும்? 😜

முன்னரே அசோக சுந்தரி பற்றிய செய்திகள் பகிரப்பட்டிருக்கிறது. தினமலரில் வாசித்தேன்.

உங்கள் கண்ணில் இப்பொழுது தான் பட்டிருக்கிறதென்றால் மற்றவர்களையும் அப்படி நினைப்பதா? 😀

பத்ம புராணத்தை வாசித்து விட்டு அதில் அசோக சுந்தரி பற்றி இல்லாவிட்டால் அச்செய்தியை குப்பை என கூறுங்கள். 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Lara said:

உங்கள் கண்ணில் இப்பொழுது தான் பட்டிருக்கிறதென்றால் மற்றவர்களையும் அப்படி நினைப்பதா? 

நம்ம யாழ் கள சாத்திரியாரின், உங்களுக்கும் அவரை நல்லாத் தெரிந்திருக்கும், முகநூலில்தான் பார்த்தேன். எனக்கு கண்ட கண்ட புராணங்களை வாசித்து மூளையைப் பழுதாக்க விருப்பமில்லை😂🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.