Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் பெண் வைத்தியர் வெளிநாட்டில் மானத்தை இழந்தார்!!

Featured Replies

சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவரே தன்னை அச்சுறுத்தி பாலியல் உறவு கொள்ள வைத்ததாக கனடாவில் மருத்துவராகப் பணிபுரிந்து மருத்துவ உரிமத்தை இழந்த யாழ் பெண் வைத்தியர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணாண வைத்தியரே கனடாவில் குடியிருக்கிறார்.

அங்கு மருத்துவ பட்டம் பெற்று, ரொறொன்ரோ மருத்துவமனையில் கடமையாற்றி வந்தார்.

இதன்போது, புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டிற்கு இலக்கானார்.

அது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. நீண்ட மௌனத்தின் பின்னர், தன்மீதான குற்றச்சாட்டை வைத்தியர் மறுத்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

“சிகிச்சைக்காக வந்த ஒருவர் என்னை மிரட்டினார். ஆபாச செல்பிக்களை அனுப்பச் சொன்னார். குறுஞ்செய்திகளை மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே பாலியல் உறவு கொள்ள வைத்தார்” என்று புற்றுநோய் மருத்துவர் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.

வைத்தியருக்கு தற்போது 37 வயதாகிறது. புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நிபுணராக செயற்பட்டு வருகிறார்.

2010 முதல் மருத்துவராக பணியாற்றும் இலங்கையரிடம் சிகிச்சை பெற கடந்த 2015 ஆம் ஆண்டு நோயாளி ஒருவர் சென்றார். .

அந்த நோயாளிக்கு புற்றுநோய் தாக்கம் இருந்தது சோதனைகளில் தெரிய வந்தது. அன்று முதலே இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர் என்றும் வெளியில் சுற்றியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர் என்றும் புற்று நோய்க்கு தீபா சிகிச்சை அளித்தார் என்றும் கூறப்பட்டது.

2015 ஆம் ஜனவரி முதல் 2016 மார்ச் வரை 23 முறை சிகிச்சை அளித்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் திடீரென தான் சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் பட்டியலில் இருந்த அந்த நோயாளியின் பெயரை வைத்தியர் நீக்கினார்.

அதன்பின்னர்தான் விதி வைத்தியரின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது.

தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் என்றும், சிகிச்சைக்கு வந்த போது தன்னுடன் உறவு கொண்டார் என்றும் வைத்தியர் மீது அந்த நோயாளி குற்றச்சாட்டை முன் வைத்தார்.

தன்னை கைவிட்டு விட்டதாகவும் வேறொரு நபரை காதலிப்பதாக கூறிய அவர் தன்னை நோயாளிகள் பட்டியலில் இருந்தே நீக்கிவிட்டதாகவும் கூறினார்.

மருத்துவதுறை குற்றச்சாட்டுக்களை ஆராயும் College of Physicians and Surgeons இல் வைத்தியர் மீது முறைப்பாடு அளித்த அந்த நோயாளி, “நான் உடல் ரீதியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன்.

ஒரு முக்கியமான உறவு இழப்பு என்னை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. வைத்தியர் என்னை விட்டு விலகியதோடு மட்டுமல்லாமல் எனக்கு சிகிக்சை அளிக்கவும் மறுத்து விட்டார்” எனவும் தனது தரப்பிலான முறைப்பாட்டை அறிக்கையாக சமர்பித்தார்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது வைத்தியர் மௌனமாகவே இருந்தார். பதில் எதுவும் கூறவில்லை.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வைத்தியரின் மருத்துவ உரிமம் இரத்துச் செய்யப்பட்டதோடு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து கனடாவில் இவர் மருத்துவராக சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆறு மாதங்கள் கழித்து மருத்துவர் தனது தரப்பு நியாயத்தினை முன் வைத்துள்ளார். அதாவது “நடந்த சம்பவத்தில் தான் குற்றவாளி அல்ல என்றும் பாதிக்கப்பட்டவரே நான் தான்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னை உணர்வு ரீதியாக கட்டுப்படுத்தி அந்த நோயாளி பயன்படுத்திக்கொண்டார் என்றும் ஆபாச செல்பிக்களை மிரட்டி அனுப்ப வைத்தார் என்றும் முறையிட்டுள்ளார்.

குறித்த நோயாளி தன்னுடன் உறவு கொள்ளாவிட்டால் தான் அனுப்பிய குறுச்செய்திகள், ஔிப்படங்களை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி விடுவதாகவும் தான் அச்சுறுத்தப்பட்டதாகவும் வைத்தியர் கூறியுள்ளார்.

அவமானத்தினால் தான் கூனி குறுகிப்போய் நின்றதால்தான் பேசமுடியவில்லை என்றும் தனது தரப்பு நியாயத்தையும் நீதிமன்றம் கேட்கவேண்டும் என்றும் வைத்தியர் முறையிட்டுள்ளார்.

http://www.vannibbc.com/archives/12781

 

Theepa Sundaralingam, 37, also ordered to pay $16K for man's therapy

Posted: Jan 23, 2019 6:20 PM ET | Last Updated: January 23

"Your actions are abhorrent and reprehensible. Even if revocation was not mandatory, the committee would have made such an order," one of the panel members said.

In a statement, the Scarborough Health Network of which Rouge Valley is a part, said it "is committed to ensuring the health and safety of all our patients. We will move forward in accordance with the decision of the College of Physicians and Surgeons of Ontario."

https://www.cbc.ca/news/canada/toronto/doctor-license-relationsip-theepa-sundaralingam-1.4990346

  • கருத்துக்கள உறவுகள்

 

மிக மோசமான பிற்போக்குத்தனமான தலைப்பு போட்டுள்ளார்கள். அத்துடன் பழைய செய்தியும் ஆகும்.

இதனால் தான் அநாமதேய தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதை தவிர்க்குமாறு நாம் கேட்பது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அன்பான கெட்டிக்கார புற்றுநோய் வைத்தியர். எனது அம்மாவின் குடும்ப வைத்தியரும் ஆவார் . மிக இள  வயதிலேயே கான்செர் வைத்தியத்தில் சிறப்பு பட்டம் வாங்கியவர். ஈழத்து முதியவர்களை மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் சிகிச்சை அளிப்பவர் . எமது அம்மா தான் வயதுபோன கிழவி என்று சொல்ல விடவே மாட்டார். மனதில் இளமையாக வாழும்வரை வாழ வேண்டும் என்று உற்சாகப்படுத்துவார். எமக்கு அவவுக்கு இப்படி நடந்து விட்டதே என்று நினைத்து மிகவும் கவலை. இந்த செய்தி உண்மையென்றால் செய்தது முற்றும் பிழை. ஆனால் அந்த நோயாளி வேண்டுமென்றே பழி வாங்கிவிட்டார். இந்த பதிவை போட்டவர் இந்தமாதிரி விடயங்களை பகிரும்போது நன்றாக ஆராய்ந்து  போடவேண்டும். நிழலி  சொன்னமாதிரி இது பழங்கதை.நல்ல ஒரு வைத்தியரை கனடா இழந்து விட்டது.

 

Edited by nilmini

  • தொடங்கியவர்

இதை ஏன் அநாமதேய தளம் என நிர்வாகம் குறிப்பிடுகின்றது என தெரியவில்லை. இதன் ' தகுதி ' என்ன என்பது விவாதிக்கலாம், அது தனி மனித உரிமை, சுதந்திரம்.  ஆனால் இதுவும் தளம் 🙂 

செய்தி பழமை என இணைத்த ஆங்கில பதிவில் திகதியையும் இணைத்திருந்தேன்.  

 

  • தொடங்கியவர்

அப்படியானால் ஏன் இணைத்தேன் என கேட்பவர்களுக்கு ஒரு விளக்கம். 
- இந்த வைத்தியரின் 'லைசன்ஸ்' விசாரணைகளை தொடர்ந்து பறிக்கப்பட்டுள்ளது  (https://doctors.cpso.on.ca/?search=general
- கனடா மாதிரி ஒரு நாட்டில் ஒரு முழுமையான விசாரணை நடந்தே இது தீரும் 

- பொதுவாக ஆண்கள் தான் இப்படியான குற்றத்திற்கு ஆளாக்குவார்கள், இதில் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லை என்பதும் சமூகமாக ஏற்கப்பட வேண்டியது  
- இரு ஒரு சமூகம் சார்ந்த குறிப்பு 
- எந்த சமுதாயத்திலும் வைத்தியர்வகள் ஒரு மரியாதைக்கு உரியவர்கள் 
- அவர்கள் சமுதாயத்தில் அந்த மரியாதைக்கு உரிய மதிப்பை பேண வேண்டும் 
- தாயகத்தில் கூட இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் , ஆனால் அவை வெளியில் வரமாட்டா, காரணம் வைத்தியருக்கு எதிராக குற்றம் சொல்ல மக்கள் காட்டும் தயக்கம் 
- புலம்பெயர் நாடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பது பெற்றோரும் வைத்தியரும் மட்டுமே உங்களின் அனுமதியுடன் உங்களை தொடலாம் என்பது 
- அதை எமது பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும் 

ஆக, இது தனிப்பட்டவர், தமிழர், பெண் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்காமல் ஒரு சமூகத்திற்கு ஆரோக்கியமான செய்தியாக பார்க்கவேண்டும் என்பதே எனது கருத்து  


 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

மிக மோசமான பிற்போக்குத்தனமான தலைப்பு போட்டுள்ளார்கள்

நிழலி நீங்கள் கூறியது மிகவும் சரியே.. தமிழில் எத்தனையோ அர்த்தமிக்க சொற்கள் இருக்கும் போது இந்த மாதிரி பிற்போக்குத்தனமான தலைப்புகளும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் காலை வாருவதுமே அதிகமாக உள்ளது..

சில தலைப்புகளையும், கருத்தாடல்களையும் வாசிக்கும் போது “ இது தேவையா?, இந்த செய்திகளை பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அவர்களது குடும்பத்தவரோ வாசிக்கும் போது அவர்களின் மன உணர்வுகளை பற்றி சிந்திப்பதில்லையா? “ என நினைப்பதுண்டு.

சில  உணரச்சிமிக்க விடயங்களை பகிரும் போது பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்பது எனது அபிப்பிராயம். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

மிகவும் அன்பான கெட்டிக்கார புற்றுநோய் வைத்தியர். எனது அம்மாவின் குடும்ப வைத்தியரும் ஆவார் . மிக இள  வயதிலேயே கான்செர் வைத்தியத்தில் சிறப்பு பட்டம் வாங்கியவர். ஈழத்து முதியவர்களை மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் சிகிச்சை அளிப்பவர் . எமது அம்மா தான் வயதுபோன கிழவி என்று சொல்ல விடவே மாட்டார். மனதில் இளமையாக வாழும்வரை வாழ வேண்டும் என்று உற்சாகப்படுத்துவார். எமக்கு அவவுக்கு இப்படி நடந்து விட்டதே என்று நினைத்து மிகவும் கவலை. இந்த செய்தி உண்மையென்றால் செய்தது முற்றும் பிழை. ஆனால் அந்த நோயாளி வேண்டுமென்றே பழி வாங்கிவிட்டார். இந்த பதிவை போட்டவர் இந்தமாதிரி விடயங்களை பகிரும்போது நன்றாக ஆராய்ந்து  போடவேண்டும். நிழலி  சொன்னமாதிரி இது பழங்கதை.நல்ல ஒரு வைத்தியரை கனடா இழந்து விட்டது.

 

இது சார்ந்த பழைய திரியிலும் எழுதி இருந்தேன் 
இவரது வக்கீல் வெறும் லூசு 
இவருடைய கேஸை ரெசேர்ச் அண்ட் ஸ்டடி என்று மாற்றி இருக்க வேண்டும். 

அவர்களிடம் ஆதரங்கள் இருக்கும் என்பதும் சுலபமகாக எடுக்க முடியும் என்பதும் 
தெரிந்திருக்க வேண்டும் 
ஆகவே அந்த ஆதாரங்கள் அங்கு இருப்பதை வைத்துக்கொண்டே இவர்கள் வாதத்தை முன்வைக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

புலம்பெயர் நாடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பது பெற்றோரும் வைத்தியரும் மட்டுமே உங்களின் அனுமதியுடன் உங்களை தொடலாம் என்பது 
- அதை எமது பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும் 

இந்த கருத்து சரியா?

பிள்ளைகளுக்கு நல்ல தொடுகை கெட்ட தொடுகை  பற்றித்தான் கற்பிக்கிறார்கள்..அத்துடன் உங்களின் அனுமதியுடன் வைத்தியரும் பரிசோதனை செய்யலாம் என்று சொல்வார்கள்.

அப்பொழுதான் பிள்ளைகளுக்கு அது சரியா தவறா என தெரியவரும் இல்லாவிட்டால் பிள்ளைகளின் அனுமதியுடன் வைத்தியரும் தொடலாம் என்றால், சில தவறான எண்ணங்களை உடைய வைத்தியர்களுக்கு இலகுவாகிவிடும்.

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • தொடங்கியவர்

"இந்த கருத்து சரியா?"

கனடாவில் முதலாம் வகுப்பில் ஆரம்பிக்கின்றது பாலியல் உறவு பற்றிய கல்வி 🙂  https://www.ontario.ca/page/sex-education-ontario

 

"பிள்ளைகளுக்கு நல்ல தொடுகை கெட்ட தொடுகை  பற்றித்தான் கற்பிக்கிறார்கள்"

ஐந்தாம் ஆறாம் வகுப்பில் 'முழுவதும்' தெரிந்தவர்கள் ஆக மாறிவிடுவார்கள். 

  • தொடங்கியவர்

இதே செய்தியை நாம் ஒரு சின்ன மாற்றம் (ஒரு சமூக உளவியல் பரிசோதனை ) செய்து பிரசுரித்தால், எமது மக்களின் உணர்வலைகள் மாறுபட்டு இருக்கும். அது எமக்குள் இருக்கும் சிந்தனை ஆற்றலின் பலவீனத்தை காட்டும் 🙂 பத்தோடு பதினோராவது செய்தியாக கடந்து போயிருக்கும். இந்த இணைப்பு ஒருவர் ஒரு பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுத்தாலே அது வெற்றிதான். 

முன்னர்: யாழ் பெண் வைத்தியர் வெளிநாட்டில் மானத்தை இழந்தார்!!
பின்னர்: வைத்தியர் தனது தொழில் பண்புகளை மீறியதால் வேலை இழந்தார் !!

உள்ளடக்கம் 

சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவரே தன்னை அச்சுறுத்தி பாலியல் உறவு கொள்ள வைத்ததாக கனடாவில் மருத்துவராகப் பணிபுரிந்து மருத்துவ உரிமத்தை இழந்த  வைத்தியர்.

புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டிற்கு இலக்கானார்.

அது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

==== முற்றும் =======

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

சமூகப் பொறுப்பு எதுவுமின்றி கண்டமேனிக்குச் செய்தி வெளியிடும் இதுபோன்ற இணையத்தளங்கள் குறிப்பாகப் பெண்களைக் கவருவதற்காகவே செயற்படுகின்றன தமிழ்ப்பெண்கள் அதுவும் புலம்பெயர் தேசங்களில் வாழும் குடும்பப்பெண்கள் வேலைப்பளு மற்றும் மனச்சோர்வு இவைகளிலிருந்து வெளிவர இப்படியான இணையத்தளங்கள் மெகா தொடர்கள் மற்றும் யூ ரியூம் இவைகளில் வரும் வீட்டு மருத்துவம் இவைகளே வடிகால்களாக அமைகின்றன தவிர இலவச வைப்பர் தொலைபேசி இணைப்பு இப்படியான செய்திகளை வாய்வழியாகப் பரப்ப உறுதுணைபுரிகிறது. 

இப்போதுள்ள இணையத்தளப் பத்திரிகைகளின் தலைப்புச்செய்தி ஆர்வத்தைத்தூண்டும்படி அமைப்பது இவற்றுக்காகவே. இதில் லங்கசிறி முதன்மையானது.

மேற்படி செயதியானது மனப்பிரழ்வு சம்பந்தப்பட்டது நோயாளி தனக்கு வந்த நோய் காரணமாக அருகிலிருப்பவரைப் பழிவாங்கும் ஒரு மனப்போக்கு எல்லோரும் நல்லாயிரிக்கினம் எனக்குமட்டும் இப்படிப்பிரச்சனை ஆகவே யாரையாவது துன்புறுத்தி அதில் திருப்தி அடையலாம் எனும் மனப்பாங்கு இது அனைவருக்கும் இருப்பதுதான் இம்மனப்பாங்கின் ஒரு படிநிலைதான் மொட்டைக்க்டதாசி போடுதல்.
 

  • தொடங்கியவர்

வட அமெரிக்காவில் தொடங்கிய மீ ரூ என்ற போராட்டம் பல தொழில்சார் ஆண்களை பிரட்டி போட்டுள்ளது.

கண்ணால் ஒரு மாதிரி பார்த்தார் என்றாலே சிலவேளைகளில் அவரின் வேலை முடிந்தது. விசாரணை எதுவும் இன்றி பல ஆண்கள் வேலைகளை இழந்து உள்ளனர். சில ஆண்கள் கம்பியும் எண்ணுகிறார்கள். சில பெண்கள் அநியாயமாக பொய்களை கூறி இருந்ததும் உண்டு. 

வைத்தியக்களை பொறுத்தவரையில் பல ஆண் வைத்தியர்கள் இவ்வாறு குற்றம் நிரூபிக்கப்பட்டு வேலையை இழந்து, மரியாதையை இழந்து சிறைக்கும் சென்றுள்ளார்கள்.  

அதை எல்லாம் எமது தமிழ் 'ஊடகங்கள்' எழுதி இருக்க மாட்டா. காரணம், அதை வாசகர்களும் அதிகம் விரும்புவதில்லை. அதற்கு இந்த களமே (view count) ஒரு சாட்சி.

கொஞ்சம் 'கிளுகிளுப்பா' போட்டா 'ரியாக்சன்' கள் பொம்மிய வண்ணம் வரும், 'ரேட்டிங்' கூடும்.

அப்படியான சில மூலங்களை பாவித்து தான் சில நல்ல விழிவுப்புணர்வு விடயங்களை (அதாவது, பெண்களும் மனிதர்கள் தான் ) கூற முடிகின்றது என்பது ஒரு துர்ப்பாக்கிய நிலை.  

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டப்படி மானத்தை இழக்கவில்லை. 

அதாவது, பாலியல் குற்றவாளியாக (அதாவது பாலியல் கிரிமினனலாக) சாட்சிப்படுத்தப்படவும் இல்லை, தீர்மானிக்கவும் இல்லை.

எனவே, செய்தியின் தலைப்பு சட்டப்படி தவறாக இருப்பதற்கு  வாய்ப்புள்ளது.

இவருடைய மருதத்துவ உரிமம் பறிக்கப்பட்டுள்ளது என்பதே சரி.

முறைப்பாடு செய்தவரின் முழுமையான  ஒப்புதலுடனே தான் இவர்  மறைப்பாட்டாளருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

அதுவும், இவர் வைத்திய நிலையத்தில் பாலியல் உறவு கொண்டுள்ளார் என்பதுடன், கடமையில் இருந்த வேறு ஓர் பெண் தாதியர், இவர்கள்  பாலியல் உறவு கொண்டிருந்த போது   அப்படியே   இவர்களின்  அறைக்குள் வந்துள்ளார்.

அதனாலேயே, இவரின் உரிமம் பறிக்கப்படும் நிலை வரை சென்றுள்ளது. ஏனெனில், ஒன்ராறியோ மருத்துவ சேவையின் கட்டுப்பாடு ஒழுங்கு முறைகள், கவனிப்பிலிருக்கும் நோயாளருடன் பாலியல் உறவுகளை தடை செய்வதுடன், அதை மீறுதலின் ஒரே விளைவாக மருத்துவ உரிமம் பறிக்கப்படுவதில் நெகிழ்வு இல்லாமல் உள்ளது.         

தார்மீக அடிப்படையில் மானமிழப்பதென்பது, ஓர் சமூக அளவீடே தவிர வேறு ஒன்றும் சொல்லும் படி இல்லை.

வெள்ளை இனத்தவர் பலர், முறைப்பாட்டாளரையே குறை சொல்கிறார்கள். அவர்களின், மானம் என்ற சமூக அளவீடு அவர்களின்  கலாசாரத்துடன் சம்பந்தப்பட்டது. அதாவது, முறைப்பாட்டாளர் காம சுகத்தை அனுபவித்து விட்டு, break-up என்றதும் பழிவாங்கியுள்ளார் என்பதே பல வெள்ளை இனத்தவரின் கருத்துக்கள் உள்ளது. பல வெள்ளை இனத்தவர், இவரை தாம் வைத்தியராக பெறவில்லை எனும் ஏக்கமும் உள்ளது. பலர், இதை slap in the wrist உடன் முடித்திருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.

தமிழ் ஆண்கள், பெண்களுக்கிடையில் இது நடைபெறவில்லையா, அதாவது எல்லாம் முடிந்த பின் break-up?

முக்கியமாக, இது metoo  வும் அல்ல.  ஏனெனில், இருவரும் இணங்கியே உறவு கொண்டனர்.

மற்றும் படி, தமிழ் பெண்களுக்கு sexual wilderness இருக்க முடியாது என்று யார் முடிவெடுத்தது? 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nilmini said:

மிகவும் அன்பான கெட்டிக்கார புற்றுநோய் வைத்தியர். எனது அம்மாவின் குடும்ப வைத்தியரும் ஆவார் . மிக இள  வயதிலேயே கான்செர் வைத்தியத்தில் சிறப்பு பட்டம் வாங்கியவர்.

ஆனால், மறு பக்கமும் உள்ளது. 

இவருடைய  முன்னேற்றப் படிகளிலும், இப்படி நடைபெற்றிருக்கலாம்.

எல்லாம் ஓர் ஊகமே. கானால் கண்டதும் இல்லை, காதல் கேட்டதும் இல்லை. தீர விசாரித்தாலும் அறிய முடியுமா?

Edited by Kadancha
add info

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maruthankerny said:

இது சார்ந்த பழைய திரியிலும் எழுதி இருந்தேன் 
இவரது வக்கீல் வெறும் லூசு 
இவருடைய கேஸை ரெசேர்ச் அண்ட் ஸ்டடி என்று மாற்றி இருக்க வேண்டும். 

அவர்களிடம் ஆதரங்கள் இருக்கும் என்பதும் சுலபமகாக எடுக்க முடியும் என்பதும் 
தெரிந்திருக்க வேண்டும் 
ஆகவே அந்த ஆதாரங்கள் அங்கு இருப்பதை வைத்துக்கொண்டே இவர்கள் வாதத்தை முன்வைக்க வேண்டும். 

நல்ல வேளை மருத்துவரின் வக்கீல் உங்கள் இந்த "ஆய்வுக்காக உறவு கொண்டார்" என்ற முட்டாள் தனமான வாதத்தை முன்னிறுத்தவில்லை! அப்படி செய்திருந்தால் இது தொடர்பான  செய்தி இன்னும் பரவலாக ஓடிக் கொண்டிருக்கும், சந்தி சிரித்திருக்கும்.

நோயாளிக்கு மருத்துவம் பார்ப்பதென்பது காரை ரிவியை பழுது பார்ப்பது போல நினைத்த ரெக்னிக்கை எல்லாம் பாவிப்பதல்ல! சில நோய்களுக்கு இனிக் காப்பாற்ற முடியாது என்ற  நிலை வரும் போது கூட பரிசோதனை மருத்துவத்தை (experimental therapy) நோயாளியிடமும் குடும்பத்தினரிடமும் மருத்துவ அதிகாரம் கொண்டவர்களிடமும் அனுமதி பெற்றுத் தான் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுப் பாடுகளுக்குள் சும்மா இதைப் பரிசோதித்துப் பார்த்தேன் என்று இவர் சொல்லித் தப்பியிருக்க முடியாது! எதிர் காலத்தில் இவர் மருத்துவ லைசென்சைத் திரும்பப் பெற வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை உங்கள் ஆலோசனைப் படி இவர் நடந்திருந்தால் முற்றாக இழந்திருப்பார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.