Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செலவுகளை செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை

Featured Replies

யாராவது முன்வந்து உதவி செய்தால் நான் நிச்சயம் சாதித்து காட்டுவேன் - ராஜ்குமார் 

உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. 

DSC09937.jpg

ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதற்கு யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன் என ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்று வெண்லகப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்த மாதவன் ராஜ்குமார் தெரிவித்தார்.

53ஆவது ஆசிய ஆணழகன் சம்பியன்ஷிப் போட்டித் தொடர், சீனாவின் ஹேர்பின் நகரில் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்றது.

DSC09904.jpg

இந்த போட்டிகளின் மூன்றாவது நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவிலும், 23 வயதுக்குட்பட்ட கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டிப் பிரிவிலும் களமிறங்கிய ராஜ்குமார், பலத்த போட்டிக்கு மத்தியில் மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

இறுதிப் போட்டியில் 30இற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், பலத்த போட்டியைக் கொடுத்து அவர் இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டார் என்பது சுட்டிக்காட்டத்தக விடயம்.

DSC09928.jpg

தனது வெற்றிக் குறித்து ராஜ் குமார் கூறுகையில், “இவ்வருட இறுதியில் டுபாயில் நடைபெறவுள்ள உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதற்கு யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன்.

DSC09956.jpg

அதேபோல, என்னுடைய இலக்கு மிஸ்டர் ஒலிம்பியாட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றுவதாகும். அந்த இலக்கையும் என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கு பணம் தான் தேவை. எனவே, இந்த விளையாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எனக்கு அனுசரணையாளர்கள் கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன். எனது பெற்றோரின் தொழில் மற்றும் வருமானத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விளையாட்டு. ஆனாலும், மலையகத்தில் பிறந்த ஒரு தமிழனாக நிச்சயம் சாதித்து காட்டுவேன்” என கூறினார்.

தனது 15ஆவது வயதில் இருந்து உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றி வருகின்ற ராஜகுமார், நுவரெலியா மாவட்டம், லபுக்கலை தோட்டம் கொண்டகலை பிரிவை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். 23 வயது கொண்ட இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

DSC09999.jpg

தற்போது இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற இவர், கடந்த வருடம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்டழகர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

மேலும், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

vlcsnap-2019-08-03-15h39m41s821.jpg

அதன்பிறகு, தேசிய மட்டத்தில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட உடற்கட்டழகர் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்ற அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய உடற்கட்டழகர் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதனைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கனிஷ்ட மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் சம்பியனாகவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/61882

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத் தமிழர் வென்ற சர்வதேசப் பதக்கம்: டீ கோப்பை பரிசளித்த இலங்கை அரசு

மாதவன் ராஜகுமாரன் Image captionமாதவன் ராஜகுமாரன்

இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளி மகனான மாதவன் ராஜகுமாரன் சர்வதேச உடற்கட்டழகுப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.

சீனாவில் நடைபெற்ற 53ஆவது ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் பங்கு பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார் இவர்.

நுவரெலியா மாவட்டத்தின் லபுக்கலை பகுதியைச் சேர்ந்த இவர், தனது 15ஆவது வயது முதல் உடற்கட்டழகர் போட்டிக்காக தன்னை தயார்படுத்தியுள்ளார்.

பல்வேறு உடற்கட்டழகர் போட்டிகளில் பங்கேற்ற மாதவன் ராஜகுமாரன், இதுவரை 10 பதக்கங்களை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இதில் இரண்டு சர்வதேச பதக்கங்களும் உள்ளடங்குகின்றன.

  • 2015 - மத்திய மாகாண உடற்கட்டழகர் போட்டி - வெள்ளிப்பதக்கம்
  • 2015 - அகில இலங்கை பாடசாலை மட்ட உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2015 - மத்திய மாகாண 55 கிலோகிராம் எடை பிரிவின் கீழ் உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2016 - அகில இலங்கை பாடசாலை மட்ட உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2016 - அகில இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2016 - தேசிய மட்ட 55 கிலோகிராம் எடை பிரிவின் கீழ் உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2017 - அகில இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2017 - தேசிய மட்ட 60 கிலோகிராம் எடை பிரிவின் கீழ் உடற்கட்டழகர் போட்டி - தங்கப்பதக்கம்
  • 2018 - தெற்காசிய உடற்கட்டழகர் போட்டி (நேபாளம்) - தங்கப்பதக்கம்
  • 2019 - ஆசிய உடற்கட்டழகர் போட்டி (சீனா) - வெண்கலப் பதக்கம்

உடற்கட்டழகர் விளையாட்டை தேர்வு செய்வதற்கான காரணம் என்ன என பிபிசி தமிழ், மாதவன் ராஜகுமாரனிடம் கேட்டது. ''நான் அதிகளவில் எல்லா விளையாட்டும் விளையாடுவேன். அதற்கு உடல் பலம் தேவைப்பட்டது. அதை செய்ய ஜிம் சென்றேன். அப்படியே உடல் பலமாகியது. மத்திய மாகாண ஆணழகன் போட்டியில் முதலாவதாக வெற்றி பெற்றேன். அதில் இருந்தே நான் இதே விளையாட்டை எடுத்துக்கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

மாதவன் ராஜகுமாரன்

சர்வதேச உடற்கட்டழகர் போட்டியில் பங்கு பெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கூறிய அவர், அந்த போட்டிகளிலும் வெற்றி பெற்று நாட்டிற்கும், மலையகத்திற்கும் பெருமை சேர்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டார்.

மலையகத்தில் மரக்கறி தோட்டமொன்றில் நாள் சம்பளத்தில் ராஜகுமாரனின் பெற்றோர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச உடற்கட்டழகர் போட்டியில் பங்குபெற்று வெற்றிக் கொள்வதற்கான நம்பிக்கை தனக்கு காணப்படுகின்ற போதிலும், அதற்கான பண வசதிகள் தன்னிடம் கிடையாது என அவர் கவலை தெரிவிக்கின்றார்.

சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுவதற்கு யாரேனும் உதவிகளை வழங்க முன்வந்தால், தான் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் தேநீர் கோப்பை பரிசு

சீனாவில் நடைபெற்ற 53ஆவது ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் பங்கு பெற்று இலங்கைக்கு பெருமை சேர்ந்த மாதவன் ராஜகுமாரனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு தேநீர் அருந்தும் கோப்பையொன்றை பரிசாக வழங்கியுள்ளது.

மாதவன் ராஜகுமாரன்

இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் தன்னை அமைச்சுக்கு அழைத்து இந்த தேநீர் அருந்தும் கிண்ணத்தை வழங்கியதாக மாதவன் ராஜகுமாரன் தெரிவித்தார்.

மாதவன் ராஜகுமாரன்படத்தின் காப்புரிமைFACEBOOK மாதவன் ராஜகுமாரன்படத்தின் காப்புரிமைFACEBOOK

விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பொறிக்கப்பட்ட தேநீர் அருந்தும் கோப்பையொன்றே மாதவன் ராஜகுமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாகவும் மாதவன் ராஜகுமாரன் குறிப்பிடுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49226708

தமிழன் என்றதால இப்படிதான் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் சிங்களவர்கள் வெகு தெளிவாக இருக்கிறார்கள் ; தனிப்பட்ட முறை சிநேகிதத்தில் சமமாக பழகுவதில் அவர்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை. ஆனால் தமிழ் சமூகம் என்று ஒரு அடையாளத்துடன் வரும் பொது கணக்கில் எடுக்கப் படாது ஏறி உதைத்து வெட்டித் தள்ளப்படும்.  

83 வைகாசி மாதம் …..ஆடிக் கலவரத்திற்கு இரு மாதங்களுக்கு முன்னர் ….

பேராதெனியாவில் பொறியியல் துறையில் இறுதி வருடம் இருந்த நேரம். பல்கலைக் கழகத்துக்குள் கலவரம் தோன்றி விட்டது , ஒன்றாக ஒரே குழுவில் இருந்த சக சிங்கள மாணவர்கள் கூட தமிழ் மாணவர்களை தாக்க ஆரம்பித்து ஒரே களேபரம் , மகாவலிக்கு மறு பக்கம் இருக்கும் எங்கள் விடுதிக்கு அலறல் சத்தங்கள் கேட்கத் தொடங்கின.

நாங்களும் பாதுகாப்பில்லை என ஊருக்கு போக மூட்டை கட்ட வெளிக்கிட , சக சிங்கள மாணவர்கள் தடுத்து , "இப்ப போனால் பாதுகாப்பில்லை , உங்களுக்கு ஏதேன் நடந்தால் அது எங்களது சடலங்களுக்கு மேலே தான் " என்று சொல்லி மறித்து விட்டார்கள் , அப்படியே நடந்தும் கொண்டார்கள் , வெளியாட்கள் எங்களை தாக்க வந்த நேரம் , தளங்களின் உயிரை பொருட்படுத்தாமல் , அவர்களுடன் மல்லு   கட்டி   தடுத்தும் நிற்பாட்டினார்கள் - எங்கள் ஒவ்வொருவருடனும் அவைர்கள் நான்கு வருடமாக வளர்த்து வைத்திருந்த சிநேகிதம் அது.

பின்னர் பல்கலலை கழகம் மூடப் பட்டு , வீடு போயே தான் ஆக  வேண்டும் என்ற ஒரு நிலை வந்த பொது , அவர்கள் " தனியே போவது பாதுகாப்பாக  இராது " என்று சொல்லி  பொல்கஹவல     வரையும் புகையிரதத்தில் எங்களுடன் வந்து " இனி பயமில்லை " என்று சொல்லி வேறு ஒன்றும் சொன்னார்கள்

" இனிமேல் நாங்கள் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் இப்படி இருக்கப் போவதில்லை , உங்களை பாது காக்கக் கூடியதாக இருக்கும் என்று தோன்றவில்லை " என்று சொன்னார்கள்.    அதில் அவர்கள் மிக தெளிவு

அவர்களில் சிலர் பின்னாளில் இராணுவம் கடற்படை என்று இணைத்து வேலை செய்தார்கள் , அநியாயயமாக கொன்று போட்ட தமிழர்களை பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் பொது சொல்வார்கள் , அதில் ஒரு கழிவிரக்கம் இராது அவர்கள் எல்லோரையும் பொறுத்தளவில் , நாங்கள் எல்லோரும் - இந்த  ஆணழகன் உட்பட - தமிழர் அல்ல "  தெமலாயோ " தான் …..

  • கருத்துக்கள உறவுகள்

மாதவன௠ராà®à®à¯à®®à®¾à®°à®©à¯

ராஜ்குமாருக்கு... ஸ்ரீலங்கா விளையாட்டு துறை அமைச்சு...
பத்து ரூபா பெறாத இப்படி ஒரு தேனீர் குவளையை கொடுத்து அவமானப் படுத்துவதை விட, 
கொடுக்காமலே இருந்திருக்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

மாதவன௠ராà®à®à¯à®®à®¾à®°à®©à¯

ராஜ்குமாருக்கு... ஸ்ரீலங்கா விளையாட்டு துறை அமைச்சு...
பத்து ரூபா பெறாத இப்படி ஒரு தேனீர் குவளையை கொடுத்து அவமானப் படுத்துவதை விட, 
கொடுக்காமலே இருந்திருக்கலாம்.  

சிங்களம் மருத்துக்கும் இல்லை!

தமிழனுக்கென்றே....தயாரித்திருப்பார்கள் போல உள்ளது...!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

வழங்கியுள்ளது.

மாதவன் ராஜகுமாரன்

"Info@sportsdev.gov.lk"

roflphotos-dot-com-photo-comments-201706

.. முடியல .. ☺️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.