Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

👁️👁️எனது பார்வையில் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம்👁️👁️

Featured Replies

'நேர் கொண்ட பார்வை' திரைப்படமானது சராசரியான தமிழ்த்திரைப்படங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு ஓர் தனித்துவமான படைப்பாகத் தரப்பட்டுள்ளது?

➡️பெண் சுதந்திரம், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் இவை பற்றி வெறுமனே ஓரிரு வரிகளில் / காட்சிகளில் மட்டுமே மேலோட்டமாகச் சொல்லாமல், ஒரு இரவில் மூன்று பெண்கள் எதிர்கொண்ட இவ்வாறான ஓர் சம்பவத்தின் விளைவுகளை உணர்வு பூர்வமான பல காட்சியமைப்புக்கள் மூலமாகச் சித்தரித்தமை ஒரு காரணம்.

➡️அடுத்து, படத்தின் இடைவேளையைத் தொடர்ந்து வந்த தொடர்ச்சியான நீதிமன்றக் காட்சிகள் அச்சம்பவம் தொடர்பான ஆணாதிக்க மனோநிலை, பாதிக்கப்பட்ட பெண்களின் ஏக்கம், தயக்கம், ஏமாற்றம் இவற்றை இரு பக்க வக்கீல்களின் வாதங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் தடுப்பு வாதங்கள் மூலமாக அக்கு வேறு ஆணிவேறாக எடுத்துரைத்தமை இன்னொரு பலமாக அமைந்தது. வெறுமனே சமூகத்துக்கான ஒரு வரி அறிவுரை/செய்தியாக இருக்காமல் நீண்ட நேர விரிவுரை போல அமைந்தது - ஒரு social message என்பது இவ்வாறு தான் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். ("அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல" போன்ற சூப்பர்ஸ்டார் பஞ்ச் வசனங்கள் பாலாபிஷேகம் செய்யும் வெறித்தனமான ரசிகர்களைக் குஷிப்படுத்தலாம்; ஆனால், இது போன்ற பஞ்ச் வசனங்கள் பஞ்சு போலத் தான் - கனதியான செய்தி சொன்னதாகவும் சரித்திரம் இல்லை!

➡️இன்னொரு காரணம், அஜித்தின் பாத்திர வடிவமைப்பு, படத்தில் தேவையான அளவுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்தியமை மற்றும் அஜித் அதனைத் தனது ஆர்ப்பாட்டமில்லாத உடல் மொழி, வசனப் பிரயோகம் மூலம் மேலும் வலுச்சேர்த்தமை. அதிரடி நாயகனாக பஞ்ச் வசனம் பேசுவதை விட இந்த வேடம் நம்மை மிகவும் கவர்ந்தது. வயதுக்கேற்ற முதிர்ச்சி! கூடவே ஏனைய கதாபாத்திரங்கள் - குறிப்பாக அபிராமி, ஷ்ரத்தா, ஆண்ட்றியா ரறியாங் மற்றும் பாண்டே போன்றோரின் யதார்த்தமான நடிப்பும் குறிப்பிடத்தக்கவை.

💦இவை தவிர, வலிந்து திணிக்கப்படாத, கதையின் ஓட்டத்துடன் செல்லும் பாடல் காட்சிகளும், பின்னணி இசை என்று நம்மைப் பிரித்து யோசிக்கத் தூண்டாத யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் அருமை.

💦ஆரம்பக் காட்சியான club dance காட்சி நேரடி அனுபவம் போல் இருந்தது. அது போல் படத்தின் நிறைவாக படத்தின் மையக்காட்சியை CCTV camera காட்சி போல் தொகுத்தளித்ததும் அருமை. (ஒளிப்பதிவு: நிரவ் ஷா)

💦இந்தித் திரைப்படமான 'Pink'இன் நேரடித் தழுவல் இது. இவ்வாறான திரைப்படங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. பெரிய நடிகர்களின் மசாலாப்படங்கள் சலிப்புத் தட்டுகின்றன என்று கூறியே சலித்துவிட்டது! Yes....! Yes means YES!!! 

💦இது அஜித் படமல்ல - எனினும் அஜித்துக்குப் பெருமை சேர்க்கும் இன்னொரு பரிமாணம் இது. அவர் நடித்ததால் இப்படம் சொல்லும் செய்தியும் பெறுமதியாகத் தெரிகிறது. 

👉நேர் கொண்ட பார்வை ~ இது ஓர் ஆழமான சமூகப் பார்வை; 
கூடவே, தல ரசிகர்கள் அவரைப் பார்க்க வேண்டிய புதிய பார்வை!

  • கருத்துக்கள உறவுகள்

ம்......இன்றைய காலகட்டத்தில் இது போன்ற படங்களை, இந்தப்படத்தை பார்க்க பாடசாலைகள் அறிவுறுத்த வேண்டும். மேலும் நான்தான் கெத்து, எனக்கு எல்லாம் தெரியும் என்று வீட்டில் வீராப்பு பேசி அம்மாவின் வாயை அடைக்கும் பிள்ளைகள் அவசியம் பார்க்க வேண்டும்.தியேட்டரில் பார்க்க வேண்டும் ....!   👍

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்படங்களில் அபூர்வமாக சில நல்ல படங்களும் வருகின்றன. அஜித் நடித்தும் அழுத்தமான படமாக இருப்பதால் நேர் கொண்ட பார்வை படத்தை பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, suvy said:

ம்......இன்றைய காலகட்டத்தில் இது போன்ற படங்களை, இந்தப்படத்தை பார்க்க பாடசாலைகள் அறிவுறுத்த வேண்டும். மேலும் நான்தான் கெத்து, எனக்கு எல்லாம் தெரியும் என்று வீட்டில் வீராப்பு பேசி அம்மாவின் வாயை அடைக்கும் பிள்ளைகள் அவசியம் பார்க்க வேண்டும்.தியேட்டரில் பார்க்க வேண்டும் ....!   👍

என்ன அவ்வளவுத்துக்கு நல்ல படமோ?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

என்ன அவ்வளவுத்துக்கு நல்ல படமோ?

ஓம் ....அஜித் ஹீரோயிஸம் எதுவும் காட்டவில்லை. இயல்பான ஒரு வக்கீல். அவரைவிட எதிர்க்கட்சி  வக்கீல் அட்டகாசம்.நீங்கள் நேரில் அந்தப்படத்தை பார்க்க வேண்டும்.......!

இன்றைய பிள்ளைகள் (ஆன்/பெண்) சர்வ சாதாரணமாக டேட்டிங் போகிறார்கள். சிறு வயதிலேயே நன்றாக படிக்கிறார்கள்.நல்ல வேலைகளுடனும் கை நிறைய சம்பளத்தோடும் இருக்கிறார்கள்.நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் சென்று ஓட்டல்களில்  தங்கிவிட்டு எதுவித குற்றவுணர்வும் இல்லாமல் வருகின்றார்கள்.அதை அந்தப்படமும் பிரதிபலிக்கின்றது. நான் மிகவும் குறைத்து சொல்லி இருக்கிறேன்.நீங்கள் பாருங்கள் புரியும். வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் மறக்காமல் அழைத்து செல்லுங்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கமாயும் ஒருவனுக்கு ஒருத்தி என்றும் வாழ்வதில் நிறைய பாதுகாப்பும் நன்மையும் உண்டு. பாலியல் நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு.
அதேவேளை ஒவ்வொரு மனித உயிரிக்கும் பாலுணர்வு இருக்கும், அதனை சரியான வயதில் அனுபவிக்கும் பாலியல் உரிமையை பயன்படுத்த தடை போடலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை. ஆனால் பிங் இதை விட நல்ல படமாயிருக்கும் 
 

  • தொடங்கியவர்
16 hours ago, suvy said:

ம்......இன்றைய காலகட்டத்தில் இது போன்ற படங்களை, இந்தப்படத்தை பார்க்க பாடசாலைகள் அறிவுறுத்த வேண்டும். மேலும் நான்தான் கெத்து, எனக்கு எல்லாம் தெரியும் என்று வீட்டில் வீராப்பு பேசி அம்மாவின் வாயை அடைக்கும் பிள்ளைகள் அவசியம் பார்க்க வேண்டும்.தியேட்டரில் பார்க்க வேண்டும் ....!   👍

நிச்சயமாக, சுவி அண்ணா! 😊

 

16 hours ago, கிருபன் said:

தமிழ்ப்படங்களில் அபூர்வமாக சில நல்ல படங்களும் வருகின்றன. அஜித் நடித்தும் அழுத்தமான படமாக இருப்பதால் நேர் கொண்ட பார்வை படத்தை பார்க்கலாம்.

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா புதுமையான கதையம்சம், கதைக்களத்துடன் கூடிய தரமான பல படங்களைத் தந்துள்ளது. இந்த ஆரோக்கியமான மாற்றம் தொடரும் என நம்புவோம். 😊

  • தொடங்கியவர்
12 hours ago, ஏராளன் said:

அதேவேளை ஒவ்வொரு மனித உயிரிக்கும் பாலுணர்வு இருக்கும், அதனை சரியான வயதில் அனுபவிக்கும் பாலியல் உரிமையை பயன்படுத்த தடை போடலாமா?

இது ஒருவர் வாழும் கலாச்சார சூழலைப் பொறுத்தது. அத்துடன் கால மாற்றத்துடன் கலாச்சாரச் சூழலும் மாற மாற இதன் சரி, பிழைத் தன்மையும் மாறுபடுகிறது. 😊

  • தொடங்கியவர்
3 hours ago, ரதி said:

நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை. ஆனால் பிங் இதை விட நல்ல படமாயிருக்கும் 

நான் 'பிங்க்' படத்தை இன்னும் முழுவதுமாகப் பார்க்கவில்லை. ஒரு சில காட்சிகளை மட்டுமே யூரியூபில் பார்த்தேன். தமிழில் பார்த்த அதே மாதிரியான காட்சியமைப்புகள் தான். சில காட்சிகள் மாற்றப்பட்டு இருக்கலாம். ஆனாலும் மொத்தத்தில் தமிழில் பார்த்த அதே உணர்வைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.

தமிழில் நடிகர்கள் மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள் - குறிப்பாக அஜித் மற்றும் அந்த மூன்று பெண்கள். நடிகர்கள் மீதுள்ள அபிமானத்தைப் பொறுத்து படம் பற்றிய அபிப்பிராயமும் மாறுபடலாம்.

மற்றப்படி முழுக்க முழுக்க 'பிங்க்' படத்தின் நேரடித் தழுவலே 'நேர்கொண்ட பார்வை'. 😊

  • தொடங்கியவர்

"நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்;
அமிழ்ந்து பேரிருளாமறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!"

-மகாகவி பாரதி

படத் தலைப்பைத் தேடியபோது தான் இப்படி ஒரு பாரதி பாடல் இருப்பதே தெரிந்தது!

மல்லிகை வாசம்,

நான் அஜித் குமாரின் படம் ஒன்றை தியேட்டர் போய் பார்த்து 20 வருடங்களுக்கும் மேலாகின்றது. ஆனால் உங்களின் விமர்சனத்தை பார்த்த பின் நேற்று மனைவியுடனும் மகளுடனும் போய் 'நேர்கொண்ட பார்வை'  பார்க்கப் போனேன். படம் நன்றாக உள்ளது. தமிழ் சூழலில் இப்படியான ஒரு படத்தை Remake பண்ண நினைத்ததே பெரிய விடயம். போனி கபூர் (சிறிதேவியின் கணவர்) துணிந்து செய்து இருக்கின்றார்.

படம் முடிய எங்கள் சனம் எழுந்து நின்று கைதட்டி தம் திருப்தியை தெரிவித்தது மேலும் மகிழ்ச்சியை தந்தது. கட்டுண்ட சமூகமாக இருக்கும் கனடா தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறை மரபு ரீதியிலான சிந்தனையில் இருந்து வெளியே வந்து கொண்டு இருக்கு...

  • தொடங்கியவர்
9 hours ago, நிழலி said:

மல்லிகை வாசம்,

நான் அஜித் குமாரின் படம் ஒன்றை தியேட்டர் போய் பார்த்து 20 வருடங்களுக்கும் மேலாகின்றது. ஆனால் உங்களின் விமர்சனத்தை பார்த்த பின் நேற்று மனைவியுடனும் மகளுடனும் போய் 'நேர்கொண்ட பார்வை'  பார்க்கப் போனேன். 

நிழலி, இது படம் பற்றிய எனது முழுமையான விமர்சனம் அல்ல. இன்னும் சில நிறைகளும், ஓரிரு குறைகளும் இருக்கலாம். எனினும் எனது கண்ணோட்டத்தை மதித்து இத்திரைப்படத்தை பார்த்தமைக்கு முதலில் எனது நன்றிகள். 😊 தரமான படங்கள் நம்மால் கொண்டாடப்பட வேண்டும். 

 

9 hours ago, நிழலி said:

படம் நன்றாக உள்ளது. தமிழ் சூழலில் இப்படியான ஒரு படத்தை Remake பண்ண நினைத்ததே பெரிய விடயம். போனி கபூர் (சிறிதேவியின் கணவர்) துணிந்து செய்து இருக்கின்றார்.

படம் முடிய எங்கள் சனம் எழுந்து நின்று கைதட்டி தம் திருப்தியை தெரிவித்தது மேலும் மகிழ்ச்சியை தந்தது. கட்டுண்ட சமூகமாக இருக்கும் கனடா தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறை மரபு ரீதியிலான சிந்தனையில் இருந்து வெளியே வந்து கொண்டு இருக்கு...

நிச்சயமாக இது ஒரு துணிகரமான முயற்சி தான். பொலிவூட் ரசிகர்களுக்கும், தமிழக மற்றும் ஈழத்தமிழ் ரசிகர்களுக்குமான சமூக, கலாச்சார வேறுபாடுகள் நிறையவே உண்டு எனினும் பொலிவூட்டில் வரவேற்பு பெற்ற இப்படத்தை தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் படைத்தது பாராட்டப்பட வேண்டியது.

இங்கு அவுஸ்திரேலியாவிலும் வழக்கத்துக்கு மாறாக அதிக காட்சிகளை இத்திரைப்படத்துக்கும் ஓதுக்கியுள்ளனர். போனி கபூரின் நம்பிக்கை வீணாகவில்லை போலிருக்கிறது. 

மேலும் இத்திரைப்படத்தில் குறிப்பிடப்பட்ட சமூகப்பிரச்சினை ஆண்களுக்கும் ஓர் படிப்பினையாக உள்ளன, பெண்களுக்கும் விழிப்புணர்வைக் கொடுக்கும். எனினும் ஆண், பெண் என இரு சாராரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக 

எதிர்கொண்டு தீர்க்க வேண்டிய பிரச்சினை இது. 😊

Edited by மல்லிகை வாசம்
Merged comments

  • கருத்துக்கள உறவுகள்

விதி படமும் கொஞ்சம் விளையாடி இருக்கு நீதிமன்ற கூண்டில் ரங்கராஜ் பாண்டே சிறந்த பாத்திரம் ஆனால் படத்தில்  ஹீரோதான் வெல்ல வேண்டுமென்ற கருவில் கதை முடிகிறது அஜித் இன்னும் வாதாடி இருக்கணும் வார்த்தைகளால் என்பேன் 

  • தொடங்கியவர்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விதி படமும் கொஞ்சம் விளையாடி இருக்கு நீதிமன்ற கூண்டில் ரங்கராஜ் பாண்டே சிறந்த பாத்திரம் ஆனால் படத்தில்  ஹீரோதான் வெல்ல வேண்டுமென்ற கருவில் கதை முடிகிறது அஜித் இன்னும் வாதாடி இருக்கணும் வார்த்தைகளால் என்பேன் 

ராஜா, நீதிமன்றக் காட்சிகள் 'விதி' படத்தை நினைவுபடுத்தினாலும் இப்படத்தின் கதைக்களம் மற்றும் சொல்லும் செய்தி மாறுபட்டதல்லவா? 😊

அஜித் ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் வசனம் பேசி நடித்திருக்கலாம் எனத் தோன்றலாம். என்னைப் பொறுத்தவரை இவரது ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு இப்படத்தில் பிடிச்சிருக்கு! 😊

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

ராஜா, நீதிமன்றக் காட்சிகள் 'விதி' படத்தை நினைவுபடுத்தினாலும் இப்படத்தின் கதைக்களம் மற்றும் சொல்லும் செய்தி மாறுபட்டதல்லவா? 😊

அஜித் ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் வசனம் பேசி நடித்திருக்கலாம் எனத் தோன்றலாம். என்னைப் பொறுத்தவரை இவரது ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு இப்படத்தில் பிடிச்சிருக்கு! 😊

ம்ம் அதற்க்காகவே தியட்டரில் பார்த்தன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.