Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..

August 18, 2019

 

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணியினைத் தொடர்ந்து காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பவுள்ளது. கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் 28 பொது அமைப்புக்களை உள்ளடக்கியதாக, ஒரு மக்கள் படையணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது வைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டுமென விரும்பும் மக்கள் தம்மை ஆதரிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/129148/

 

ஜே.வி. பி. ஒரு நாள் ஆட்சியை கௌவும். 

அதற்கு காரணம், இந்த தொடந்தும் சிங்கள மக்களை கூட ஏமாற்றும் பிரதான சிங்கள கட்சிகளும் அவர்களின் இறுமாப்பும். 

ஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க  தெரிவுச்செய்யப்பட்டுள்ளார். 

Related image

காலிமுகத்திடலில் இடம்பெறும் தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

69036753_690463521419096_719606952378132

68743001_2536374023259828_44362156191755

68687327_408754143088177_296967539216141

 

 

 

https://www.virakesari.lk/article/62892

கோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார: தேசிய மக்கள் சக்தியின் பின்னணி என்ன

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் கூட்டத்திலேயே அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 11ஆம் தேதி பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அறிவித்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.

இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே, கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகின்றன.

 

ஆயுத குழுவாக ஆரம்பமான மக்கள் விடுதலை முன்னணி

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1965ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ரோஹண விஜயவீரவினால் ஆரம்பிக்கப்பட்டது.

சோஷலிச சமத்துவத்திற்கான அரசியல் கட்சி என அறிவித்து ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியில் வேலையற்ற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்டோர் என பெரும்பாளானோர் இதில் இணைந்துக் கொண்டனர்.

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் ரகசிய ஆயுதப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பிரதமராக கடமையாற்றிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி நடத்திய ரகசிய ஆயுதக் கிடங்கு தொடர்பில் தகவல் கிடைத்த நிலையில், 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரோஹண விஜயவீர கைது செய்யப்படுகின்றார்.

கைது செய்யப்பட்ட ரோஹண விஜயவீர, யாழ்ப்பாணத்திலுள்ள சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் அப்போது பாரிய கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு ஏற்பட்ட கிளர்ச்சியினால் இலங்கையின் தென் பகுதி பெருமளவில் மக்கள் விடுதலை முன்னணியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியை நாடிய நிலையில், இரண்டு வார காலத்தில் இந்த கிளர்ச்சி முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் பலர் இந்த காலப் பகுதியில் கொல்லப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியை இலங்கை அரசாங்கம் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ரோஹண விஜயவீரவை விடுதலை செய்ததுடன், மக்கள் விடுதலை முன்னணி மீதான தடையையும் நீக்கியிருந்தது.

அதன்பின்னர், தாம் ஜனநாயக முறைக்கு திரும்புவதாக அறிவித்த பின்னணியில், அந்தக் கட்சியினர் தேர்தல்களிலும் போட்டியிட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரோஹண விஜயவீர, அந்த காலப் பகுதியில் 2,75,000 வாக்குகளை பெற்றிருந்தார்.

 

 

1983 கலவரத்தின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி தடை

இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஏற்பட்ட கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியே காரணம் என கூறி அந்த அமைப்பிற்கு அரசாங்கம் மீண்டும் தடை விதித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணி இலங்கைக்குள் தலைமறைவாக இயங்கத் தொடங்கியது.

1987 - 1989ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கலவரத்தினால் பெருமளவிலானோர் உயிரிழந்திருந்ததாக கூறப்படுகின்றது.

ரோஹண விஜயவீர கொழும்பில் வைத்து 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, மக்கள் விடுதலை முன்னணி 1990ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிய தலைமைத்துவத்தின் கீழ் மீள் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, இலங்கையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டிருந்தது.

இலங்கை நாடாளுமன்றத்தில் 6 உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சியாக செயற்பட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணி, கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் மக்கள் விடுதலை முன்னணி பொது வேட்பாளராக களமிறங்கியவர்களுக்கு ஆதரவை வழங்கியருந்தது.

இந்த நிலையில், இந்த முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தனித்து களமிறங்கியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் மக்கள் விடுதலை முன்னணி இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது

 

 

அநுரகுமார திஸாநாயக்க யார்?

1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்துள்ளார்.

தம்புத்தேகம கல்லூரியில் கல்வி பயின்ற அவர், களனி பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளார்.

2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7ஆவது தேசிய மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவராக அநுர குமாரதிஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49388682

எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார

ஊழல், மோசடிகள் நிறைந்த காலாவதியான  ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டுமா அல்லது சகல மக்களையும் ஒன்றிணைத்து  தேசிய ஐக்கியத்துடன் கூடிய புதிய ஆட்சியை உருவாக்க வேண்டுமா  என்பதை மக்கள் தீர்மானிக்கும் முக்கியமான சூழலில் மக்கள் உள்ளனர்.  இப்போது மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும்  எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

F4CD69C6-E951-4BEC-8D36-784C16377013.jpe

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் மக்கள் கூட்டம் இன்று  காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் என்னை தலைமையேற்க தெரிவு செய்தமைக்காக முதலில் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாது என்மீதான நம்பிக்கையை வைத்து என்னை தெரிவுசெய்தமைக்கு ஏற்றால் போல் தேசிய மக்கள் சக்திக்கும் இந்த நாட்டு  மக்களுக்கும் எப்போதும் நன்றியுடையவனாகவும், நம்பிக்கையை காப்பாற்றும் நபராகவும் இருப்பேன் என உறுதிமொழி வழங்குகின்றேன்.

இந்த ஜனாதிபதி தேர்தல் முகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் உள்ளது. இதில் இரண்டு தெரிவுகள் மக்களுக்கு உள்ளது. ஒன்று பழைய மோசமான ஊழல்வாத ஆட்சியை கொண்டு செல்லும் வழி. மற்றையது மக்கள் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக வாழக்கூடிய வழியும் உள்ளது. 

காலாவதியான மோசமான ஆட்சி வேண்டுமா அல்லது மக்கள் நம்பிக்கையுடன் கட்டியெழுப்பகூடிய வழி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டிய முக்கிய சந்தியில் உள்ளீர்கள். 

இந்த நாட்டினை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. முதலில் மோசமான அரசியலை இல்லாது செய்ய வேண்டும். நாட்டினை கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட தொழிலாளர், அதனை ஏற்றுகொள்ளும் மக்கள் கூட்டத்தை கொண்டே முன்னெடுக்க வேண்டும். இதில் முதல் கட்டம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், இந்த நாட்டில் அரசியல் ஊழல், மோசடி, கப்பம், அடக்குமுறை என்பவற்றை கையாளும் நபர்களின் கைகளில் இன்று அரசியல் அதிகாரங்கள் உள்ளது. இவற்றை மாற்றியமைக்க வேண்டும். 

இந்த நாசகார ஊழல் மிக்க அரசியலுக்கு அப்பால் தூய்மையான உண்மையான மக்கள் நல அரசியலை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை இதில் நாம் முன்வைக்கின்றோம். இந்த நாட்டின் வளங்கள் அனைத்துமே கைப்பற்றப்பட்டுள்ளது.

சமூகமாக இன்று நாட்டு பிளவுபட்டுள்ளது. சமூகங்களை பிரித்து வைத்துள்ளனர். பிளவுபட்ட சமூகத்தை கொண்டு நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. ஜாதி, மதம், இன பிளவுகளில் இருந்து விடுபட்டு ஐக்கிய நாட்டினை உருவாக்கும் சூழலை நாம் உருவாக்கிக்கொடுப்போம். 

எமது எதிர்கால சந்ததியினருக்கான உறுதியான நாட்டினையும் எமது இளம் சமுதாயத்தினருக்கு நிருவாகத்தை கையில் கொடுக்க வேண்டும். எமது நாட்டில் அப்பாவி மக்கள் வேதனையுடன், வருத்ததுடனும் வாழ்கின்றனர். ஆனால் இந்த வேதனைகளால் மாத்திரம் மாற்றத்தை உருவாக்கிவிட முடியாது. அதனையும் தாண்டி உறுதியான மன நிலையுடன் மக்கள் கூட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்கான நம்பிக்கையை இன்று காலிமுகத்திடலில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தின் மூலமாக எமக்கு கூறியுள்ளனர். 

இதுவரை காலமாக ஏனைய கட்சிகளை ஆதரித்த மக்கள் அனைருக்கும் நாம் இப்போது அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் எம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிப்போம். போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம். 

அதற்கான இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றினைவோம். இனியும் மக்கள் மௌனிகளாக இருந்தால் இந்த நாட்டின் பாதையை மாற்றியமைக்க முடியாது. ஆகவே மக்களுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான சந்தர்ப்பம் இது. இதில் மக்கள் சகலரும் சரியான தீர்மானத்தை எடுத்து எம்முடன் கைகோர்க்க அலைப்புவிடுவதாக  அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/62896

3 hours ago, ampanai said:

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க  தெரிவுச்செய்யப்பட்டுள்ளார். 

இதனால் தேர்தலில் சிங்களவர்களின் வாக்குகள் பிரியும். 

ஆனால் தமிழர்களுக்கெதிராக இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விடுவார்கள்.

38 minutes ago, Lara said:

இதனால் தேர்தலில் சிங்களவர்களின் வாக்குகள் பிரியும். 

முஸ்லீம் வேட்ப்பாளர் ஒருவர் நிறுத்தபப்டும் சாத்தியங்களும் உண்டு. 

தமிழர் வாக்குகள் ஏற்கனவே பிரிந்து தான் இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Lara said:

இதனால் தேர்தலில் சிங்களவர்களின் வாக்குகள் பிரியும். 

ஆனால் தமிழர்களுக்கெதிராக இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விடுவார்கள்.

சிங்களவர்களின் வாக்குகளால் மட்டும் கோத்தபாயவோ, சஜித்தோ, ரனிலோ வெல்லக்கூடிய நிலை வந்து விட்டது. சிறுபான்மையினரின் வாக்குகளால் தான் வெல்ல வேண்டிய நிலை சிங்கள கட்சிகளுக்கு உண்டு. தமிழர்கள் எப்படி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவார்கள் என்பது மில்லியன் டொலர்  கேள்வி. கூட்டமைப்பு ஜே.வி.பியுடன் பேச்சுவார்த்தை (பம்மாத்துக்கேனும் என கோவத்துடன் மனதுக்குள் கறுவிக்கொள்கிறேன்) நடாத்தியதாக அறிந்தேன்.

தமிழர்களுக்கு  அடிப்பதில் சிங்களவர்கள் மட்டுமா விருப்பப்படுகிறார்கள்? 

38 minutes ago, nunavilan said:

தமிழர்களுக்கு  அடிப்பதில் சிங்களவர்கள் மட்டுமா விருப்பப்படுகிறார்கள்? 

முஸ்லிம்களும் தான்.

2 hours ago, nunavilan said:

தமிழர்களுக்கு  அடிப்பதில் சிங்களவர்கள் மட்டுமா விருப்பப்படுகிறார்கள்? 

தமிழர்களும் தான். 😀

இருபது வருடங்களின் பின்னர் இந்த கட்சி சனாதிபதி தேர்தலில் களம் இறங்குவதற்கு முக்கிய காரணம் பலவீனமான நிலையில் முன்பு இருந்த இரண்டு பிரதான கட்சிகளும். 

அடுத்து, இலங்கையில் உள்ள மக்களிலும் இளையவர்கள் அதிகமாக உள்ளனர். நாளை அவர்களே பிரதான வாக்கு வங்கி ஆகும் நிலை உள்ளது. அவர்களை பொறுத்தவரையில், நிம்மதியான பொருளாதார நிறைவான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

அதனால், பழை சித்தாந்தங்கள் மற்றும் குடும்ப அரசியல் என்பன தே முகமாயும் ஜே.வி.பி ஒரு மாற்று கட்சியாயும் தெரிகின்றது.   

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Lara said:

தமிழர்களும் தான். 😀

எதிர்பார்த்த விடை வரவில்லை.

4 hours ago, nunavilan said:

எதிர்பார்த்த விடை வரவில்லை.

கூட்டமைப்பினர் என்று சொல்ல வந்தீர்களாக்கும். :grin:

நான் அம்பனையின் கருத்தையும் வாசித்து விட்டு எழுதியதால் முஸ்லிம்கள், தமிழர்கள் என பொதுப்படையாக எழுதி விட்டேன். 😀

அல்லது இந்தியா என கூற வந்தீர்களா? 😵

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் தொடக்கம் மேற்கு நாடுகளூம் மறைமுகமாகவும் நேரடியாகவும் பங்கெடுத்தன.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

பாகிஸ்தான் தொடக்கம் மேற்கு நாடுகளூம் மறைமுகமாகவும் நேரடியாகவும் பங்கெடுத்தன.

தமிழர்களின் பங்கை எப்படி மறந்தீர்கள்? கருணா, பிள்ளையான், மாணிக்கதாசன், டக்லசு ..

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Jude said:

தமிழர்களின் பங்கை எப்படி மறந்தீர்கள்? கருணா, பிள்ளையான், மாணிக்கதாசன், டக்லசு ..

அதுதானே கருணா பிள்ளையானை தவிர கன பேர் இருக்கிறார்கள்

மோசடியாளர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமே தவிர   கால மாற்றத்திற்கு அமைய  புதுப்பிக்கப்பட கூடாது  -  மக்கள் விடுதலை முன்னணி 

இராஜதுரை ஹஷான்)

 அரசியலில் 71வருட காலம் ஆதிக்கம் செலுத்திய  ஸ்ரீ லங்கா   சுதந்திர கட்சி,  ஐக்கிய தேசிய கட்சி ஆகிய  இரு  கட்சிகளினாலும்   எவ்வித முன்னேற்றகரமான   அரசியல் நிர்வாகமும்  செயற்படுத்தப்படவில்லை. ஊழல் மோசடிகள் மிகுந்த இவ்விரு கட்சிகளின் போலியான வாக்குறுதிகளுக்கு  நாட்டு  மக்கள்  இம்முறையும் ஏமாற கூடாது. 

மோசடியாளர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமே தவிர  கால மாற்றத்திற்கு அமைய  புதுப்பிக்கப்பட கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அதுநிதி தெரிவித்தார்.

உத்தேச  ஜனாதிபதி தேர்தல் மும்முனை   போட்டியினை கொண்டுள்ளது. பொதுஜன  பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி   ஆகிய   தரப்பினருக்கு சவால் விடுக்கும் விதமாகவெ  இம்முறை   மக்கள் விடுதலை முன்னணி  ஜனாதிபதி வேட்பாளரை  களமிறக்கியுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும்,  ஐக்கிய தேசிய கட்சியும் 71வருட  காலம முறையற்ற அரசியல் பின்னணியையே கொண்டுள்ளது.

தேர்தல் காலத்தில் இவ்விரு கட்சிகளும் ஒருவருக்கொருவரை  தூற்றியே   ஆட்சியமைத்துக் கொண்டுள்ளது.  .

ஆகவே  இவ்விரு தரப்பினரும் அரசியலில்  இருந்து முழுமையான புறக்கணிக்கப்பட வேண்டும்.  புதிய ஒரு  அரசியல் மார்க்கத்தை தெரிவு செய்ய  வேண்டியது  தற்போதைய  தேவையாக காணப்படுகின்றது.

ஊழல்  மோசடியாளர்களிடம் மீண்டும் மீண்டும் ஆட்சியதிகாரம் கிடைக்கப் பெற்றால்  எவ்வித மாற்றங்களும் ஏற்படாது.  உத்தேச  ஜனாதிபதி தேர்தலில் முறைக்கேடான  இவ்விரு தரப்பினருக்கும் நாட்டு மக்கள் தகுந்த அரசியல் தீர்மானத்தை மேற்கொண்டு  பாடம்  கற்பிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/63023

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.