Jump to content

சைவ சமயத்துக்கு தலைமைப்பீடம் அவசியம்

Recommended Posts

பதியப்பட்டது

19276.jpg

இலங்கை பெளத்த நாடு என்பதே ஆட்சியாளர்களின் உச்சாடணம் என்பதால் பெளத்த மதத்துக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படமாட்டாது.

மாறாக கத்தோலிக்க மதத்தைப் பொறுத்த வரை கத்தோலிக்க சிங்களவர்களும் இருப்பதன் காரணமாகவும் வல்லாதிக்க நாடுகள் கத்தோலிக்க மதம் சார்ந்தவை என்பதாலும் இலங்கையில் கத்தோலிக்க நிந்தை என்ற பேச்சுக்கே இடமில்லை.

இதற்கு மேலாக இஸ்லாமியத்தில் கைவைத்தால், கழுத்து வெட்டும் நாடுகள் பெற்றோலை வெட்டி விடும் என்ற பயம். எனவே இஸ்லாமியத்துக்கும் எந்த ஆபத்தும் இல்லை. மாறாக சைவ சமயம் இந்த நாட்டின் ஆதிச் சமயம். 

இலங்கை வேந்தன் இராவணன் சிறந்த சிவபக்தன். இலங்கையை சிவபூமி என்று திருமூலர் நாயனார் புகழ்ந்துரைத்துள்ளார். இப்படியயல்லாம் இருந்தும் சைவ சமயத்தை என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள். கேட்பதற்கு ஆள் உள்ளூரிலும் இல்லை. வெளிநாடுகளிலும் இல்லை என்ப தன் காரணமாக சைவ சமயத்துக்கு ஒரு சதமும் மதிப்பில்லை என்றாயிற்று.

இந்த உண்மையை சைவ மதத் தலைவர்கள் உணர்ந்தாக வேண்டும். அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நல்லை ஆதீனத்தில் சைவ சமயத் தலைவர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு தொடர்பில் தகவல் தெரிவித்த சைவ சமயத் தலைவர்கள்; வெறும் வேலை, செப்படி வித்தை என்று கூறினார்கள். ஆக, இந்தச் சந்திப்பானது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையேயன்றி வேறில்லை என்பது புரிதற்குரியது.

தவிர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டு மல்ல இலங்கையில் யார் பிரதமராக இருந் தாலும் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இதுவே நிலைமை.

இதில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சைவ சமயத்தை மதிப்பதில்லை. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் தென்கயிலை ஆதீன சுவாமிகளுக்கு ஒரு பேரினவாதி கொதி நீரால் ஊற்றிய சம்பவம் நம் எல்லோர் மனதையும் சுட்டுக் கொண்டது. ஆனால் இன்று வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்குக் கண்டனம் கூடத் தெரி விக்கவில்லை எனின் சைவ சமயத்துக்கு இருக்கக்கூடிய மதிப்பு என்ன என்பதை சைவ சமயத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

அதேநேரம் சைவ சமயத்தை மதிக்க வைப்போம் என்ற உறுதிமொழியையும் நாம் எடுத் தாக வேண்டும்.

இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் முதலில் சைவ சமயத்துக்கென ஒரு தலைமைப் பீடத்தை உருவாக்க வேண்டும்.

அந்தத் தலைமைப்பீடம் என்ன சொல்கிறதோ அதன்படியே சைவ மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கும்போது அரசியல்வாதிகள் கைகட்டி வாய்பொத்தி நிற்பார்கள்.

பெளத்த பீடங்களில் அரசியல்வாதிகள் எப்படி வளைந்து வந்தனம் செய்கிறார்களோ அதுபோல சைவத் தலைமைப்பீடங்களுக்கும் வருகின்ற அரசியல்வாதிகள் குந்தியிருந்து கும்பிடு போடுவர்கள். இது நிச்சயம் நடக்கும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19276&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த பதவிக்கு யாழ் களத்திலேயே பல பொருத்தமான ஆட்கள் உள்ளார்களே?

Posted
4 hours ago, ampanai said:

அதேநேரம் சைவ சமயத்தை மதிக்க வைப்போம் என்ற உறுதிமொழியையும் நாம் எடுத் தாக வேண்டும்.

இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் முதலில் சைவ சமயத்துக்கென ஒரு தலைமைப் பீடத்தை உருவாக்க வேண்டும்.

அந்தத் தலைமைப்பீடம் என்ன சொல்கிறதோ அதன்படியே சைவ மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கும்போது அரசியல்வாதிகள் கைகட்டி வாய்பொத்தி நிற்பார்கள்.

தலைமைப்பீடம் என்று வரும் போது அரசியல் தலையீடுகள், நிர்வாக ஊழல்கள் என்று தேவையற்ற அவப்பெயர்கள் சைவத்திற்கு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, ஏற்கனவே இயங்கும் உள்ளூர் சைவ அமைப்புகளூடாக மக்கள் நலத் தொண்டுகள், அறநெறி வகுப்புகள் போன்ற செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் சைவநெறியைத் தழைக்கச் செய்வதுடன், சமூகச் சீர்கேடுகளையும் குறைக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

சைவர்களின் நம்பிக்கையுள்  அனாவசியமாக மூக்கை நுழைப்பவர்கள், போலி முற்போக்குவாதிகள் போன்றோறோரின் விஷமப்பிரச்சாரத்திலிருந்து சைவர்களை மீட்டெடுக்க இது உதவலாம். 😊

https://yarl.com/forum3/topic/231067-’அறநெறி-வகுப்புகளால்-குற்றச்செயல்கள்-தடுக்கப்படுகின்றன’/?tab=comments#comment-1393142

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சைவசமயம் என்றால் என்ன?
இது இந்துசமயத்துக்குள் இல்லையா?
இந்து மதத்துக்கு ஏற்கனவே ஆர் ஸ் ஸ் வாரியர்கள் அவர்  இவர் என்று 
பல தலைவர்கள் இருக்கிறார்கள் தானே?

ஏன் இப்ப இவர்கள் தணிக்கவாடி ஆட நிற்கிறார்கள்? 

Posted

மதம் ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை. அந்த வரையறைக்குள் அதை வைத்திருக்க வேண்டும். பொது இடங்களில் எதிரில் நிற்பவர்  எந்த மதத்தை சார்ந்தவர்  என்பது மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதே சிறந்த நல்லிணக்கம். அப்படியான நிலையில நாடும் மக்களும் பொருளாதார வளர்சசி அடைவார்கள். குற்றச்செயல்கள. குறையும். இலங்கை  இந்தி யா போன்ற  நாடுகளில் இப்போதைக்கு இது ஒரு கனவுதான் . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் காலனித்துவ ஆட்சி நிலவியபோது ஒல்லாந்தர் போத்துகேயர் காலத்திலும் இறுதியில் ஆங்கிலேயர் இருந்தபோதும் வகை தொகையின்றி இலட்சக்கணக்கில் சைவர்கள் வாழ்வாதாரம் தொழில் கல்வி வேறு காரணங்களுக்குமாக மதம் மாற ஒப்புக்கொண்டார்கள். அண்மைகாலங்களில் போர் ஓய்வுக்குவந்தபின் ஏற்பட்ட கஸ்டமாக வாழக்கை நிலையை காரணம்காட்டி சைவசமயத்தைச் சார்ந்தவர்களை மதம்மாற்றி கவந்து இழுப்பதில் வேறு சமயங்களைச் சார்ந்த மதம்மாற்றிகள் பல வழிகளிலும் முயற்சிப்பதையும் கேள்விப்படுகிறோம். ஏற்கனவே பல சைவர்கள் இவர்களால் மதம் மாற்றப்பட்டும் விட்டார்கள். இன்றும் இந்த நிலமை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. எமது அரசியல்வாதிகள் இதைக்கண்டு ஆவன செய்வார்கள்  என்று நாம் நம்புவதில் பயனில்லை.

தமிழர்கள் ஒரு மையக் கட்டமைப்பை இஸ்தாபிப்பதன் மூலம் தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கமைத்து அவர்களை  ஒரே கோட்டில் பயணிக்கவைக்க வேண்டும். அவர்களுக்கான வேலைத்திட்டங்களை பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் அது மதத்தலைவர்கள் பக்கமிருந்து உருவாகக்கூடாது. இன்று அரசியல் தலைவர்கள் ஏட்டிக்கு போட்டியாக இயங்குவதும், தான் சொல்வது எடுபடவில்லையென்றால் வெளியேறி புது கட்சி தொடங்குவதும் வழக்கமாகிவிட்டது. தமிழினம் தனது சொந்த பிரச்சினைகளையே பேசி தீர்க்கும் நாதியில்லாத ஒரு இன ஒற்றுமையற்ற  முரண்பாடுள்ள சமுதாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. உண்மையில் நாம் திட்டமிட்டு அப்படி மாற்றப்பட்டுள்ளோம். இதனால் இலங்கையின் அரசியல் அரங்கில் எமது உரிமை தனித்துவம் தொழில் வாய்ப்பு கல்வி பொருளாதாரம் என்பன சிங்கள ஆட்சியாளர்களால் சூறையாடப்படுகிறது. விடுதலைப்போரின்போது ஆட்சியாளரின் வாசல் வரைக்கும் கொண்டுசெல்லப்பட்டிருந்த இனப் பிரச்சினையை இனவாத சிங்கள ஆட்சியாளர்கள் சாணக்கியமாக நகர்த்தி தமிழ்மக்களின் வீட்டு வாசலில் கொண்டுவந்து போட்டுவிட்டிருக்கிறார்கள். 

சிறுபான்மையினங்கள் மோதி உடைக்க முடியாத ஒரு அரசியல் அரணை சிங்கள இனவாதிகள் கட்டியெழுப்பிவிட்டார்கள்.  தமிழினத்தின்அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெறும் சம்பந்தனும் சுமந்திரனும் போதாது. இன்னும் வேறு நல்ல தலைவர்களும் தேவை. இந்த விடயத்தை இவர்கள் இருவரும் அல்லது தமது கட்சி தீர்த்து வைக்கும் என்று நம்புவதே முட்டாள்தனம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலைத் தேய நாடுகளில் அண்ணளவாக  25% - 30% வரை எந்த மதத்தை சார்ந்தவராகவும் இருப்பதில்லை , ஜப்பானில் இது 52% ஆக உள்ளது .

கீழைத்தேய நாடுகளில் இது 1% விடவும் குறைவு !!

ஏதாவது சேதி இருக்கின்றதா இங்கே  ??

Posted
1 minute ago, சாமானியன் said:

மேலைத் தேய நாடுகளில் அண்ணளவாக  25% - 30% வரை எந்த மதத்தை சார்ந்தவராகவும் இருப்பதில்லை , ஜப்பானில் இது 52% ஆக உள்ளது .

கீழைத்தேய நாடுகளில் இது 1% விடவும் குறைவு !!

ஏதாவது சேதி இருக்கின்றதா இங்கே  ??

இருக்கிறது. அது தான் மேலைத்தேய நாடுகள் முன்னேறி உள்ளன. மதங்களை கைவிட வேண்டிய அவசியமே இல்லை. அவற்றை கண்டுக்காமல் அது பாட்டுக்கு ஒரு ஓரத்தில் நின்று விளையாட விட்டு விட்டு  மக்கள் தமது காரியங்களை ஆற்றினாலே போதும்  நாடு முன்னேறும். 

Posted
5 hours ago, சாமானியன் said:

மேலைத் தேய நாடுகளில் அண்ணளவாக  25% - 30% வரை எந்த மதத்தை சார்ந்தவராகவும் இருப்பதில்லை , ஜப்பானில் இது 52% ஆக உள்ளது .

கீழைத்தேய நாடுகளில் இது 1% விடவும் குறைவு !!

ஏதாவது சேதி இருக்கின்றதா இங்கே  ??

சகலதும் ஒரு சுழற்சியில் நடக்கலாம். இன்றும் பத்து தலை முறைக்கு பின்னராக மேற்குலகம் மீண்டும் மதத்தில் நம்பிக்கை வைக்க கூடும். அதே வேளையில் கிழக்கில் நம்பிக்கை குறைந்து இருக்கலாம்.

உலகில் ஒரே மதத்திற்கான நாடாக வத்திக்கான் உள்ளது. அதற்காக பலரும் தமது சொத்துக்களை எழுதி வைத்து செல்கிறார்கள். உலகில் மிகவும் செல்வந்த நிறுவனம் இது தான்.

Posted

பல மேலைத்தேய நாடுகளில் வாழும் இந்துக்கள்/சைவர்கள் தங்கள் பிள்ளைகளை, இரண்டாம் தலைமுறையினரை தமது மதம் பற்றிய அறிவை அதிகம் கற்பித்து வளர்ப்பதில்லை. அதே பெற்றோர், தமது பிள்ளைகள் வேற்று மதத்தித்தினரை திருமணம் செய்து மதம் மாறும் நிகழ்வுகளும் உள்ளன. இதன் பின்னர் தாம் தவறு விட்டுவிட்டோமோ என ஏங்குபவர்கள் உண்டு,

இதில் பட்டறிவு கூறும் செய்தி என்னவென்றால், நீ நல்லவனாக இருந்தால் மாட்டு காணாது வல்லவனாகவும் இருக்கவேண்டும். இல்லையேல் நீ இருந்ததிற்கும்  ஒரு நாள் அடையாளம் இருக்காது.   

Posted
10 hours ago, Maruthankerny said:

சைவசமயம் என்றால் என்ன?
இது இந்துசமயத்துக்குள் இல்லையா?
இந்து மதத்துக்கு ஏற்கனவே ஆர் ஸ் ஸ் வாரியர்கள் அவர்  இவர் என்று 
பல தலைவர்கள் இருக்கிறார்கள் தானே?

ஏன் இப்ப இவர்கள் தணிக்கவாடி ஆட நிற்கிறார்கள்? 

எல்லா மதங்கள் போன்றும் எமது மதத்திலும் தீவிர வலதுசாரி போக்குள்ள பிரிவு உண்டு. ஆங்கிலத்தில் "ஆர்த்தடோக்ஸ்" (orthodox) என்ற முத்திரை குத்தப்பட்டு இருக்கும்.

இந்து மதத்தில் அது ஆர்.எஸ்.எஸ். அவர்கள் கொள்கையை இன்றுவரை பெரும்பான்மை இந்துக்கள்/சைவர்கள் ஏற்கவில்லை. வருங்காலத்தில் அது மாறலாம்.   உலகிலே இன்றைய பலம் மிக்க தலைவரான ட்ரம்ப் கூட அவ்வாறான மக்களின் (evangelical christians)ஆதரவை பெற்றே அந்த பதவியை வென்றார்.

இலங்கையில் பல மதங்கள் இருந்தாலும், இந்து/சைவ மதமே அரசியல் கலப்பில்லாமல் உள்ளது, ஆனால், அதை முன்மாதிரியாக பின்பற்றாமல், மற்றைய மதங்களை உசுப்பேத்தியே பெரும்பான்மை சிங்கள இனமும் முஸ்லீம்களும் அரசியல் செய்கின்றனர். இதற்கு இந்துக்கள்/சைவர்களின் பதில்தான் என்ன?   

"அந்தத் தலைமைப்பீடம் என்ன சொல்கிறதோ அதன்படியே சைவ மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கும்போது அரசியல்வாதிகள் கைகட்டி வாய்பொத்தி நிற்பார்கள்".   

Posted
5 minutes ago, ampanai said:

"அந்தத் தலைமைப்பீடம் என்ன சொல்கிறதோ அதன்படியே சைவ மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கும்போது அரசியல்வாதிகள் கைகட்டி வாய்பொத்தி நிற்பார்கள்".   

அப்படி ஒரு  கேவலமான நிலமை தமிழருக்கு  வராது. மக்கள் சுதந்திரமாக  தமது கல்வியறிவுடன் வாக்களிக்க வேண்டும். அதுவே ஜனநாயகம். 21. ம் நூற்றாண்டு 22 ம் நூற்றாண்டை நோக்கி நடை போட வேண்டுமே தவிர 15 ம் நூற்றாண்டை நோக்கி அல்ல. 

Posted
11 hours ago, ampanai said:

சகலதும் ஒரு சுழற்சியில் நடக்கலாம். இன்றும் பத்து தலை முறைக்கு பின்னராக மேற்குலகம் மீண்டும் மதத்தில் நம்பிக்கை வைக்க கூடும். அதே வேளையில் கிழக்கில் நம்பிக்கை குறைந்து இருக்கலாம்.

"சகலதும் ஒரு சுழற்சியில் நடக்கலாம்."

உண்மை தான் அம்பனை. நாம் நம் கண்முன்னே தற்போது நடக்கும் நிகழ்வுகளையும், நமக்குத் தெரிந்த வரலாற்றையும் மட்டுமே கருத்தில் கொண்டு உலகநடப்பு சம்பந்தமான கருத்துக்களை முன் வைக்கிறோம்.

2000மோ, 5000மோ இத்தனை ஆண்டு வரலாறுகள் மட்டும் நமக்கு படிப்பினையாகாது. அந்த வரலாறு கூட முழுமையானதோ, நம்பகரமாதோ தெரியவில்லை. மேலும் இவற்றுக்கும் முந்தைய வரலாறு பற்றி தெளிவான ஆதாரங்கள் இல்லை. 

நமக்குத் தெரிந்த வரலாற்றிலேயே பல சமூகங்கள் ஒருகாலத்தில் எழுச்சியையும், பின்னர் வீழ்சியையும் கண்டதாக அறிகிறோம். இப்போது முன்னேறி இருக்கும் மேலை நாடுகள் பல நூற்றுகளுக்கு முன்னர் இருந்த இடமே தெரியாது. எதுவும் நிரந்தரமல்ல. 

முன்னேறியதாகச் சொல்லப்படும் மேற்கு நாடுகளில் கூட வெள்ளையினத்தவர் இந்து, பௌத்த, இஸ்லாமிய மதத்துக்கு மாறுவதையும் காண்கிறோம். அதற்காக அதை பிற்போக்குத்தனம் என்பதா? 

தென்னாசியா போன்ற கீழைத்தேய நாடுகள் முன்னேறாமைக்கு மதம் காரணமல்ல. ஊழல், படிப்பறிவின்மை, சாதி இவை தான் முக்கிய காரணம். 

11 hours ago, ampanai said:

உலகில் ஒரே மதத்திற்கான நாடாக வத்திக்கான் உள்ளது. அதற்காக பலரும் தமது சொத்துக்களை எழுதி வைத்து செல்கிறார்கள். உலகில் மிகவும் செல்வந்த நிறுவனம் இது தான்.

அது மேலை நாடு. அதனால் அது முற்போக்கானது என்று தான் சிலர் கருதுகிறார்கள் போலும்! 😊

Posted
6 minutes ago, மல்லிகை வாசம் said:

அது மேலை நாடு. அதனால் அது முற்போக்கானது என்று தான் சிலர் கருதுகிறார்கள் போலும்! 😊

பல மேற்குலக நாடுகளில் கத்தோலிக்க பாடசாலை சபையால் பாடசாலைகள் நடாத்தப்படுகின்றன. மற்றையது, பொதுப்பாடசாலை. கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்க உங்கள் இரத்தத்தில் கத்தோலிக்க மதம் இருந்திருக்க வேண்டும். 

இந்த இரண்டிற்கும் நிதியை தரும்பொழுது அவர்கள் எந்த மதம் என கேட்பது இல்லை. 

இந்த பழம்போக்கான முறையை எதிர்ப்பவர்களில் சைவர்கள்/இந்துக்கள் குறைவு. நமக்கு எதுக்கு வீண் வம்பு என்று இருப்பார்கள். ஆனால், உள்ளூர் கோயில் கணக்கு வழக்கில், போர்க்கொடி !
 
10 hours ago, tulpen said:

அப்படி ஒரு  கேவலமான நிலமை தமிழருக்கு  வராது. மக்கள் சுதந்திரமாக  தமது கல்வியறிவுடன் வாக்களிக்க வேண்டும். அதுவே ஜனநாயகம். 21. ம் நூற்றாண்டு 22 ம் நூற்றாண்டை நோக்கி நடை போட வேண்டுமே தவிர 15 ம் நூற்றாண்டை நோக்கி அல்ல. 

உங்களின் கவனத்திற்கு இந்த யாழில் இருந்து வரும் பத்திரிக்கையின் கருத்தை மீண்டும் இணைகின்றேன் 

On 8/18/2019 at 5:06 PM, ampanai said:

இதில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சைவ சமயத்தை மதிப்பதில்லை. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் தென்கயிலை ஆதீன சுவாமிகளுக்கு ஒரு பேரினவாதி கொதி நீரால் ஊற்றிய சம்பவம் நம் எல்லோர் மனதையும் சுட்டுக் கொண்டது.

Posted

தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சைவ சமயத்தை மதிப்பதில்லை. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் தென்கயிலை ஆதீன சுவாமிகளுக்கு ஒரு பேரினவாதி கொதி நீரால் ஊற்றிய சம்பவம் நம் எல்லோர் மனதையும் சுட்டுக் கொண்டது.

இதை விட  லட்சம் மடங்கு தமிழ் மக்கள் துன்பத்தை அனுப்பவித்து விட்டனர். ஒரு ஆதீன சுவாமிகளுக்கு கொதி நீர் பட்ட‍த்தை பற்றி அந்த பத்திரிகை நீலி கண்ணீர் வடிக்கிறது. 

Posted
11 minutes ago, ampanai said:

பல மேற்குலக நாடுகளில் கத்தோலிக்க பாடசாலை சபையால் பாடசாலைகள் நடாத்தப்படுகின்றன. மற்றையது, பொதுப்பாடசாலை. கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்க உங்கள் இரத்தத்தில் கத்தோலிக்க மதம் இருந்திருக்க வேண்டும். 

இந்த இரண்டிற்கும் நிதியை தரும்பொழுது அவர்கள் எந்த மதம் என கேட்பது இல்லை. 

இந்த பழம்போக்கான முறையை எதிர்ப்பவர்களில் சைவர்கள்/இந்துக்கள் குறைவு. நமக்கு எதுக்கு வீண் வம்பு என்று இருப்பார்கள். ஆனால், உள்ளூர் கோயில் கணக்கு வழக்கில், போர்க்கொடி !

சரியாகச் சொன்னீர்கள், அம்பனை. நாங்கள் பொதுவாக பிறமதங்களைப் பற்றி விமர்சிப்பதில்லை. நமது மதத்தை பிறர் விமர்சிக்கும்போது நமது கருத்தைச் சொன்னால் மதவாத முத்திரை குத்துகிறார்கள். 

Posted
14 minutes ago, tulpen said:

இதை விட  லட்சம் மடங்கு தமிழ் மக்கள் துன்பத்தை அனுப்பவித்து விட்டனர். ஒரு ஆதீன சுவாமிகளுக்கு கொதி நீர் பட்ட‍த்தை பற்றி அந்த பத்திரிகை நீலி கண்ணீர் வடிக்கிறது. 

ருல்பென், தமிழர்கள் பல துன்பத்தை அனுபவித்தோம் / அனுபவிக்கிறோம் என்பது பொதுவாக நாமறிந்த ஒன்று. அதற்காக ஒரு பத்திரிகை ஆதீன சுவாமிகளுக்கு கொதிநீர் ஊற்றியதைப் பற்றி எழுதுவது ஏன் நீலிக்கண்ணீர் வடிப்பதாகும். 

மொட்டந்தலைக்கும் முழந்தாழுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். இவ்வாறான உங்கள் கருத்துக்கள் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாகாது.

Posted

இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானது என நினைக்கிறேன்:

மதங்கள் மனிதரைப் பிரிக்கிறது என்ற பொதுவான கருத்தும் இங்கு நிலவுகிறது. உண்மையில் மதங்கள் ஒத்த சிந்தனையுள்ள மக்களை ஈர்த்து ஒற்றுமையாக வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 

மேலும், மதங்களை சாக்காக வைத்து மக்களைப் பிரித்தாளும் அரசியல்வாதிகள், மதங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் தலைவர்கள் போன்றோரே மதங்களின் மேல் அவப்பெயர் வர மூல காரணம். மதங்கள் நல்வழியையே போதிக்கின்றன. ஆனால் அவற்றை ஆயுதமாக எடுக்கும் மனிதர்களால் தான் கலகங்கள் ஏற்படுகின்றன. பிறர் மத நம்பிக்கையில் அனாவசிய குறுக்கீடு செய்வோரும் அதில் அடக்கம். ஆகவே இவை மதங்களின் தவறல்ல.

Posted
18 minutes ago, மல்லிகை வாசம் said:

கடவுளுக்கு சக்தி இருந்தால் இதை எல்லாம் தடுக்கலாம் தானே. மனிதரை காப்பாற்றும் கடவுள்களை நான் இது வரை காண வில்லை. கடவுள்களை காப்பாற்றும் மனிதர்களை தான் கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மல்லிகை வாசம் said:

நல்ல கதை நீளம்போதாது ......
மில்லியன் கணக்கில் பரிய போர்மூலம் மக்களை கொன்றதில் இருந்து 
குச்சுஒழுங்கையில் இருந்த குஞ்சனை கொன்றவரை இந்த மதங்களும் 
அதை நம்பும் மூடரும் இருக்கிறார்கள் என்பதுதான் உலக வரலாறு. 

சைவமத நாயன்மார்களான அப்பர் சுந்தரர் சம்மந்தர் வரை கொலையுண்டு போன வரலாறுதான் 
எமக்கு மிஞ்சியது ........... 
அப்பாவி மக்களை கொன்று அடிமைகளாக்கி இல்லாத பொய் புரட்டுக்கள் ஆபாசகதைகள் 
காட்டுமிராண்டி பழக்க வழக்கங்களை புகுத்தி இந்துக்கள் என்று போன்றவை போர்த்தி சாமர்த்தியமாக 
காட்டு விலங்கிலும் கீழாக இன்று தமிழரை சொந்த புத்தியையோ ....யாரும் சொல்லும் கருத்துக்களையோ 
கேட்க முடியாது மதம் பிடித்த யானைகள் ஆக்கி வைத்த்திருக்கிறது என்பதுக்கு ஈழமும் தமிழகமும் சாட்சியாக இருக்கிறது. 

மக்களை ஏய்த்து மூளைச்சலவை செய்து ஏழை எளியவர் தொடங்கி பணக்காரர் வரை ஏமாற்றி 
பணம்பறித்து ஒரு குறித்த சமூகமே எந்த வேலை வெட்டியும் இல்லமால் வளரும் கூடாரம்களாக 
எமது முன்னையோர் கட்டிய கோவில்கள் ஆகி இருக்கிறது. 

தமிழனின் மதம் சிவன் மேலே இருக்கிறான் கீழே இருக்கிறான் என்று மாயாஜாலம் செய்ததில்லை 
நீதான் சிவன் என்றுதான் சொல்கிறது. அகங்காரம்  ஆசை கோபம் காமம் போன்றவை கடந்து நீ நீயாக இருந்தால்  நீதான் சிவன் என்றுதான் சொல்கிறது. 
இப்போது கூட பேச்சு  வழக்கில் சும்மா எந்த சோலியூம் இல்லாமல் இருப்பவர்கள் .... "அவன் செத்தே சிவனே என்று இருந்தான்" என்று சொல்வதுண்டு. 
அப்போது அது இப்படி வெறி பிடித்த மனிதரை உருவாக்கும் மாதமாக இருக்கவில்லை ... மனிதருக்கு வாழும் வழியை  காட்டும் ஓர் மார்க்கமாகவே இருந்தது. 

Posted
4 hours ago, tulpen said:

கடவுளுக்கு சக்தி இருந்தால் இதை எல்லாம் தடுக்கலாம் தானே. மனிதரை காப்பாற்றும் கடவுள்களை நான் இது வரை காண வில்லை. கடவுள்களை காப்பாற்றும் மனிதர்களை தான் கண்டுள்ளேன்.

இதை எல்லாம் தடுப்பது மட்டும் கடவுளின் வேலை இல்லை, ருல்பென். சைவ சமயத்தில் நாம் கற்றதின் படி கடவுளின் தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் என்பனவாகும்.

நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு ஆற்றல் உண்டு. அதை நாம் அடக்க முடியாது. அதை முழுதாக விபரிக்க முடியாது. 

மனிதனை விஞ்சிய சக்தி இல்லை எனில் மனிதனே போரால், இயற்கையால், நோயால் வரும் அழிவுகளைத் தடுத்திருக்கலாமே? எல்லாம் நமது சக்தியை விஞ்சிய ஏதோ ஒரு சக்தியால் தான் இயங்குகிறது. அழித்தலும் அந்த இயக்கத்தின் ஓர் பகுதியே! 

Posted
2 hours ago, Maruthankerny said:

மில்லியன் கணக்கில் பரிய போர்மூலம் மக்களை கொன்றதில் இருந்து 
குச்சுஒழுங்கையில் இருந்த குஞ்சனை கொன்றவரை இந்த மதங்களும் 
அதை நம்பும் மூடரும் இருக்கிறார்கள் என்பதுதான் உலக வரலாறு. 

மருதங்கேணி, எதற்காக எல்லாவற்றுக்கும் மதத்தின் மீது பழி போடுகிறீர்கள்? ஆதிக்கம் செலுத்த நினைக்கும் அதிகார வர்க்கம் பேராசை காரணமாகப் போர் தொடுக்கிறது. மதங்களின் இயல்பு இதுவல்ல. 

மதங்களுடன் மனிதர்களின் பொன், பொருள், நிலம், பெண் மீதான ஆசையைக் கலக்காதீர்கள். இவை தான் போருக்கு மூல காரணம். கூடவே இந்த ஆதிக்க வெறியர்கள் தமது மதத்தையும் தாம் ஆட்சிப்படுத்திய தேசங்களில் பரப்பினார்கள். இது ஆட்சியாளர்களின் வெறியே தவிர, மதங்கள் மீதான தவறல்ல.

2 hours ago, Maruthankerny said:

சைவமத நாயன்மார்களான அப்பர் சுந்தரர் சம்மந்தர் வரை கொலையுண்டு போன வரலாறுதான் 
எமக்கு மிஞ்சியது ........... 
அப்பாவி மக்களை கொன்று அடிமைகளாக்கி இல்லாத பொய் புரட்டுக்கள் ஆபாசகதைகள் 
காட்டுமிராண்டி பழக்க வழக்கங்களை புகுத்தி இந்துக்கள் என்று போன்றவை போர்த்தி சாமர்த்தியமாக 
காட்டு விலங்கிலும் கீழாக இன்று தமிழரை சொந்த புத்தியையோ ....யாரும் சொல்லும் கருத்துக்களையோ 
கேட்க முடியாது மதம் பிடித்த யானைகள் ஆக்கி வைத்த்திருக்கிறது என்பதுக்கு ஈழமும் தமிழகமும் சாட்சியாக இருக்கிறது. 

மக்களை ஏய்த்து மூளைச்சலவை செய்து ஏழை எளியவர் தொடங்கி பணக்காரர் வரை ஏமாற்றி 
பணம்பறித்து ஒரு குறித்த சமூகமே எந்த வேலை வெட்டியும் இல்லமால் வளரும் கூடாரம்களாக 
எமது முன்னையோர் கட்டிய கோவில்கள் ஆகி இருக்கிறது. 

மீண்டும் இவை இந்து மதத்தின் குறைபாடு அல்ல; ஆதிக்க வெறியர்களின் தவறே!

Posted
2 hours ago, Maruthankerny said:

தமிழனின் மதம் சிவன் மேலே இருக்கிறான் கீழே இருக்கிறான் என்று மாயாஜாலம் செய்ததில்லை 
நீதான் சிவன் என்றுதான் சொல்கிறது. அகங்காரம்  ஆசை கோபம் காமம் போன்றவை கடந்து நீ நீயாக இருந்தால்  நீதான் சிவன் என்றுதான் சொல்கிறது. 
இப்போது கூட பேச்சு  வழக்கில் சும்மா எந்த சோலியூம் இல்லாமல் இருப்பவர்கள் .... "அவன் செத்தே சிவனே என்று இருந்தான்" என்று சொல்வதுண்டு. 
அப்போது அது இப்படி வெறி பிடித்த மனிதரை உருவாக்கும் மாதமாக இருக்கவில்லை ... மனிதருக்கு வாழும் வழியை  காட்டும் ஓர் மார்க்கமாகவே இருந்தது. 

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. என்னைப் பொறுத்தவரை இன்றும் இந்து மதம் மனிதருக்கு வாழும் வழி காட்டும் ஓர் மார்க்கமாகவே இருக்கிறது. ஆனால், மக்கள் தான் நல்லவற்றை விட்டு விட்டு வேண்டாதனவற்றை நாடுகின்றனர்.

உதாரணத்திற்கு, நித்தியானந்தா நல்ல ஆன்மிக கருத்துக்களை சொன்ன போது பலரும் அவரைக் கவனிக்கவில்லை. ஆனால், அவரது மன்மதலீலை பற்றிய வீடியோ வெளிவந்த பின்னர் தான் அவரைப்பற்றி தேடுகிறார்கள், பேசுகிறார்கள் - அதுவும் அவரது லீலைகள் பற்றித் தான். (இங்கு நித்தியானந்தாவுக்காக வக்காலத்து வாங்க நான் வரவில்லை; நடப்பதைச் சொன்னேன்). ஆகவே, பலரது தேடல் இந்த லட்சணத்தில் இருக்கும் போது மதங்களில் குறை காண்பது சரியல்ல. அவை காட்டும் நல்வழியில் பயணிப்பது நமது தெரிவு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மல்லிகை வாசம் said:

மருதங்கேணி, எதற்காக எல்லாவற்றுக்கும் மதத்தின் மீது பழி போடுகிறீர்கள்? ஆதிக்கம் செலுத்த நினைக்கும் அதிகார வர்க்கம் பேராசை காரணமாகப் போர் தொடுக்கிறது. மதங்களின் இயல்பு இதுவல்ல. 

மதங்களுடன் மனிதர்களின் பொன், பொருள், நிலம், பெண் மீதான ஆசையைக் கலக்காதீர்கள். இவை தான் போருக்கு மூல காரணம். கூடவே இந்த ஆதிக்க வெறியர்கள் தமது மதத்தையும் தாம் ஆட்சிப்படுத்திய தேசங்களில் பரப்பினார்கள். இது ஆட்சியாளர்களின் வெறியே தவிர, மதங்கள் மீதான தவறல்ல.

மீண்டும் இவை இந்து மதத்தின் குறைபாடு அல்ல; ஆதிக்க வெறியர்களின் தவறே!

53 minutes ago, மல்லிகை வாசம் said:

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. என்னைப் பொறுத்தவரை இன்றும் இந்து மதம் மனிதருக்கு வாழும் வழி காட்டும் ஓர் மார்க்கமாகவே இருக்கிறது. ஆனால், மக்கள் தான் நல்லவற்றை விட்டு விட்டு வேண்டாதனவற்றை நாடுகின்றனர்.

உதாரணத்திற்கு, நித்தியானந்தா நல்ல ஆன்மிக கருத்துக்களை சொன்ன போது பலரும் அவரைக் கவனிக்கவில்லை. ஆனால், அவரது மன்மதலீலை பற்றிய வீடியோ வெளிவந்த பின்னர் தான் அவரைப்பற்றி தேடுகிறார்கள், பேசுகிறார்கள் - அதுவும் அவரது லீலைகள் பற்றித் தான். (இங்கு நித்தியானந்தாவுக்காக வக்காலத்து வாங்க நான் வரவில்லை; நடப்பதைச் சொன்னேன்). ஆகவே, பலரது தேடல் இந்த லட்சணத்தில் இருக்கும் போது மதங்களில் குறை காண்பது சரியல்ல. அவை காட்டும் நல்வழியில் பயணிப்பது நமது தெரிவு. 

உங்களுக்கு சுருக்கமாக நான் கூற கூடியது 
பல முஸ்லீம்களுக்கு இங்கு நான் கூறுவதுதான் 

2000 .... 3000..... 4000 வருட பழமையான குரான் பைபிள் மற்ற புரட்டுகளிலும்  
என்ன எழுதி இருக்கிறது என்பது எனக்கு தேவை இல்லை .... எனது கருத்து அவை பற்றியதும் இல்லை.
இப்போ   ... இன்று 
இந்து ..
முஸ்லீம் ...
கிறிஸ்தவன் ...
என்று சொல்பவன் இது என்னுடைய மதம் சார்ந்தது என்று சொல்லிக்கொண்டு வீதிகளில் எதை செய்கிறானோ 
அது பற்றியதுதான் எனது கருத்தும் ஆட்சேபனையும் ..... அதுதான் என்னை பாதிக்கிறது 
வேறு பல மக்களை பாதிக்கிறது...... பல தேசங்கள் இனங்களை அழிக்கிறது. 

இந்துமதம் என்பதே இல்லாத ஒன்று ...
அதை ஏன் திரும்ப திரும்ப வழிகாட்டுகிறது என்று எழுதுகிறீர்கள்?
அப்படி என்ன வழி  காட்டுகிறது என்று சுருக்கமாக ஒரு பந்தி எழுதுகிறீர்களா 
வாசித்து அறிவோம்.  

குரான் பைபிள்  கீதை என்று புகழும் புத்தங்களை விட 
எவ்ளவோ நல்ல கருத்து உள்ள புத்தகங்கள் இன்று மில்லியன் கணக்கில் இருக்கிறது 
பட்டுகோட்டை  எழுதியதுபோல் ......
எல்லாம்தான் படிச்சீங்க ..... என்ன செய்து கிழிச்சீங்க? 

நீங்களே பட்டும் படாமல் ... தயங்கி தயங்கி எழுதுவதுதான் உண்மையும் 
இன்றைய உலக யதார்த்தமும் ..... இந்த பாழாய்ப்போன மதங்கள் எல்லாம் பெண்களை அடிமை செய்யவும் 
இன்னொரு இனத்தை அழிக்கவும் ... இன்னொரு சமூக குழுமத்தை நசுக்கவும் .....
மனிதர்களை ஆறாம் அறிவை செயல்படுத்தாது மிருகங்கள் போல வைத்திருக்கவும்தான் 
இருக்கிறது தவிர  ...... உலகில் மதங்களால் ஏதும் நல்லது நடக்குமெனில் 
அதை சி ஐ எ  மொஸாட் போன்ற பாரிய உளவுதுறைகள் பரிய பண செலவில் பாரப்ப மாட்டார்கள். 
அதையும்தாண்டி  சமூகம் மதத்தால் நன்மை அடைகிறது என்று இருந்தால் எழுதுங்கள் 
அது பற்றி விவாதிப்போம். 

Posted
25 minutes ago, Maruthankerny said:

இப்போ   ... இன்று 
இந்து ..
முஸ்லீம் ...
கிறிஸ்தவன் ...
என்று சொல்பவன் இது என்னுடைய மதம் சார்ந்தது என்று சொல்லிக்கொண்டு வீதிகளில் எதை செய்கிறானோ 
அது பற்றியதுதான் எனது கருத்தும் ஆட்சேபனையும் ..... அதுதான் என்னை பாதிக்கிறது 

மீண்டும் மீண்டும் கூறிவிட்டேன். அது மதத்தின் தவறல்ல. அவர்கள் செய்வது போல் செய்வது தான் எனது வழியுமல்ல. அவரது செயல்கள் உங்களைப் பாதித்தால் நேருக்கு நேராகச் சென்று அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டியது தானே? எதற்காக உண்மையான followersஇடம் இந்தக் கேள்வி??

30 minutes ago, Maruthankerny said:

உலகில் மதங்களால் ஏதும் நல்லது நடக்குமெனில் 
அதை சி ஐ எ  மொஸாட் போன்ற பாரிய உளவுதுறைகள் பரிய பண செலவில் பாரப்ப மாட்டார்கள். 

இது மதங்களையும் தாண்டி சிந்திக்க வேண்டிய சமூகப்பிரச்சினைகள். இதில் உள்ள அரசியல் சிக்கலானது. மதத்தை இதற்குள் இழுக்காதீர்கள். மேலும் முதல் பந்தியில் எழுதியதே இதற்கான பதிலும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.