Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரொக்சி முருகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் இப்ப குளிர்காலம் தொடங்கிவிட்டது ,சனி,ஞாயிறுகளில் வீட்டுக்குள்ளஅடைபட்டு இருக்கவேண்டிகிடக்கு.அன்று கதிரவன் உசாராக சூட்டை பரப்பிக்கொண்டிருந்தான்.அவன் சூடாக இருப்பதை உணர்ந்த நான் எம்பெருமான் சிட்னி முருகனை சென்று தரிசிக்க வெளிக்கிட்டேன்.வழமையாக கோடைகாலங்களில் மாலைநேரங்களில் தான்  சிட்னி முருகனை போய் சுகம் விசாரிக்கிறனான் மாலை நேரங்களில் அதிகமாக பிரசாதங்கள் கிடைக்கும் அதன் மூலம் பசிஅடங்காவிட்டால் முருகனின்ட ரெஸ்ரொரன்டில் எதாவது வாங்கி சாப்பிட்டு பசியை போக்கலாம். குளிர்காலத்தில அவனை போய் சந்திப்பது குறைவு எதாவது நொண்டி சாட்டை சொல்லி வீட்டுக்குள்ளே இருந்திடுவேன் ..

 

அன்று காலநிலை ஒரளவு நன்றாக இருந்தது இன்றைக்கும் சாட்டு சொன்னால் எம்பெருமான் கோவித்துக்கொள்வான் என்ற பயத்தில  அவனது கோட்டைக்கு சென்றேன்.

கார் கதவை திறந்து இறங்க முதல் ஒருத்தர்  அருகே ஒடிவந்தார்.

"கிடைச்சதோ"

ஒரு கணம் நான் திகைத்துவிட்டேன்,காசு கிடைச்சதோ அடி கிடைச்சதோ ,எது கிடைச்சது என கேட்கிறார் என முழிப்பதை அறிந்தவர்

"போஸ்ட் பொக்ஸுக்குள்ள ஒரு கடிதம் போட்டேன் கிடைச்சதோ"

"ஒம்மோம்  ..... அந்த மொட்டை கடிதமோ"

"யூ கான்ட் செ தட் ,இட் இஸ் பெட்டிசன்"

"நான் அதை மொட்டை கடிதமாத்தான் பார்க்கிறேன்"

"அப்ப உந்த கொமிட்டிக்காரங்கள் செய்யிறதெல்லாம் சரி என்று போட்டு சும்மா இருக்கப்போறீயளே"

"எனக்கும் கொமிட்டிக்காரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ட

டிலிங் எல்லாம் எம்பெருமான்  முருகனுடன் மட்டும் தான்"

"சும்மா இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்கள் வாக்குகளை எங்களுக்கு தந்தால் உந்த கொமிட்டிக்காரங்களுக்கு  ஒரு பாடம் படிப்பிக்கலாம்"

" நான் மெம்பர் இல்லை"

 "ஏன்டாப்பா பொய் சொல்லுகிறாய் உன்ட பெயர் மெம்பர்லிஸ்டில் இருக்கு நான் பார்த்து போட்டுத்தான் உன்னை மறிச்சனான்."

"நானில்லை மனிசி தான் மெம்பர் "

"அப்படியே அப்ப உன்னோட கதைச்சு பிரயோசன்மில்லை,அவளிட்ட கேட்கிறேன்"

"அண்ணே  குடும்பத்தில புடுங்குபாடுகளை உண்டாக்காமல் சும்மா விடுங்கோ"

"இதில என்ன புடுங்குபாடு இருக்கு"

"நீங்களும் உந்த கொமிட்டிகாரரும் செய்யிற அட்டாகாசம் ஊர் அறிந்த விடயம் இதுக்குள்ள என்ட மனிசியையும் அனுப்ப நான் தயாரில்லை"

சரி புதுசா என்ன திட்டம் கொண்டு வாறீயள் "

" எல்லாம் பழசுதான் கார் பார்க்,தேர்முட்டி கட்டுற விடயங்கள் தான்"

"என்ன ஒரு நூறு பேர் இருப்பியள் நீங்களே  உங்களுக்குள் கதைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கலாம் தானே,உந்த கார் பார்க் விடயம் ஐந்தாறு வ‌ருசம் இழுபடுதானே"

" இந்த முறை எப்படியும் ஒரு முடிவு எடுக்க வேணும் அது தான்proxyக்கு ஒடிதிரிகின்றேன் ,முப்பது சேர்த்து போட்டன் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் மற்ற கோஸ்டியை மட‌க்கி போடலாம்"

"சரி பின்னேரம் வீட்ட வாங்கோ வாங்கி தாரன்"

முருகனை வழிபட உள்ளே சென்றேன் வேலுடன் சாந்தசொருபமாக வீட்டிருந்தான் .முருகா உன்னை காக்க உன் பக்தர்கள் போட்டி போட்டு அடிபடுகிறார்கள் நீ என்னடா என்றால் "நான் உண்டு என் வேலையுண்டு" என்று இருக்கின்றாய் என புலம்பிகொண்டிருந்தேன்.

 

"டேய் லூசா நீயும் போய் அப்படி இருந்து பார் நிம்மதியாக இருக்கும்"

சொல்லுவது போல தனது வேலில் இருந்த அழகிய ரோஜா பூவை எனது காதில் வைத்தான்.

இதுக்கு பிறகும் முருகனுடன் வாக்குவாதப்பட மனம் இடம் கொடுக்கவில்லை சுற்றி கும்பிட்டுவிட்டு வெளியேறி

வெளி வீதியில் இறங்கி நடக்க தொடங்கினேன்.

பின் தோளில் ஒருவர் தட்டி

"இப்ப தான் நினைச்சனான் உம்மை சந்திக்க வேணும் என்று ,கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது என இதைதான் சொல்லுறது,  முருகன் விடமாட்டான் அவ‌னின்ட விடயங்கள் தோல்விய‌டைய "

இவரை எனக்கு பெரிதாக பழக்கமில்லை இரண்டு மூன்று தடவை மற்றுமோர் ந‌ண்பரின் விருந்துபாசரத்தில் உட்சாக பாணம் அருந்தியதன் மூலம் பழக்கமானவர்.ஆங்கிலம் ,தமிழ் சிங்களம் எல்லாத்திலும் பாண்டித்தியம் பெற்றவர் அதுமட்டுமல்ல ஒர் பொறியியாளர்.

மற்றும் அரசியல் ,கிறிக்கட்,விளையாட்டு போன்ற செய்திகளும் ந‌ன்றாகவே அறிந்து வைத்திருப்பவர்.

" ஹலோ ! என்ன விடயமா என்னை சந்திக்க இருந்தீங்கள்?"

"உம்மட புரொக்சியை எனக்கு தரவேணும் உவங்களுக்கு ஒரு பாடம் படிபிக்க வேணும்"

" யாருக்கு "

"உந்த கோவில் கொமிட்டிக்காரங்களுக்கு"

நானும் ஒன்று தெரியாத மாதிரி

 "கோவில் நல்லாதானே நடக்குது, கொமிட்டிக்காரார் நல்லாத்தானே நடத்தினம்."

"நீர் எங்க இருக்கிறீர் ஐசெ,உந்த கார் பார்க்கும்,தேர்முட்டியும் கட்டுறதிலதான்  பிரச்சனை"

" முருகனிட்ட இடம் இருக்கு ,பணம்  இருக்கு சந்தோசமா கட்டிமுடிக்கலாம் தானே"

"மற்ற கோஸ்டி 200 கார்விடக்கூடிய மாதிரிதான் பிளான் வைச்சிருக்கினம்,எங்கன்டஆட்களின்ட பிளான்படி 225 கார் விடலாம்"

"என்ன 25 கார் விடுகிறதில தான் பிரச்சனையே"

"அதுமட்டுமல்ல உந்த புரஜக்ட் எங்கன்ட ஆட்கள் தலைவராகவும் செயலாளராகவும் இருக்கும் பொழுது தான் தொடங்கி வைச்சவயள்,அதை நாங்கள் தானே முடிச்சு வைக்க வேணும் "

"ஒரு பொது நோக்கோடு செய்கிற காரியத்தை யார் தொடக்கினால் என்ன முடிச்சால் என்ன"

" "நீர் என்ன ஐசே சிம்பிளா சொல்லிபோட்டிர்,நோங்கு குடிக்கிறது ஒருத்தன் விரல் சூப்பிறது இன்னோருத்தனே,அவையள் தேர்முட்டியை கிழக்கில் கட்டவேணும் என்டிச்சினம் நாங்கள் எதிர்த்து வடக்கில் கட்ட வேணும் என்று சொல்லி போட்டம் "

"அப்படியே சங்கதி"

" நான் முப்பது புரோக்சி சேர்த்திட்டன் உம்மடைய தாரும்"

"உமக்கு தந்திருப்பன் கோவிலுக்கு வரும் பொழுது கணேசர் கேட்டவர் ஒம் என்று சொல்லி போட்டன் ,அவர் உம்மட கோஸ்டி தானே"

"ஐயோ அந்த கிழவனிட்டயே கொடுத்தனீர் அந்தாள் மற்ற கோஸ்டி,

அடுத்த முறை உம்மட புரோக்சியை  எனக்கு தாரும் இப்பவே சொல்லி வைச்சிட்டன்"

அடுத்த முறை உமக்குத்தான் என்று சொல்லி போட்டுவிடைபெற்றேன்,அவர் நினைச்சுகொண்டு திரிவார் அடுத்த முறை என்ட புரோக்சி அவருக்கு என்று ,ஆனால் ஆளுக்கு தெரியாது நான் மெம்பர் இல்லை என்ற செய்தி.

காரில் ஏறி சிடியை அழுத்தினேன்

"நீ அல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் இல்லம்"

 

சீர்காழியின் குரல் காதில் வந்து ஒலித்தது.

வீட்டு டிரைவேயில் கணேசரின்ட கார் நின்றது ,

" நீங்கள் பின்னேரம் வருவீங்கள் என்று நினைச்சேன் "

"உன்னட்ட புரோக்சி இல்லை என்றவுடனே நான் உசாராகிட்டேன்,கோவில் வேறு யாரும் கேட்டு எடுத்து விடுவாங்கள் என்று நேராக உன்ட வீட்டை வந்திட்டன்"

"எடுத்திட்டிங்களே"

" உன்ட மனிசி  என்னை போல உசாரடா டெலிபோனில் கதைச்சே நாலு புரோக்சி எடுத்து தந்திட்டாள் ,பிள்ளை தாங்க்ஸ் அடுத்த முறையும் எனக்கு எடுத்து தா,நான் போயிட்டு வாரன் எமது வெற்றியை நாளைய தேர்தல் சொல்லும் "என பாட்டு பாடியபடியே சென்றார்

"சரி அண்ணே பிறகு சந்திப்போம் "

"ஏன்னப்பா தேவையில்லாத வேலை பார்த்தனீர் பேசாமல் உம்மட புரோக்சியை மட்டும் கொடுத்திருக்கலாமே"

" அவையள் கார் பார்க் கட்டுறது நல்ல விடயம் தானே"

" "இப்ப நாலைந்து வருசமா கட்டினம்  நீங்களும் பார்த்து கொண்டு இருங்கோ ....தங்களுடைய  BMW,Benz, போன்றவைக்கு தரிப்பிடம் கட்டுறதில் மட்டும்  இழுபறிபடவில்லை முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணிற இடம் ட்டுறதிலும் இழுபறியாம்"

"உங்களுக்கு"

"அடுத்த முறை புரோக்சி முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணும் விடயத்தில் தான் இருந்து பாரும்"

 

அன்னதான கந்தன்,அலங்கார கந்தன் இந்த ரிசையில் சிட்னிவாழ் பக்தர்கள், முருகா உன்னை புரொக்சி முருகன் என வெகுவிரைவில் அழைக்க தொடங்கி விடுவார்கள்.

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் வச்சு செய்திட்டான், பேசாமல் வீட்டிலேயே படுத்திருந்திருக்கலாம்.........!   😂 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார் பார்க்கும்,தேர் முட்டியும் கட்டுற நேரம் ஒரு வயோதிபமடம் கட்டலாமோ எண்டு ஒருக்கால்  அப்பன் முருகனிட்டை கேட்டுப்பாருங்கோ :cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

 வருமானம் எதுவும் கிடைக்காத பொது விடயங்களில் நேரத்தை ஏன் தமிழர்கள் வீணடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை!  வெறும் புகழ் மட்டும் இருக்காது. எப்படியும் ஊழல்கள் செய்வார்கள் என்று புரொக்ஸி முருகனுக்கும் தெரியும்! ஆனால் தனது வெகிக்கிள் பார்க்கிங் கிடைக்கவேண்டும் என்று பொத்திக்கொண்டு இருப்பார்😬

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு உள்ள கோயிலிலும்.... இரண்டு கோஷ்ட்டிகள்  இருந்து கொண்டு,
இரண்டு பகுதியும்.. புடுங்கு படுவதை பார்த்து... வெறுப்பில்,
கோவில் பக்கம், போவதையே... குறைத்து விட்டேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2019 at 6:52 PM, suvy said:

முருகன் வச்சு செய்திட்டான், பேசாமல் வீட்டிலேயே படுத்திருந்திருக்கலாம்.........!   😂 

அவர் உப்படியான சேட்டைகள் என்னோடு விட்டு பார்க்கிறவர் ,நானோ விக்கிரமாதித்தன் மாதிரி மீண்டும் மீண்டும் அவரின்ட காலடியில் போய் விழுந்திடுவன்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2019 at 9:24 AM, குமாரசாமி said:

கார் பார்க்கும்,தேர் முட்டியும் கட்டுற நேரம் ஒரு வயோதிபமடம் கட்டலாமோ எண்டு ஒருக்கால்  அப்பன் முருகனிட்டை கேட்டுப்பாருங்கோ :cool:

 

அப்பன் முருகன் எல்லாத்துக்கும் ஒகே,ஆனால் அவரின்ட தொண்டர்மார் தான் பிரச்சனை,பெயர்ப்பலகையில் தங்கட பெயர் இடம்பெறவேண்டும் என்று முருகனின்ட சில திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுறவையள் ஆனால் முருகன் சுழிச்சு வெட்டி ஒடிக்கொண்டு வாரான்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 4:27 PM, கிருபன் said:

 வருமானம் எதுவும் கிடைக்காத பொது விடயங்களில் நேரத்தை ஏன் தமிழர்கள் வீணடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை!  வெறும் புகழ் மட்டும் இருக்காது. எப்படியும் ஊழல்கள் செய்வார்கள் என்று புரொக்ஸி முருகனுக்கும் தெரியும்! 

On 9/7/2019 at 4:27 PM, கிருபன் said:

 

On 9/7/2019 at 4:27 PM, கிருபன் said:

ஆனால் தனது வெகிக்கிள் பார்க்கிங் கிடைக்கவேண்டும் என்று பொத்திக்கொண்டு இருப்பார்

 

 

ஊழல் என்று சொல்லமுடியாது ,தொண்டர்கள் பணவசதி படைத்தவர்கள் ,கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கும் தொண்டர்கள்.....எல்லாத்தைய்ம் தாங்கள் தான் செய்யவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள்....இளய சமுதாயத்திற்க்கு விட்டு கொடுப்பதற்கே தயங்குகிறார்கள்.

அவன் ஒருத்தன் தான் தன்னுடைய வெயிக்கிளை ஊரில இருந்து இறக்குமதி செய்து ஒடுகிறான்,மற்றவையள் எல்லாம் வெளிநாட்டு வாகனம் வைச்சிருக்கினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 5:12 PM, தமிழ் சிறி said:

இங்கு உள்ள கோயிலிலும்.... இரண்டு கோஷ்ட்டிகள்  இருந்து கொண்டு,
இரண்டு பகுதியும்.. புடுங்கு படுவதை பார்த்து... வெறுப்பில்,
கோவில் பக்கம், போவதையே... குறைத்து விட்டேன். 

சீ சீ..... புடுங்குபாடு நடக்குது என்று நாங்கள் ஒதுங்கினால் வேறு ஆள்கள் குடிபுகுந்துவிடுவாங்கள்.....சோ ...இவையளின்ட புடுங்குபாடு எங்களுக்கு தெரியும் என்று சொல்லிகொண்டு நாங்கள் போய்வரவேண்டும்.....பக்தி என்ற பெயரில் அடுத்த தலைமுறை கொஞ்சம் தமிழ்கற்றுகொள்ள வசதியாக இருக்கும்....இந்த கோவில்கள் ஒழுங்காக நடந்தால்.....

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலங்களின் பின்னர்....புத்தனின் கதையை வாசித்த திருப்தி...!

இந்த ஆக்களின்ர கோதாரியால தான் .....நான் இவையளின்ர கண்ணிலை படாமல் முருகனிட்டைப் போக வேண்டி வந்தது..!

ஒரு கொட்டிலில குந்திக்கொண்டிருந்த முருகன்...இப்ப கோபுரக் கலசங்களோட குந்தியிருக்கிறார்!

சத்தியமாய்....அவர் மேல எனக்குப் பொறாமையில்லை!

ஆனால் அவர் கொட்டிலில குந்திக்கொண்டிருக்கேக்க இருந்த வழிபாட்டுத் திருப்தி....இப்ப நிச்சயமாய் இல்லை என்று தான் சொல்லுவன்!

தொடர்ந்தும் உங்கள் கிறுக்கல்களை எதிர்பார்க்கின்றோம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2019 at 5:56 PM, புங்கையூரன் said:

நீண்ட காலங்களின் பின்னர்....புத்தனின் கதையை வாசித்த திருப்தி...!

இந்த ஆக்களின்ர கோதாரியால தான் .....நான் இவையளின்ர கண்ணிலை படாமல் முருகனிட்டைப் போக வேண்டி வந்தது..!

ஒரு கொட்டிலில குந்திக்கொண்டிருந்த முருகன்...இப்ப கோபுரக் கலசங்களோட குந்தியிருக்கிறார்!

சத்தியமாய்....அவர் மேல எனக்குப் பொறாமையில்லை!

ஆனால் அவர் கொட்டிலில குந்திக்கொண்டிருக்கேக்க இருந்த வழிபாட்டுத் திருப்தி....இப்ப நிச்சயமாய் இல்லை என்று தான் சொல்லுவன்!

தொடர்ந்தும் உங்கள் கிறுக்கல்களை எதிர்பார்க்கின்றோம்!

20 வருடங்களுக்கு முன்பு கதிர்காம கந்தனிட்ட போன போது இருந்த திருப்தி இப்ப இல்லை ,முருகனும் பாவம் என்ன செய்வான் எத்தனை என்று கவனிக்கிறது,.சிங்களவனோட உறவை வைத்தால் கொஞ்சம் கெத்தா இருக்கலாம் என்று நினைச்சிட்டான்....
அதை பார்த்த நம்ம சிட்னி முருகனும் , இப்ப "மல்டிகல்சரை "பயங்கரமா பின்பற்ற தொடங்கிட்டான் .

பை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில்  நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட  நடவடிக்கையில் இறங்கிட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, putthan said:

20 வருடங்களுக்கு முன்பு கதிர்காம கந்தனிட்ட போன போது இருந்த திருப்தி இப்ப இல்லை ,முருகனும் பாவம் என்ன செய்வான் எத்தனை என்று கவனிக்கிறது,.சிங்களவனோட உறவை வைத்தால் கொஞ்சம் கெத்தா இருக்கலாம் என்று நினைச்சிட்டான்....
அதை பார்த்த நம்ம சிட்னி முருகனும் , இப்ப "மல்டிகல்சரை "பயங்கரமா பின்பற்ற தொடங்கிட்டான் .

பை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில்  நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட  நடவடிக்கையில் இறங்கிட்டான்.

மிகவும் நல்ல செய்தி....!

அந்தக் கோவிலாவது....இந்துக்கோவிலாக அன்றி.....சைவைக் கோவிலாக இருக்கும் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உண்டு...புத்தன்!

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/11/2019 at 9:02 AM, putthan said:

பை த வே,தன்னுடைய பிரதருக்கு ஒரேஞ்சில்  நகரில் (Orange NSW) ஒரு கோவில் கட்ட  நடவடிக்கையில் இறங்கிட்டான்

அங்கையும் தலைவர்,உபதலைவர் பொருளாளர் எல்லாரும் இருப்பினம் தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

On 9/12/2019 at 12:34 PM, புங்கையூரன் said:

மிகவும் நல்ல செய்தி....!

அந்தக் கோவிலாவது....இந்துக்கோவிலாக அன்றி.....சைவைக் கோவிலாக இருக்கும் என்னும் நம்பிக்கை என்னிடம் நிறையவே உண்டு...புத்தன்!

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி...!

இந்து கோவிலாக தான் மாறும் ,தவிர்க்க முடியாத காரணங்களால்....இந்து என்ற அடையாளத்தை நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்று கொண்டு விட்டோம்....பஞ்சபுராணம் மட்டும் தமிழில் பாடும் நிலை இப்பொழுது இருக்கின்றது ...வட இந்தியர்களின் மத்தியில் முருகனுக்கும்,வினாயக்ருக்கும் தமிழில் பஞ்சபுராணமாவது பாடும் நிலை கிடைத்துள்ளது என் மகிழ்ச்சியடையத்தான் இருக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அங்கையும் தலைவர்,உபதலைவர் பொருளாளர் எல்லாரும் இருப்பினம் தானே?

இன்னும் உசாராக தொடங்கவில்லை ,இரண்டு வருடத்தில வந்திடுவினம் .....அந்த நகரில் சிட்னி போன்று சனம் இல்லை ....ஆகவே புடுங்குபாடுகள் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தா கீரைக்கடைக்கும் எதிர்க் கடை இருந்தா தான் வியாபாரம் சரியாக ஓடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, putthan said:

இன்னும் உசாராக தொடங்கவில்லை ,இரண்டு வருடத்தில வந்திடுவினம் .....அந்த நகரில் சிட்னி போன்று சனம் இல்லை ....ஆகவே புடுங்குபாடுகள் குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன்

எண்டாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எண்டதை உண்மையாக்காமல் விடமாட்டினம்.அது சந்திரமண்டலமாக இருந்தாலும் சரி..😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.