Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலனாய்வுத்துறை அதிகாரி நிலாம் இந்தோனேஸியாவில் காணமல் போயுள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா உளவுத்துறையின் முக்கிய அதிகாரியான எஸ். எச். நிலாம், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் கடந்த மாதம் 23ந் தேதியில் இருந்து இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ளனர்.. இவர் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை இந்தோனேசிய உளவுத்துறை மூலம் பெற்று ஆயுதக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் அழிக்கப்பட்டமைக்குக் காரணமாக இருந்தவர். அத்துடன் "மில்லேனியம் சிற்றி"யில் உளவுத்துறையினரின் பதுங்குவீட்டிற்குப் பொறுப்பாகவும் இருந்தவர்!

Intelligence officer Nilam missing

By Sunil Jayasiri

A top intelligence officer of the Sri Lanka Army, Captain S.H. Nilam, who was the defence attaché at the Sri Lanka Embassy in Jakarta, has gone missing since last month. Another top official at the Jakarta embassy has reportedly received death threats from the LTTE.

State intelligence informed the government that Captain Nilam, his wife and three children had gone missing since April 23, a highly placed government official said.

He said that the acting ambassador in Jakarta, a Tamil, had reportedly received death threats from the Tamil Tigers recently.

The latest development follows the recall of Major General Janaka Perera, who was Sri Lanka’s ambassador to Indonesia, and the appointment of the former Army Chief of Staff, Major General Nanda Mallawarachchi- who has not yet assumed duties-as the new ambassador.

Major General Perera was asked to return to the country during the last week of April, for unknown reasons -- although his term had been expected to end next September.

It is learnt that, with the support of the Indonesian State Intelligence Agency -Badan Intelijen Negara (BIN), Captain Nilam had tipped off the Sri Lanka Government regarding several Sri Lanka bound LTTE arms shipments, and thus curtailed the flow of LTTE weapons to the country during his tenure.

Captain Nilam was in charge of the ‘Millennium City’ safe house when it was raided during the UNP regime. He was sent to Thailand in order to avoid LTTE attempts on his life. Later he was made the Defence Attaché in Indonesia.

http://www.dailymirror.lk/2007/05/05/front/2.asp

இந்த கொலை வெறி பிடித்த மிருகத்தின் இரத்தப் பசிக்கு கொழும்பில் எத்தனையோ அப்பாவி எம்மவர்கள் பலியானார்கள்!! பலரை இந்த மிருகம் அடித்துத்தான் படுகொலை செய்தது!! இந்த மிருகம் அல்லாவிடம் போயிருக்கும் என்றால், அதை விட சந்தோசப்படுவதற்கு வேறொன்றுமில்லை!!!

இவர் வேறு நாடுகளில் அகதியாக அசைலம் அடிப்பதற்கு ஒளிந்துவிட்டாரோ தெரியாது..

இவர் அல்லாவிடம் போவதை விட அம்மானிடம் போயிருத்தலே மகிழ்ச்சி. :lol:

சிறிலங்கா புலானாய்வுத் துறைக்கு விழுந்த பேரிடி.

இவர் கொன்ற அப்பாவி இளைஞர்கள் எண்ணில் அடங்கா.

good bye சொல்வதை தவிர வேறென்ன இருக்கு

சிறிலங்காவின் உயர் புலனாய்வுத்துறை அதிகாரியை காணவில்லை.

சிறிலங்கா இராணுவத்தின் உயர் புலனாய்வுத்துறை அதிகாரியான கப்டன் எஸ்.எச்.நிலாம் காணாமல் போயுள்ளார்.

இந்தனேசியிவாவின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்புத்துறையில் பணியாற்றிய நிலாம், கடந்த மாதத்தில் இருந்து காணாமல் போயுள்ளார்.

ஜகர்த்தா தூதரகத்தில் உள்ள மேலும் ஒரு உயர் அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிலாம் அவரது மனைவி மூன்று பிள்ளைகள் ஆகியோர் கடந்த ஏப்ரல் 23 ஆம் நாளில் இருந்து காணாமல் போயுள்ளதாக தேசிய புலனாய்வுத்துறை அறிவித்துள்ளதாக உயர் அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அங்கு பதில் தூதுவராக கடமையாற்றும் தமிழ் அதிகாரி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இந்தோனேசியாவிற்கான தூதுவராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா சிறிலங்காவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் இன்று வரை தனது பதவியை ஏற்கவில்லை. ஜனக பெரேரா கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் சிறிலங்காவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் எதிர்வரும் செப்ரம்பர் மாதமே முடிவடைய உள்ள நிலையில் அவர் அழைக்கப்பட்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

இந்தோனேசியாவின் தேசிய புலனாய்வுத்துறையின் ஆதரவுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பாக பல தகவல்களை நிலாம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கி வந்ததாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் சோதனையிடப்பட்ட கண்டி மிலேனியம் சிற்றி இல்லத்திற்கு கப்டன் நிலாம் பொறுப்பாளராக கடமையாற்றி இருந்தார். இந்த முகாமில் இருந்தே வடக்கு - கிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் ஆழ ஊடுருவும் படையணிகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன.

இவரது உயிருக்கு விடுதலைப் புலிகள் குறிவைத்ததைத் தொடர்ந்து, அவரது முக்கியத்துவம் உணர்ந்த சிறிலங்கா அரசாங்கம், நிலாமை பாதுகாக்கும் பொருட்டு தாய்லாந்திற்கு அனுப்பியிருந்தது. பின்னர் அவர் இந்தோனேசியாவிற்கான பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி பிள்ளைகளோடு காணாமல் போனதைப் பார்க்கின்றபோது, அவர்களே திட்டமிட்ட செயல் என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது

இவன் ஆழஊடுருவும் படையணிக்கு தலைமை தாங்கிய காலத்திலேயே

கேணல் சங்கர்,

லெப்.கேணல் கங்கை அமரன்

லெப்.கேணல் நிசாம்

போன்ற தளபதிகளை இழந்தோம்.

இவன் காணாமல்போன செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.

இதை அரசின் கபட நாடகமாகவும் பார்க்க வேண்டியுள்ளது, இந்தோனேசியா, தாய்லாந்தூ ஆகிய நாடுகளில் புலிகளின் நடவடிக்கை அதிகரித்துள்ளது என்று அரசாங்கம் அடிக்கடி கூச்சல் போடுகிறது அதை யாரும் கண்டுகொள்வதில்லை, இவரை தலைமறைவாக்கிவிட்டு அதை புலிகள் மேல் போட்டு தான் நினைத்தை சாதிக்க முயலும் இந்த குள்ளநரி தந்திரம் படைத்த அரசு :o

  • கருத்துக்கள உறவுகள்

இவன் குடும்பத்தோடை தப்பியோடி அவுஸ்ரேலியாக்கு வந்து குடியேறியிருக்கலாமெண்டும் கதை அடிபடுது அவுஸ்ரேலியா தமிழர் கவனம் :P

இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இப்படியான புலநாய்களுக்கு உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி அதிக பாதுகாப்புகள் இருக்கும். அப்படி இருக்க காணவில்லை என்றால் அதுவும் கூண்டோடு காணவில்லை :P :P என்றால் கேட்பவர்கள் நாம் என்ன ________? இவரை போலவே இன்னொரு கிழ புலநாய் கூட இங்கு இருக்கிறது அது தான் "நிலாப் டீன்". 4 ம் மாடிக்கு கொண்டுசெல்லப்பட்ட தமிழர் அனைவருக்கும் இவரை நல்ல ஞாபகம் இருக்கும். இவருக்கும் எதிர்காலம் எப்படியோ? :P :P :o:( சங்கு தான்

Edited by mathuka

சர்வதேச பயங்கரவாதிகள் அல்கொய்தாவுடன் தொடர்புடைய, இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரி கப்ரன் எஸ்.எச். நிலாம் பாரியளவு பணத்துடன் இந்தோனேசியாவில் தலைமறைவு!

இலங்கையில் கடந்த காலங்களில் "போர் என்ற" சொல்லின் பின்னனியில் பல தமிழ் இளைஜர்கள் கொழும்பில் காணாமல் போவதற்கும், பலரை அடித்தே பகிரங்கமாக கொலை செய்தவரும், கிழக்கு மாகாணத்தில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் ஆதரவுடன் இயங்கும் ஒஸாமா, ஜிகாத் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தோற்றுவிப்பாளரும், தற்போது இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முதன்மை அதிகாரி என்ற பெயரில் சர்வதேச பயங்கரவாதிகளான அல்கொய்தாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவருபவருமான, இலங்கையின் முதன்மைநிலை புலனாய்வுத்துறை அதிகாரி கப்ரன் எஸ்.எச். நிலாம் பாரியளவு தூதரகத்துக்குச் சொந்தமான பணத்துடன், கடந்த மாதாம் 23ம் திகதி முதல் குடும்பத்துடன் தலை மறைவாகியுள்ளார்.

சர்வதேச பயங்கரவாதிகள் அல்கொய்தாவுடன் தொடர்புடைய கப்டன் எஸ்.எச். நிலாம், நான்காம் மாடி, மிலேனியம் சிற்றி போன்ற சித்திரவதை, படுகொலை முகாம்களுக்குப் பொறுப்பாக இருந்து. பின்னர் பாதுகாப்புக்காக தாய்லாந்தில் பணி புரிய சிறீலங்கா அரசால் பணிக்கப்பட்டு, அதன்பின்னர் இந்தோனேஸியாவிற்கு இடமாற்றம் பெற்றிருந்தார்.

சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இவரது தலைமறவு தொடர்பாக நெருப்புக்கு கிடைத்த உறுதியான கொழும்புத் தகவல்களின்படி, அவுஸ்ரேலியாவில் அரசியல் அகதிகள் தஞ்சம் கேட்க இருப்பதாக தெரிய வருகிறது.

சர்வதேச பயங்கரவாதிகள் அல்கொய்தாவுடன் தொடர்புடைய கப்ரன் எஸ்.எச். நிலாம், அவுஸ்ரேலியாவில் அரசியல் தஞ்சம் பெறும் பட்சத்தில், அவுஸ்ரேலியாவிற்குள் அல்கொய்தாவின் முக்கிய செயற்பாடுகள் முடுக்கி விடப்படுமென அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளை அவுஸ்ரேலியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில், இலங்கை தூதரகத்துடன் இணைந்து பல நாசகார செயற்பாடுகளை மேற்கொள்ளலாமெனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

(இது யாழ்கள நிர்வாகத்துக்கு பிடிக்காத ஓர் செய்தித்தளத்தில் இருந்து இங்கு வெட்டி ஒட்டப்படுகிறது)

இந்த மிருகத்தை யாரும் கடத்தியிப்பார்கள் என்பதில் எவ்வித உண்மையும் இருக்காது!! ஏனெனில்

1) தூதரக முக்கிய அதிகாரி

2) புலனாய்வுத்துறை முக்கிய அங்கத்தவர்

3) பாதுகாப்பு காரணங்களுக்காகவேயே இந்தோனேசியா கொண்டு செல்லப்பட்டவன்

4) அதியுயர் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கும்

அப்படியிருக்கும்போது கடத்தப்பட்டாது என்பது நம்பக்கூடியதல்ல!!! இது ஒன்று இந்த மிருகமே திட்டமிட்டு தலைமறைவாகியிக்க வேண்டும். இல்லை இலங்கை அரசு ஏதோ சதியின் பின்னனிக்கு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்க வேண்டும்.

எது எப்படியோ நாளை இந்த மிருகம் அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் பட்சத்தில், வருங்காலத்தில் அங்கு சில பிரட்சனைகளை இந்த முக்கால் உருவாக்கத்தான் பார்ப்பான்!!! இதற்கு முன்னோடியாக இப்பவே இந்த மிருகத்துக்கெதிரான ஆதாரங்களை அவுஸ்ரேலியா உள்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பிப்பது நல்லது!!!

இந்த மிருகத்தினால் நடத்தப்பட்ட கொடூரங்களில் ஒன்று:

90களீல் ஆரம்பங்களில் எனது நண்பனின் மனைவி இங்கு வருவதற்காக, உறவினரான பெண்ணொருவருடன் கட்நாயக்காவிற்கு செல்வதற்காக ஓர் வாடகை வானில் வெள்ளவத்தை-பம்பலப்பிட்டியில் வந்து கொண்டிருக்கும்போது, இம்மிருகத்தினால் குறிப்பிட்ட வான் மறிக்கப்பட்டு, அவ்வாகனம் சோதனையிடப்பட்டபோது, அங்கு ஏதோ கைப்பற்றி விட்டதாகக் கூறி வாகன சாரதியான தமிழ் இளைஜனும், இவ்விரு பெண்களுடன் மவுண்ட்லவேனியா பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அந்த நிமிடமே இப்பெண்களுக்கு முன்னிலையிலேயே அவ்வாகன சாரதியான அப்பாவி இளைஜனை அடித்தே கொண்றானாம்!!! அடுத்த நாள் கொழும்பு பத்திரிகைகளில் "கரும்புலியொன்று கைது செய்யும்போது சயனைட் அருந்தி தற்கொலை" என்று செய்தியையும் போடு, இந்த மிருகம் பெரிய நாடகமே ஆடியிருந்தது!! இன்று லண்டனில் இருக்கும் அப்பெண்கள் பல வருடம் சொல்லொனா சித்திரவதைகளுக்குப் பின்னம் விடுதலையாகி இங்கு வந்தார்கள்!! இந்த மிருகத்தை தப்ப விடலாமா?????

(இது யாழ்கள நிர்வாகத்துக்கு பிடிக்காத ஓர் செய்தித்தளத்தில் இருந்து இங்கு வெட்டி ஒட்டப்படுகிறது)

அது நெருப்புக்குப் போட்டியாக நடத்தப்படும் இன்னொரு நெருப்பு :rolleyes: .

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வுக்கு புலனாய்வா?....இவரை மறைத்து இன்னும் அதிகமாக வேலை வாங்க திடட்மிட்டிருக்கிறாங்க......

இந்தச் சந்தர்ப்பத்தை எங்களுக்குச் சாதகமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரைப் பங்கரவாதியள் எண்டு பரப்புரை செய்யுது இலங்கை அரசாங்கம். ஆனால் அவங்கதான் அல்கொய்தா போன்ற அமைப்புகளோட தொடர்புகளை வச்சிருக்கிறாங்கள். எங்கட பக்கத்தில இருந்து அமெரிக்காவுடைய செவியில எட்டக்கூடிய வகையில இலங்கையரசினுடைய அல்கொய்தா தொடர்புகளைப் பரப்புரைசெய்து வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஏன் ஒருவரும் முயல்கிறாங்களில்லை எண்டு விளங்குதில்லை.

அப்போ அமெரிக்க புலனாய்வுதுறையால் செல்லமாய் அழைக்கபட்டிருக்கலாம், என்ன நா சொல்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.