Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் என நினைத்து வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற மனைவிகள்..! காரணத்தை கேட்டு தமிழ்நாடே சிரிக்கிறது !

xdespite-law-2-wheeler-buyers-not-given-

தங்களின் கணவர் என நினைத்து மனைவிகள் வேறு நபர்களுடன் பைக்கில் சென்ற சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. இதற்கான காரணம் சிரிப்பலைகளை உண்டாக்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு 50 வயதாகிறது. இவரது மனைவி பழனியம்மாள். இவரது வயது 42. கணவன், மனைவி இருவரும் ஒரு வேலை விஷயமாக சமீபத்தில் மோட்டார்சைக்கிளில் வெளியே சென்றனர். அப்போது ரங்கசாமி பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிந்திருந்தார்.

வழியில் பெட்ரோல் தேவைப்பட்டதால், தாராபுரம் ஐந்து முக்கு பகுதியில் உள்ள ஒரு பங்க்கிற்கு ரங்கசாமி சென்றுள்ளார். ஆனால் அவர் மனைவியை பெட்ரோல் பங்க்கிற்கு உள்ளே அழைத்து செல்லவில்லை. மனைவியை வெளியில் நிறுத்தி விட்டு அவர் மட்டும் மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப உள்ளே சென்றார்.

அந்த நேரத்தில் முத்துசாமி என்பவரும் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ஹெல்மெட் அணிந்து கொண்டு அதே பங்க்கிற்கு வந்தார். இவர் தாராபுரம் ஐந்து முக்கு பகுதியை சேர்ந்தவர்தான். இவரும் தனது மனைவியை உடன் அழைத்து வந்திருந்தார். முத்துசாமியின் மனைவி பெயர் பொன்னாத்தாள். இவரும் தனது மனைவி பொன்னாத்தாளை வெளியிலேயே நிறுத்தி விட்டு தனியாக பங்க்கின் உள்ளே சென்றார்.

ரங்கசாமியின் மனைவி பழனியம்மாளும், முத்துசாமியின் மனைவி பொன்னாத்தாளும், தங்கள் கணவர்கள் வரும் வரை வெளியே காத்திருந்தனர். அப்போதுதான் அந்த குழப்பம் அரங்கேறியது. ரங்கசாமி மற்றும் முத்துசாமி ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தின் பைக்கில்தான் அந்த பெட்ரோல் பங்க்கிற்கு வந்திருந்தனர். அத்துடன் ஒரே வண்ண சட்டையைதான் (வெள்ளை) அவர்கள் இருவரும் அணிந்திருந்தனர்.

இப்படி ரங்கசாமி மற்றும் முத்துசாமி ஆகிய இருவருக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் இருந்தன. இதன் உச்சமாக அவர்கள் இருவரும் அணிந்திருந்த தலைக்கவசம் வேறு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. இதுதான் குழப்பத்திற்கு முக்கியமான காரணம். இந்த சூழலில் ரங்கசாமியும், முத்துசாமியும் பெட்ரோல் பங்க்கில் இருந்து வரிசையாக வெளியே வர தொடங்கினர்.

முதலில் வந்தவர் ரங்கசாமி. அவரது பைக்கில் ரங்கசாமியின் மனைவி பழனியம்மாள்தான் ஏறியிருக்க வேண்டும். ஆனால் இது தனது கணவர் முத்துசாமி என நினைத்து கொண்ட பொன்னாத்தாள், ரங்கசாமியின் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டார். இது தனது மனைவி பழனியம்மாள் இல்லை என்பதை ரங்கசாமிக்கும் தெரியவில்லை என்பதுதான் பரிதாபம் .

இதன்பின் பொன்னாத்தாளை பைக்கில் ஏற்றிக்கொண்டு, கரூர் சாலையில் ரங்கசாமி பயணிக்க தொடங்கினார். முன்னதாக முத்துசாமியும் பெட்ரோல் பங்க்கிற்குள் இருந்து வெளியே வந்தார். இவரது பைக்கில் முத்துசாமியின் மனைவி பொன்னத்தாள்தான் ஏறியிருக்க வேண்டும். ஆனால் அவர்தான் ரங்கசாமியின் பைக்கில் சென்று கொண்டிருக்கிறாரே!

எனவே அங்கு பழனியம்மாள்தான் நின்று கொண்டிருந்தார். முத்துசாமியை கண்டதும், இது தனது கணவர்தான் என நினைத்து கொண்ட பழனியம்மாள் அவரது பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டார். இது தன் கணவர் இல்லை என்பதை பழனியம்மாளோ அல்லது இது தன் மனைவி இல்லை என்பதை முத்துசாமியோ உணரவில்லை.

இதன்பின் அவர்கள் இருவரும் பொள்ளாச்சி சாலையில் பயணிக்க தொடங்கினர். ஆரம்பத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பைக் சென்றிருக்கும். அப்போதுதான் பழனியம்மாளின் மனதில் சந்தேகம் எழ தொடங்கியது. பைக்கை ஓட்டுபவர் தன் கணவர் போல் இல்லையே என சந்தேகம் அடைந்த பழனியம்மாள் பைக்கை நிறுத்தும்படி கூறினார்.

இதன்பின் முத்துசாமி பைக்கை நிறுத்தி விட்டு ஹெல்மெட்டை கழற்ற பழனியம்மாள் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். முத்துசாமியும்தான். இதன்பின் செல்போன் மூலமாக பழனியம்மாள் உடனடியாக தன் கணவர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு நடந்த விபரத்தை தெரிவித்தார். அப்போதுதான் ரங்கசாமிக்கு தன் பின்னால் இருப்பது தன் மனைவி பழனியம்மாள் இல்லை என்பதே தெரியவந்தது.

இதனால் அவருடன் பயணித்த பொன்னாத்தாளும் அதிர்ச்சியடைந்து விட்டார். இதன்பின் உடனடியாக ரங்கசாமி பைக்கை திருப்பி கொண்டு டவுன்ஹால் சாலைக்கு வந்தார். அதே நேரத்தில் முத்துசாமியும் அங்கு வந்து சேர்ந்தார். இதன்பின் அவர்கள் இருவரும் தங்கள் மனைவிகளை சரியாக அழைத்து சென்றனர். ஒரே மாதிரியான பைக், ஒரே மாதிரியான சட்டை, ஒரே மாதிரியான ஹெல்மெட் அணிந்திருந்ததால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழகம் முழுக்க இந்த சம்பவம் சிரிப்பலைகளை உண்டாக்கியுள்ளது. போதாக்குறைக்கு ஹெல்மெட் அணிந்திருந்ததால், மனைவிகளால் தங்கள் கணவர்களை சரியாக அடையாளம் காண முடியாமல் போய் விட்டது. இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு விடும் என்பதற்காக நீங்கள் ஹெல்மெட் அணியாமல் இருக்காதீர்கள்.!

https://tamil.drivespark.com/off-beat/road-accident-helmet-compulsory-benefits/articlecontent-pf149573-018380.html

டிஸ்கி:

வா.. ஸ்ருதி.. 😄

drivers.png

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இவ்வளவு காலம் கூட வாழ்ந்த ரங்கசாமிக்கும், முத்துசாமிக்கும் பைக்கில் போகும்போது ஏற்படும் உரசலில் கூடவா தன் மனைவி என  தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கணவர்கள்தான் கெல்மெட் அணிந்திருந்தார்கள் அதனால் அடையாளம் தெரியவில்லை. ஆனால் கணவர்களுக்கு மனைவிகளை எப்படித் தெரியாமல் போனது....?? இதில் ஏதோ இடிக்கிறது. அப்படி இருக்குமோ?? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2019 at 12:14 PM, Paanch said:

கணவர்கள்தான் கெல்மெட் அணிந்திருந்தார்கள் அதனால் அடையாளம் தெரியவில்லை. ஆனால் கணவர்களுக்கு மனைவிகளை எப்படித் தெரியாமல் போனது....?? இதில் ஏதோ இடிக்கிறது. அப்படி இருக்குமோ?? 🤣

பாஞ்ச்  அண்ணே...  இவை எல்லாம்... திட்டமிட்டு, செய்யப் படும் செயல்கள்.
அம்பிட்டவுடன்,  "ஹெல்மெட்"  மீது பழி  போடுகிறார்கள். :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/29/2019 at 12:14 PM, Paanch said:

கணவர்கள்தான் கெல்மெட் அணிந்திருந்தார்கள் அதனால் அடையாளம் தெரியவில்லை. ஆனால் கணவர்களுக்கு மனைவிகளை எப்படித் தெரியாமல் போனது....?? இதில் ஏதோ இடிக்கிறது. அப்படி இருக்குமோ?? 🤣

இருக்கும்....இருக்கும் .....வெஸ்ரேன் கல்ச்சரிலை உந்த விசயமும் முக்கியமானதெல்லோ-
உதுகளுக்காகத்தான் எங்கடை மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் வெள்ளைக்காரங்களை பாத்து வாழச்சொல்லி மூடர்கூட்டங்களுக்கு சொல்லீனம்😊

2 hours ago, குமாரசாமி said:

இருக்கும்....இருக்கும் .....வெஸ்ரேன் கல்ச்சரிலை உந்த விசயமும் முக்கியமானதெல்லோ-
உதுகளுக்காகத்தான் எங்கடை மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் வெள்ளைக்காரங்களை பாத்து வாழச்சொல்லி மூடர்கூட்டங்களுக்கு சொல்லீனம்😊

 செக்ஸ்  விசயத்தில  முன்னோர்கள் அந்த மாதிரி  சின்ன வீடு எல்லாம்  வைச்சிருந்தாங்க என்று பெருமையா எழுதிய நீங்கள் இப்ப இது வெள்ளைக்கார வெஸ்லேர்ன் கல்சர் மாறி  என்று எழுதிறீங்களே?. முன்னோர்கள் காட்டிய வழி என்று  பெருமை பட வேண்டியது தானே.  

ஓ அது வேற கை இது.......

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, tulpen said:

 செக்ஸ்  விசயத்தில  முன்னோர்கள் அந்த மாதிரி  சின்ன வீடு எல்லாம்  வைச்சிருந்தாங்க என்று பெருமையா எழுதிய நீங்கள் இப்ப இது வெள்ளைக்கார வெஸ்லேர்ன் கல்சர் மாறி  என்று எழுதிறீங்களே?. முன்னோர்கள் காட்டிய வழி என்று  பெருமை பட வேண்டியது தானே.  

ஓ அது வேற கை இது.......

சின்ன வீடு வைச்சிருக்கிறதுக்கும் தினசரி  ஒவ்வொரு பொம்புளையை கட்டிப்பிடிக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாட்டில் ஒண்டுமே செய்யேலாது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

சின்ன வீடு வைச்சிருக்கிறதுக்கும் தினசரி  ஒவ்வொரு பொம்புளையை கட்டிப்பிடிக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாட்டில் ஒண்டுமே செய்யேலாது.

ஒண்டுமே செய்ய  ஏலாது

1 hour ago, குமாரசாமி said:

சின்ன வீடு வைச்சிருக்கிறதுக்கும் தினசரி  ஒவ்வொரு பொம்புளையை கட்டிப்பிடிக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாட்டில் ஒண்டுமே செய்யேலாது.

தினசரி ஒவ்வொரு பெண்களுடன் உறவு கொள்வது இந்த பரந்த  உலகின் எந்த கலாச்சாரமும்  அங்கீகரிக்கவும் இல்லை அதை ஊக்குவிக்கவும்  இல்லை என்பது உங்களுக்கு தெரியவில்லை.  ஆனால் அப்படி செய்யும் செய்த  ஒழுங்கம் கெட்ட நபர்கள் உலகெங்கும் உள்ளார்கள். எமது தமிழ்  முன்னோர்கள் உட்பட. 

தனி நபர்களுக்கிடையில் நடைபெற்ற அவர்களின் தனிப்பட்ட   நகைச்சுவை நிகழ்வு ஊடகங்களில் பிரசுரித்து அவதூறு புரியும் இழிவான கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டு மற்றயவர்களின் கலாசாரத்தை எள்ளி நகையாடுவதும் ஒரு இழிவான கலாச்சாரம் தான். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

தினசரி ஒவ்வொரு பெண்களுடன் உறவு கொள்வது இந்த பரந்த  உலகின் எந்த கலாச்சாரமும்  அங்கீகரிக்கவும் இல்லை அதை ஊக்குவிக்கவும்  இல்லை என்பது உங்களுக்கு தெரியவில்லை.  ஆனால் அப்படி செய்யும் செய்த  ஒழுங்கம் கெட்ட நபர்கள் உலகெங்கும் உள்ளார்கள். எமது தமிழ்  முன்னோர்கள் உட்பட. 

21 minutes ago, tulpen said:

தனி நபர்களுக்கிடையில் நடைபெற்ற அவர்களின் தனிப்பட்ட   நகைச்சுவை நிகழ்வு ஊடகங்களில் பிரசுரித்து அவதூறு புரியும் இழிவான கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டு மற்றயவர்களின் கலாசாரத்தை எள்ளி நகையாடுவதும் ஒரு இழிவான கலாச்சாரம் தான். 

நல்ல கருத்து

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

தினசரி ஒவ்வொரு பெண்களுடன் உறவு கொள்வது இந்த பரந்த  உலகின் எந்த கலாச்சாரமும்  அங்கீகரிக்கவும் இல்லை அதை ஊக்குவிக்கவும்  இல்லை என்பது உங்களுக்கு தெரியவில்லை.  ஆனால் அப்படி செய்யும் செய்த  ஒழுங்கம் கெட்ட நபர்கள் உலகெங்கும் உள்ளார்கள். எமது தமிழ்  முன்னோர்கள் உட்பட. 

1 hour ago, tulpen said:

தனி நபர்களுக்கிடையில் நடைபெற்ற அவர்களின் தனிப்பட்ட   நகைச்சுவை நிகழ்வு ஊடகங்களில் பிரசுரித்து அவதூறு புரியும் இழிவான கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டு மற்றயவர்களின் கலாசாரத்தை எள்ளி நகையாடுவதும் ஒரு இழிவான கலாச்சாரம் தான். 

வாவ்.....நீங்கள் பேய்க்காய் எண்டதை நிரூபிச்சு போட்டியள்....

2 hours ago, குமாரசாமி said:

வாவ்.....நீங்கள் பேய்க்காய் எண்டதை நிரூபிச்சு போட்டியள்....

சரி  நான் பேய்தான்.  சுட்டிக்காட்டியதற்கு நன்றி.  😂😂😂😂

Edited by tulpen

பேய்க்காய் என்பதன் அர்த்தத்தை தமிழ்  அகராதியில் தேடினேன். இதுவரை கண்டு பிடிக்கவில்லை. தெரிந்தவர்கள் பொழிப்புரை கூறினால் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்போது வாழுவது டிஜிட்டல் யுகம் எனவே நான் ஒரு படி மேலே போய் யோசிக்கிறேன். இன்றைய உலகில் தலைக்கவசம் இல்லாமல் கூட இது போன்ற நிகழ்வுகள் நடக்கலாம். அதாவது ஆள் மாறாட்டம். பெட்ரோல் பங்கிற்குள் ரங்கசாமியும் முத்துசாமியும் தலைக்கவசம் இல்லாமலே  போயிருந்தால் கூட அலுவல் முடித்து வெளியே வந்தது அதே ரங்கசாமியும் முத்துசாமியும் தான் என்று மேலோட்டமாக பார்த்து சொல்லிவிட முடியாது.

சொல்லிவைத்தால் போல் மனைவிகளை வெளியே நிற்கவிட்டது, இருவருக்கும் ஒரே விதமான பைக்குகள், ஒரேவிதமான தலைக்கவசம், கணவன்மார்களுக்கு உடைகளில் ஒற்றுமை, தமது மனைவிகளை அடையாளம் கண்டுகொள்ள தவறிய கவனக்குறைவான இரு கணவன்மார், இருவருக்கும் ஏறத்தாழ பெயரில்கூட ஒருவித ஒற்றுமை. எனக்கு என்னவோ இது ஒரு ஜோடித்த கதை போல இருக்கிறது.

மனைவிமார்களை  அவ்வளவு குறைவாக மதித்து எடைபோட வேண்டாம். அவர்கள் தமது கணவன்மார்களை ஆயிரம் வழிகளில் அடையாளம் காணக்கூடியவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, vanangaamudi said:

மனைவிமார்களை  அவ்வளவு குறைவாக மதித்து எடைபோட வேண்டாம். அவர்கள் தமது கணவன்மார்களை ஆயிரம் வழிகளில் அடையாளம் காணக்கூடியவர்கள்.

அவர்கள் தங்கள் கணவர்மார்களின் வியர்வை வாசனையினை வைத்தே கண்டு பிடித்துவிடுவார்களாம்...😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, tulpen said:

தனி நபர்களுக்கிடையில் நடைபெற்ற அவர்களின் தனிப்பட்ட   நகைச்சுவை நிகழ்வு ஊடகங்களில் பிரசுரித்து அவதூறு புரியும் இழிவான கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டு மற்றயவர்களின் கலாசாரத்தை எள்ளி நகையாடுவதும் ஒரு இழிவான கலாச்சாரம் தான். 

குப்பம்மா சுப்பம்மாவின்ரை தனிப்பட்ட கதையளைஅப்பட்டமாக கதை, கவிதை, கட்டுரை ,திரைக்கதை எண்டு விரிவாய் எழுதிப்போட்டு கடைசியிலை யாவும் கற்பனையாம்.அப்பிடித்தான் உங்கை கன கதையள் பேப்பர் புத்தகங்களிலை உல்லாசமாய் உலாவுது. அதை கொஞ்ச மூடர் கூட்டம் குண்டி தட்டின புளுகிலை வாசிச்சிப்போட்டு தாங்கள் தனிப்பட்டவர்ரை வாழ்க்கைய எழுதுறேல்லையாம்.
கடவுளால் படைக்கப்பட்டதை வைத்தே மனிதன் வாழ்கின்றான்.புதிதாக எதையுமே அவன் கண்டு பிடிக்கவில்லை.😎

9 minutes ago, குமாரசாமி said:

கடவுளை படைத்தவனே மனிதன் தான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, tulpen said:

கடவுளை படைத்தவனே மனிதன் தான். 

கடவுள் விசயம் ஒரு பக்கம் கிடக்கட்டும்....
நான் கேட்டது ஒருவரின் தனிப்பட்ட விடயத்தை கதையாக எழுதி யாவும் கற்பனை என்று சொல்லி காசு பார்பவர்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?
புனைபெயரில் வரும் கதாசிரியர்கள் எல்லோரும் பச்சைக்கள்ளர்கள்.பக்கத்து வீடுகள் ஊர்களில் நடக்கும் சம்பவங்களை கதையாக எழுதி புகழ் பொருள் சேர்ப்பவர்கள்.இது அவதூறு இல்லையா சார்?
 
49 minutes ago, குமாரசாமி said:

அப்படி யாராவது செய்தால் அது தவறுதானே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.