Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாவிற்கு ஆதரவான தேர்தல் பிரசார கூட்டம் யாழில் இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahintha-Gotta-639x450-1-639x450.jpg

கோட்டாவிற்கு ஆதரவான தேர்தல் பிரசார கூட்டம் யாழில் இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) யாழ்ப்பணத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.

யாழ்ப்பாணம் ரக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் நண்பகல் 2 மணிக்கு இந்த தேர்தல் பிரசார கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன.

மேலும் தென்னிலங்கையில் இருந்து இளைஞர்கள் வடக்கிற்கு அழைத்து வரப்பட்டு வாடகை வீடுகளில் தங்கவைக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாது முன்னாள் இராணுவ அதிகாரிகளும் வடக்கில் வாடகை வீடுகளில் தங்கி நின்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://athavannews.com/கோட்டாவிற்கு-ஆதரவான-தேர்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9-002-720x450.jpg

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரம் : பாதுகாப்பு வளையத்திற்குள் யாழ்ப்பாணம்!

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் நிமித்தம் யாழ்ப்பாணத்தில் அதியுச்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர்.

இதன் காரணமாக யாழ்.நகரில் ஆயுதங்களுடன் இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி, பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுபோல் வீதிகள் மூடப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9-001.jpg

http://athavannews.com/பொதுஜன-பெரமுனவின்-தேர்த-4/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூரானிடம் சென்ற இன அழிப்பாளன் அழைத்துச் செல்லும் ஒட்டுக்குழு தலைவர்...

என்ன பாவங்களை கழுவ இன அழிப்பாளனை நல்லூரனிடம் அழைத்துச் செல்கிறார்  ஒட்டுக்குழு தலைவர்?

 

 

286c33fb-82d4-4744-bf09-d2c4f54dbd58-696x522.jpg

c44d8908-36fd-498b-8e4f-261a321d0a1d-696x522.jpg

https://www.thaarakam.com

கோட்டா, மஹிந்தவுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

image_47807e29e1.jpg-எம்.றொசாந்த்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர்  கோட்டாபய ராஜபக்ஷவின் யாழ். விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஐனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ  உள்ளிட்ட பலரும் இன்று (28) யாழ்பபாணத்துக்கு விஜயம் செய்தனர்.

இந்த நிலையில், யாழ். சங்கிலியன் பூங்கா முன்பாக ஒன்று திரண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோட்டாபயவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது “கோட்டாபயவே வெளியேறு, காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, வெள்ளை வான் முதலாளி கோட்டாவே வெளியேறு, எமது மக்களை கடத்தாதே, போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, இனப்படுகொலையாளி மஹிந்த, கோட்டாவை கைது செய், பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்து” உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

 

image_a3659f4eb5.jpg

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கடட-மஹநதவகக-எதரக-யழல-ஆரபபடடம/71-240493

ஜனாதிபதியானால் சிறையிலுள்ள கைதிகளை விடுதலை செய்வேன் - கோத்தா உறுதியளித்தாக நல்லை ஆதினம் தெரிவிப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் சிறையில் உள்ள அனைத்து கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வேன் என தம்மிடம் உறுதியளித்ததாக நல்லை ஆதின குரு முதல்வர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று  தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தனத்திருந்த  பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முதலாவதாக நல்லூர் ஆலயத்திற்கு பின்பாக உள்ள நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றதுடன் அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலின் பின்னர் குரு முதல்வர் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனாவின் சார்பாக களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய வெற்றியடைந்தால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக என்னிடம் உறுதியளித்துள்ளார். குறிப்பாக அரசியல் கைதிகளை சட்ட ரீதியாக விடுவிக்க முடியும் அதன் ஊடாக அவர்களை விடுவிப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் வடக்கில் அபிவிருத்திகள் ஊடாக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும். குறிப்பாக புதிய பாரிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதிகளவான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும். வேலைவாய்ப்புக்கள் இல்லாமையினால் தான்  வடக்கில் உள்ள இளைஞர்கள் குழம்புகின்றனர். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் ஊடாக இனப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பதை சுட்டிக் காட்டினார். அத்துடன் 5 தமிழ் தேசியக் கட்சிகளின் 13 அம்சத் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் என்னிடம் கூறினார். அப்போது நான் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினரை சந்தித்து பேச வேண்டும் என்பதை கோரினேன் அத்துடன் இது தமிழ் மக்களின் விருப்பமும் அதுவாகவே இருக்கின்றது. மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர் என்று நான் கூறியிருந்தேன் என்றார்.

https://www.virakesari.lk/article/67729

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினைகளை வைத்திருக்காமல் அகற்றி விட வேண்டும் – கோத்தாபய

“உங்களது தலைவர்கள் கடந்த காலத்தை நினைவுபடுத்திச் செயற்படுகின்றனர். ஆனால் நான் உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்படுவேன்”

இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று (28) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும்,

நீங்கள் வடக்கில் காணும் அபிவிருத்திகள் மஹிந்த ராஜபக்ச காலத்தில் ஆரம்பமானது.

2009 இற்கு முன்னர் இங்கு இராணுவ முகாம்களும், இராணுவ சிப்பாய்களுமே இருந்தனர். ஆனால் 2009 இற்கு பின்னர் 90% காணிகளை நாம் விடுவித்தோம். 2015ம் ஆண்டு ஆட்சியில் இருந்து விலக்கப்பட்டதால் எஞ்சியவற்றை விடுவிக்க முடியாமல் போனது.

எனது விஞ்ஞாபனத்தில் அபிவிருத்திகளை அதிகம் உள்ளடக்கியுள்ளேன். விவசாயிகள் பற்றி அதிகம் பேசியுள்ளேன். முதல் கடமையாக நான் தரமான கல்விக்கான முதலீட்டை செய்வேன். பல்கலைக்கழகம் போக முடியாத அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் போக வசதியை ஏற்படுத்தி தருவேன். தொழிநுட்ப, தொழிற்பயிற்சி கல்லூரிகளை ஏற்படுத்தும் வேலைத் திட்டம் என்னிடம் உள்ளது.

உங்களுக்கு தெரியும் 13 ஆயிரம் புலிகள் சரணடைந்த போது அவர்களை சிறப்பாக சமூகமயப்படுத்தினோம். அதேபோல் 2005ம் ஆண்டுக்கு முன்னர் இருந்தே சிறைகளில் இருந்தவர்களை விடுதலை செய்ய நாம் ஆவண செய்தோம். எதிர்காலத்தில் மீதமுள்ள 274 பேரையும் விடுவிப்போம் என்று உறுதிபடக் கூறுகிறேன்.

நாம் தொடர்ந்தும் இந்தப் பிரச்சினைகளுடன் வாழ முடியாது. அவற்றை அகற்றி விட வேண்டும். செய்யக் கூடியவற்றை தான் நாம் முன் மொழிந்துள்ளோம். நான் உங்களிடம் அன்பாக கேட்பது இந்த நாடு ஸ்ரீலங்கா, இங்கு அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு – என்றார்.

https://newuthayan.com/?p=8834

1 hour ago, ampanai said:

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனாவின் சார்பாக களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய வெற்றியடைந்தால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக என்னிடம் உறுதியளித்துள்ளார். குறிப்பாக அரசியல் கைதிகளை சட்ட ரீதியாக விடுவிக்க முடியும் அதன் ஊடாக அவர்களை விடுவிப்போம் என்று கூறியுள்ளார்.

யாராவது சட்டம் தெரிந்தவர்கள் கூட கூறாததை போர்க்குற்றவாளி கூறி இருக்கின்றார். வாக்குறுதி என்ற படியால்தான்  என்னவோ.

இதையும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்திருக்கலாம். 

விஞ்ஞாபனம் தமிழில் வந்ததும் போலி பிரசாரம் நின்றுவிடும்

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினர் தொடர்பான விடயம் எதுவுமில்லை. எனப்போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் விஞ்ஞாபனம் தமிழில் வெளிவந்ததும் உண்மைகள் தெரியவருமென்றும் பாராளுமுன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியா வாடிவீட்டில் அண்மையில் (26) நடந்த  கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது:

பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக வழமை போன்று பொய்யான பிரச்சாரங்களே மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் மொழியில் இன்னும் விஞ்ஞாபனம் வெளிவரவில்லை. எமது முன்மொழிவுகள் கோரிக்கைகளை உள்ளடக்கியே லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டு ள்ளது.தமிழ் மொழியில் வெளிவராததே பெரும் குறைபாடாகவுள்ளது.விரைவில் எமது விஞ்ஞாபனம் தமிழில் வெளிவரும். அரசியல் கைதிகளின் விடுதலை, காணி, நிலங்கள் விடுவிப்பு, முன்னாள்  போராளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், காணாமல் போன உறவுகளுக்கு  பரிகாரம் காணல் உள்ளிட்ட பல விடயங்கள் அந்த விஞ்ஞாபனத்திலுள்ளன.

இணையத்தளம் ஒன்றில் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழில் வெளியிடப்படாது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக,வெளியான செய்திக்குப்பின்னால் தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவர் உள்ளார்.அரசியல் தீர்வுக்காக எமது அரசியலமைப்பில்  மாகாணசபை முறைமைகளே உள்ளன. ஆகவே உள்ளவிடயமொன்றை மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்ற தேர்தல் அல்லது மாகாண சபை தேர்தல் நடத்தப்படலாமென நீண்டகாலமாகக் கூறிவருகின்றோம். இந்த மாகாண சபை முறைமை யானது அரசியல் யாப்பிலுமுள்ளது. தென்னிலங்கை மக்களும் இதை எதிர்க்கப் போவதில்லை. இத்தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்கோ அல்லது சர்வஜன வாக்கெடுப்போ தேவை இல்லை.

அரசிற்கு நான் மேலதிகமான ஆதரவை வழங்கி வந்தேனே தவிர எந்த  சந்தர்ப்பத்திலும் அரசிற்கு முட்டுக் கொடுத்ததில்லை. தமிழ் தேசிய  கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நான்கரை வருடத்திற்கு மேலாக சகல வரவு  செலவுத்திட்டத்திற்கும் முழு ஆதரவு கொடுத்தனர். இவர்கள் பங்காளியாக இருந்தது  போல் அரசிற்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு நான் இருக்கவில்லை. 

லங்கா பொதுஜனப் பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏதாவது  தவறவிடப்பட்டால் அல்லது கருத்தில் எடுக்கப்படாதிருந்தால் நாங்கள்  ஆட்சியில் பங்கெடுக்கின்ற போது கடந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டோமோ  அவ்வாறு நடந்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்போமெனத் தெரிவித்தார்.

(வவுனியா விசேட நிருபர்)

 

https://www.thinakaran.lk/2019/10/28/அரசியல்/42837/விஞ்ஞாபனம்-தமிழில்-வந்ததும்-போலி-பிரசாரம்-நின்றுவிடும்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

உங்களுக்கு தெரியும் 13 ஆயிரம் புலிகள் சரணடைந்த போது அவர்களை சிறப்பாக சமூகமயப்படுத்தினோம்.

ஒன்றிரண்டு காணெளி போடவா?போடவா?போடவா?

நாறிப்போயிடுவா?

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ampanai said:

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனாவின் சார்பாக களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய வெற்றியடைந்தால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக என்னிடம் உறுதியளித்துள்ளார். குறிப்பாக அரசியல் கைதிகளை சட்ட ரீதியாக விடுவிக்க முடியும் அதன் ஊடாக அவர்களை விடுவிப்போம் என்று கூறியுள்ளார்.

நல்லை ஆதீன முதல்வர் எப்போ தமிழினத்தின் பிரதிநிதியானவர்? இவரோடு போய் பேசுவதன் மூலம் இவர் தமிழ் ஞான சார தேரர் என்று நினைத்தாரோ? கோயில் கும்பிட வந்தாரோ, அல்லது பேச்சுவார்த்தை நடத்த வந்தாரோ? சுமந்திரன் அங்க காத்திருக்க இவரோட பேசி என்னத்தை சாதிக்கப்போறார்? நல்லையானுக்குத்தான் வெளிச்சம். 

13 hours ago, ampanai said:

அப்போது நான் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினரை சந்தித்து பேச வேண்டும் என்பதை கோரினேன் அத்துடன் இது தமிழ் மக்களின் விருப்பமும் அதுவாகவே இருக்கின்றது. மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர் என்று நான் கூறியிருந்தேன் என்றார்.

மக்கள் எப்பவோ கூட்டமைப்பை வெறுக்க தொடங்கியாச்சு!

நல்லை ஆதீனத்தார் கனகாலமா நித்திரை கொண்டு எழுப்பினவர் போல கதைக்கிறார்!

6 hours ago, satan said:

நல்லை ஆதீன முதல்வர் எப்போ தமிழினத்தின் பிரதிநிதியானவர்? இவரோடு போய் பேசுவதன் மூலம் இவர் தமிழ் ஞான சார தேரர் என்று நினைத்தாரோ? கோயில் கும்பிட வந்தாரோ, அல்லது பேச்சுவார்த்தை நடத்த வந்தாரோ? சுமந்திரன் அங்க காத்திருக்க இவரோட பேசி என்னத்தை சாதிக்கப்போறார்? நல்லையானுக்குத்தான் வெளிச்சம். 

பொதுவாக சிங்கள அரசியல்வாதிகள் நல்லூருக்கு சென்றால் நல்லை ஆதீனத்துக்கு சென்று ஆசி பெறுவதும் அரசியல் பேசுவதும் வழமை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.