Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்­டா­வது விருப்பு வாக்கை தந்­தி­ரோ­பா­ய­மாக வழங்­கலாம் - ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான தமிழ் சுயா­தீனக் குழு

Featured Replies

(எம்.நியூட்டன்)

தமிழ் வேட்ப்­பா­ள­ருக்கு தமிழ் மக்கள் தமது முதல் விருப்பு வாக்­கையும் இரண்­டா­வது விருப்பு வாக்கை  தந்­தி­ரோ­பா­ய­மாக சிந்­தித்தும் வழங்­கலாம் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான தமிழ் சுயா­தீனக் குழு தமிழ் அர­சி­யலில் சிவில் சமூ­கங்கள் தலை­யி­டு­வது என்­பது தமிழ் ஜன­நா­ய­கத்தை மேலும் செழிப்­பாக்கும் எனத் தெரி­வித்­துள்­ளது.

பேர­வையால் தொடக்­கப்­பட்ட ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான சுயா­தீனக் குழு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறிக்கை ஒன்­றினை வெளி­யிட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பேர­வையால் தொடக்­கப்­பட்ட ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான சுயா­தீனக் குழு எனப்­ப­டு­வது தமிழ் அர­சி­யலின் மீதும் தமிழ்க் கட்சித் தலை­மை­களின் மீதும் சிவில் சமூ­கங்­களின் தார்­மீகத் தலை­யீட்டை குறிக்­கி­றது.

ஜனா­தி­பதித் தேர்தல் எனப்­ப­டு­வது முழு நாட்­டுக்­கு­மா­னது. இதில் தமிழ் முஸ்லிம் வாக்­குகள் தீர்­மா­னிக்கும் வாக்­கு­க­ளாக காணப்­ப­டு­வதை சுயா­தீனக் குழு அவ­தா­னித்­தது.

தென்­னி­லங்­கையில் யார் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்டும் என்­ப­தனைத் தீர்­மா­னிக்க முற்­படும் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு தரப்­புக்கள் தமிழ்த் தரப்­போடு தொடர்ந்து வரு­வதை சுயா­தீனக் குழு கவ­னத்தில் எடுத்­தது.

எனவே தமிழ் மக்கள் தமது பேரத்தை உயர்­வாகப் பேணி உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு தரப்­புக்­க­ளோடு பேரம் பேசும் ஒரு கள­மாக ஜனா­தி­பதித் தேர்­தலை கையாள வேண்டும் என்று சுயா­தீ­னக்­குழு விரும்­பி­யது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் பேரத்தை பிர­யோ­கிப்­ப­தற்கு ஒரு பொதுத் தமிழ் வேட்­பா­ளரே இருப்­ப­வற்றுள் பொருத்­த­மான உச்­ச­மான தெரிவு என்று சுயா­தீனக் குழு முடி­வெ­டுத்­தது. அவ்­வாறு ஒரு பொது வேட்­பா­ளரை நிறுத்­து­வது என்றால் அதற்கு தமிழ்க் கட்­சி­க­ளுக்­கி­டையே ஒரு பொதுக் ­க­ருத்து எட்­டப்­பட வேண்டும் என்றும் குழு தீர்­மா­னித்­தது.

ஒரு பொது தமிழ் வேட்­பாளர் எனப்­ப­டு­பவர் ஒரு குறி­யீடு. அவர் தமிழ் மக்­களின் இலட்­சி­யங்­களின் குறி­யீடு. தமிழ் மக்கள் ஒரு தேச­மாகச் சிந்­திக்­கி­றார்கள் என்­பதன் குறி­யீடு. தமிழ் மக்கள் பேரம் பேசத் தயா­ரா­கி­விட்­டார்கள் என்­பதன் குறி­யீடு. தமிழ் ஐக்­கி­யத்தின் குறி­யீடு.

ஒரு பொதுத் தமிழ் வேட்­பா­ளரை ஜனா­தி­பதித் தேர்­தலில் நிறுத்­தினால் அவர் தமிழ் மக்­களின் முத­லா­வது விருப்பு வாக்கைப் பெறுவார். அவ்­வாறு ஒரு பொதுத் தமிழ் வேட்­பா­ளரும் ஜே.வி.பி யும் தமிழ் சிங்­கள வாக்­கு­களை கொத்­தாக வெட்டி எடுக்கும் போது இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­களும் 50 வீதத்­திற்கு மேலான வாக்­கு­களைப் பெறு­வது சில சமயம் சவால்­க­ளுக்கு உள்­ளா­கலாம். அப்­பொ­ழுது இரண்­டா­வது விருப்பு வாக்கு எண்­ணப்­படும். இதில் தமிழ் மக்கள் தமது இரண்­டா­வது விருப்பு வாக்கை தந்­தி­ரோ­பா­ய­மாக சிந்­தித்து யாருக்கு வழங்­கு­கி­றார்­களோ அந்தப் பிர­தான வேட்­பா­ள­ருக்கே வெற்றி வாய்­புக்கள் அதி­க­மி­ருக்கும். அதா­வது முத­லா­வது விருப்பு வாக்கு தமிழ்க் கொள்­கைக்கு. இரண்­டா­வது விருப்பு வாக்கு பேரம் பேச­லுக்கு.

இதுதான் பொதுத் தமிழ் வேட்­பாளர். இக் கோரிக்­கையை முன்­வைத்து கட்­சி­களை ஒருங்­கி­ணைக்கும் அனு­ச­ரணை பணியை சுயா­தீ­னக்­குழு முன்­னெ­டுத்­தது.

முதலில் இக்­குழு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை சந்­தித்­தது. அதன் தலைவர் சம்­பந்தன் குழுவின் யோச­னையை உதா­சீனம் செய்­ய­வில்லை என்று கூறினார். கட்சித் தலை­வர்­க­ளோடும் தொண்­டர்­க­ளோடும் பேசி முடி­வெ­டுத்த பின் தமது முடிவை கூறு­வ­தாக சொன்னார். பொதுத்­தமிழ் வேட்­பா­ள­ராக தான் கள­மி­றங்கத் தயா­ரில்லை என்றும் அவர் கூறினார்.

அதன்பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியை குழு சந்­தித்­தது. அவர்கள் பொது தமிழ் வேட்­பா­ளரை எடுத்த எடுப்பில் ஏற்றுக் ­கொள்­ள­வில்லை. மாறாக தேர்தல் புறக்­க­ணிப்பை தமது முதல் தெரி­வாக முன்­வைத்­தார்கள்.

அதன்பின் தமிழ் மக்கள் கூட்­ட­ணியை குழு சந்­தித்­தது. நீண்ட உரை­யா­டலின் பின் பொது தமிழ் வேட்­பா­ளரை அக்­கட்சி ஏற்­றுக்­கொண்­டது. எனினும் விக்­னேஸ்­வரன் அப்­படி ஒரு வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு மறுத்­து­விட்டார். அதே­ச­மயம் சம்­பந்தன் கள­மி­றக்­கப்­பட்டால் அதைத்தான் ஆத­ரிப்­ப­தா­கவும் கூறினார்.

அதன்பின் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்­சியை குழு சந்­தித்­தது. அதன் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் பொது ­தமிழ் வேட்­பா­ளரை ஏற்­ப­தற்குத் தயங்­கினார். பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளோடு முதல் நிலைக் கோரிக்­கை­களை முன்­வைத்துப் பேசு­வது கடினம் என்றும் எனவே உட­னடிப் பிரச்­சி­னை­களை முன்­வைத்து பேச­வேண்டும் என்றும் அபிப்­பி­ரா­யப்­பட்டார்.

அதன்பின் தமிழ்த் தேசிய பசுமை இயக்­கத்தை குழு சந்­தித்­தது. அதன் தலைவர் ஐங்­க­ர­நேசன் ஒரு பொதுத் தமிழ் வேட்­பா­ளரை உட­ன­டி­யாக ஏற்றுக் கொண்டார். அந்த வேட்­பா­ள­ருக்கு தமது கட்சி முழு­ம­ன­தோடு உழைக்கும் என்றும் உறு­தி­ய­ளித்தார்.

அதன்பின் திரு­மதி. அனந்தி சசி­தரனும் பொது வேட்­பா­ளரை ஏற்­றுக்­கொண்டார். சிவா­ஜி­லிங்கம் சில சமயம் போட்­டி­யிடக் கூடும் என்றும் ஊகம் தெரி­வித்தார்.

அதன்பின் தமி­ழ­ரசுக் கட்சி. அக்­கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா தனது கட்சித் தலை­வர்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்த பின் முடிவை அறி­விப்­ப­தாக தெரி­வித்தார்.

அதன்பின் புௌாட் அமைப்பின் தலைவர் சித்­தார்த்தன். அவரும் பொது வேட்­பா­ளரை ஏற்­றுக்­கொண்டார். ஆனால் காலம் பிந்தி­விட்­டது என்று சொன்னார். அதன்பின் ரெலோ அமைப்பின் செய­லாளர் சிறீ­காந்தாவும் பொது வேட்­பா­ளரை ஏற்­றுக்­கொண்டார். ஆனால் காலம் பிந்தி விட்­டது என்ற ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க ஒரு சாட்டை எல்லா கட்­சி­களும் முன்­வைக்கும் என்று சொன்னார்.

இவ்­வாறு கட்சித் தலை­மை­க­ளோடு பேசி ஒரு பொது உடன்­பாட்­டுக்கு வரும் முதல் முயற்­சியில் சுயா­தீனக் குழு ஓர­ள­வுக்கு முன்­னே­றி­யி­ருந்த பின்­ன­ணியில், ஒரு பொது தமிழ் வேட்­பா­ளரை கட்­சி­க­ளுக்குள் இருந்தும் கட்­சி­க­ளுக்கு வெளியே இருந்தும் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. கட்­சி­க­ளுக்கு வெளியே ஒரு­வரை கண்டு பிடிப்ப­தென்றால் அவர் ஒரு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்க வேண்டும்.

இவ்­வா­றான ஒரு பின்­ன­ணி­யில்தான் யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தனது முயற்­சியை ஆரம்­பித்­தார்கள். அதே காலப்­ப­கு­தியில் சிவா­ஜி­லிங்கம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஒரு பொது தமிழ் வேட்­பா­ளரைக் கண்டு பிடிக்க முடி­யாத ஒரு சூழலில் அடுத்த கட்­ட­மாக எல்லாக் காட்­சி­க­ளையும் ஒருங்­கி­ணைத்து ஒரு பொது உடன்­பா­டுக்கு கொண்டு வந்து ஒரு பொதுப் பேரம் பேசும் ஆவ­ணத்தைத் தயா­ரிப்­பதே சுயா­தீனக் குழுவின் அடுத்த கட்டத் திட்­ட­மா­யி­ருந்­தது. ஆனால் பல்­கலைக்கழக மாண­வர்கள் இடையில் நுழைந்­தார்கள். சுயா­தீனக் குழு திட்ட­மிட்­டி­ருந்த அடுத்த கட்ட நகர்வை அவர்கள் முன்­னெ­டுத்­தார்கள். அதன் விளை­வாக ஐந்து கட்­சி­களின் கூட்டும் ஒரு பொது ஆவ­ணமும் உரு­வாக்­கப்­பட்­டன. ஆனால் இப்­பொ­ழுது அக்­கூட்டு சிதைந்து விட்­டது. அதன் சிதைவை தடுக்க மாண­வர்­களால் முடி­ய­வில்லை.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மேற்­கொண்ட முயற்­சி­களில் சுயா­தீனக் குழு உத்­தி­யோ­கப்­பற்­றற்ற விதத்தில் பங்­கு­பற்­றி­யது. ஆனால் ஐந்து கட்­சி­களின் கூட்டை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஒரு பொதுக் கருத்தை எட்­டு­வ­தற்கு எல்லாக் கட்­சி­க­ளையும் ஒருங்­கி­ணைக்க வேண்டும் என்­பதே அக்­கு­ழுவின் நிலைப்­பா­டாக இருந்­தது. இப்­போ­துள்ள நிலை­மை­க­ளின்­படி தமிழ்த் தேசியக் கட்­சிகள் மத்­தியில் நான்கு வேறு நிலைப்­பா­டுகள் உள்ள­ன. முத­லா­வது பொது தமிழ் வேட்­பாளர் அதா­வது இரண்­டா­வது விருப்பு வாக்கை ஒரு பிர­தான வேட்­பா­ள­ருக்கு நிபந்­த­னை­யுடன் வழங்­கு­வது, இரண்­டா­வது - தேர்­தலைப் புறக்­க­ணிப்­பது, மூன்­றா­வது - சஜித்தை நிபந்­த­னை­யின்றி ஆத­ரிப்­பது, நான்கா­வது - தமிழ் மக்­களைத் தாமாக முடி­வெ­டுக்க விடு­வது. ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் ஒரு பொது தமிழ் கருத்தை உரு­வாக்க முடி­ய­வில்லை. எனவே தமிழ் பேரத்­தையும் முழு­மை­யாக பிர­யோ­கிப்­பது கடினம். ஒரு பொது தமிழ் வேட்­பா­ளரே சுயா­தீனக் குழுவின் கொள்கைத் தெரிவு. அதற்கு ஒப்­பீட்­ட­ளவில் ஆகக்­கூ­டி­ய­பட்சம் பொருத்­த­மான ஓர் ஒற்­றுமை அவ­சியம். அவ்­வாறு ஒப்­பீட்­ட­ளவில் ஆகக்­கூ­டு­த­லான தமிழ்த் தேசியக் கட்­சி­களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தமிழ் வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமது முதல் விருப்பு வாக்கையும் இரண்டாவது விருப்பு வாக்கை தந்திரோபாயமாக சிந்தித்தும் வழங்கலாம். கொள்கை அடித்தளம் இல்லாமல் கட்சிகளை ஒருங்கிணைப்பது தற்காலிகமானது செயற்கையானது என்று சுயாதீனக் குழு நம்புகிறது. தலைவர்களையும் வாக்காளர்களையும் நீண்ட கால நோக்கில் பண்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியத்தையும் சமூகப் பொறுப்பையும் சுயாதீனக் குழு ஏற்றுக்கொள்கிறது. தமிழ் அரசியலில் சிவில் சமூகங்கள் தலையிடுவது என்பது தமிழ் ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும். இனிவரும் காலங்களில் தமிழ் அரசியலின் மீதும் கட்சிகளின் மீதும் அதிகரித்த தார்மீகத் தலையீட்டைச் செய்வதற்கு தேவையான வளர்ச்சியைத் தமிழ் சிவில் சமூகங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/68862

 

 

16 hours ago, ampanai said:

தமிழ் வேட்ப்­பா­ள­ருக்கு தமிழ் மக்கள் தமது முதல் விருப்பு வாக்­கையும் இரண்­டா­வது விருப்பு வாக்கை  தந்­தி­ரோ­பா­ய­மாக சிந்­தித்தும் வழங்­கலாம் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான தமிழ் சுயா­தீனக் குழு தமிழ் அர­சி­யலில் சிவில் சமூ­கங்கள் தலை­யி­டு­வது என்­பது தமிழ் ஜன­நா­ய­கத்தை மேலும் செழிப்­பாக்கும் எனத் தெரி­வித்­துள்­ளது.

விவேகமாக சிந்திக்கும் தமிழர்களுக்கு உள்ள சிறந்தவழி முதலாவது வாக்கை சிவாஜிலிங்கம் அவர்களுக்கு வழங்குவதே!

73375613_10221106088544649_8945944310906

 

தமிழர்கள் இம்முறை பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி சரிவரவில்லை என்பது எனக்கு மகிழ்ச்சி.

தமிழர்கள் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவ் வேட்பாளருக்கு வாக்களிக்கும் மக்கள் அனைவரும் இரண்டாம் விருப்ப தெரிவை சஜித்துக்கு இட்டால் மட்டுமே தேர்தல் இறுதி முடிவு தமிழர்களை பாதிக்காது.

ஆனால் இரண்டாம் விருப்ப தெரிவு பற்றிய போதிய விளக்கங்கள் மக்களிடையே இல்லை என்பதால் பலர் அதை போடாமல் விடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. தவிர போடுபவர்களும் சரியான முறையில் போடாவிட்டால் அவை நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக மாறி விடும். இவை கோத்தாவுக்கு சாதகம்.

Edited by Lara

ஏற்கனவே வடக்கு கிழக்கில் சிலர் வாக்குகள் நிராகரிக்கப்படும் வகையில் வாக்களிக்க ஆலோசனை வழங்கி வருகிறார்களாம்.

 

அதாவது முதல் வாக்கை சிவாஜிலிங்கத்தின் மீன் சின்னத்துக்கு   "x"  அல்லது "1"  என்று போடனும் என்று சொல்லீனம்.

23 hours ago, Rajesh said:

விவேகமாக சிந்திக்கும் தமிழர்களுக்கு உள்ள சிறந்தவழி முதலாவது வாக்கை சிவாஜிலிங்கம் அவர்களுக்கு வழங்குவதே!

73375613_10221106088544649_8945944310906

 

தற்கால சூழ்நிலையில் தமிழ் மக்கள் மேற்கொள்ளக்கூடிய சிறந்த நடவடிக்கையாக இதுவே தாயகத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர்களாலும் கல்வியலாளர்களாலும் கருதப்படுகிறது.

சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து மக்கள் தமது தலையில் தாமே மண்ணள்ளிப்போடாமல் சஜித்துக்கு வாக்களியுங்கள். 😀

ஒருசிலர் தான் குளத்துல குதிச்சு சாகமாட்டன், ஆனா கடல்ல  குதிச்சு தான் சாவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியினம்.

புத்திசாலிகள் குளத்துலையோ கடல்லையோ குதிக்காம சிவாஜிலிங்கத்தின் கப்பல்ல பயணிப்பாங்க.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Gowin said:

அதாவது முதல் வாக்கை சிவாஜிலிங்கத்தின் மீன் சின்னத்துக்கு   "x"  அல்லது "1"  என்று போடனும் என்று சொல்லீனம்.

முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு 2 என்று போட்டால் வாக்கு செல்லாது.

முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு 2x என்று போட்டால் வாக்கு செல்லாது.

முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு xx என்று போட்டால் வாக்கு செல்லாது.

முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு x என்று போட்டால் வாக்கு செல்லாது.

முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு 1 என்று போட்டால் வாக்கு செல்லாது.

மேலே உள்ள அவ்வளவும் கொத்தவுக்கு சிவாஜிலிங்கம் வழங்கும் நன்கொடை.

இந்திய கூலிப்படை டெலோவை வளர்த்து கொலைகள் செய்தவர் இவர் என்பதை நினைவு கொள்ள வேண்டிய காலம் இது. இன்னமும் இந்த கூலிப்படை வேலை முடியவில்லை.

 

ஒரே வாக்கு x சரியானது.

முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு 2 என்று போட்டால் வாக்கு சரியானது.

இதை சரியாக செய்யப் போவர்கள் குறைவு.

9 minutes ago, Jude said:

மேலே உள்ள அவ்வளவும் கொத்தவுக்கு சிவாஜிலிங்கம் வழங்கும் நன்கொடை.

இந்திய கூலிப்படை டெலோவை வளர்த்து கொலைகள் செய்தவர் இவர் என்பதை நினைவு கொள்ள வேண்டிய காலம் இது. இன்னமும் இந்த கூலிப்படை வேலை முடியவில்லை.

உந்த கட்டுக்கதைகளை நம்புமளவுக்கு முட்டாள்கள் புலத்தில் குறைவு.

உந்த கட்டுக்கதைகளை நம்புமளவுக்கு முட்டாள்கள் புலத்தில் குறைவு.

23 minutes ago, Jude said:

ஒரே வாக்கு x சரியானது.

முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு 2 என்று போட்டால் வாக்கு சரியானது.

இதை சரியாக செய்யப் போவர்கள் குறைவு.

ஒருவருக்கு மட்டும் அடையாளமிடுபவர்கள் x அல்லது 1 என குறிப்பிட்டு வாக்களிக்கலாம்.

இரண்டு அல்லது மூன்று பேருக்கு அடையாளமிடுபவர்கள் x பயன்படுத்த கூடாது. இலக்கங்களையே பயன்படுத்த வேண்டும்.

EJDSE80UwAAQvZl?format=jpg&name=large

Edited by Lara

28 minutes ago, Jude said:

ஒரே வாக்கு x சரியானது.

முதல் வாக்கு x இரெண்டாவது வாக்கு 2 என்று போட்டால் வாக்கு சரியானது.

இதை சரியாக செய்யப் போவர்கள் குறைவு.

வாக்குரிமையே இல்லாதவர்களின் சதி முயற்சிகள் தான் இப்பிடி பிழையா வழிநடத்துவது.

 

5_17.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.