Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்யானந்தா... வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nithyanantha-11.jpg

குழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக  ஆமதாபாத் பொலிஸார் தெரிவித்துள்ளர்

குஜராத் மாநிலம்-  ஹிராபூரிலுள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து, 4 குழந்தைகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் நித்யானந்தா மீது முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பாக நித்யானந்தா, அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது ஆமதாபாத் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அவர்களில் சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன்  4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். அவர்கள் இருவரும் ஜனார்த்தன சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகள்களான லோக முத்ரா (வயது 21)இ நந்திதா சர்மா (18 வயது) ஆகியோர் இன்னும் ஆமதாபாத் ஆசிரமத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவரது மகள்களை சந்திக்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதி வழங்க மறுத்ததால், ஜனார்த்தன சர்மா குஜராத்  உதவியை நாடினார். இதைத்தொடர்ந்துதான் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக  ஆமதாபாத் பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, “நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும், தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை  பொலிஸார் மேற்கொள்வார்கள் என்றும் இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்றும்” தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே,நித்யானந்தா ஹிராபூர் கிராமத்தில் ஆசிரமம் நடத்தும் நிலம் டெல்லி பப்ளிக் பள்ளிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

சட்ட விதிமுறைகளை மீறி அந்த நிலத்தை ஆசிரமம் நடத்த குத்தகைக்கு கொடுத்ததாக டெல்லி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஹிதே‌‌ஷ் புரியை கைது செய்ததாகவும் பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஆமதாபாத் புறநகர் துணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/குழந்தைகள்-கடத்தல்-விவகா/

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நித்தியானந்தாவின் புதிய வீடியோ பதிவு

Nithyananda-1.jpg

தமிழகத்தில் பிரச்சினையை மடை மாற்றுவதற்கு தான் குறிவைக்கப்படுவதாக சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேசும் தமிழை புரிந்து கொள்ளாமல் தன்மீது வழக்குப் போடப்படுவதாக அவர் புதிதாக வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நான் பேசும் தமிழ் யாருக்குமே புரியவில்லை. பேச்சை புரிந்து கொள்ளாமல் பொலிஸார் என்மீது வழக்குப் பதிவு செய்து விடுகிறார்கள். தமிழகத்தில் ஏதேனும் ஒரு பிரச்சினையை மடை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு என்னை மட்டுமே குறி வைக்கிறார்கள்” என அந்த காணொளி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் பொலிஸில் நித்தியானந்தா மீது முறைப்பாட அளித்த நிலையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆசிரம நிர்வாகிகளான சாத்வி பிரன்பிரியநந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர். இதனிடையே நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியானது.

தற்போது அவர் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கரீபியன் கடல் பகுதியில் 2 குட்டித் தீவுகளை உள்ளடக்கிய பிரினிடாட் அன்ட் டொபோகோ என்னும் நாட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அவரைப் பிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினை வந்தாலும் எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் அதைபற்றி எதுவும் குறிப்பிடாமல் மௌனம் காத்துவந்த நித்தியானந்தா தற்போது தன்மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தவுடன் அவர்களைக் கண்டித்து பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

http://athavannews.com/சர்ச்சையை-ஏற்படுத்தியு-3/

 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பதவி வெற்றிடம். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

(குறிப்பு : நான் ஏற்கனவே அனுப்பிவிட்டேன் )

Edited by Maharajah
சொற்பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maharajah said:

தலைவர் பதவி வெற்றிடம். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

(குறிப்பு : நான் ஏற்கனவே அனுப்பிவிட்டேன் )

என்ன தகுதி வேணும்? 
நாலு தேவாரம். பாடத் தெரிந்தால், போதுமா?  ராஜா.... 😄

57 minutes ago, தமிழ் சிறி said:

என்ன தகுதி வேணும்? 
நாலு தேவாரம். பாடத் தெரிந்தால், போதுமா?  ராஜா.... 😄

நீங்கள் அதற்கு சரிப்பட்டு வரமாட்டீங்க தமிழ் சிறி. உங்களுக்கு பெண்களை கண்டவுடன் இரக்கம் வந்துவிடும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

என்ன தகுதி வேணும்? 
நாலு தேவாரம். பாடத் தெரிந்தால், போதுமா?  ராஜா.... 😄

தமிழ், 

தேவாரமெல்லாம் தேவையில்லை,  ஐன்டீனின் கோட்பாட்டிட்கு புது விளக்கம் சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள்,  அந்தச் சிரிப்பு இருந்தால் போதுமையா போதும். 

இந்த (💃) உலகமே உங்கள் கையில் 

 

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா: சூரியன் உதிப்பதை நிறுத்தியதாக கூறிய சாமியார் தலைமறைவாக இருப்பது ஏன்?

பூமிகா ராய்பிபிசி ஹிந்தி
நித்யானந்தாபடத்தின் காப்புரிமைFACEBOOK

பாலுணர்வுக் காணொளி குற்றச்சாட்டில் சிக்கிய சர்ச்சைக்குரிய தமிழக ஆன்மிக குருவான நித்தியானந்தாவின் ஆசிரமும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தன்னை கடவுளின் அவதாரம் என அழைத்துக்கொள்ளும் நித்யானந்தா இரண்டு சிறுமிகளை கடத்தி சென்று தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அகமதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க, நித்யானந்தா ஆசிரமத்தின் இரண்டு பெண் நிர்வாகிகள் பிராணபிரியா, தத்வபிரியா என்ற இருவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி கே டி கமரியாவிடம் பிபிசி பேசியது. குழந்தை தொழிலாளர்களைப் பணியமர்த்துதல், குழந்தை கடத்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 365, 344, 323, 504, 506, 114 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும், காணாமல் போன சிறுமிகளின் இருப்பிடம் மாறிக்கொண்டே இருப்பதால், அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என கமரியா ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவிதுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து நித்யானந்தா தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 2016ம் ஆண்டில் இருந்து நித்யானந்தா தலைமறைவாக உள்ளார், உள்ளூரில் இருக்கிறாரா அல்லது வெளியூர் சென்று விட்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போதைய விசாரணை அகமதாபாத் ஆசிரமத்தை மையப்படுத்தியே நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் தலைமை ஆசிரமத்திலும் குஜராத் காவல்துறையினர் விசாரணை நடத்துவர் என்று போலீசார் கூறுகின்றனர்.

நித்யானந்தாபடத்தின் காப்புரிமைFACEBOOK

சிறுமிகள் எப்படி சிக்கினார்கள் ?

காணாமல் போன சிறுமிகளின் பெற்றோர் தரப்பில் இருந்தே குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில், ஒரு கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 7 முதல் 15 வயதுடைய தனது நான்கு பெண் குழந்தைகளை அனுப்பியதாக சிறுமிகளின் பெற்றோர் கூறுகின்றனர்.

பிறகு இந்த சிறுமிகள் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு அனுப்பப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அகமதாபாத்தில் உள்ள ஆசிரமம் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் அமைந்துள்ளது. எனவே சிறுமிகளின் பெற்றோர் போலீசாருடன் சென்று தங்கள் குழந்தைகளை அழைத்துவர முடிவு செய்தனர். ஆனால் அகமதாபாத் ஆசிரமத்தில் தங்களின் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருந்தனர். மற்ற இரண்டு சிறுமிகள் அகமதாபாத் ஆசிரமம் வர மறுத்துவிட்டனர் என ஆசிரமத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பதில் அளித்தனர்.

இதனால் தங்களின் இரண்டு மகள்கள் கடத்தப்பட்டதாகவும், சட்ட விரோதமாக சிறைபிடிக்கப்பட்டதாகவும் பெறோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நித்யானந்தாபடத்தின் காப்புரிமைBHARGAV PARIKH

நித்தியானந்தா தொடர்பான சர்ச்சைகள்

2010ல் நித்தியானந்தா காணப்படுகிற பாலுணர்வுக் காட்சிகள் அடங்கிய சிடி வெளியானது. அந்த காட்சிகளில் நடிகை ஒருவருடன் நித்யானந்தா படுக்கை அறையில் உள்ளது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதன் பிறகு தடயவியல் ஆய்வகத்தில் இந்த சிடி உண்மையானது என கண்டறியப்பட்டது.

ஆனால் நித்யானந்தாவின் ஆசிரமம் இந்தியாவில் நடத்தப்பட்ட விசாரணை தவறானது என்று வாதிட்டு, அமெரிக்க ஆய்வகத்தில் நடந்த விசாரணையை குறிப்பிட்டு, அந்த சிடி சித்தரிக்கப்பட்டது என கூறியது. ஆனால் இந்த வழக்கில் நித்யானந்தா கைதாகி சிறையில் வைக்கப்பட்டாலும், பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது தவிர, பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் நடத்த சோதனையில், நிறைய ஆணுறைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2012ல், நித்யானந்தா மீது பாலியல் வல்லுறவு வழக்கும் தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு எழுந்த பிறகும் அவர் தலைமறைவானார். ஆனால் பிறகு தானே முன்வந்து சரணடைந்ததால் நீதிமன்றக் காவலில் வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் தலைமறைவாக இருந்தபோது நடத்தப்பட்ட விசாரணையில் நித்யானந்தா தனது பெண் சிஷ்யையை பாலியல் வல்லுறவு செய்தாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாலியல் வல்லுறவு, ஆபாசம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தவிர, தனது கருத்துகளால் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார் நித்யானந்தா.

நித்யானந்தாபடத்தின் காப்புரிமைFACEBOOK

குரங்குகள் மற்றும் பிற விலங்குகளுக்கும் கூட சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளை கற்றுக்கொடுக்க முடியும் என்று இவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆராய்ச்சியும் செய்ததாக அவர் கூறினார் .

பிறகு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புகழ் பெற்ற E=MC2 என்ற சமன்பாட்டை மறுத்து ஏதோ பேசினார். இதனால் சமூக வலைத் தளங்களில் நித்யானந்தாவை பலர் கேலி செய்தனர்.

மேலும் பெங்களூருவில் சூரியனை நாற்பது நிமிடங்கள் உதிக்கவிடாமல் செய்ததாக அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பரப்பப்பட்டது.

இது மட்டுமல்லாமல், ஆவிகளோடு நட்பு இருப்பதாகவும் அவர் ஓர் சொற்பொழிவில் பேசினார்.

பல விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ சத்தியம் உள்ளதா என ஆராய்ச்சி செய்யும் வேளையில், பல கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததாகவும், கல்வி கற்கவே அவர்கள் பூமிக்கு வந்ததாகவும் நித்யானந்தா வாதிட்டார்.

இருப்பினும், இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை நித்தியானந்தா திரட்டியுள்ளார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும், இவருக்கு சீடர்கள் உள்ளனர். மேலும் நித்யானந்தா 500 புத்தகங்கள் எழுதியுள்ளதாக ஆசிரமத்தின் இணையதளம் குறிப்பிடுகிறது.

நித்யானந்தாபடத்தின் காப்புரிமைBHARGAV PARIKH

யார் இந்த நித்யானந்தா ?

தன்னை தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் நித்யானந்தா, தமிழ்நாட்டில், திருவண்ணாமலையில் பிறந்தவர். ஆசிரமத்தின் இணையதள தகவலின்படி, நித்யானந்தாவின் காணொளிகளை 18 மில்லியன் மக்கள் காணுகின்றனர். யூ டியூபில் அதிகம் பேர் பின் தொடரும் ஆன்மிக குரு இவர் என்று இவரது ஆசிரமம் கூறுகிறது.

ஜனவரி 1, 1978 அன்று அருணாசலம் - லோகநாயகி தம்பதியினருக்கு பிறந்தவர் நித்யானந்தா. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராஜசேகரன்.

நித்யானந்தாவின் பள்ளிக் கல்வி

12 வயதில் ராமகிருஷ்ண மடத்தில் இவர் கல்வி கற்கத் துவங்கியுள்ளார். பள்ளி படிப்பை 1992ம் ஆண்டில் முடித்தவர் நித்யானந்தா.

சிறுமிகள் காணாமல் போன விவகாரத்தில், அகமதாபாத்தில் அமைந்துள்ள இவரது ஆசிரமம் மீதே வழக்கு தொடரப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-50519176

  • கருத்துக்கள உறவுகள்

சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.  ரஞ்சிதா உங்ககூட வந்தாவா இல்லையா ?? 

சொல்லுங்க சாமி சொல்லுங்க.  

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maharajah said:

ரஞ்சிதா உங்ககூட வந்தாவா இல்லையா ?? 

இதெல்லாம் பழஞ்சீலை உடுத்தா கிழிஞ்சிடும்.கவனம்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

இதெல்லாம் பழஞ்சீலை உடுத்தா கிழிஞ்சிடும்.கவனம்.

ரீசேல்  அண்ட் றீ  யூஸ்  பொலிசி அண்ணே போலீஸி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/22/2019 at 5:55 AM, தமிழ் சிறி said:

குழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

 

9 hours ago, Maharajah said:

தலைவர் பதவி வெற்றிடம். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

(குறிப்பு : நான் ஏற்கனவே அனுப்பிவிட்டேன் )

 

7 hours ago, ஏராளன் said:

நித்தியானந்தா: சூரியன் உதிப்பதை நிறுத்தியதாக கூறிய சாமியார் தலைமறைவாக இருப்பது ஏன்?

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

இதெல்லாம் பழஞ்சீலை உடுத்தா கிழிஞ்சிடும்.கவனம்.

 

1 hour ago, Maharajah said:

ரீசேல்  அண்ட் றீ  யூஸ்  பொலிசி அண்ணே போலீஸி 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

 

 

 

 

சாத்தியமாக ணன் அந்த மகாராஜா இல்லை ஐயா. 

நம்புங்கள் ஐயா நம்புங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.