Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் தேர்தலுக்குப் பின் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள் - நடப்பது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தேர்தலுக்குப் பின் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள் - நடப்பது என்ன?

இலங்கை தமிழ் மொழிபடத்தின் காப்புரிமைTWITTER Image captionநடுவில் இருந்த தமிழ் எழுத்துகள் மை பூசி அழிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள ஊர்களின் பெயர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான தமிழ் பேசும் சமூகம் ஆதரவளிக்காத நிலையில், பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் வாக்குகள் மாத்திரமே கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர வைக்க வழி வகுத்திருந்தது.

இலங்கை தமிழ் மக்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவிற்கே வாக்குகளை வழங்குவர் என்பது ஆரம்பத்திலேயே கணிக்கப்பட்டது.

எனினும், எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இலங்கை வாழ் தமிழ் பேசும் சமூகம் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவை வழங்கியிருந்தது.

தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்ட அன்றைய தினமே தமிழர்கள் மீது சில தரப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். தமிழர்கள் நிச்சயமாக சஜித் பிரேமதாஸவிற்கே வாக்களிப்பார்கள் என்பதை அறிந்த சில தரப்பினர், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுரம் - ருவன்வெலி சாய விஹாரை வளாகத்தில் கடந்த 18ஆம் தேதி பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கை தமிழ் மொழிபடத்தின் காப்புரிமைTWITTER

அன்றைய தினம் ஆற்றிய உரையில் கூட தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

''இந்த வெற்றிக்கான பிரதான காரணம், இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை பௌத்த மக்கள் என்பதை நாம் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தோம். சிங்கள மக்களின் ஒத்துழைப்புடன் மாத்திரம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என நான் அறிந்திருந்த போதிலும், நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தேன். இந்த வெற்றியில் பங்குதாரராகுமாறு நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்தேன். எனினும், அதற்கான பதில் எதிர்பார்த்த அளவு கூட கிடைக்கவில்லை. எனினும், நான் உங்களின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து, உண்மையான இலங்கையர்கள் என்ற விதத்தில் என்னுடன் இணைந்து பயணிக்குமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்," என தனது முதல் உரையில் கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உரையானது தமிழர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை மாத்திரமன்றி அச்சத்தையும் தோற்றுவித்தது.

இந்த நிலையில், இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிப்புக்கள் இடம்பெற்று வருவதாக குற்றம்சாட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகைகளில் உள்ள தமிழ் மொழி அழிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்படத்தின் காப்புரிமைTWITTER

தேர்தல் முடிவடைந்து ஒரு வார காலத்தில் பெரும்பான்மையின் தீண்ட தகாத முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர கூறியுள்ளார்.

வீதிகளிலுள்ள தமிழ் பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளதையும் அவர் தனது பதில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பதிலுக்கான நாடு காத்திருக்கின்றது என மங்கள சமரவீர கூறியுள்ளார்.

அதேபோன்று சில பகுதிகளில் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, இலங்கை அரச இலட்சிணையுடன் சிங்கள மொழியில் மாத்திரம் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

தமிழ் மொழி அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை

பாணந்துறை பகுதியிலுள்ள வீதியொன்றின் பெயர் பலகையில் தமிழ் மொழி அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளருமான டளஸ் அழகபெரும தெரிவிக்கின்றார்.

டளஸ் அழகபெருமபடத்தின் காப்புரிமைFACEBOOK Image captionடளஸ் அழகபெரும

அரசாங்கத்தினால் திட்டமிட்டு இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும், சில தரப்பினரே இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மொழியை அழிப்பதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

தமிழ் மொழி அழிக்கப்பட்ட இடத்தில் உடனடியாக மீண்டும் அந்த பெயரை காட்சிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சனைகள் வருவதை தடுக்கும் வகையில் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் டளஸ் அழகபெரும உறுதியளித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50519181

  • கருத்துக்கள உறவுகள்

இது யாரோ கோத்தாவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவற்காக தீட்டிய சதி... குறைந்த பட்ஷம் ஏப்ரல்  தேர்தல் முடியும் வரைக்குமாவது அவர் நல்ல பிள்ளையாய்  இருப்பார் 

4 hours ago, ஏராளன் said:

அதேபோன்று சில பகுதிகளில் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, இலங்கை அரச இலட்சிணையுடன் சிங்கள மொழியில் மாத்திரம் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன

நாட்டை  பிரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு சனாதிபதி ஆதரவு தருகிறார் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இது யாரோ கோத்தாவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவற்காக தீட்டிய சதி... குறைந்த பட்ஷம் ஏப்ரல்  தேர்தல் முடியும் வரைக்குமாவது அவர் நல்ல பிள்ளையாய்  இருப்பார் 

அதுக்கு பிறகும் நல்லபிள்ளையாக இருக்க கஸ்டப்படுவார்.

கெரவலப்பிட்டியவில் தமிழ் மொழியிலான பெயர் பலகை உடைக்கப்பட்டுள்ளது.

EKHS880U4AACu7W?format=jpg&name=medium

EKHS881VUAAoodG?format=jpg&name=medium

EKHs6skU4AMzrF2?format=jpg&name=large

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடு ஜப்பான்.. சிங்கப்பூர் ஆகல்லை என்று கவல வேற. 

அழிக்கப்பட்ட தமிழ் பெயர்ப் பலகை ; பிரதமர் மஹிந்தவின் அதிரடி உத்தரவு

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர் பலகைகள் விசமிகளால் அழிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அதனுடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

அத்துடன் குறித்த தமிழ் பெயர்பலகைகளை சீர் செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர் பலகைகள் அடையாளம் தெரியாத விசமிகளால் அழிக்கப்பட்டுள்ளது.

நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தான இரு வேட்பாளர்­களும் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­களை பிர­தே­ச­வா­ரி­யாக நோக்கும் போது சிறு­பான்­மை­யின தமிழ், முஸ்லிம் மக்­களில் பெரு­மள­வானோர் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரேம­தாச­விற்கே வாக்­க­ளித்­தி­ருந்­தனர். 

எனினும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­களின் பெரு­ம­ள­வான வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­தாபய ராஜ­பக்ஷ தேர்­தலில் வெற்­றி­பெற்று, நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்றுக் கொண்டார்.

அத­னை­ய­டுத்து சில பிர­தே­சங்­க­ளிலும், குறிப்­பாக சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளிலும் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களை அச்­சு­றுத்தும் வகை­யி­லான சம்பவங்­களும் பதி­வா­கி­யி­ருந்­தன. 

அவற்றின் தொடர்ச்­சி­யாக பிரதேசமொன்றில் பாணந்துரை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் தமிழ், சிங்­கள மற்றும் ஆங்­கிலப் பெயர்ப்­ப­ல­கை­களில் தமிழ் பெயர்ப்­ப­லகை மாத்­திரம் அகற்­றப்­பட்­டி­ருக்­கிறது.

இந் நிலையில் தமிழ் பெயர்ப்­ப­லகை அகற்­றப்­பட்­டி­ருக்கும் புகைப்­ப­டங்­களை தனது டுவிட்டர் பக்­கத்தில் மங்­கள சம­ர­வீர பதி­வேற்றம் செய்­தி­ருக்­கின்றார். 

அத்­தோடு, 'தேர்தல்  முடி­வ­டைந்து ஒரு­வாரம் கடந்­தி­ருக்கும் நிலையில் மீண்டும் பெரும்­பான்­மை ­வா­தத்தின் அழுக்­கான முகம் வெளிப்­பட ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. தமிழில் காணப்­பட்ட வீதி­களின் பெயர்கள் அகற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. 

ஜனா­தி­பதி அவர்­களே, இது­கு­றித்த உங்­க­ளு­டைய பிர­தி­ப­லிப்­பிற்­காக நாடு காத்­துக் ­கொண்­டி­ருக்­கி­றது என்றும் பதி­விட்டிருந்தார்.

இந்நிலையிலேயே பிரதமர்  மீண்டும் தமிழ் பெயர்பலகைகளை சீர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/69616

தமிழ்பெயர் பலகைகளை சேதப்படுத்தும் விஷமிகளை கண்டறிய பொலிஸார் விசேட மோட்டார் வாகன ரோந்து நடவடிக்கை

தமிழ்மொழி மூல பெயர்ப் பலகைகளை சேதப்படுத்தல் உள்ளிட்ட  நல்லிணக்கம் மற்றும் சக வாழ்வை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் குறித்து பதிவாகும் ஒவ்வொரு சம்பவம் தொடர்பிலும் பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் நேரடியாக சென்று விசாரணைகளை நடத்தி சந்தேக நபர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவித்துள்லது. 

அத்துடன் அவ்வாறான விஷமத் தனமான செயற்பாடுகளை தடுக்க, பொலிஸ் மோட்டார் வாகன ரோந்து, சைக்கிள் ரோந்து மற்றும் இரவு நேர விஷேட ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் வலையங்களின் அத்தியட்சர்களுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிங்கள, ஆங்கில மொழிகளுக்கு மேலதிகமாக தமிழில் இருந்த பெயர் பலகை ஒன்று பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் கழற்றி சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் ஊடாக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், அந் நிலையங்களை வழி நடத்தும் உதவி பொலிஸ்  அத்தியட்சர்களுக்கும்  மேற்படி உத்தரவு பதில் பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார். 

https://www.virakesari.lk/article/69708

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.